நவீன தாலாட்டு - கவியரசு வைரமுத்து


இந்தியாவுக்கு ஒரு ஆகத்து 15 வந்து விட்டது. இந்திய பெண்களுக்கு ஆகத்து 15 எப்போது?. பொருளாதார உதவி கிடைத்துவிட்டதால் பூட்டியிருந்த விலங்கு நொறுங்கி விடும் என்று கருதினர், போன நுற்றாண்டு பெண்.

ஆனால், பொருளாதார விடுதலை கூட கூட சில புதிய விலங்குகளை பூட்டியிருந்தது என்று இனம் கண்டு கொண்டவள் இந்த நுற்றாண்டு பெண். சிறகு இருந்தும் பறக்க முடியவில்லை என்று விமியவன் வீட்டுக்குள் இருந்த பெண்.

பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லை என்று விசுபுகிறவள் வேலைக்கு போகிற பெண்.

வேலைக்கு போகும் பெண்ண தன் வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை கொஞ்சம் நஞ்சமில்லை. போன ௧0 ஆண்டில் ஒரு காலும் இந்த நுற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை திரிசங்கு சொர்கத்தில் திவிகிறாள்.

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின் அவசர தாலாட்டு தான் கவியரசு வைரமுத்து சொல்லும் இந்த கவிதை.

இந்த அவசர நுற்றாண்டில் இருதயம் துடிக்கும் இயந்திரங்களாய் மாறிவிட்டது. மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு வயலின் வாசிக்கிறான். அடுப்பில் உட்கார்ந்துகொண்டு காதலிக்கிறான். கணவனும் மனைவியும் இண்டர்போளில்தாம்பத்தியம் நடுத்துகிறார்கள்.
குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது. காதலிக்கு வாங்கிய மல்லிகை பூ டீசல் புகையில் கருபாகிவிடுகிறது. இப்படி நிறம் மாறும் ஒரு வாழ்க்கையில் தாய் பாடும் ஒரு தாலாட்டு மட்டும் தடம் மாறிபோகாமல் இருக்குமா என்ன? எனவே தான் ஒரு குழந்தைக்கு முன்னிரவில் பாட பட வேண்டிய தாலாட்டு முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது.

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் - வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு - கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் - விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை -
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை -
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் -
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று - இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு - ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் -
தங்க மடியில் தூங்குவதாய் -
கண்ணனே கண்மணியே - கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை -
பொம்மைக்கும் பஞ்சமில்லை -
தாய்ப்பாலும் தாயும் இன்றி -
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே - நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் - நல்லவளே கண்ணுறங்கு!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிட்டு போங்க.

நல்ல பதிவு பலரையும்  சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



3 comments:

Unknown said...

//உறவுக்கு தடையாக
'ஒ' என்று அலறாமல் -
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது - நீ உறங்கு!//

நவீண வரிகள் தோழரே, நல்ல வரிகளும் கூட - அன்புடன்....விவாதகன்

Anonymous said...

Nice.

venu's pathivukal said...

சிறப்பான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
எனது பங்குக்கு தாலாட்டில் சேர்த்திருக்கிறேன்..

எஸ் வி வேணுகோபாலன்

முற்போக்கு பேசினாலும்
மூதுரைகள் போகலையே
தாலாட்டு தாயின் வேலை
தங்கமே கண்ணுறங்கு

சமத்துவம் பேசினாலும்
சமைப்பதின்னும் பெண் வேலை
புகைச்சல் எரிச்சலோடு
புறப்படுறேன் கண்ணுறங்கு

அப்பா என்றால்
நெனச்சப்போ திரும்பலாம்
அலுவலகம் விட்டால்
அம்மாவின் அடுத்த அடி
வீடென்று தெரிந்தவளே
விரைவாகக் கண்ணுறங்கு..

எஸ் வி வி

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top