இந்த வருடத்தில் எனக்கு பிடித்த சில படங்கள்.
1. அங்காடித் தெரு
வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தனர்.
2. மைனா
பிரபு சாமலன் இயக்கத்தில் தீபாவளி அன்று மைனா வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ்.கல்பாத்தி அகோரம் இணைந்து வெளியிட்டனர். இப்படத்தில் புதுமுகம் வித்யார்த் மற்றும் அமலாபால் இணைந்து நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்து இருந்தார்.
3. எந்திரன்
சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் எந்திரன் படம் அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு இசைபுயல் A.R.ரகுமான் இசையமைத்திருந்தார்.
ரோபோவை மையப்படுத்தி கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது. மிகபெரிய பட்ஜெட் கொண்ட இந்த படத்துல சூப்பர் ஸ்டார்ட் ரஜினியை ஓரகட்டிய இயக்குனர் சங்கரை தான் காண முடிந்தது. உலகம் முழுதும் வெளியான இப்படம் என்னைப் பொறுத்தவரை ஒரு இனிய அனுபவம்.
4. களவாணி
நஷீர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில்; பசங்க படத்தில் நடித்த விமல், புதுமுகம் ஒவியா நடிப்பில், களவாணி படம் ஜுன் மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு குமரன் இசையமைத்து உள்ளார்.
5. மதராசபட்டினம்
இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் ஜுலையில் மதராசபட்டினம் வெளியானது. உதயாநிதி ஸ்டாலின் இந்தியாவில் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.
6. நான் மகான் அல்ல
சுசிந்திரன் இயக்கத்தில், கார்த்தி மற்றும் காஜல்அகர்வால் நடிப்பில், ஆகஸ்ட் மாதம் நான் மகன் அல்ல திரைக்கு வந்தது. இப்படத்தை தயாநிதிஅழகிரி வெளியிட்டார்.
7. பாஸ்(எ)பாஸ்கரன்
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடிப்பில், செப்டம்பர் மாதம் பாஸ்(எ)பாஸ்கரன் வெளியானது.
8. விண்ணைத்தாண்டி வருவாயா
கௌதவ்மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் பிப்ரவரியில் விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவந்தது. இப்படத்தை உதயாநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
9. சிங்கம்
சன்பிர்க்கஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூரியா மற்றும் அனுஷ்கா நடிப்பில் மே மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இமையமைத்திருந்தார்.
10.பையா
லிங்குசாமி இயக்கத்தில் க்ளவ்ட் நயன் மூவீஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் படம் பையா ஏப்ரலில் வெளியானது.

துயரத்துக்கு வாழ்க்கைப்பட்டு அங்காடித் தெருக்களில் பல நூறு கால்களில் மிதிபட்டாலும், நம்பிக்கை என்ற சின்ன நூலையே கயிறாகக் கட்டி மேலே எழுந்து நிற்க முயலும் சாமானிய மக்களின் கதை இது.மிக சிறந்த பாடல்கள் + உணர்வுபூரணமாக கதையம்சம் கொண்ட இந்த பாடல் என்னை வெகுவாக பாதித்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
2. உன் பேரை சொல்லும்
2. மைனா
பிரபு சாமலன் இயக்கத்தில் தீபாவளி அன்று மைனா வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ்.கல்பாத்தி அகோரம் இணைந்து வெளியிட்டனர். இப்படத்தில் புதுமுகம் வித்யார்த் மற்றும் அமலாபால் இணைந்து நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்து இருந்தார்.
