வைரமுத்து - கவிதை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கவிபேரரசு வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றவர்.


நேற்று இரவு இவரது கவிதை தொகுப்பினை படிக்க நேரம் கிடைத்தது. அதில் எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்!

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்!

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்!

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்!

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்!

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்!

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்!

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்!

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்!

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்!

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்!

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்!

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி!

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி!

நன்றி : கவிபேரரசு வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!3 comments:

வெண் புரவி said...

நல்ல ரசனையான ஆளு!

காதலில் வெல்ல இந்த கருத்தராசாவை விட்டா வேற யாரு!

siva said...

links this kavithaikal

Kolipaiyan said...

நல்ல ரசனைகார மனிதர்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top