மனித தோல் பற்றிய சில சுவையான 5 செய்திகள்...
- நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல் தான்.
- மனிதத் தோலின் ஒவொரு அங்குலத்திலும் 20 அடி நீள அளவில் ரத்த குழாய்கள் இருக்கும்.
- மனித தோலில் உள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் வரை இருக்குமாம். அதாவது 72 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இருக்குமாம்.
- நமது உடலில் உள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டதாம்.
- மனிதனுடைய தோல் செல்கள் ஒவொரு மாதமும் பழைய செல்களை இழந்து புதிதாக
உருவாகிறது. ஒருமணி நேரத்தில் மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இவ்வாறு இழக்கும் ஒருவர் வாழ் நாளில் 102 பவுண்ட் எடையை இழந்து விடுகிறான்.
பணம் சேமிக்க மட்டும்தான் வங்கி என்று நினைக்கிறீர்களா?. இல்லை, அறிவியல் யுகத்தில் மனித உறுப்புகளும் வங்கிப்படுத்தப்பட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ரத்தவங்கி அனேக இடங்களில் இயங்குகிறது.உறுப்பு தானம் தற்போது இந்தியாவில் அதிக விழிப்புணர்வை அடைந்துள்ள நிலையில், இனி வரும் காலங்களில் மனித உறுப்பு சேமிப்பு வங்கிகளும் பெருகி மனித சமுதாயத்தை காக்க வழி வகுக்கும் என்று நம்பலாம்.
ஆனால் தோல் வங்கி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?... இது விலங்குகளின் தோல் விற்பனை செய்யும் சந்தை அல்ல. மனித தோல் சேமிப்பு வங்கி.
தோல் உடலை பாதுகாக்கும் கவசம் போன்றது. அதன் முக்கியத்துவம் உணர்ந்துதான் தோல் சேமித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வங்கி இந்தியாவில் மும்பையில் மட்டுமே இயங்குகிறது.
நெருப்புக் காயம் பட்டவர்களும், விபரீத விபத்துகளால் தோல் சேதம் அடைபவர்களும் இங்கிருந்து தோலை பெற்று பயன் அடையலாம்.
Thanks : 1x.com
2 comments:
அன்பின் கோழி பையன்
அரிய தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி
மின்னஞ்சல் பார்ப்பதில்லையா - பல மடல்கள் பதில் எழுதாமல் நிற்கின்றனவே - ப்தில் எழுதலாமே
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
@cheena (சீனா)
Thanks Cheena. I will see and reply back soon.
Post a Comment