காளான் புலாவ்

சுவையான காளான் புலாவ் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு.

தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - ஒரு கப்
காளான் - 15
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5

இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 2 பற்கள்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2

ஏலக்காய் - 1
முந்திரி - 5

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
  1. அரிசியைத் தண்ணீரில் ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.

  2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும். ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.

  3. பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைத்து எடுத்துக்கொள்.

  4. காளானை விருப்பமான‌ வடிவத்தில் நறுக்கிக்கொள்.

  5. வெங்காயம் நறுக்கி வைக்கவும்.

  6. இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.

  7. ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

  8. தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.

  9. அடுத்து காளான்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.

  10. இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

  11. எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.
    பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை.
  12. தண்ணீர் நன்றாக சூடேறி ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.

  13. மீண்டும் கொதி வரும்போது மூடியைத் திறந்து எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    இப்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார். இதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி நன்றாகப் பொருந்தும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



2 comments:

bandhu said...

//ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு//
'ஒரு அடி' கனமான பாத்திரத்திற்கு நான் எங்கே போவேன்?
:-) just kidding!

Kolipaiyan said...

@bandhu

Its ok. Thanks for your visit and comment.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top