மாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்னும் மனம் மயக்கும் பாட்டில்!

ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது!


'கண்ணன் - ராதை’ பாடல் என்பதால் பாடல் முழுவதும் புல்லாங்குழலின் மயக்கும் பிரவாகம்!! இசை மேதைகள், அறிஞர்கள், கர்னாடக இசை ஜாம்பவான்கள், விமர்சகர்கள் அனைவரும் வியந்து கொண்டாடும் பாடல் இது என்பதாலும், இந்தப் பாடலில் உள்ள நுணுக்கங்களை அலசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், விளங்கிக் கொள்வது என்பது கூட என் புத்திக்கு எட்டாத விஷயம் என்பதாலும், ஒரு மேதை Compose செய்த பாடலைப் பாடியிருப்பது இன்னொரு மாமேதை என்பதாலும், பாடலைப் பற்றிய செய்திகளை மட்டும் கீழே காண்க!!

இந்தப் பாடலைக் குறித்து இசைஞானி இப்படிக் கூறுகிறார்:-

“தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ‘கவிக்குயில்’ என்று ஒரு படம் எடுத்தார். அதில் கதாநாயகி தன் மனதில் ஒரு ராகம் இருப்பதாகவும், அதைக் கதாநாயகனால் இசைத்துக் காட்ட முடியுமா என்றும் சவால் விடுவார். நாயகனோ அந்த இசையைப் புல்லாங்குழலில் வாசித்துப், பிறகு பாட்டாகவும் பாடிக் காட்டி நாயகி மனதில் இடம் பிடிப்பான். இதற்கு ஒரு Tune compose செய்தேன். அதைக் கேட்ட பஞ்சு சார், ‘இதை பாலமுரளி கிருஷ்ணா போன்ற பெரிய பாடகர்கள் பாடினால் நன்றாக இருக்கும்’, என்று சொன்னார். தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணாவிடமும் பேசி நிச்சயித்து விட்டார்கள்.

‘பாலமுரளி கிருஷ்ணா பாடப்போகிறார்’ என்று கேட்டது முதலே எனக்கு பயம். காரணம், அவருக்கு தெரிந்த அளவுக்கு இசை எனக்குத் தெரியாது. “இசை மேதையாக ரசிகர்கள் கொண்டாடும் பாலமுரளி கிருஷ்ணா எனது இசையில் பாடப்போகிற விஷயம் தெரிய வந்ததுமே எனக்குக் கொஞ்சம் கவலையாகிவிட்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே?"

ரிகர்சலுக்கு வந்தார். பயத்தோடு பாடலைச் சொன்னேன். அவர் எழுதிக்கொண்டார்.

‘என்ன டியூன்’? என்றார். பாடிக் காட்டினேன்.

ஸ்வரத்தை பாடலின் வரிகளின் மேல் எழுதிப் பாடினார். அதுதான் ‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல்.


பாடலைப் பாடியவர், 'இதுதான் புதிது! சரணத்தில் உச்சஸ்தாயியில் இரண்டாவது வரிக்கு அமைத்திருக்கும் இசையில் ‘ஸகரிக மரினி’ என்று ஆரோகணபரமான பிரயோகத்தை, அவரோகணத்தில் அமைத்திருக்கிறீர்களே? அதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

சாதாரணமாக கர்னாடக இசைக் கச்சேரிகளில் கூட வித்வான்கள் இந்த ராகத்தை நீண்ட நேரம் பாட மாட்டார்கள். அதை இவ்வளவு இனிமையான பாடலாக அமைத்து விட்டீர்களே!’ என்று மனம் விட்டுப் பாராட்டினார். என் இசைப் பயணத்தில் முக்கியமானதொரு ஊக்குவிப்பாக அமைந்து என்னை உற்சாகப் படுத்திய நிகழ்ச்சி இது!’ என்கிறார்.
ஜெயா டி.வியின் ‘ராகமாலிகா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைஞானியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, “எந்நூற்று சொச்சம் படங்கள்.. இனி மனித வரலாற்றில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனை!

என்னுடைய ‘கண்கள் இரண்டால்’ (படம்: சுப்ரமணியபுரம்) வெளியில பிரபலமாக ஆரம்பித்த பொழுது, எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும், சங்கீதம் படித்தவர்கள் படிக்காதவர்கள், யாரைக் கேட்டாலும் ‘இது சின்னக் கண்ணன் அழைக்கிறான் தானே?’ என்று கேட்டார்கள். அதை ‘Imitation is the best form of Flattery’ அப்டின்னு கூட எடுத்துக்கலாம்.

