திரும்பிபார்கிறேன் : குங்கும சிமிழ் - விமர்சனம்

நேற்று இரவு, ஆபீஸ் வேலை முடித்து வீட்டு சொல்ல 10:40 ஆச்சு. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் வாங்கி போகமுடியலையே என்ற வருத்தத்துடன் பழைய படம் ஏதாவது பார்கலாமே என்று ஒரு DVD போட்டேன். அட நம்ப மைக் மோகன் படம் குங்கும சிமிழ். 175 நாட்கள் ஓடி சாதனை செய்த படம்.

படத்தோட கதை என்னனா ...

கோவை டு சென்னை பஸ்ஸில் நம்ப ஹீரோ ரவி (மோகன்) வேகமாக வந்து ஏறியாவுடன் பஸ் புறப்படுகிறது.அதே பஸ்ஸில் நம்ப கதாநாயகி பிலோமீனா(இளவரசி) - சில ரவுடி பயகளிடமிருந்து தப்பித்து வந்து ஏறுகிறாள். டிக்கெட் எடுக்க காசு இல்லை - ஹீரோ உதவ - பயணத்தின் பாதி வாயில் 'டீ பிரேக்' விட்டு பஸ் நிற்க - ஹீரோவின் பணம் தவறி பஸ்ஸில் விழ - அதை கதாநாயகி தான் திருடிவிட்டார் என சொல்ல - ஒருவழியாக சென்னை லைட் ஹவுஸ் வந்து இருவரையும் இறக்கி விடு செல்லகிறது.

ஹீரோ மீண்டும் பணத்தை கேட்க - நாயகி பணத்தை திருப்பி தருவதாக சொல்லி மாலை பீச் வரசொல்லி செல்கிறார். ஹீரோ கார்த்திருக்க - நாயகி பணத்தை திருப்பி தரும்போது போலீஸ் இருவரையும் கைது செய்து - கோர்ட்டில் நிறுத்த - சாமர்த்தியமாக பேசி இருவரும் விடுதலை ஆகிறார்கள். நாயகி நிலை கண்டு ஹீரோ தங்க இடம் தருகிறார். இந்த இடத்துல ஒரு பாட்டு இருந்தா எப்படி இருக்கும்.

"கூட்சு வண்டியிலே ஒரு காதல் வந்திருக்கு
காதல் செய்வதற்கு இடம் காலியா இருக்கு ...."

இருவரும் வேலைக்கு முயற்சிசெய்ய - LIC-இல் வேலை கிடைத்துவிட்டதாக பொய் சொல்லி ரிக்ஸா ஓட்டும் போது ... ஒரு கனவு பாட்டு இருந்தா எப்படி இருக்கும்.

"கை வலிக்குது கை வலிக்குது மாமா
ஒரு கை பிடிக்கும் அம்மி அரைக்கணும் மாமா ..."

ஒரு நாள் உண்மை தெரியவர, இனி ரிக்சா ஊட்டக்கூடாது என ஹீரோவிடம் பேசி - பசியால் வாடும் இருவரது களைப்பை போக்க ஒரு பாட்டு போடுங்க ராஜா சார்.

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது...."

நிலவு - பசி முகங்கள் - பீச் - காற்று என்ன கேமிரா இரவில் விளையாட .... ராஜா சார் இசையால் நம்மை தூங்க செய்வர் இந்த இடத்தில், பசியை மறந்து.

தன்னால் ஹீரோவும் கஷ்டபடுவதை நினைத்த பிலோமீனா, ஹீரோவிடம் இனி இருவரும் வேலை கிடைத்தால்தான் சந்தித்து பேசணும். அதுவரை நோ ரோமன்சு என்று சொல்லி வேலை தேடி செல்ல - பழைய உறவினரை சந்திக்கிறாள் இவள்.

