மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். அதே போல, கத்திரியுடன் மீல் மேக்கர் சேர்த்தால் அதன் ருசியே தனி தான்.

சரி... வாங்க மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்...

தேவையானப் பொருள்கள்:
மீல் மேக்கர் - 20
வெள்ளை கத்திரிக்காய் - 3
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
சிறியது மிளகாய் - 2

தேங்காய் - 1 கப் (துருவியது)
புளி, பூண்டு - தேவையான அளவு
சிறிய நெல்லிக்காய், அளவு மாங்காய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
மல்லி இலை - 1 கொத்து.


தாளிக்க:-

கடுகு, உ.பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
  • மீல் மேக்கரை சுடு நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • கத்தரிக்காய், மாங்காய், தக்காளி, வெங்காயம் இவற்றை நறுக்கி கொள்ளவும். புளியை ஊற வைக்கவும்.

  • சிறிது வெங்காயம், தக்காளி, மிளகாய், தேங்காய் இவற்றை தனியே மிக்சியில் அரைத்து கொள்ளவும். மீதி தேங்காயை, சிறிது சீரகம் சேர்த்து அரைக்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

  • பின்னர் மஞ்சள் தூள் சேர்க்கவும். அதன் பிறகு, கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

  • புளி கரைத்து ஊற்றவும். இதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

  • சிறிது நீர் சேர்த்து மீல் மேக்கரை போடவும்.

  • அவை வெந்ததும் அரைத்த தேங்காயை போடவும். நன்கு கொதித்ததும் மல்லி இலை போடவும்.
மீல் மேக்கர் கத்திரிக்காய் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள். பின்னர் அதன் சுவை பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top