கலகலப்பு @ மசாலா கபே விமர்சனம்

சுந்தர்.சி யின் 25வது படம் கலகலப்பு. இவருடைய படங்களில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. படத்தில் கலகலப்பை வைக்கும் இவர் "கலகலப்பு" என்று படத்திற்கு டைட்டில் வைத்தால் படம் எப்படி இருக்கும்? படம் முழுக்க ஒரே காமெடி மயம்தான்.

இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர்.

UTV Motions Pictures மற்றும் குஷ்புவும் சேர்ந்து தயாரித்து உள்ளார்கள். நிச்சயமாக இருவருக்குமே நல்ல வருமானத்தை கொடுக்கும்.

சந்தோஷமான விஷயம் படத்துக்கு வசனஉதவி சகபதிவரும், சிறந்த சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!


சரி சரி படத்தோட கதை என்ன ....

கும்பகோணத்தில் மசாலா கபே என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் விமல். பேரு தான் மசாலா கபேன்னு இருக்கே தவிர அது தலைமுறை தலைமுறையா நடத்தப்பட்டு வருகிற ஓட்டல். மூன்றாவது தலைமுறையான விமல் நடத்தும் போது மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடுகிறது. என்றாலும் பரம்பரை ஹோட்டலாச்சே என்ற எண்ணத்தில் நடத்தி வருகிறார்.

அங்கேயே சமையல்காரராக இருக்கிறார் தாத்தா ராகவன். அவருடைய பேத்தி ஓவியா. திடீரென ஜெயிலில் இருந்து பரேலில் வந்து சேருகிறார் சிவா. இவருக்கும் ஓவியாவுக்கும் காதல் பத்திக் கொள்கிறது.

அதே நேரத்தில் அந்த ஊருக்கு வந்து விமலின் ஓட்டலையே மூடச் சொல்லுகிற "ஹெல்த் இன்ஸ்பெக்டர்" அஞ்சலிக்கும் விமல் மீது காதல்.

விமல் மசாலா கபேயை நடத்தி வரும் இடத்தின் மீது தொழிலதிபர் ஒருவர் கண் வைத்துவிட, அந்த இடத்தை நைசாக சிவாவிடம் இருந்து எழுதி வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் மைக்கேல்.

ஏமாற்றி வாங்கிய மசாலா கபேவை திரும்ப வாங்கினார்களா…? அவர்கள் காதல் என்னவானது என்பது க்ளைமேக்ஸ்.



எனக்கு பிடித்த சில....


சிவா

சிவா வந்தவுடன் காமெடி வேகம் பிடிக்கிறது. அவர் கொடுக்கின்ற ஒவ்வொரு ஐடியாவும் எதிர்மறையாக வேலை செய்ய தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. சிவா சும்மா நின்று கொண்டு அடிக்கும் மொக்கை கமென்ட்டுகளுக்கு பதில்களுக்கு தியேட்டரில் செம அலப்பறை + க்ளாப்ஸ் கொடுக்கிறது. Good job n acting Shiva...!!

விமல்

மசாலா கபேயை நடத்தி வரும் வெள்ளந்தியான கேரக்டரில் விமல். உண்மையை மட்டுமே பேசுகிற இவர் லஞ்சம் கொடுப்பதற்கு போய் அடி வாங்கிவரும் காட்சி செம காமடி.

சந்தானம்

சந்தானத்திற்கு மற்றுமொரு படம் அவ்வளவு தான். அவரின் உதவியாளர்கள் அவரை விட பயந்தாங்கொள்ளியாக இருப்பதும் சரியான காமெடி. ஒரு சண்டைக்கு கிளம்பும் போது பாதியில் சுகர் மாத்திரை போட வேண்டுமென்பதற்காக எஸ்கேப்பாக முயற்சிக்கும் தினேஷின் காமெடியும், கடைசியில் எல்லோரும் படுங்கடா என்றதும் மூவரும் சேர்ந்து சந்தானத்தின் மீது படுத்து நசுக்குவதும், கடைசியில் கோழியிடம் மிதிபட்ட ..ஞ்சாக நசுங்கிப் போவதும் காமெடியும் சூப்பர் தான்.

