சுவர்ணலதா - ஈடு இணையற்ற பாடகி

கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா. அவரை பற்றிய சில தகவல்கள்.

அறிமுகம் :
1973 -இல் கேரளா மாநிலம் பாலகோடில் பிறந்தவர். இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதா சிறு வயதிலேயே ஆர்மோனியம், கீ போர்டு வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

1982 ல் வெளிவந்த நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடவைத்து அறிமுகபடுத்தப்பட்டவர்.

P.சுசிலா அம்மாவுக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து. ரொம்ப அமைதியானவர்.


பாடிய மொழிகள் :

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது மற்றும் படகா மொழிகளில் பாடிய பெருமை இவரை சாரும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம்.

இளையராஜா, ரஹ்மான், தேவா, சிற்பி, பரத்வாஜ், வித்யாசாகர் & ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

முதல் ஹிட் பாடல் :

"கேப்டன் பிரபாகரன்" படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல் தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையாகாது.



விருதுகள் :

"சின்னத்தம்பி" படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார்.

"கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது பெற்று தொடர்ந்து ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார். ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.



பிடித்த பாடல்கள் :
இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆதங்கம் :

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா & ரஹ்மான் இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குறை என்னை போற்ற பலருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.

காற்றில் கலந்த பாடகி :

இன்று (12-SEP-2010) மரணம் தழுவிய செய்தியை கேட்ட போது மனம் நம்ப மறுத்தது. அவர் நம்மை விட்டு சென்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. இருக்கும்.

'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் 'விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணமிது...' அவர் பாடிய பாடலே நினைவுக்கு வருகிறது.

அவரது ஆத்மா இசை இறைவனடி சாந்தியடையட்டும்.



9 comments:

cheena (சீனா) said...

அன்பின் கோழி பையன்

அருமையான இரங்கற் கட்டுரை

ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். - உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நட்புடன் சீனா

நாமக்கல் சிபி said...

ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். - உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

நானும் இவரது ரசிகை..மனசை ஏதோ ஒரு வலி போட்டு உறுக்கி எடுக்கிறது....இவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

அம்பிகா said...

\\P.சுசிலா அம்மாவுக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து. \\
எனக்கும் இவரது பல பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
அஞ்சலிகள்.

Anonymous said...

எனக்கும் இவர் குரல் மிகவும் பிடிக்கும். அஞ்சலிகள்

Deepa said...

Small correction: Neethiku dhandanai's music director was M.S. Viswanathan.

Otherwise, great post. Thanks.

Kannan said...

M.S. Viswanathan. ?

shyamsinnu said...

She has a very sweet and lively Voice.. my all time favorite. :(

Kolipaiyan said...

@cheena (சீனா),
@என்.ஆர்.சிபி,
@தமிழரசி,
@சின்ன அம்மிணி,
@Deepa &
@shyamsinnu
உங்கள் வருக்கைக்கும் வருத்தங்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top