ரத்த சரித்திரம் - சினிமா விமர்சனம்

பழி தீர்த்தல் மனிதனின் உன்னத உணர்வு - இந்த ரத்த சரித்திரம் படத்தின் தாரக மந்திரம்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்க பட்ட படம் இது. ஹிந்தி, ஆந்திர மாநிலத்தில் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ஒரே பாகமாக வெளியானது. முதல் பாகத்தில் நடத்த காட்சிகளை முதல் அரை மணி நேரத்தில் காட்டிவிடுகிறார்கள்.

இளகிய மனம் + குழந்தைகள் + ரத்தம் பார்த்தா அலர்ஜி போன்றவர்கள் இந்த படத்தை பார்க்காமல் தவிர்ப்பது மிக நன்று.
படத்தோட கதை என்னானா ...
அனந்தபுரத்து பிரதாப்ரவி (விவேக்ஓபராய்)யின் அப்பா ஒரு அரசியல்வாதி. அவரின் கட்சி தலைவர் கிட்டி தனக்கு எதிராக ஜாதி ஓட்டுக்களை சேர்க்கின்றார் என்ற காரணத்தினால் ரவியின் அப்பாவை பக்கத்தில் இருக்கும் நண்பர்களை வைத்தே கொலை செய்து விடுகின்றார்கள்.

தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழி வாங்கும் விதமாக எதிரிகளை கொல்கின்றான். அனந்தபுரத்தில் தேர்தலில் நின்று மந்திரி ஆகின்றான். ஒரு action team அமைத்து தனக்கு எதிரான அத்தனை பேரையும் கொல்ல சொல்கின்றான். இதில் பல அப்பாவிகளும் அடக்கம்.

அவனை எதிர்க்க யாருமே இல்லை என்ற நிலையில், அவன் மீது சூர்யா, ஒரு கொவை முயற்சி நடக்கின்றான். அவன் ஏன் பிரதாப்ரவியை கொலை செய்யதுடிக்கின்றான். அதன் பின்னணி என்ன? ரவியை கொன்றானா ? என்பது தான் கதை.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்:
1. ராதிகா ஆப்தே
என்ன அழகுடா !!!. எல்லோரையும் ரசிக்க வைக்கும் அழகு அப்படி ஒரு அழகி.!! அவளை மிக அழகாக காட்டியிருக்கிறான். ராம் கோபால் வர்மா ரொம்ப ரசனைக்காரர். வாழ்க! விவேக் ஓபராய் மனைவியாக வருகிறாள்.

ஒரு காட்சியில் விவேக் ஓபராய் அவளை கட்டிப்பிடிப்பது போன்று வரும்... என்னை என்னை சுற்றி ஒரே புகை. (ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ?!)

வன்முறையை காட்டிலும் அன்பு பெரியது என்று சொல்வதும், சூர்யாவை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க அவன் பொண்டாடியை ஒன்னும் செய்யாதீங்க என்பதும், அரசியம் வாதியின் மனைவி எப்படி மற்றவர்களை பற்றி நினைகிறார்கள், அவர்களின் மன போராட்டம் பற்றி மிக அழகாக சொல்லியிருகிறார் ராம்.

2. ராம்கோபால் வர்மா
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார். படம் முழுக்க சண்டை + ரத்தம் தான். பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் ஒரு உண்மை சம்பவம் கொண்டு சொல்ல வருகிறார் இயக்குனர். படத்துல வசனங்கள் சும்மா.. நறுக்.. நறுக்!
நான் ரசித்த 7 வசனங்கள் :

1. ரத்தம் சிந்த ஆரம்பிச்சாச்சு, அது நிக்காது.அது தான் ரத்தத்தோட குணம்.

2. நான் சாவைக்கண்டு பயப்படலை, அவனை சாவடிக்காமலேயே செத்துடுவேனோன்னு பயப்படறேன்.

3. உனக்கு பயமா இல்லையா?
இல்லை. சந்தோஷமா வாழறப்பதான் பயம் வரும். இப்போ என் கிட்டே மிச்சம் மீதி இருக்கறது பழி வாங்கனும்கற வெறி மட்டும்தான்.

4. என்னைக் கொல்ல சூர்யாவுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனா எந்தக்காரணத்தை முன்னிட்டும் நான் அவனை கொல்ல மாட்டேன். (தியேடரில் செம கை தட்டு )

5. இப்படியே நீ கனவு கண்டுட்டே இரு, என்னை உன்னால கொல்ல முடியாது.
அப்படியா? முடிஞ்சா நீ தூங்கு பார்ப்போம்!