தான் உணர்ந்து, அனுபவித்த உணர்வுகளை பிரபு சாலமன் இம்மி பிசகாமல் படமாக்கியிருகிறார். படம் பார்த்த ஒவ்வொருவரையும் தன்னை போல் உணர வைத்ததே பிரபுக்கு கிடைத்த வெற்றியாகும்.படம். வெறும் நான்கு கேரட்டர்களை கொண்டு இப்படி ஒரு படம் தரமுடியுமா என்ற கேள்வி தான் எழுகிறது நாமில் பலருக்கும். பாடல்கள் மிகபெரிய பலம் + கேமிரா மற்றும் துல்லிய ஒளிபதிவு. அழகான அமலா பால் இந்த படத்தில் மிக இயல்பான பொருத்தியதும் மிகபெரிய பலம்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. மைனா மைனா நெஞ்சுக்குள்ள
2. கைய புடி
3. நீயும் நானும்
3. எந்திரன்
சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் எந்திரன் படம் அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு இசைபுயல் A.R.ரகுமான் இசையமைத்திருந்தார்.
ரோபோவை மையப்படுத்தி கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது. மிகபெரிய பட்ஜெட் கொண்ட இந்த படத்துல சூப்பர் ஸ்டார்ட் ரஜினியை ஓரகட்டிய இயக்குனர் சங்கரை தான் காண முடிந்தது. உலகம் முழுதும் வெளியான இப்படம் என்னைப் பொறுத்தவரை ஒரு இனிய அனுபவம்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. கிளிமஞ்சாரோ
2. காதல் அணுக்கள்
3. இரும்பில் ஒரு இதயம்
4. களவாணி
நஷீர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில்; பசங்க படத்தில் நடித்த விமல், புதுமுகம் ஒவியா நடிப்பில், களவாணி படம் ஜுன் மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு குமரன் இசையமைத்து உள்ளார்.
ஒரு சாதாரண காதல் கதையை நகைச்சுவை முலாம் பூசி, கிராமத்துக்கலாச்சாரத்துடன் செலவே இல்லாமல் பிரமாதமான பிரசண்ட்டேஷனில் தந்திருக்கிறார் என்றால் அது டைரக்டரின் சாமார்த்தியமே.கஞ்சா கருப்புவின் காமெடி + இயல்பான நடிப்பு என படம் பார்பர்வகளை இன்றினைதது இதன் பலம். காதல் மற்றும் நகைச்சுவை கலந்து வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக அமைந்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. ஒருமுறை இருமுறை
2. பட பட படவென
5. மதராசபட்டினம்
இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் ஜுலையில் மதராசபட்டினம் வெளியானது. உதயாநிதி ஸ்டாலின் இந்தியாவில் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சுதந்திரத்துக்கு முன் தமிழ் இளைஞனுக்கும், வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலும், அதனால் உருவான பிரச்சினைகளுமே கதை…ஜி.வி. பிரகாஷ்குமார் இமையமைத்திருந்தார். இப்படத்தின் கதைகளம் 1947ஆம் ஆண்டு சுதந்திர வாங்கும் சமயத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு கால கட்டத்தில் நடப்பது போன்ற காட்சிகளும் அதன் பின்னணியும் மிக அழகு. கதைக்காக அந்தகால வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ப செட்டிங் போட்டு சிறப்பாக படம் எடுக்கப்பட்டிருந்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. பூக்கள் பூக்கும்
2. வாம்மா துரையம்மா
3. மேகமே மேகமே
6. நான் மகான் அல்ல
சுசிந்திரன் இயக்கத்தில், கார்த்தி மற்றும் காஜல்அகர்வால் நடிப்பில், ஆகஸ்ட் மாதம் நான் மகன் அல்ல திரைக்கு வந்தது. இப்படத்தை தயாநிதிஅழகிரி வெளியிட்டார்.
நாள் தோறும் செய்தாள்களில் நாம் படிக்கும் கொலைகள் சம்பந்தமான செய்தியும் இருக்கும். அதிலும் ஒருவரை கொன்றுவிட்டு அவரது உடல்களை துண்டு, துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு போலீசுக்கு தலைவலியாக மாறியவர்களை பற்றி படித்திருக்கிறோம். அந்த செய்தி துண்டை வேறொரு பாணியில திரைக்கதையாக்கி அதற்கு நான் மகான் அல்ல என்ற பெயரை சூட்டியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இளைஞர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி கதைக்களம் வித்தியாசமான முறையில் பின்னப்பட்டிருந்தது; திரைக்கதையும் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. வா வா நிலவப்புடிச்சித்தரவா
2. இறகை போலே அலைகிறேனே
7. பாஸ்(எ)பாஸ்கரன்
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடிப்பில், செப்டம்பர் மாதம் பாஸ்(எ)பாஸ்கரன் வெளியானது.
