ஐயப்பன் வரலாறும் 'பள்ளிக்கட்டு' பாடல் வரியும்


இது சபரி மலை சீசன். சபரிமலை ஐயப்பன் வரலாறு பற்றி நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே...

ஐயப்பன் வரலாறு :

கேரளாவில் பந்தள மகாராஜா குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார். அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும். தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.

வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும் தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். "ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா" என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.

அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும் குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க்கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை 'புலிப்பால்' குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.

ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை!?. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.

புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.
ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் ஐய்யப்பன் பக்தி பாடல்கள். எனக்கு கி.வீரமணி அவர்கள் பாடிய "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு" என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.
Show <--- இங்கே அந்த பாடல் வரிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.

Thanks : Thatstamil
நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு ஒரு வோட்டு போடுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



11 comments:

Sabarinathan Arthanari said...

நண்பரே ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலம் சன்னியாசிகளுக்கான யோக முத்திரை. (குண்டலினியை எழுப்பும் முறை)

பதிவிலிருக்கும் விளக்கத்தை மாற்ற வேண்டுகிறேன்.

நன்றி

Kolipaiyan said...

I will update soon once I comform it. Any way, thanks Sabarinathan.

Anonymous said...

Session updates...?

Unknown said...

sameya saranam iyappa

Lara Kannan said...

நன்றிகள்.

Kolipaiyan said...

முதல் வருகைக்கு நன்றி திரு.சியான். உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்.

Unknown said...

thanks for iyappan history

Raghu said...

Very useful massage. Thanks

Sivamjothi said...

திருவடியும், மகர ஜோதியும், பொன்னாம்பல மேடும் நமது உடலில் உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
ஐயப்பனை காண சபரிமலை செல்வதும் நம்மை நாம் அறிவதும் ஒன்று

Unknown said...

god is love

shankar said...

ஐயப்பன் வரலாறு சொன்னமைக்கு நன்றி மணிகண்டா எனக்கு ஒரு நல்வழி காட்டுங்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top