அழகான கதைக்களம், இயல்பான & ஆழமான அழகான கதை, கதைக்குள் நகைச்சுவை என மிக யதார்த்தமான ஒரு காதல் கதையை "மைனா" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்க்க சென்றேன்.
கதை என்னனா ...
ஆதரவுக்கு யாரும் இல்லாமல் சிறுமி மைனாவும்(அமலா) அவளது அம்மாவும் கடன்காரனால் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். சிறுவன் சுருளி (விதார்த்) மைனாவையும் அவளது அம்மாவையும் தனது ஊருக்கு கூட்டிச்சென்று தனக்கு தெரிந்த பாட்டி வீட்டில் தங்க வைக்கிறான்.
குழி பணியாரம் கடை போட்டு பிழைப்பு நடத்துகிறாள் மைனாவின் தாயார். மைனாவை பள்ளிக்கூடத்தில் விடுவது, கூட்டி வருவது என அவளுக்காக தன்னையே அற்பணிகிறான். இவனுக்கோ படிப்பு ஏறாததால் கிடைத்த வேலையை செய்கிறான்.
மைனா 'வயசு'க்கு வருகிறாள். கூடவே இருந்து தன் காசில் எல்லாவற்றையும் செய்கிறான் சுருளி. இருவருக்குள்ளும் காதல் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டத்தில் மைனா அம்மாவுக்கு அது தெரிய வந்து அவள் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்க அதன் பின்னர் கதை ஓட்டம் எடுக்கிறது.
மைனாவின் அம்மாவை சுருளி அடித்து துவைக்க அவனை போலீஸ் கைது செய்து 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படும் சுருளி ஒரு நாள் முன்னதாகவே ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான். அவனை பிடிக்க சிறை துறை & துணை அதிகாரிகள் இருவர் கிளம்பி சென்று சுருளியை கைது செய்து கொண்டு வரும்போது வழியில் நடக்கும் கதை தான் மீதி.
நான் ரசித்த சின்ன சின்ன காட்சிகள் :
'மைனா' கதாபாத்திரத்திற்கு அமலா கச்சிதமாக மிக பொருந்தியிருக்கிறார். கண்களாலே பட இடங்களில் பேசுகிறாள். ஒளிபதிவாளர் இவளை கண்களாலே காதலிதாரோ ? க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடுமைகள் பார்பவரை அழவைக்கும்.
அழுக்கு லுங்கி, பட்டன் போடாத சட்டை என இயல்பான கிராமத்து மனிதனாக சுருளி பாத்திரத்தில் விதார்த் வாழ்த்திருகிறார்.
தம்பி ராமையா குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக தன் பங்கிற்கு பலம் செய்துள்ளார். இயல்பான நடிப்பு.
போலீஸ் கேரக்டர்களில் வரும் சேது - சோகம், கோபம், ஆற்றாமை, பாசம் என் பன்முக நடிப்பு. அனைத்தும் நிறைவு. அவரது மனைவியா நடித்திருக்கும் அந்த பெண் நிச்சயம் பல பேரின் சாபத்தினை வாங்கிகொண்டிருப்பார். அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு. இப்படி ஒரு மனைவி கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவளவு தான் டா சாமீ !
உயரமான மலைகள்,பயமுறுத்தும் குன்றுகள், செங்குத்தான பாறைகள், குறுகிய ஓடைகள், நீர்நிலைகள், பசுமையான பிரதேசங்கள் அவற்றை ஊடுருவி செல்லும் சாலைகள் என அனைத்தையும் சுகுமார் அழகுற படமாக்கியிருக்கிறார்.
இமானின் இசையில் "ஜிங்கி ஜிங்கி, கைய புடி & நீயும் நானும்" பாடல்கள் நம்மையும் மீறி முணுமுணுக்க வைக்கின்றன.
மேலே சொன்ன அனைத்து விசயங்களை ஒருகிரனைத்து யாருமே யோசிக்காத கோணத்தில் ஒரு காதல் காவியத்தை படைதிருக்கும் டைரக்டர் பிரபு சாலமன்வை பாராட்டவேண்டியவர்.
மைனா - வித்தியாசமான் ஒரு காதல் கதை.
தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.

