எதிர்கால வாழ்க்கை - முல்லாக்கதைகள்

ஒரு நாள், முல்லா தெருவழியாக நடந்து போய்கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடுசைக்குள் எதோ சப்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடுப்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபம் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

"இங்கே என்ன நடக்கிறது ?" என்று முல்லா வினவினார்.

"முல்லா அவர்களே இவனை பாருங்கள். ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான். அறிவுரை கூறிப் பார்த்தேன். அடித்து மிரட்டி பார்த்தேன். ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான்" என்றால் தாய் வேதனையோடு.

"குழந்தை நீ பள்ளிக்கூடம் போக வேண்டிய அவசியமில்லையா ? அது உன் எதிகாலத்துக்கு நல்லதில்லையா ?" என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

"நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை" என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும் முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஓன்று அவர் கண்ணில் பட்டது.

அதை எடுத்த முல்லா, துண்டு துண்டாக கிழித்துப் போட்டு விட்டார்.

அதைக்கண்ட தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

"அம்மா, முல்லா விலை உயர்ந்த துணியைக் கிழித்து பாழாக்கிவிட்டரே ?" என்று தகைபோடு கேட்டான் பையன்.

"பள்ளிக்கூடம் போகமேட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையே பாழாக்கி கொள்கிறாயே அதை விட இந்த விலை உயர்ந்த துணி பாழானது பெரிய விஷயமா ?" என்றார் முல்லா.

இந்த சொற்கள் அவன் மனதில் பெரிய மாறுதலை உண்டாகியது. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா, தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டு புறப்பட்டார்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!3 comments:

பித்தன் said...

romba nallaa irukku

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி பித்தன்.

கலாநேசன் said...

nice.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top