ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க...

இந்தியாவில் 50 ஆண்டில் 220 மொழிகள் அழிவு - :(

மனிதர்கள் தங்களது கருத்துக்களை மற்றவர்களிடத்தில் பரிமாறி கொள்ள உருவாக்கி கொண்டது தான் மொழிகள். மொழி உருவாக அடிப்படை காரணம் ஒன்று என்றாலும் இனத்தை பொருத்தும் வாழும் இடத்தை பொருத்தும் மொழிகள் பலவேறு வகைகளாக பிரித்து வித்தியாசமான எழுத்து வடிவங்களை கொடுத்து வேறுபடுத்தி பேசி, எழுதி வருகின்றனர்.


இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் மொழி ஆய்வு மற்றும் பதிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் இந்தியா முழுவதும் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு நடத்தியது. எழுத்தாளர் கணேஷ் தேவி தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் மொழி குறித்த ஆய்வு என்ற பெயரில் இது நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், திட்ட தலைவருமான கணேஷ் தேவி கூறுகையில், இந்தியா முழுவதும் எங்கள் ஆய்வு மூலமாக 780 மொழிகளை கண்டுபிடித்தோம். அவற்றில் 100க்கும் மேற்பட்டவை அழியும் நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அழிந்து போன மொழிகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் மொழிகள் குறித்த எங்கள் ஆய்வில் கிட்டத்தட்ட 880 மொழிகள் இந்தியா முழுவதும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவற்றில் பல மொழிகள் மறைந்துவிட்டன. 1961ம் ஆண்டு 1,652 மொழிகள் இருந்ததாக பதிவாகி உள்ளது. பின்னர் அது 1,100 ஆக குறைந்துள்ளது.

1971 கணக்கெடுப்பின் போது 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் மொழிகள் 108 இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன என்றார்.

தமிழ் மொழி இறக்குமா...?


தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.


உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து) தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம் தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்! வருங்கால சந்ததியினருக்கு உதவி செய்வோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



1 comments:

Gowtham GA said...

அருமையான பதிவு...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top