சமையல் குறிப்பு : இனிக்க இனிக்க அதிரசம்

காலம் காலமாக பண்டிகைகளில் (தீபாவளி போன்ற) செய்யப்படும் பலகாரங்களில் மிக முக்கியமானது இந்த அதிரசம். நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிடக் கூடிய ஒரு பலகாரம் இது. விரைவில் கெட்டு போகாது.

சீனி, வெல்லம் இரண்டைக் கொண்டும் அதிரசம் செய்யலாம். வெல்லத்தைக் கொண்டு இனிக்க இனிக்க அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த்தூள் - 5 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
நெய் - 20 மி.லி
செய்முறை:
 • பச்சரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.

 • உலர்த்திய அரிசியை அரைத்து மாவை சலித்து வைக்கவும்.

 • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துப் பாகு போல் காய்ச்சவும்.

 • வெல்லப்பாகு கம்பிப் பாகு போல் வரும் போது மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.

 • கையில் நெய் தடவி மாவைத் தொட்டால் மாவில் கையில் ஒட்டாமலிருந்தால் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 • மாவின் மீது நெய் தடவி ஆறியபின்பு மூடி வைத்து விடவும்.

 • இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

 • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களைப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சில குறிப்புகள் :-
 1. கிளறிய மாவு கெட்டியாக இருக்கனும், தண்ணியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போடவும்.

 2. அதிரசத்திற்க்கு ஈரமாவு தான் பயன்படுத்த வேண்டும்.

 3. மாவை கிளறி உடனே சுடுவதை விட 2 நாள் கழித்து சுட்டால் நன்றாக இருக்கும்.

 4. அதிரசத்தை எண்ணெயிலிருந்து பொரித்ததும் ஒரு கிண்ணத்தை வைத்து அழுத்தி எடுத்தால் எண்ணெய் வந்து விடும். ஆறியதும் மெத் மெத்தென்று இருக்கும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!2 comments:

cheena (சீனா) said...

அன்பின் கோழி

சமையல் குறிப்புகள் - அதிரசம் - நல்லாவே இருக்கு - யார் செய்யறது - செஞ்சு கொடுத்தா சாப்பிடலாம் - ஹா ஹா ஹா

நல்வாழ்த்துகள் கோழி
நட்புடன் சீனா

Kolipaiyan said...

Thanks cheena.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top