பச்சை என்கிற காத்து - விமர்சனம்

புதுமுக இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி எழுதிய பாடல்களை அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.

கதை என்னானா ..

ஒரு மரணத்தின் வாசலில் துவங்குகிறது பச்சையின் வாழ்க்கை . மரண வீட்டில் குழுமியிருக்கும் மனித்ர்களின் முகங்களில் வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கிற 27ம் வயதில் பச்சை இறந்திருக்கிறான் என்கிற சிறு ஆதங்கம் கூட அவர்களிடம் இல்லை. மரண வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அப்படியென்ன கொடுமையானவனா பச்சை? அவனது முகம் தான் என்ன.? அவன் யார்..? யாருக்கும் பிடிபடாத ஒருவனின் அசாத்திய வாழ்க்கையை அவன் எரிகிற சிதையை பார்த்தபடியே அவன் உடன் சுற்றிய மனிதர்கள் விளக்குவதே "அ" திரை வழங்கும் "பச்சை என்கிற காத்து " படத்தி்ன் கரு, கதை, களம் எல்லாம்.
ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சு
நாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே
வேல்முருகன், ரோஷினி, இந்துமதி மூவரும் இணைந்து பாடியிருக்கும் ஒரு ஆட்டம் போட வைக்கும் கும்மக்குத்து பாடல். மெல்ல ஆரமித்து பின்னர் செம ஸ்பீடில் முடியும் பாடல் இது.

கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த முதல் பாடல். மகேஷ், மதுமிதா, அரவிந்த் பாடியிருக்கும் இந்த பாடலில் அருமையான இசை கோர்வையை நீங்கள் ரசிக்கலாம். அழகான போக் சாங் + குத்து பாடல்.

நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே
எனக்கு பிடித்த அடுத்த பாடல். மகேஷ், பானுமதி, ஹரிபாபு இணைந்து பாடிய இந்த பாடலின் மெட்டமைப்பு வேறு எங்கேயோ கேட்டது போல இருக்கு. ஆனா சட்டுன்னு ஞாபகம் வரல. உங்களுக்கு வந்தா சொல்லுங்கள்.

தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய்

என்ற மதுமிதா பாடிய இந்த பாடலை காதலில் விழுந்து அடிபட்ட கதாநாயகி பாடுவது போல இருக்கு. அருமையான சோக மெலடி பாடல்.

சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னை
கிறுக்கனாக்கி சிரிக்கிறாளே
என்ற காதல் தோல்வி பாடலை நிகில், மதுமிதா இருவரும் பாடியிருகிறார்கள். காதல் தோல்வி ஆனவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் இந்த பாடல்.

நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ......
எனத் தொடங்கும் பறவை சிலம்பாயி பாடும் ஒப்பாரி பாடலை இனி எங்கும் நாம் கேட்கலாம். (மரணம் நிகழ்ந்த இடங்களில் இந்த பாடல் இனிமேல் நிச்சயம் இடம்பெறும்).

பச்சை என்கிற காத்து - ரசிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

இயக்குநர் கீரா பேசுகையில் 'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் வெற்றி பெறவில்லையென்றால் நான் சினிமாவை விட்டே போய்விடுவேன்' என்றார்.

இவளவு நம்பிக்கையுடன் சொல்லும் இந்த இயக்குனரின் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து .....

Thanks : cinema.dinamalar
என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



13 comments:

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான படமாக இருக்கும் போலவே. பாடல்கள் கேட்க வேண்டும்.

Kannan said...

I think so.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாடல்கள் கொஞ்ச நாளா முன்னாடியே கேட்டேன்... நல்லா இருக்கு.. அதிலும் அந்த 10 நிமிடம் வரும் ஒப்பாரி பாட்டு... இவ்வளவு பெரிய ஒப்பாரிய முதல் தடவியா கேக்குறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீங்க சொல்றது பாத்த படமும் நல்லா இருக்கும் போலிருக்கே... கண்டிப்பா பாத்திருவோம்..

Kolipaiyan said...

இது போன்ற ஒப்பாரி பாடல் எங்கள் கிராமங்களில் மிகவும் பிரபல்யம். ஒவொரு மரணத்திலும் எங்கள் கிராம வயதான பெண்கள் கூடி இந்த மாதிரி ஒப்பாரி பாடல்களை அந்த இரவு நேரத்தில் பாடுவார்கள். ஆனால் இவளவு பெரிய ஒப்பாரி பாடலை இப்போது தான் கேட்கிறேன்.

Kolipaiyan said...

@வெறும்பய


@வெறும்பய, வருகைக்கு நன்றி.

சுடுகாட்டில் ஆறு பேரு பச்சையை பற்றி சொல்லவது தான் படத்தின் காட்சி அமைப்பு. படத்திற்காக கார்திருகிறேன் உங்களைப்போலவே.

Kolipaiyan said...

@விக்னேஷ்வரி

ஆம் சகோதரி. நிச்சயம் இது ஒரு நல்ல படைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம். டைரக்டர் இவளவு அழுத்தமாக சொல்லும் போதே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

சுடுகாட்டில் ஆறு பேரு பச்சையை பற்றி சொல்லவது தான் படத்தின் காட்சி அமைப்பு. படத்திற்காக கார்திருகிறேன் உங்களைப்போலவே.

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி . தரவிறக்கம் செய்ய கொடுத்திருக்கும் சுட்டி வேலை செய்யவில்லை சரி பார்க்கவும் . புரிதலுக்கு நன்றி

Karthik V said...

Nee innum kadhayee sollala da en kozhi thalayaaa.

Kolipaiyan said...

@Karthik

This is for song review. Movie not yet release.

cheena (சீனா) said...

ஆகா அன்ப்ன் கோழி
நல்லதொரு விமர்சனம்
நல்வாழ்த்துகள் கோழி
நட்புடன் சீனா

Kolipaiyan said...

Thanks for your visit Cheena.

Nirma said...

கண்டிப்பா இது ஒரு இயல்பான நல்ல கிராமத்து கதையாக இருக்கும் போல இருக்கு ...ஒப்பாரி பாடல் கிராமத்தை அப்படியே கொண்டு வந்து கண் முன் நிறுத்துகிறது .......படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் வாசகர்களில் உங்களைi போல நானும் ஒருதி.....கருத்திற்கு (comments ) நன்றிப்பா......

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top