- மைனா படிப்பதற்காக மின்மினிப் பூச்சிகளை பாட்டிலில் அடைத்து கொண்டு வரும் காதலன்.
- அந்தப் மின்மினிப் பூச்சி உடைந்து மின்மினிப்பூச்சிகள் பறக்கும் வெளிச்சத்தில் காதலர்கள் பிணைந்திருக்கும் காட்சி. சுட சுட மைனா தரும் அந்த முதல் முத்தம். அட அட.... என்னத்த சொல்ல ...
- சைக்கிள் டைனமோ ஒளியில் மைனா தேர்வுக்கு படிக்கும் காட்சியில் தியேடரே அதற்கலம் தான்.
- தொட்டாசிணுங்கி இலையை மைனா தன் கண்விழியால் தொடும் இடம் - கவிதை.
- தம்பி ராமையா மனைவியிடம் இருத்து வரும் கால் அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனைகள் அற்புதம். "மாமா நீங்க எங்க இருந்கிறீங்க " என்ற ரின்க் டோன் அழகு.
- செவ்வாளை ராஜூவின் காது திருகல் அதற்கு வாத்தியாராக வருபரின் நடிப்பும் செம!
- மலையிலிருந்து பேருந்து தவறி விழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. பஸ் விபத்து - நம் மனதை ஏதோ செய்கிறது. அந்த காட்சியை என்னால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அதுதான் அந்த டைரக்டர் கிடைத்த வெற்றி என நினைகிறேன்.
'மைனா' கதாபாத்திரத்திற்கு அமலா கச்சிதமாக மிக பொருந்தியிருக்கிறார். கண்களாலே பட இடங்களில் பேசுகிறாள். ஒளிபதிவாளர் இவளை கண்களாலே காதலிதாரோ ? க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடுமைகள் பார்பவரை அழவைக்கும்.
அழுக்கு லுங்கி, பட்டன் போடாத சட்டை என இயல்பான கிராமத்து மனிதனாக சுருளி பாத்திரத்தில் விதார்த் வாழ்த்திருகிறார்.
தம்பி ராமையா குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை நடிகராக தன் பங்கிற்கு பலம் செய்துள்ளார். இயல்பான நடிப்பு.
போலீஸ் கேரக்டர்களில் வரும் சேது - சோகம், கோபம், ஆற்றாமை, பாசம் என் பன்முக நடிப்பு. அனைத்தும் நிறைவு. அவரது மனைவியா நடித்திருக்கும் அந்த பெண் நிச்சயம் பல பேரின் சாபத்தினை வாங்கிகொண்டிருப்பார். அப்படி ஒரு தேர்ந்த நடிப்பு. இப்படி ஒரு மனைவி கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவளவு தான் டா சாமீ !
உயரமான மலைகள்,பயமுறுத்தும் குன்றுகள், செங்குத்தான பாறைகள், குறுகிய ஓடைகள், நீர்நிலைகள், பசுமையான பிரதேசங்கள் அவற்றை ஊடுருவி செல்லும் சாலைகள் என அனைத்தையும் சுகுமார் அழகுற படமாக்கியிருக்கிறார்.
இமானின் இசையில் "ஜிங்கி ஜிங்கி, கைய புடி & நீயும் நானும்" பாடல்கள் நம்மையும் மீறி முணுமுணுக்க வைக்கின்றன.
மேலே சொன்ன அனைத்து விசயங்களை ஒருகிரனைத்து யாருமே யோசிக்காத கோணத்தில் ஒரு காதல் காவியத்தை படைதிருக்கும் டைரக்டர் பிரபு சாலமன்வை பாராட்டவேண்டியவர்.
மைனா - வித்தியாசமான் ஒரு காதல் கதை.
தற்போது தமிழ் திரை யுலகிற்கு நல்லகாலம் போல... பல நல்ல படங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.
5 comments:
s correct
A well written review, for a picture perfect movie. 'Mynaa' will fly far beyond boundaries.
// தொட்டாசிணுங்கி இலையை மைனா தன் கண்விழியால் தொடும் இடம் - கவிதை //
சேம் பீலிங்...
நல்ல விமர்சனம்
Thanks to
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா),
Sastha L,
philosophy prabhakaran &
Rangu.
Post a Comment