சீடன் - விமர்சனம்

திருடா திருடி கூட்டணியான சுப்பிரமணிய சிவா + தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் தினாவின் (50th) மற்றுமொரு படம் 'சீடன்'.


படத்தோட கதை என்னானா...

பழனியில் வசிக்கும் பெரிய பணக்கார வீட்டில் தங்கம் (சுஹாசினி) வேலைக்காரியாக இருக்கும் மஹாலக்ஷ்மி (அனன்யா) ஒரு முருக பக்தை. ஆனால், அவர் பழனி முருகனை ஒரு முறை கூட தரிசித்ததில்லை. கனவில் ஒருவனை மணப்பது போல கனவு காண, அந்த அவனே (கிருஷ்ணா) நேரில் வருகிறான். அவ்வீட்டின் எஜமானியின் பேரன் கிருஷ்ணாவை கண்டதும் காதல் தொற்றிக்கொள்ள உருவாகிறது பிரச்சினை.

அந்தப் பிரச்சினைகளில் இருந்து காக்கும் வேடத்தில் நம் தனுஷ் - சமையல்காரராக வருகிறார். உண்மையான காதலை புரிந்து கொண்ட அவர் எப்படி அவர்களது காதலை சேர்த்து வைக்க பாடு படுகிறார். இறுதியில் இவர்களை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது தான் மீதிக் கதை.


எனக்கு பிடித்த சில...

முதல் பாதியில் ஒரே பாடல் மாயம். 5 TV சீரியலை மொத்தமா பார்த்தா வரும் கண்ணீரை ஒரு மணி நேரத்தில் வரவைத்த புண்ணியம் இயக்குனரை சேரும்.

இரண்டாம் பாதியில் தனுஷ் வந்த பிறகாவது படம் சூடு பிடிக்கும்னு பார்த்த நமக்கு தான் கிறுக்கு பிடிக்குது. எப்படா படம் முடின்னு தோனுச்சு அடிகடி. என்னுடன் படம் பார்த்த 47 பேரில் 12 பேரு இடைவேளையில் கிளம்பிவிட்டர்கள். மீதி பெரும் பொறுமையா இருக்க காரணம் நம்ப தனுஷ் - வந்து படத்த ஓட்டுவாருனு பார்த்தா... ஊகும் நகரவே படம் இல்லை.

ரொம்ப ரசித்த காட்சிகள்

முன் பனிக்காலம் பாடல் + டைட்டில் போடறப்ப வரும் இனிய மெலோடி மியூசிக்கும் + ஓவியம் டிசைன் + தனுஷ் மயில் தோகை மூலம் செய்யும் அந்த டிசைன்

கௌரவ வேடம் ஏற்ற தனுஷை பாராட்ட வேண்டும். இடைவெளிக்கு முத்தின காட்சியில் வந்து இடைவேளை கார்டு போடுகிறார்கள். அவர் பேசும் வசனக்கள் சுருக். நறுக். ஆனால் அவரை பழனி மலை முருக கடவுளாகி பார்த்த அந்த இயக்குனரை என்ன சொல்ல? ! முடியல... வலிக்குது.

அனன்யா நன்றாகவே நடித்திருக்கிறார். படம் முழுவதும் வரும் வலுவான அழுத கேரக்டரை அனாயசமாகத் தாங்குகிறார். தோற்றத்திலும் இளைத்து இருப்பது ஆச்சரியமான மாறுதல்.


மயில்சாமியின் செல்ஃபோனை திருடி வாயில் வைத்துகொண்டு விவேக் பாடு படும் சீன் மட்டும் தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி. இன்னும் சில இருக்கு. ரசிக்க தான் முடியல. விவேக்கு காமெடி பஞ்சம் வந்துவிட்டதோ?

மனதில் நின்ற / பிடித்த சில வசனம்

இனி உன் சோகம் எல்லாம் என்னுடையது.. என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது.

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

பெரிய வாழ்க்கையைக் கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு.

வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்

குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?

சுஹாசினி மணிரத்னம், ஷீலா, இளவரசன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சொல்லி கொள்ளும்படி யாருடைய நடிப்பும் இல்ல. எல்லாமே நாடகம் பார்ப்பது போலதான் இருக்கு.

சீடன் - படு மொக்கை படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

எந்த ஊர்ல இப்பிடி ஒரு அழகான வேலைக்காரி இருக்காளாம்....?

Jayadev Das said...

Thanks Boss.

Kolipaiyan said...

@MANO நாஞ்சில் மனோ

Waste movie ji.

Thulz said...

I feel again Dhanush imitates Rajini. It won't work out for him. Waste fellow.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top