மன்மதன் அம்பு - பாடல் அறிமுகம்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கமலஹாசன் + திரிசா நடிப்பில் K.S.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. பாடல்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமா + இளமையோடு இருக்கு. முதல் முறை கேட்டும் போதே அனைத்து பாடல்களும் பிடித்துவிடுவது கூடுதல் சிறப்பு.

கமலின் சேஷ்டைகளை காண ஆவலுடன் கார்திருக்கிறேன். கூட திரிஷா குட்டி வேற இருக்கும் போது கமலுக்கு சொல்லவா வேண்டும்!....

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

1. ஒய்யால...

இரு இளம் காதலர்கள் தங்களின் காதலை கொஞ்சம் காமம் கலந்து பாடும் ஒரு பாடல். காதல் வரிகளை விவேகா எழுத மகேஷ், சுசித்ரா & கார்த்திக்குமார் பாடியிருக்கும் அந்த பாடல். இதில் எனக்கு பிடித்த வரிகள்
சூடப் பூவத்தருவே
சூட ஆச தருவ
பாரு மொகப் பருவ
இத்தனைக்கும் காரணம் - நீதானே!

2. கண்ணோடு கண்ணை ...

கமலின் தன்னிகரில்லாத கவிதை வரிகள். கமலும் திரிசாவும் பாடியிருக்கும் அந்த கவிதை வரிகளில் இலக்கியம் + காதல் + குறும்பு + கிண்டல் + பகுத்தறிவு + சமய சாடல் என்று ஒரு கதம்மாய் குலைத்து தந்துள்ளார்.

ஆளவந்தாளின் எழுதிய 'கடவும் பாதி மிருகம் பாதி' போல இதுவும் தனித்துவம் மிக்கதாக இருக்கு. மெல்லிய இசை கோர்வை + இருவரும் பேசியபடியே கவிதையை வாசிப்பது என்று கேட்க கேட்க ரசிக்கும்படி இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
பொடி நாடிய போட்டே இடை மெலியவேனக்
கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திருவது கண்டேன்
முற்றும் துறந்த மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்.

3. நீல வானம் நீயும் நானும் ...

அழகான மெலடி. கமல் எழுதி பாட பின்னணியில் பிரியா ஹிமேஷ் ராகமாய் காற்றில் ஒலிகிறது.

தெளிவான வார்த்தை உச்சரிப்பு + மிருதங்கள் + ஜல் ஜல் என்று அந்த சப்தம் பாடலுக்கு மேலும் அழகு செய்கிறது. இந்த பாடம் மாதவனும் அமைந்தது போல இருக்கு. புதுமணத் தம்பதிகள் மனம் விட்டு பாடும் பாடல் போல இருக்கு. இதில் எனக்கு பிடித்த வரிகள்
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி


4. போனா போவுதூன்னு விட்டீன்னா ...

முதலாளித்துவம் வேலைகேற்ற ஊதியம் பற்றி நண்பர்களும் கிடல் செய்து பேசி பாடும் ஒரு பாடல். அன்பே சிவம் படத்தில் பற்றி ஒரு பாடல் இருக்கும். அது போலவே இங்கேயும் ஒரு பாடல். எழுதியது பாடியது நம்ப கமல் தான். இதில் எனக்கு பிடித்த வரிகள்
காம தான பேத தண்டம்
நாலும் தோத்து போகும் போது
தகுடு தத்தோம் - செய்
தகுடு தத்தோம்

5. Who's The Hero ...

இரண்டு நாயகிகள் பாடும் பாடல் போல இருக்கு. ஒருவர் ஆங்கிலத்தில் மற்றொருவர் தமிழில் பாடும் படி இருக்கு. ஆண்ட்ரியாவின் குரலில் இன்னும் பெருகேருகிறது. பாடலை எழுதியவர் கமலஹாசன்.


6. மன்மதன் அம்பு...

அறிமுக பாடல் போல இருக்கு. அதற்கலம் பண்ணும் பாடல். பஞ்சாபி பாடல்களை வருவது போல டோலக்கு + ட்ரம்ஸ் பட்டை கிளப்பும் பாடல்

கமலஹாசன் எழுதிய வரிகளை DSP பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்கும் போது சிங்கம் படத்துல வந்து "சிங்கம் சிங்கம் " என்ற பாடல் தான நினைவுக்கு வருது.

கவிதை வரிகளை சிதைக்காமல் நல்ல உச்சரிப்புடன் பாடியிருப்பது இந்த பாடல்கள் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கும். மொத்தத்தில் மன்மதன் அம்பு பாடல்கள் - காதல் திருவிழா

இலவசமாக பாடல் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.



7 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாடல்கள் கேட்டேன் அருமை... கவிதை இன்னும் அழகு..

Kolipaiyan said...

வெறும்பய: வருகைக்கு நன்றி நண்பரே!

KANA VARO said...

மன்மதன் அம்பு பாடல்களுக்கு பலரும் விமர்சனம் எழுதாதது ஆச்சரியமே! அந்த குறையை போக்கி விட்டீர்கள்

Lenard said...

மன்மதன் அம்பு பாடல்களுக்கு பலரும் விமர்சனம் எழுதாதது ஆச்சரியமே! அந்த குறையை போக்கி விட்டீர்கள்

Unknown said...

நல்ல இசைக்கும் நல்ல தமிழ் உச்சரிப்பிற்கும் மரியாதை கிடைத்த காலம் மலை ஏறி விட்டது ! நல்ல படம் பார்க்க ஆளும் இல்லை ! நல்ல இசைக்கு விமர்சனம் எழுதக் கூட ஆளில்லை ! நீங்க செஞ்சிருக்கிங்க ! எனிவே ... நன்றி + கன்க்ராட்ஸ் னா ... !! நந்தலாலா தெருவுல கெடக்கு , மன்மதன் அம்பும் நாதியற்று நடு தெருவுல கெடக்கு !! என்ன தமிழ் ரசிகர்களோ ... இவிங்க்யல எனால புரிஞ்சுக்கவே முடியலப்ப்பா...!! மன்னுக்கூட்டம் எச்சு ! மனிதக்கூட்டம் ! கம்மி ! இதான் தமிழ் சினிமாவின் ரசிகர்களின் நிலை !!

Kolipaiyan said...

ஒரு சில நடிகரின் படங்களை மட்டும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதும், ஒரு சில நடிகரை விமர்சனம் செய்வதும் தான் இன்றைய பல ப்ளாக் எழுத்தார்கள் செய்கிறார்கள். அந்நிலை மாறவேண்டும் என்பதே என் ஆவா.

Kolipaiyan said...

@KANA VARO,
@Lenard,
@அனாதைக்காதலன் :
உங்கள் வருகைக்கு என் நன்றிகள்!

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top