இடைவேளிக்குபின் சந்தானம் வந்தவுடன், கதை ஜெட் வேகத்தில் பறக்கின்றது. மனிதர் சும்மா சொல்லக்கூடாது, உண்மையிலேயே கலகலப்புதான். இன்னும் சொல்லப் போனால், சந்தானம்தான் இந்த படத்தின் நிஜ ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் முழுக்க சிரிக்க வைக்கின்றார். அஞ்சலியை திருமணம் செய்ய அவர் செய்யும் கூத்துக்களை சொல்லி மாளாது.

மனோபாலா & Co

தனது மகளை சந்தானத்துடன் சேர்க்க வேண்டுமென்பதற்காக அஞ்சலியை கடத்தும் மனோபாலா, அது தெரியாமல் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக தாத்தாவுடன் தப்பிக்கும் விமல் அவரை துரத்தும் சந்தானம் என அந்த ஒரு காமெடி கலாட்டா தான்.

இளவரசு

கடன் கொடுத்த இளவரசுவை சிவா ஒரு தவறான தகவலுடன் இன்ஸ்பெக்டர் ஜானுடன் கோர்த்து விட ஜானுக்கு பயந்து மாறுவேடத்தில் சுற்றும் இளவரசுவை வேணுமென்றே தவறாக அடையாளம் காணும் சிவாவும் அதனை அவரிடமே கேட்கும் இளவரசுவின் நகைச்சுவை பயங்கர கலாட்டா.

விமல் வீட்டில் வைரத்திற்காக வந்து மிரட்டும் சுப்பு பஞ்சு மற்றும் அவரது அடியாட்கள், மாட்டிக் கொண்ட விமல், சிவா மற்றும் இளவரசு, திடீர் பைத்தியமாகும் கான்ஸ்டபிள், வைரத்திற்காக சுப்புவின் பின்பக்கத்தை கொத்தாக கவ்வும் நாய் என் அதுவும் ஒரு காமெடி கலாட்டா தான்.

ஹோட்டலில் வைரத்திற்காக நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை அதன் முடிவு கூட காமெடி கலாட்டா தான்.

அஞ்சலி & ஓவியா

அஞ்சலிக்கும், ஓவியாவிற்கும் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் காமெடியில் அவர்களுக்கும் பங்கு உண்டு. கவர்ச்சி மழையில் இருவரையும் நன்றாக நினைய வைத்திருக்கின்றார் சுந்தர் சி.

அஞ்சலியின் மேனரிஸம் எல்லாமே எங்கேயும் எப்போதும் பட மணிமேகலையை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதே பாடி லாங்க்வேஜ்.

கவர்ச்சியை எதிர்பர்த்து செல்லும் ரசிகர்கள் ஏமாறமாட்டார்கள். வசனக்கள் தான் படத்தில் ஜீவன். பாடல்கள் படு வேஸ்டு. பின்னணி இசை பரவாயில்லை.



கலகலப்பு - ஒரு நல்ல காமெடி படம் பார்த்த திருப்தி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : iamvenkatesh2011.com & Google.com



5 comments:

Thava said...

நல்ல விமர்சனம் சகோ..படத்தை பார்க்க தூண்டிவிட்டது தங்கள் எழுத்துக்கள்..கட்டாயம் பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி/

Mysterious Island - திரைப்பார்வை

Madhav said...

http://iamvenkatesh2011.blogspot.in/2012/05/blog-post_6490.html

intha review um neengathan eluthiyatha ??

Sankar said...

கண்ணா.. சமிபத்தில் வந்த வழக்கு எண்: 18/9 படத்திற்கு ஏன் உன்னுடைய ப்ளாக்கில் விமர்சனம் எழுதவில்லை.. நீ படம் பார்த்துவிட்டாயா இல்லையா என்று தெரியவில்லை.. பார்க்காமல் இருந்தால் முதல் வேலையாக அதை செய்யவும்.. தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல் அந்த படம்.. வழக்கு எண்: 18/9 படத்திற்கு உன்னுடைய விமர்சனத்தை எதிர் பார்த்தேன்.

Kolipaiyan said...

Not yet seen the movie last week. I will update it soon.

Kolipaiyan said...

@MadhavTook some of the content from that link and added few of my own content. thanks for your info.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top