எத்தன் - விமர்சனம்

களவாணியை தயா‌ரித்த நசீ‌ரின் இரண்டாவது படைப்பு எத்தன். இப்படத்தில் ‘பசங்க’, ‘களவாணி’ படத்தின் மூலம் பிரபலமான விமல் + ‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் பிரபலமான சனுஷா ஜோடி. இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், மனோபாலா, மயில்சாமி, சிங்கம் புலி, S.M.பாஸ்கர் நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னானா...

தந்தையின் அறிவுரையை காது கொடுத்து கேட்காமல், கடன் வாங்கி தொழில் செய்து பெரிய நிலைமைக்கு வர துடிக்கும் இளைஞன் அந்த கடன்களாலேயே பாதிப்புக்கு உள்ளாகிறான்.

இதற்கிடையில், தன்னுடைய மாமன் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரி மாணவி கேரக்டரில் சனுஷா. சனுஷாவின் தங்க செயினை விளையாட்டாக எடுத்து வைத்துக்கொண்டு கலாய்க்கும் விமல், அதை திருப்பி கொடுப்பதற்குள் ஏற்படும் விபரீதங்கள் + அதிலிருந்து மீண்டு லட்சியத்தை எப்படி அடைகிறான் என்பது கதை.


எனக்கு பிடித்த சில...

விமலுக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ். அவர் பாடி லாங்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரி அசத்தல். பையனை பற்றி பெருமையாக மனைவியிடம் பேசும் காட்சி + இரவில் திருட்டு தனமாக சாப்பிடும் மகனிடம் பேசிக் கொள்ளும் காட்சி மிக எதார்த்தம். ஒரு அப்பாவின் மனநிலை என்னவென்று மிக அழகாக நடித்திருப்பார்.

விமல் - பிஸ்னஸ் செய்கிறேன், மிமிக்ரிகாகவே தனியாக ஒரு லோக்கல் சேனல் ஆரம்பிக்க போகிறேன் பேர்வழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டு, கடன்காரன்கள் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும் கேரக்டர்.

யாரைப் பார்த்தாலும், தனது பார்வையாலேயே ஸ்கேன் செய்து அவரிடம் எவ்வளவு பணம் தேறும் என அவரிடமே சொல்வது...


கதாநாயகியாக வருகிறார் ரேணிகுண்டா சனுஷா அழகாய் இருக்கிறார். விமல், சனுஷா ஜோடி நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்க சான்சு கிடைத்திருக்கு. மற்றபடி தாவணி பாவாடையில் மிக அழகாக வலம்வருகிறார்.


காமெடிக்கு விமலுடன் சிங்கம்புலி கூட்டு சேர்ந்தும், சேராமலும் அட்டகாசம் செய்கிறார். இவர்களது காமெடியை வைத்தே பாதிப் படத்தை ஓட்டி விடுகிறார்கள். சில இடங்களில் ரசிக்க முடிகிறது. சில இடங்கள் மிஸ்ஸிங்....

பாங்கில் எப்படி பொதுமக்கள் அவதிபடுகிறார்கள் என்பதனை இதனைவிட அதிகம் எடுத்து சொன்ன படம் எனக்கு தெரிந்து நினைவில்லை. அதற்காகவே டைரக்டர் சுரேஷ்-ஐ பாராட்டலாம்.
மாப்ளே.. ரெண்டு அம்பது வெச்சிருக்கியா?’

‘ம்.. இந்தா..’

‘சரி ஒரு அம்பதைக்குடு.. நாளைக்கு தர்றேன்.. ‘

‘அடப்பாவி.. சேஞ்ச் தானே கேட்டே..?’

‘கடன்னு கேட்டா குடுத்திருக்கவா போறே?சரி சரி விடு. 50000 குடுத்தவனே சும்மா போறான்.. வெறூம் அம்பதை குடுத்துட்டு ஏன் முறைக்கிறே?
மழை உதிர் காலம்... பாடல் நம்மை தாளமிட வைக்கிறது. இப்பாடலை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் .

தாஜ்நூரின் இசை முதல் பாதியில் பின்னணி இசை மகா சொதப்பல். இரண்டாம் பாதி ஓரளவுக்கு ஓகே ரகம்.


எத்தன் - கொஞ்சம் சிரித்து மகிழ ஒரு முறை பார்க்கலாம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



5 comments:

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்கு

cheena (சீனா) said...

சரி சரி படம் பாத்துடறோம் - அவ்ளோ தானெ ! விமர்சனம் நல்லாவே இருக்கு

Ungalranga said...

விமர்சனம் க்ளியரா இருக்கு..! படமும் அப்டி இருக்கும்னு நினைக்கிறேன்..பார்த்துட்டு சொல்றேன்..!!

குடந்தை அன்புமணி said...

டைரக்டருக்கு இது முதல் படம்... பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர்...

Sastha L said...

Mokka movie. Waste of money. Koli, I will put you in Chicken soup for writing this review.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top