ஈசன் - பாடல் விமர்சனம்

'சுப்ரமணியபுரம்' வெற்றிக் கூட்டணி சசிகுமார், சமுத்திரக்கனி, ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் இணைந்திருக்கும் படம் 'ஈசன்’.

சுப்ரமணியபுரத்தில் மதுரை மண்ணின் மனத்தை பரவிட்ட இயக்குனர், இப்போது ஈசனில் நகரத்து வாசனையை உணரும்படி, அதற்கேற்றார் போல ஜேம்ஸ் இசையும் மிக அருமையாக வந்துள்ளது.

நா.முத்துக்குமார், யுகபாரதி, மோகன்ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்.

ஜெரார்ட் தாம்ப்சன், சுக்விந்தர் சிங், மால்குடி சுபா, பென்னி தயால், K.S.சித்ரா, பத்மநாபன், தஞ்சை செல்வி, சுனந்தன் ஆகியோர் குரல்களை ஜேம்ஸ் வசந்தன் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.1. ஜில்லாவிட்டு ஜில்லாவந்த...

'மதுர குலுங்க' என்ற பாடலை போலவே இந்த பாடலும் ஒரு கிராமிய 'குத்து' பாடல். மோகன்ராஜன் எழுதிய பாடலை இந்த FOLK பாடலை கிராமத்து இசை கருவிகளுடன் தஞ்சை செல்வி பாடி பட்டையை கிளப்பியிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான குரல் வளம். கிராமத்து திருவிழாக்களில் நிச்சயம் இந்த படம் இது.


2. கண்ணில் அன்பை சொல்வாளோ...

புல்லாங்குழலின் மென்மையான குரலும், பத்மநாபனின் 'கணீர்' குரலும் செவிகளுக்கு இனிமை சேர்க்கிறது. நா.முத்துகுமாரின் சிறப்பு வார்த்தைகளும் பாடலுக்கு பலம் சேர்க்கின்றன. இப்பாடலை முதன்முதலில் கேட்க்கும் போதே பிடித்து போகிறது.


3. மெய்யான இன்பம்...

ஒரு நகரத்தின் பிஸியான இரவு நேர வாழ்க்கையை வரிகள் பிரதிபலிக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன் இசையை குறைத்து, வரிகளை பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள். நா.முத்துக்குமாரின் உணர்ச்சிப்பூர்வமான வரிகளை, சுனந்தன் மென்மையாக பாடலாக்கியுள்ளார்.

4. சுகவாசி சுகவாசி...

பெண்கள் பாடியிருக்கும் பெண்மைக்கான பாடல். அனுபவம் வாய்ந்த மால்குடி சுபாவும், அருமையான குரலை கொண்ட KS சித்ராவும் யுகபாரதியின் வரிகளை, வசந்தனின் இசையோடு சரியாக கலந்து பாடியிருக்கிறார்கள்.

கிட்டார் இசை வசீகரிக்கிறது. இசையமைப்பாளரையும், பாடகர்களையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இப்பாடல் 'ஹிட்' வரிசையில் இடம்பெறும்.

5. Get Ready...

ஓர் வெஸ்டர்ன் பாடல். ஜெரார்ட் தாம்ப்சன் மற்றும் பென்னி தயால் குரல்கள் வெஸ்டர்ன் பாடலுக்கு ஏற்றவாறு கிடார் இசையோடு விரவி வருகிறது. பாடலின் இசையை முணுமுணுத்தாலும், வரிகளை முணுமுணுப்பது கடினமே.

கதையின் தேவையினை உணர்ந்தும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.


இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

ஈசன் - பாடலை கேட்டு மகிழலாம்.
1 comments:

வெறும்பய said...

அனைத்தும் நல்ல பாடல்கள்..

ஏற்க்கனவே ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாட்டுக்கு நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன் நண்பரே..

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top