என் தாய்க்கு ஒரு கவிதை


தாயை இழந்த (என்னை போல) வாடும் இதயக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதைகளின் ஒரு தொகுப்பு "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்". இவர் செதுக்கிய இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள (அல்லது) நினைவூட்ட எனக்கு கிடைத்த ஒரு சந்தர்பமாக இத்தனை நினைக்கிறேன்.


பெற்ற தாயின் அருமை, அருகில் இருக்கும்போது நமக்கு விளங்குவதில்லை. சுயநலமற்ற தாயின் சேவையை விட ஒரு சிறந்த சேவையை நாம் எவ்வளவு காசு கொடுத்தும் பெறமுடியாது.

அன்னையை பற்றி ஒரு கவிதை "முதன் முதலாய் அம்மாவுக்கு... " என்ற கவிதையை படிக்கும்போது என் இதயம் கனத்தது. என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்த்திவலைகள். இதோ

முதன்முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவி சொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே!
குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல ...
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!

கண்ணு காது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்த ஒன்ன
நெனச்சா அழுக வரும் ...

கதகதன்னு களி கிண்டி
களிக்குள்ள குழி வெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா...

கொத்தமல்லி வறுத்து வச்சுக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழ கொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்...

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும் ...

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்..
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம் உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே...

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
....(மௌனம்)
....
வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டி வந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

- வைரமுத்து

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



9 comments:

Anonymous said...

AMMA = AMMA

கலையரசன் said...

உங்களுக்காவது தாயை நினைத்து பதிவு போடனுமன்னு தோனிச்சே!!
நல்லாயிருங்க..

Kannan said...

Thnaks kalaiyarasan.

Unknown said...

This kavithai is beautiful...enthaa kavithaiyaa nannum verumpukiran yendral nannum oru thaai ella pillai.. irrkum pollayellam thaai pasam therayaavillai annal ennai paydraa thaai illamaa pothaan thaai pasam therukirathu.. so like this kacithai....

Kannan said...

Thanks Pandi

Unknown said...

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசு வந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?

என் நெஞ்சை இளக்கிய வரிகள்.
வைரமுத்து= வைரமுத்து.

சுதர்ஷன் said...

வைரமுத்துவின் கவிதைகளில் மிக பிடித்த கவிதை இது ...:)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

Unknown said...

Super ....I love it

Unknown said...

வைரமுத்து தமிழ் தாய் கொடுத்த பரிசு

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top