காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ?

காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. அதனால் இன்று நாம் பார்க்க இருப்பது காளான் பிரட் சான்விட்ச்.

அதற்கு முன், பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.


சரி.. சரி இனி காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

காளான் - 200 கிராம்,
கோதுமை பிரட் - 4,

வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிதளவு,

மசாலாத் தூள் - கால் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - சிறிதளவு,

கொத்துமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணைய் - 100 கிராம்.

செய்முறை:-

  • காளான்களைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய்,மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

  • கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும்.


  • இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும்.

  • சுவையான, சத்தான காளான் சான்விட்ச் ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top