ஆனந்த தொல்லை - பாடல் விமர்சனம்

யார் யாருக்கோ பதிவு போடும் பொது ஏன் நம்ப பவர் ஸ்டாருக்கு ஒரு பதிவு போடா கூடாதுன்னு போட்டது தான் இந்த பதிவு.அணைத்து தரப்பு மக்களுக்கும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம் ‘ஆனந்த தொல்லை’. இது ஒரு காம(நெ)டி + த்திர்லர் வகை படம்.

விஜய், தல அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு இவர்கள் வரிசையில் நம்ம ஆளு 'பவர் ஸ்டார்' டாக்டர் ஸ்ரீனிவாசன் உடன் பூந்தோட்ட காவல்காரன் பட புகழ் வாணி விஸ்வநாத் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் செந்தில், ஸ்ரீமன், அனுமோகன், வையாபுரி, சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தை டைரக்டர் பாலு ஆனந்த் இயக்கியுள்ளார். அலி மிர்சா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா ,கலைக்குமார், சாரதி, திரவியம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

படத்தோட பாட்டை கேட்டேனுங்க... கொஞ்சம் நல்ல தான் இருக்கு. சரி இதையே ஒரு பதிவா எழுதலாம்ன்னு தான் எழுதிபுட்டேன். படியுங்கள். படத்தோட பாடலை கேட்டு ரசியுங்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சாம் ஆண்டர்சனுக்கு செம போட்டியாக அண்ணன் சீனிவாசனோட அடுத்த டெர்ரர் ரிலீஸ் என்ன தெரியுமா ...?

மன்னவன், தேசிய நெடுஞ்சாலை என இரு படங்கள் இவரது தயா‌ரிப்பு, இயக்கம், நடிப்பில் வரவிருக்கின்றன.1. செல்லபேயே வெள்ளை தீயே
கொள்ளைக்காரன் இங்கே நானே ...

- ஜெயதேவ் & பத்மலதா இணைத்து பாடியிருக்கும் ஒரு மெலடி காதல் பாடல். கிடார் + புலான்குழலின் இசை கோர்வை மிக நேர்த்தி. இதனை கேட்பதற்கு மிக நன்றாக இருக்கு. இந்த பாடலை எப்படி படம்பிடித்து இருப்பார்கள் என்று நினைக்கும்போதே ஒரு வித பயம் வருது.2. வா வா முழு நிலவு காண்போம்
மூன்றாம் பிறை நாளிலே ...

- தீபா & மிரியம் பாடியிருக்கும் பாடல் ஒரு டுயட் இது. நன்றாக ரசித்து பாடியிருக்கிறார்கள். இதனை கேட்கும் போது வேறு ஒரு பாடல் நினைவுக்கு வருது. எந்த படம்னு தான் நினைவுக்கு சட்டுன்னு வரமாட்டேன்குது.3. நீ என்பதே அழகு!
உன் பார்வையே நிலவு!

- வினிதா பாடிய இந்த பாடல் நம்ப ஹீரோவை பார்த்து ஹீரோயினி பாடும் பாடல் போல இருக்கு. 'டோலு டோலு தான்...' பாடல் இசையை சற்றே மாற்றி போடு இருகிறார்கள். பின்னணி இசை நன்றாகவே இருக்கு. பாடகி குரல் அழகாக இருக்கு. அய்ட்டம் பாடல்களுக்கு மிக அருகில் இந்த குரல்.4. செய் செய் யாரோ
நெஞ்சில் தோன்றும் மின்னல் யாரோ

- பத்மலதா & கௌசிக் பாடியிருக்கும் ஒரு குத்து பாடல். ஒரு சராசரி பாடல்.5. கண்ணாமூச்சி வாழ்க்கை
கண்ணில் தூவும் கனவை...

- பெல்லி ராஜ் & தீபா மிரியம் பாடியிர்க்கும் பாடல். ஹீரோயினுக்கு பாடலுக்கு இல்லை என்றால் விடுவார்களா என்ன ... போடுற ஒரு பாட்டை என்று சேர்த்துவிட்டார்கள். சும்மா சொல்ல கூடாது. பாடல் நன்றாக இருக்கு. வாழ்கையின் நிகழ்வுகளை அங்கங்கே சிறு கவிதை + தத்துவமாக சொல்லியிருகிறார்கள் இந்த பாடலில்.6. வாடா மச்சி வாடா வாடா வாடா மச்சி
புட்ரா புடிடா அந்த கோவில் மாட்டை புடிடா ....

விஜய் , சைதவி & பானுமதி இணைந்து பாடியிருக்கும்ஒரு மசாலா பாடல்.பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

Note: ஹீரோவை பார்த்து நீங்க பயந்தால் நாங்கள் பொறுப்பல்ல. மீண்டும் இவரை பற்றிய ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!3 comments:

Philosophy Prabhakaran said...

அய்யா சாமி... நான் எங்கே தேடியும் பாடல் பதிவிறக்க லிங்குகள் கிடைக்கவில்லை... நீங்க எப்படித்தான் கண்டுபிடிச்சீங்களோ... நன்றியோ நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

ஆனந்த தொல்லை’. ???????!!!!

மாய உலகம் said...

பவர் ஸ்டாருக்கு எப்போ ...ரசிகர்கள் பாலாபிசேகம் செய்ய போகிறார்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top