AND SOON THE DARKNESS (2011) - ஹாலிவுட் பட விமர்சனம் (18+)

பிரெஞ்சு மொழியில் 70-களில் வெளிவந்த ஒரு திரிலர் படம் 'AND SOON THE DARKNESS' - இதே படத்தை ரீ-மேக் செய்து இப்போது ஹாலிவுட்டில் இதே பெயரில் எடுத்து வெளியிட்டுளர்கள். இரண்டு படங்களில் - கதை நடைபெறும் இடம் மற்றும் காட்சியமைப்புகள் மிகவும் வேருபட்டவைகள்.
படத்தோட கதை என்னானா...

படம் தொடக்கும் போதே, ஒரு அறையில் அரைகுறை உடைகளில் ஒரு பெண்ணில் கைகள் கட்டபட்டு முகமெங்கும் காயத்தில் வீக்கம் + அவளது தொடைகளில் சில இடங்களில் ரத்த காயங்கள். வழியால் துடிக்கிறாள். அப்போது வரும் ஒருவன், அவள் மீது ஒரு வாளி நீரை கொட்டி, மின்சாரத்தில் இணைக்கப்பட்ட அந்த ஒயரை எடுத்து அவளது தொடைகளில் வைக்க அந்த இடமே அவளது சப்தத்தில் அலற, அவள் மயக்கமாகிறாள்.

மூன்று மாதத்திக்கு பிறகு என்று மீண்டும் படம் தொடக்குகிறது.

ஸ்டெபானி மற்றும் எல்லி இருவரும் தோழிகள். இவர்கள் அமெரிக்காவில் இருந்து தங்கள் விடுமுறையை கழிக்க, சைக்கிள் மூலம் அர்ஜென்டினா வருகிறார்கள்.

அன்று மாலை, இரவு விருந்தில் சரக்கு அடிக்க, அந்த இடத்தில் எல்லியை உள்ளூர் வாசி ஒருவன் பார்வையால் கவர, அவனுக்கு கம்பெனி தர கிளம்பிவிடுகிறாள். தனிமையில் வெறுத்துப்போன ஸ்டெபானி - பார்வையை சுழற்ற, அங்கே அமெரிக்கன் மைகேல் சந்திக்கிறாள். எல்லி அந்த உள்ளூர்வாசியின் மயக்கத்தில் தன்னை இழக்கும் நிலையில் ஸ்டெபானி வந்து அவளை ஹோட்டல் ரூமுக்கு அழைத்து தூங்க செல்கிறாள்.

தூக்கத்தில், ஏதோ சப்தம் கேட்டு ஸ்டெபானி எழுத்து பார்க்க எல்லி படுக்கையில் இல்லை. தேடி பார்க்க, ரூமுக்கு வெளியே போதையில் எல்லி அந்த உள்ளூர் வாசியிடம் மிக நெருக்கமாக இருப்பதாய் கண்டவள் - சப்தமிட்டு எல்லியை வலுகட்டாயமாக ரூம்முக்கு அழைக்க, அவன் சப்தமிட, எதிர் ரூமில் இருந்து மைகேல் வந்து அந்த உள்ளுர்வாசியை தாக்க, ஹோட்டல் உரிமையாளர் வந்து பிரச்சனையை சரிசெய்கிறார்.

மறுநாள் காலை, சைக்கிள் மூலம் இருவரும் ஒரு மலை பகுதியை காண செல்கிறார்கள். அது ரொம்பவும் ஒதுக்குபுறமான - அமைதியான நீரோடை கொண்ட பகுதி. பிகினி உடையில் ஓய்வெடுக்க - சிலமணி நேரத்திற்குப்பின், ஸ்டெபானி எல்லியை ஹோட்டலுக்கு அழைக்க, எல்லி வர மறுக்கிறாள். சின்ன சண்டை வர - ஸ்டெபானி சைக்கிள் எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு திரும்ப, பாதி வழியில் மனசு வராமல் எல்லிக்கு போன் செய்கிறாள். அவளை வரும் வழியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் நிற்பதாக சொல்லி அந்த ஹோட்டலுக்கு செல்கிறாள். எல்லி வரவில்லை. அந்த ஹோட்டலுக்கு மைகேல் காரில் வருகிறான். உதவி தேவையா என கேட்கிறான். இவள் வேண்டாம் என மறுக்கிறாள். மீண்டும் சைக்கிள் எடுத்துகொண்டு இவர்கள் இருந்த இடம் செல்ல அங்கே எல்லியை காணவில்லை. அவள் சைக்கிளும் இல்லை.