பொறுப்பில்லாமல் வெட்டியாக சுற்றித்திரியும் இளைஞன் காதலுக்காக பொறுப்பு உள்ளவனாக மாறும் கதை. முழுக்க முழுக்க காமெடியை மட்டும் நம்பி இரண்டாவது முறையாக பாஸ்(எ)பாஸ்கரன் படத்தின் மூலம் இயக்குநர் பரிட்சையில் ஃபாஸ் பன்னியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். இதில் வரும் 'நண்பேண்டா ...' வசனம் மிக பிரபலமானது. இப்படம் மக்களை மனம் விட்டு வயிறுகுலுங்க சிரிங்க வைத்த வெற்றி படமாகும்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. மாமா மாமா
2. யார் அந்த பொன்னுதான்
8. விண்ணைத்தாண்டி வருவாயா
கௌதவ்மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் பிப்ரவரியில் விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவந்தது. இப்படத்தை உதயாநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
உணர்வுகளை உசுப்பி விடும் ஒரு சில படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது கௌதம் வாசு தேவ மேனனின் சொந்தக்கதை என்று கூறப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா . இன்னும் கொஞ்ச காலத்திற்கு இளைய உள்ளங்களின் காதல் பாடப்புத்தகமாக கட்டாயம் இருக்கும்இப்படத்திற்கு இசைபுயல் A.R.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடலுக்காகவே இந்த படம் இளைனர்களை வெகுவாக கவர்ந்த இப்படத்தின் கதை காதல் மற்றும் ரொமான்டிக் கலந்து இருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. ஹோசானா
2. ஆரோமலே
3. ஓமனப் பெண்ணே
9. சிங்கம்
சன்பிர்க்கஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூரியா மற்றும் அனுஷ்கா நடிப்பில் மே மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இமையமைத்திருந்தார்.
தாதாவை ஒடுக்கும் ஹுரோ, என்ற பழைய பார்முலாதான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலமும், வித்தியாசமான காட்சி அமைப்புகளின் மூலமும் வெற்றிபடமாக பாய்ந்திருக்கிறது சிங்கம்.காவல்துறை அதிகாரியான சூரியாவிற்கும், வில்லனாக வரும் பிரகாஷ்ராஜிற்கும் இடையே நடைபெறும் மோதல்கள் திரைக்கதையை விறுவிறுப்பாக்கி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் ஹிட் பாடல்கள் + சூர்யாவின் மீசை இப்பொழுது பலரது முகங்களிலும் காணலாம்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. காதல் வந்தாலே
2. என் இதயம்
10.பையா
லிங்குசாமி இயக்கத்தில் க்ளவ்ட் நயன் மூவீஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் படம் பையா ஏப்ரலில் வெளியானது.
ரன் மற்றும் சண்டைக்கோழி படங்களின் வெற்றியின் தாக்கத்தில் இருந்து வெளிவராத லிங்குசாமி, அதே மாதிரியான காதல், இளமை, திகட்டும் அளவு சண்டை என்று பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் உடன் பையாவில் களம் இறங்கி உள்ளார். அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்பதும் உண்மை.யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதை காரை கதைகளமாக கொண்டு அமைந்துள்ளது. சிறந்த பொழுது போக்கு படமாக மக்களால் பாராட்டப்பட்ட படமாகும்.
எனக்கு பிடித்த சில பாடல்கள் :
1. துள்ளி துள்ளி மழையாய்
2. அடடா மழைடா
3. சுத்துதே சுத்துதே
0 comments:
Post a Comment