6. வாழ்க்கைல யாராலயும், எதையும் நிச்சயமா சொல்ல முடியாது.

7. நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள்! ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்.
3. விவேக் ஓபராய்
பிரதாப் ரவி என்ற கதாபாத்திரமாக வாழ்த்திருகிறார். ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. நம் மனதில் பிரம்மாண்டமாய் நிற்கிறார்

வெளியே நடக்கும் அரசியல் போராட்டம், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருவது அவரது நடிப்புக்கு ஒரு சான்று.

பலவிதமான நடிப்பில் நம்மை கவர்கிறார். முதல் பாதியில் ஒரு வெறிகொண்ட மனிதனாக இரண்டாம் பாதியில் ஒரு அரசியல் தலைவனாக, தன் மனசாட்சிக்கு பயப்படும் மனிதனாக, ஒரு ரௌடியாக, நல்ல கணவனாக, வாழ்க்கையில் ஒரு நல்லவன் காலத்தின் கோலத்தில், எப்படி கெட்டவனாக மாறுகிறான் என்பதை பல வித உணர்வுகளை வெளிகொண்டுவண்டு அவரது பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

4. சூர்யா
நந்தா பட பாதிப்பு தெரிகிறது. கட்டுமஸ்தான உடலுடன், சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். கோபப்படும் போது, வில்லனிடம் தோற்கும் போதும், அவனை வெற்றி கொண்ட பின் ஜெயித்துவிடேன் என்று நினைக்கும் போது அவரது முகத்தில் உணர்வுகளை கண்ணிமை, கன்னம், தாடை - எல்லாம் சும்மா துடிக்கிறது + நடிப்பில் மிரட்டியுள்ளார்.

கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும் இடம் செம திரில்லிங்க்.

5. போலீஸ் அதிகாரி
மிக ஸ்டைலா அடிகடி சிகரட் பிடிப்பதும் + சூர்யாவை கைது செய்ய போகும் இடத்தில் நடக்கும் சம்பவம் என பல இடங்களில் தன் முத்திரையை பதிக்கிறார்.
6. ஒளிபதிவாளர் அமோல் ராத்தோர்
காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். பல விதமான கேமரா கோணங்கள் + பல குளோசப் ஷாட்டுகளும் என மனுஷன் புகுந்து விளையாடியிருகார். தலைகீழ் காட்சிகள் + 360 டிகிரியில் சுற்றும் காட்சி - சில இடங்களை கடுப்பை கிளப்பின.

7. பிரியாமணி சாரியில் சூர்யாவின் மனைவியாக வந்து போகின்றார். சொல்லிகொள்ளும்படி நடிக்க இதில் ஒன்றும் இல்லை.

இன்னும் பல நச்சத்திர பட்டாளமே நடித்து இருக்கு இந்த படத்துல. இசை - படு மோசம். பின்னணியில் சும்மா கத்திகிட்டே இருக்கும்.

ரத்த சரித்திரம் - பார்க்கலாம் - ரத்தமும் கொலைகளும் பிடிக்குமானால்....



8 comments:

KANA VARO said...

நல்ல பார்வை.. ஷேம் ப்ளொட்டோ...

Muruganandan M.K. said...

நல்ல விமர்சனம். நுணுக்கமாகப் பார்த்திருக்கிறீர்கள்.

Philosophy Prabhakaran said...

// ராதிகா ஆப்தே //
ஐஸ் சாயல்... செம அழகுல்ல...

Philosophy Prabhakaran said...

// சொல்லிகொள்ளும்படி நடிக்க இதில் ஒன்றும் இல்லை. //
அடடே... ப்ரியாமணிக்காக பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்...

Philosophy Prabhakaran said...

படத்தோட கதை, நான் ரசித்த வசனங்கள்... இந்த இடங்களில் தனியாக ஒரு பெட்டி வரும்படி செய்திருக்கிறீர்களே... அது எப்படி என்று சொல்லுங்களேன்...

Kolipaiyan said...

@KANA VARO,
@Dr.எம்.கே.முருகானந்தன்,
@philosophy prabhakaran :

உங்கள் வருகைக்கு நன்றிகள்!

Kolipaiyan said...

@philosophy prabhakaran

<blockquote>....</blockquote> என்ற HTML tag கொண்டு இந்த மாதிரி பெட்டி செய்திகளை வெளியிடலாம்.

முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துக்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top