தலைவா-வில் இவ்வளவு விஷயம் இருக்கா...!!!

விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'தலைவா' படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளன திரையரங்குகள்.

விஜய்யையும் அவர் தந்தையையும் முதல்வர் சந்திக்க மறுத்த தகவல் வெளியான பிறகு இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் 'தலைவா' படம் ரிலீஸ் ஆக உள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்துல...?


வெயிட்... 20 விஷயங்கள் இருக்கு. வரிசையா ஒவ்வொன்ன சொல்றேன் கேட்டுக்கோ...
  1. சிரிக்க வைக்க சந்தானம் இருக்கும் போது கவலை எதுக்கு பாஸ்.

  2. 'மதராசப்பட்டணம்' ஏ.எல்.விஜயுடன் விஜய் இணையும் முதல் படம்.

  3. தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். இவர் கடைசியாக தயாரித்த படம் சத்தியராஜ்-குஷ்பு நடித்த 'ரிக்சா மாமா'. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட்.

  4. 'தெய்வத்திருமகள்' அமலாபாலுடன் விஜய் இணையும் முதல் படம். படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாயகி ரோலுக்கு அடிபட்டது. இந்த ரேஸில் ஜெயித்தது என்னவோ நம்ம அமலாபால் தான்.

  5. அமலாபால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.


  6. ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக நடித்துள்ளார் விஜய்.

  7. விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ... என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.

  8. நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

  9. திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

  10. துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

  11. இவர்கள் தவிர ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா, இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.

  12. ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

  13. படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

  14. ஆஸ்ட்ரேலியாவில் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் கலக்கும் விஜய், தமிழகம் திரும்பிய பிறகு டைட் அரைக்கை சட்டை, டைட் பேன்ட், டக் இன் என்று யூனிஃபார்ம் கெட்டப்புக்கு மாறுகிறார்.


  15. சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன் வருகிறார்.

  16. சற்றே நீண்ட திரைப்படம் அதாவது இரண்டு மணி ஐம்பது (2:50) நிமிடங்கள்.

  17. சென்சா‌ரில் U/A சான்றிதழ்தான் கிடைத்தது. U/A என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி U சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.

  18. இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்.

  19. ஆந்திராவில் 'அண்ணா' என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் 'தலைவா' என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

  20. தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள். இது உண்மையா ...?!
இது போதுமா இல்லை இன்னும் வேணுமா ...? சரி வாடா மாப்ளே... படம் நாளைக்கு ரிலீசு ... முதல் ஷோ பாத்துட்டு படத்தப்பத்தி விரிவா அலசலாம்.

படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : nilavaithedi



2 comments:

SNR.தேவதாஸ் said...

ரஜினி போல எப்பவாது வராமல் சந்தானம் போல அடிக்கடி வந்து பதிவு இடுங்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top