மைக்கேலும் அங்கே வர, இருவரும் தேட, எல்லியின் உடைமைகள் அந்த நீரோடை அருகே சிதறிக்கிடக்க, போலீஸ் உதவியை நாடுகிறார்கள். போலீஸ் வந்து பார்த்துவிட்டு எல்லி காணாமல் போயிருக்க மாட்டாள் என்று கூறி, ஒரு புகார் வாங்கிகொள்கிறார். அவர் அதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.

அந்த உள்ளூர் வாசி பைக்கில் செல்வதை ஸ்டெபானி பார்க்க, அவனை தொடர்ந்து செல்கிறாள். அங்கே, எல்லில்யை அவன் சித்தரவதை செய்வதை பார்க்கிறாள். அவனிடமிருந்து அவளை விடுவித்து தப்பித்து செல்லும் போது, உள்ளுர்வாசி தூரத்த, எதிரே மைகேல் + போலீஸ்காரர் காரில் வர, அங்கே எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடக்கிறது. அப்படி என்ன நடந்தது? அந்த இரண்டு பெண்களும் என்ன ஆனார்கள் என்பதே மீதி கதை.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்...

எல்லியாக Odette Yustman. டைரக்டர் கொடுத்த காசுக்கு இவளை உரித்து பார்த்துவிடுகிறார். போதையில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்ககூடியவைகள். இவளால் ஏற்படும் பிரச்சனயே இந்த படத்தின் அடி நாதம்.

ஸ்டெபானியாக Stephanie. ரொம்ப அழகு. அறிமுக காட்சிகளில் இருதே நம்மை மயக்கி இவள் ஒரு வழி செய்துவிடுகிறாள். பல இடங்களில் மிக சிறப்பான நடிப்பு

மைகேல்லாக Karl Urban - இந்திய பட கதாநாயகன் போற்ற முக சாயல் + இயல்பான நடிப்பு. ஒரு கட்டத்தில் இவன் தான் எல்லியை கடத்தினானோ என்ற சந்தேகம் வரும் இடமும் அதற்கு முன் நடக்கும் சம்பவங்கள் மிக அருமை. கடைசியில் அநியாயமாக செத்துபோகிறான்.

அர்ஜென்டினாவின் அழகை படம் முழுவதும் காண முடிகிறதும். மிக சிறந்த ஒளிபதிவும் (Todd E. Miller) + மிக இதமான பின்னனி (Tomandandy) இசையும் படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

போலீஸ் காரர், அந்த உள்ளூர் வாசி, ஹோட்டல் மேனேஜர், அடிபும்பில் தண்ணீர் பிடிக்கும் அந்த மனிதர் என் அனைவரும் மிக இயல்பாக நடித்திருகிரார்கள்.

ஆர்ட் டைரக்டர் தான் ரொம்ப கஷ்டப்பட்டு செட் போட்டதா இல்லை அந்த இடமே அப்படி தானா என்று தெரியவில்லை... ரொம்பவே பயமுறுத்து இடங்கள்.

திர்ல்லர் வகை படங்களில் இருக்கும் அந்த ஈர்ப்பு இந்த படத்தில் மொஞ்சம் மிஸ்ஸிங்.

இந்த படம் நமக்கு சொல்லவருவது என்னன்னா... பழக்கமில்லாத வெளி இடங்களுக்கு சென்றால், சென்ற வேலையை மற்றும் பார்க்கணும் அதை விட்டுக்கு வேற ஏதாவது விசயத்தில் சென்றால் வரும் பிரச்சனைகளை அனுபவித்து தான் ஆகணும்.

AND SOON THE DARKNESS - முடிந்தால் பார்க்கலாம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top