விஜய் புதிய படத்தோட பேரு பில்லா ஸாரி… ‘ஜில்லா’!


விஜய் நடிக்கும் புதிய படம் 'ஜில்லா'. இதென்ன அஜித்தின் பில்லாவுக்கு போட்டி படமா என்று கேட்டால் அதைப்பத்தியெல்லாம் எதுவும் சொல்லல. ஆனா ஏதோ ஒரு தெலுங்கு படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணினா எப்படி டைட்டில் வைப்பாங்களோ? அப்படி ஒரு டைட்டிலை ஜில்லான்னு வெச்சிருக்காங்க விஜய் நடிக்கப்போற புதுப்படத்துக்கு.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். ஆர்.பி.சௌத்ரி பேசும்போது சூப்பர் குட் பிலிம்சின் 25-வது படமாக ‘ஜில்லா’ தயாராகிறது. ‘திருப்பாச்சி’ படத்துக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என்றார்.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்துல துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்- காஜல் அகர்வால் மறுபடியும் ஜோடி சேர்றார்.கூடுதல் ஸ்பெஷலா இந்தப்படத்துல மலையாள நடிகர் மோகன்லால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம்.

பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமையா, பரோட்டா சூரி, மகத், ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை நேசன் இயக்குகிறார். ரீமேக் படங்களை டைரக்ட் பண்ணி பாப்புலரான ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நேசன் என்பது கூடுதல் தகவல்.

இமான் இசையமைக்கிறார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வருது.

ஜில்லா பட பூஜை இன்று காலை தியாகராயநகரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘லவ்டுடே’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் ஹிட்டாயின. அந்த படங்களின் சாதனையை ‘ஜில்லா’ படம் முறியடிக்கும். காஜல் அகர்வால் நாயகியாக வருகிறார்.

இவ்வாறு விஜய் கூறினார்.

விஜய் - அதிரடி ஆட்டம்

நடிகர் விஜய் மிக வேகமாகத்தான் இயங்குகிறார், அடுத்து வெளிவரப்போகும் தலைவா இன்னும் திரைக்கு வராத நிலையில், அதற்கு அடுத்த படமான ‘ஜில்லா’ வரும் 11-ம் தேதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது.

வழமையாக ஒரு படத்திற்கும் அடுத்தப் படத்திற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது இடைவெளிவிடும் விஜய், இப்போது அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதுவும், அடுத்த படம் வெளியாவதற்குமுன், அதற்கு அடுத்த படம்!

தமிழ் சினிமா மார்க்கெட் வேல்யூவில் கிட்டத்தட்ட இவரது இடத்துக்கு அருகில் உள்ள மற்றைய ஹீரோக்கள், தமது அடுத்த படமே எது என்று அறிவிக்காத நிலையில், விஜய்யின் இந்த வேக நடவடிக்கை, அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பது நிஜம்தான்.

துப்பாக்கி வெற்றியைப் பற்றி திரையுலகம் பேசிக்கொண்டிருந்த போதே, அந்த சூடு ஆறுவதற்குள் அதிரடியாக தனது 'தலைவா' பட அறிவிப்பை வெளியிட்டு, மீண்டும் செய்திகளில் பரபரப்பாக அடிப்பட்ட விஜய், 'ஜில்லா' அறிவிப்பின் மூலம், மீடியாக்களில் அடுத்த ரவுண்ட் வருகிறார்.

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், விஜய் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'தலைவா' படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுகின்றன. அது ஏன் தெரியுமா?தலைவா படத்தைக் காட்டிலும், ‘ஜில்லா’ பற்றிய செய்திகளே அதிகமாக மீடியாக்களில் அடிபடுவதற்கு இரண்டு காரணங்கள்.

1. புதுமுக இயக்குநர் நேசன்.

நடிகர் விஜய், ஜில்லா படத்தின் கதையைப் பற்றி ஆஹா... ஒஹோ என்றும், இயக்குநர் நேசன் இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார் என்றும் புகழ்ந்தார். அதையடுத்து அவர்மீது பலரது கவனமும் சென்றது.

தவிர, தற்போது மார்க்கெட்டின் உச்சியில் உள்ள விஜய், நடிக்க சம்மதித்தால் உடனே கதை பண்ண தயாராக பிரபல இயக்குனர்கள் காத்திருக்க, புதுமுக இயக்குநர் ஒருவர்மீது நம்பிக்கை வைத்து தமது அடுத்த படத்தை கொடுத்திருக்கிறார்.2. மோகன்லால்

'ஜில்லா' படத்தின் கதையும், தமது கதாபாத்திரமும் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். விஜய்க்கு அடுத்தபடியான மிக முக்கிய கதாபாத்திரம் என்பது ஒரு ஊகமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில், ‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை சிலர் கவனித்திருக்கலாம்.

‘ஜில்லா’ படத்தின் விளம்பரங்களில் மோகன்லாலுக்கு விஜய்யை விட சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு விடை அறியும் ஆவலும், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஒரு விதத்தில் சொன்னால், ரூ.150 கோடியை விட அதிக பட்ஜெட்டில் தயாராவதாக சொல்லப்படும் (பவர் ஸ்டாரின்) ‘ஐ’ படத்தைவிட, இன்னமும் பூஜையே போடப்படாத ‘ஜில்லா’வுக்கு மீடியா பப்ளிசிட்டி அதிகம்!

‘ஜில்லா’ படம் மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : விறுவிறுப்பு சினிமா0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top