அவர் (இசைஞானி) கொடுத்திருந்த ரீதிகெளளையை நான் இன்னொரு விதமாகக் கொடுத்ததில் எனக்கு சந்தோஷம் தான்! அவர் மூலமாக எனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை நான் அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
‘Cheeni Kum’ ஹிந்தி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னர், ‘Headlines Today’ தொலைக்காட்சியில் இசைஞானியைக் குறித்தும், அவர் அந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பது பற்றியும் ஒரு செய்தித் தொகுப்பு ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதில் ஒரு இசை விமர்சகர் (பெயர் மறந்து விட்டது) இவ்வாறு கூறியது நினைவில் உள்ளது.

“உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்கும் இல்லாத ஒரு பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. 1980-களில் இசைஞானி இசையமைத்த படத்தை விளம்பரப்படுத்தும் பொழுது ‘ராகதேவன் இளையராஜா இன்னிசையில் ________ (படத்தின் பெயர்)’ என்று விளம்பரப்படுத்துவார்கள்.

ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் படத்தின் பெயரின் முன்னால், ஒரு இசையமைப்பாளரின் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தப்பட்ட பெருமை உலகிலேயே இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “Only a Maestro like Ilayaraja can compose a master piece like “சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்றார்.


கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும். இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணா பாடியது தான் ஹிட்டோ ஹிட்!

இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்; ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?

எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!

கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை

கண்ணதாசனின் காதல் பாடல் வரிகள் ....
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:



Thanks : தினத்தந்தியின் ‘வரலாற்றுச் சுவடுகள்'
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



8 comments:

புதுகை.அப்துல்லா said...

இந்தப் பாடல் மட்டுமல்ல.. இதே ரீதிகெளல ராகத்தை பயன்படுத்தி “ தரையைக் குனியும் தாமரையே” என்ற பாடலையும் இசைத்து இருப்பார். அதுவும் எந்த விதத்திலும் குறைவில்லாத பாடல்.

தனிமரம் said...

ராஜாவின் முத்தான பாடல்களில் இதுவும் ஒன்று எனக்கு மிகவும் பிடித்த பட்டியலில் இந்தப்பாடல் தனிரகம் அதுவும் பின் இரவுப் பொழுதில் கேட்பதில் தனிச்சுகம்.

பொன் மாலை பொழுது said...

வாராய் ராஜாவின் ரசிகரே. :))

இசைஞானி பக்தன் said...

எனது பதிவினை அப்படியே காப்பி-பேஸ்ட் செய்து முதல் மற்றும் கடைசி பத்திகளை மாற்றியது எல்லாம் சரிதான்..! ஆனால் Courtesy-க்காக பெயரைக் குறிப்பிட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்..! நன்றி..! :-)

http://www.isaignanibakthan.blogspot.com/2010/08/2-2-1.html

தருமி said...

அடப் பாவமே .. இந்தப் பதிவை - http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html - அப்படியே காப்பி & பேஸ்ட் இங்கே ..
எப்படி மனசு வருது உங்கள மாதிரி ஜென்மங்களுக்கு! அவர் போட்டது 2010-ல். நீங்கள் பேஸ்ட் செய்தது 2012-ல். நல்ல ஜென்மங்கள்தான் .. படித்த படிப்பெல்லாம் எதற்கு?

இந்தப் பின்னூட்டத்தை அப்பதிவிலும் (http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_25.html) போடுகிறேன். அனுமதிக்கின்றாரா என்று பார்க்கவேண்டும்!

Kolipaiyan said...

நண்பரே... எனது நண்பர் ஒருவர் Facebook ஒன்றிலிருந்து தந்த URL (http://www.facebook.com/note.php?note_id=148198008526684) தகவலை இங்கே பதிவாக வெளியிட்டுள்ளேன்.

இந்த பாடல் எனக்கும் எனது நண்பருக்கும் மிகவும் பிடித்த ஓன்று. இந்த பதிவில் அந்த URL தரப்படவில்லை. மன்னிக்கவும்.

இசைஞானி பக்தன் said...

@Kolipaiyan

//நண்பரே... எனது நண்பர் ஒருவர் Facebook ஒன்றிலிருந்து தந்த URL (http://www.facebook.com/note.php?note_id=148198008526684) தகவலை இங்கே பதிவாக வெளியிட்டுள்ளேன்.

இந்த பாடல் எனக்கும் எனது நண்பருக்கும் மிகவும் பிடித்த ஓன்று. இந்த பதிவில் அந்த URL தரப்படவில்லை. மன்னிக்கவும்.//


பரவாயில்லை சகோ..! எனது ப்ளாகிற்கான ஃபேஸ்புக் பக்கம்தான் 'இசைஞானி பக்தர்கள்'..! இரண்டிற்கும் சொந்தக்காரன் அடியேனே..! இரண்டு இடங்களிலும் பதிவிட்டதும் நானே..! நன்றி..! :-)

Kolipaiyan said...

@இசைஞானி பக்தன்வருகைக்கு நன்றிகள்!

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top