முன்பணம் கட்டினால் வேலை என்று ஹீரோவுக்கு தெரியவர - பஸ்ஸில் பயணிக்கும் ஒருவர் பணத்தை தவறவிட - அது ஹீரோவிடம் கிடைக்க - அதைக்கொண்டு ஹீரோ வேலைக்கு சேருகிறார். சென்னையை விட்டு ஹீரோ மேட்டுபாளையம் வருகிறார்.

ஹீரோ வந்த இடத்தில் நம்ப ரேவதி வீட்டு வேலைகளை கவனிக்க, ஹீரோ மீது ஒரு வித அன்பு பிறக்க - திருவிழா வர .... ஒரு குத்து பட்டு போடுங்க ராசா சார் இந்த இடத்துல...

"வட்சலாம் நெத்தி போட்டு தன் கையால
மச்சானின் நெஞ்சை தொட்டு ...."

காரு ரேடியேட்டரில் தண்ணீர் இல்லாமல் நின்று விட - நம்ப அடுத்த ஹீரோ சந்திரசேகர் என்ட்ரி. தண்ணீர் தேடி போற இடத்துல ருக்குவை (ரேவதி) பார்க்க - பல்பு எரிகிறது - மணி சப்தம் கேட்கிறது. (நம்புங்க ... அது லவ் தாங்க...)

ஹீரோ பிலோமீனாவின் நினைவில் இருக்க... ஒரு சோகப்பாடல் போட்டு ராசா சார் பின்னியிருபார் பாருங்க .... அட அட நீங்கள் அதை கேளுங்களேன்....

"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
நினைவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது ...."

சந்திரசேகர், பெண் கேட்டு வரும்போது - ருக்குவின் தந்தை டெல்லி கணேஷ் பெண் தர மறுக்க - ஒரு பிளாஷ் பேக்கு.

பண பிரச்சனை தான் ருக்கு திருமணம் நிக்கிறது என்ற உண்மை அறிய ஒரு பிளாஷ் பேக்கு. ஹீரோ, ருக்குவை கல்யாணம் செய்ய முன்வர... ஒரு பாட்டு போடுங்க ராஜா சார்...

"பூங்காற்றே தீண்டாதே என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவள் ...."

பிலோமீனா கதி என்ன ? ருக்குவுக்கும் ரவிக்கும் திருமணம் நடந்துதா ? சந்திரசேகர் காதல் என்னவானது ? இப்படி பல கேள்விகள் கேட்டால் நான் சொல்லும் ஒரே பதில் நல்ல DVD-ஆ வாங்கி பாருங்க / TV-ல் இந்த படத்த போட்ட மறக்காம பாருங்க.

படத்துல .... என்னை கவர்த்தவைகள் பல...
  • ரேவதியும் அவரை சுற்றிவரும் இரண்டாம் பாதி கதையும்.
  • தெளிவான திரைகதை -சுந்தரராஜன். இப்படியெல்லாம் படத்த பார்த்துட்டு இப்ப வர படத்துல கதையை தேட CBI வைக்க வேண்டியுள்ளது.
  • அருமையான 5 பாடல்கள் + பின்னணி இசையும். அதுல பார்ருங்க ... இந்த ராஜா சாரு, மௌத் ஆர்கனை வைத்து ... அட போங்க எல்லாத்தையும் நானே சொல்லிடா...? படத்துல பாருங்க. நீங்களும் என்னைப்போல ரொம்ப என்ஜாய் பண்ணுவீங்க.
  • மோகன் - மிக எதார்த்தமாக நடித்து அனைவரையும் கவர்திருப்பார் இந்த படத்துல.

ஒரு பகவத் கீதையிலோ ...!
ஒரு குர்ரான்லையோ ...!
ஒரு பைபிளிலோ ...!
இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கனும்னும்னா
அதை மாத்த யாராலும் முடியாது!


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



3 comments:

Ganesh said...

i have seen this movie. Very nice..

Senthil said...

ஹாய் கோழிபையா

உங்கள் தரவரிசை அருமை, இனிமை, நிறைவு

Kolipaiyan said...

Thanks for your support.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top