ஆதவன் - திரை விமர்சனம்

நேற்று தான் இந்த படத்த பார்த்தேன் காரபக்கம் அரவிந்த் தியேடரில். கூட்டம் நிறைத்து இருத்து. விசில் சப்தம் காதை கிழிக்கும் அளவு... ரசிகர்கள் உற்சாகத்தில்... அவர்களுடன் நானும் ஒருவனாய்.... அமர்திருந்தேன்.

படத்தோட கதை என்னனா ...

அப்பா சாயாஷி ஷிண்டே மற்றும் அண்ணன் ஆனந்த்பாபு உடன் கடத்தல், கொள்ளை, கொலை என்று தப்பான வளர்ப்பால் உருவாகிறார் ஹீரோ ஆதவன்(சூர்யா).

கொல்கத்தாவில் குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி (பரத்முரளி)யிடம் வருகிறது. நீதிபதியைக் கொலை செய்ய வில்லனால் விலை பேசப்படும் சூர்யா, பரத்முரளியின் மீது வைத்த குறி தப்ப, வில்லன் கூட்டம் சூர்யாவின் கூட்டத்தை மிரட்டுகிறது.

பொங்கி எழும் சூர்யா, அடுத்த 10 நாட்களில் அந்த நீதிபதியைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறார். பின்னர், பானர்ஜீ (வடிவேலு)வின் துணையோடு நீதிபதியின் குடும்பத்துக்குள் சென்று - வேலை செய்ய வந்தது போல நடித்து - அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

அங்கே இருக்கும் பெண்கள் (சரோஜா தேவி & co), குழந்தைகளிடம் நல்லவனாக நடிக்கிறான். எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது. அனைவரும் சூர்யாவிடம் அன்பு மழை பொழிய - நீதிபதி தங்கை மகள் தாரா (நயன்தாரா) அவன் மேல் காதல் வயப்படுகிறாள்.

இதனிடையே நம்ப ஹீரோ வந்த வேலையை ஜோரா செய்ய - காருக்கு அடியில் வெடிகுண்டு பொருத்துகிறான். அதில் நீதிபதி தப்புகிறார். பிறகு கிட்டாருக்குள் டைம்பாம் வைத்து கார் டிக்கியில் பொருத்தி வெடிக்க வைக்கிறான். அதிலும் நீதிபதி சாகவில்லை. வில்லன் கூட்டம் நீதிபதியை கொல்ல நேரடியாய் களம் இறங்குகிறது.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஓர் உண்மை தெரிகிறது. அது என்ன உண்மை ...? பரத்முரளியைச் சூர்யா கொன்றாரா ? வில்லன் கூட்டம் நீதிபதியை என்ன செய்தார்கள் என்று மீதி கதையை திரையில் காண்க.

படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..

  • வடிவேல் தான் படத்தின் நிஜமான நாயகன். படத்திற்குப் பலமே நகைச்சுவைக் காட்சிகள் தான். இவரு ரொம்ப நாள் கழிச்சு இந்த படத்துல தான் அடி வாங்காத மாதிரி நடிசிருக்காரு. பானர்ஜீயோட பெயர்க்காரணம்,பொறம்போக்கு - புது விளக்கம், ஜிகர்தண்டா தூத் குடிச்சுட்டு உளறும் காட்சி, பாம் வெச்ச பஸ்ல ஏறிட்டு படாத பாடுபடுறது... இப்படி படம் பூரா மின்னிருக்காரு. மேலும் இவரு, சரோஜாதேவியின் மேக்கப்பை கிண்டல் செய்யும் போதெல்லாம் சி‌ரிப்பில் திரையரங்கு கதிகலங்குது. 'கைப்புள்ளை', 'நாய் சேகர்' வரிசையில் கண்டிப்பா இந்த 'பானர்ஜீ'க்கும் இடம் உண்டு.

  • "சுட்ட பிறகு தலை எனக்குதான்" என்ற ஒரு டயலாக்கை சொல்லி சொல்லியே தியேட்டரை உலுக்கி எடுக்கிறார் மனேபாலா.

  • பத்து வயது கெட்டப்பில் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மற்றபடி அயனில் பார்த்த அதே சூர்யவை தான் இந்த படதில்லும் பார்க்கமுடிகிறது. பெருசா நடிக்க சொல்ல ஒன்னும் இல்ல.

  • மறைந்த மலையாள நடிகர் பரத்முரளியின் நடிப்பு நிறைவு. வழக்கமான சினிமா அப்பாவாக அவரை வீணடித்திருக்கிறார்கள்.

  • நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் சரோஜா தேவியும், ஆனந்த் பாபுவும். சரோஜாதேவி - 'அன்று வந்ததும் அதே நிலா' பாட்டுக்கு அவர் காட்டும் அபிநயம் ... அழகு! 'ஓல்ட் இஸ் கோல்ட்'. ஆனந்த் பாபு - ரொம்ப தான் ஆள் நோடிஞ்சு போய் இருக்கார். அப்பா நாகேஷ் மறைந்த துக்கம் இன்னும் விலகலபோல தெரியுது.

  • நயன்தாரா - அவருக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று புரியவில்லை. பாட‌ல்க‌ளில் க‌ல‌ர்கல‌ராக‌ வ‌ரும் ந‌ய‌ன்தாராவுக்கு வேலையே இல்லை. மேக்க‌ப்பும் அவ‌ரும்... ச‌கிக்கலை. இவரை போலவே, ரமேஷ் கண்ணா. எதற்காக வருகிறார்..?

  • இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ். பாட‌ல்க‌ள் அதே மெட்டு தான் என்றாலும், கேட்ப‌த‌ற்கு ஓகே. ஆனால், பின்னணி இசை கொடுமை. ஒரே இரைச்சல் தான். அரைச்ச மாவையே சும்மா அரைத்துகிட்டு இருந்தா எப்படி சார்...?

  • ஒளிப்பதிவாளர் கணேஷ்-ன் ஒளிப்ப‌திவு சூப்ப‌ர்! சண்டைப் பயிற்சியாளர் பிரான்ஸ் ஆகியோர் தங்களது பணியைத் திறம்பட செய்திருக்கிறார்கள்.

  • கமலை 10 அவதாரம் எடுத்த டைரக்டர் கே எஸ் ர‌விக்குமார் - மீண்டும் ஒரு 'மின்சார கண்ணா' மாதிரி படத்த எடுத்து செய்த தவறையே மீண்டும் செய்துள்ளார்.


ஆதவன் - மசாலா படம்!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



2 comments:

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல சுருக்கமான விமர்சனம். என்னைப் பொறுத்த வரை கந்தசாமியைவிட நல்ல சிறப்பான படத்தைத் தந்த இயக்குனரையும் நடிகர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.

தசாவதாரத்துடன் இதை ஒப்பிடுவதால் தான் கே.எஸ்.ரவிக்குமாரின் படமா எனச் சந்தேகம் எழுகிறதேயன்றி இதிலுள்ள நக்கலும் நகைச்சுலையும் கே.எஸ்.ஆரின் டச் தான்!

ஹரிஸ் ஜெயராஜ் - அரைத்தமாக் கதை எல்லாரும் அறிந்ததே - அவரது பாடல்களுக்கிடையில் ஓடும் லூப்புக்கள் கூட ஏற்கனவே அரவது அனேகமான பாடல்களில் ஒலித்த ஒரே விடயங்கள்தான் - ரஹ்மானின் இசை சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு.

Kannan said...

தங்கள் கருத்தினை நான் வரவேற்கிறேன் நண்பரே

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top