வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top