நமது கோவில்களில் அல்லது வீடுகளில் பூஜை நாட்களில் செய்யப்படும் ஒரு 'சாட்' வகை இந்த 'கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதம்'. அதனை மிக அதிக சுவையுடன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானப் பொருள்கள்:
செய்முறை:
குறிப்பு :-
தேவையானப் பொருள்கள்:
வெள்ளை கொத்துக் கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 8
காய்ந்த மிளகாய் - 1
இஞ்சி – சிறுதுண்டு
தேங்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
- கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.
- குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேகவைக்கவும்.
- கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
- ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
- அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.
குறிப்பு :-
இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது. சுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!
1 comments:
Yummy...!
Post a Comment