வாழைப்பூ பக்கோடா

'அடடா மழைடா... அடைமழைடா'னு பாடற காலம் இது. சாயங்காலம் ஆகிட்டா... குளிர்கூட அடிக்கத்தான் செய்யுது. காரசாரமா... மொறுமொறுனு ஏதாச்சும் இருந்தா... சூப்பராத்தான் இருக்கும்'' என்று தோன்றுகிறது தானே..!

இதோ... அசத்தலான, அருமையான வாழைப்பூ பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்...


தேவையான பொருட்கள் :-
 • வாழைப்பூ - 1,
 • பெரிய வெங்காயம் - 2,
 • கடலை மாவு - 2 கோப்பை,
 • மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி,
 • சோள மாவு - 2 தேக்கரண்டி,
 • கறிவேப்பிலை - 3 கொத்து,
 • எண்ணெய் - 200 கிராம்,
 • உப்பு - தேவையான அளவு
செய்முறை :-

 • வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

 • அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 • பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.

 • வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடான, சுவையான, சத்தான வாழைப்பூ பக்கோடா ரெடி.

குறிப்பு :-

1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.

2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி...புதிய பதிவர் நான். என் வீட்டில் உங்கள் தளத்தில் வருவது போல செய்து பார்ப்பார்கள். "நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்" - நிறைய தடவை என் வீட்டில் படிக்கச் சொல்வேன். உங்களின் பல பதிவுகள் நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள். நன்றி.

Kolipaiyan said...

@திண்டுக்கல் தனபாலன்

தங்களின் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி நண்பரே. குறை இருப்பின் என்னிடம் சொல்லுங்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top