யார் இந்த விஜய் மில்டன் ?
‘ஆட்டோகிராஃப்’, 'காதல்’, 'வழக்கு எண் 18/9’ படங்களை ரசனை ஓவியமாக மனதில் பதியச்செய்த ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், 'கோலி சோடா’ மூலம் மீண்டும் இயக்குநர் இருக்கையில் அமர்கிறார்!கோலி சோடா படத்தோட கதை என்னனா ...
ஒரு கோலி சோடாவில் 200 மில்லி தண்ணி இருக்கும். சாதாரணமா பார்த்தா அது வெறும் தண்ணிதான். ஆனா, அதுக்கு அழுத்தம் கொடுத்தா, அதுவரையிலான இயல்பை மீறி ஒரு விஷயம் பீறிட்டு வரும். 'இந்தத் தண்ணியிலா இவ்வளவு ஃபோர்ஸ் இருந்தது?’னு ஆச்சர்யப்படுவோம்.கோயம்பேடு காய்கறி சந்தையை மையமாகக் கொண்டு, சாதாரணமா இருக்கிற நாலு பசங்களுக்கு பிரஷர் கொடுக்கும்போது, தொடர்ந்து தொந்தரவு பண்ணும்போது, அவங்க எப்படி அடிச்சு, உடைச்சு வெளியே வர்றாங்கனு சொல்ற படம் தான் 'கோலி சோடா’!'
என்ன ஸ்பெஷல் இருக்கு இந்த படத்துல...?
பவர் ஸ்டார், சாம் அன்டர்சன் & டி.ஆர் இணையும் கோலி சோடா பாடல் உருவாகிய விதம் பற்றி அப்பாடலின் ட்ரெயிலர் வடிவில் யூடியூப்பில் வீடியோவொன்று ஹிட்டாகி வருகின்றது அதன் இணைப்பு இங்கே...வீடியோவின் தொடக்கத்தில் யூடியூப்பில் ஹிட் எண்ணிக்கையை Alt செய்ய முடியுமா? என கேட்பதும் டான்ஸ் என்றால் ஈசியா இருக்கனும் என சாம் அன்டர்சன் சொல்வதற்கும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
0 comments:
Post a Comment