Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

கண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை தான்

வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். ஆனால், இவரை முதன் முதலில் அடையாளம் காட்டியது கோவை சினிமா உலகம் தான் என்பது பலர் அறிந்திராத செய்தி.


இயல்பாகவே கதை எழுதுவதில் ஆர்வமுள்ள கண்ணதாசன், சினிமாவுக்கு கதை வசனம் எழுதும் நோக்கத்துடன் தான் கோவை வந்தார். அப்போது சென்னையை காட்டிலும் கோவையில் தான் சினிமா தயாரிப்பு அதிகம் நடந்தது.

சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு 1949ல் வந்த கண்ணதாசன், தயாரிப்பாளர் 'ஜூபிடர் சோமு'-வை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். அப்போது மர்மயோகி படம் தயாராகி கொண்டிருந்த நேரம். பாட்டு எழுத தெரியுமா என ஜூபீடர் சோமு கேட்க, தைரியமாக எழுத தெரியும் என கூறியுள்ளார். ஒரு பாட்டு எழுதி தரும்படி கூறியுள்ளார்.

அப்போது முதல் பாடலாக கலங்காதிரு மனமே, கலங்காதிரு....உன் கனவெல்லாம் நனவாகும் என்ற பாடலை எழுதி கொடுத்துள்ளார். அவரது முதல் படத்திலேயே இந்த பாட்டு ஹிட் ஆகி அதற்கு நூறு ரூபாய் சம்பளமும் பெற்றார். அதன் பின்னர் தான் அவர் கவிஞராக அடையாளம் காணப்பட்டார்.

கடைசியில் அவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் என ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். கண்ணதாசனை கவிஞராக அடையாளம் காட்டியது கோவை தான் என்பது பலரும் அறிந்திராத செய்தி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran



ஜொள்ளு vs லொள்ளு

சத்யராஜ் vs மணிவண்ணன்

சத்யராஜ் - மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்கவைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம்.



வாழ்க்கை சக்கரம், நூறாவது நாள், புதுமனிதன், மாமன் மகள் போன்ற படங்கள் உதாரணம். சத்யராஜ் நடித்த சட்டையர் படங்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ

நாகராஜ சோழனின் சிறப்பம்சம் மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகும் 50வது படம். தவிர, சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் 200வது படம்.



மணிவண்ணன் தான் இயக்கும் 50 வது படத்திற்கு நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ என பெயரிட்டுள்ளார். இதில், சத்யராஜ், சீமான் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர்.

1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய அமைதிப்படையின் இரண்டாம் பாகம் தான் இந்தப் படம்.

ஜொள்ளு vs லொள்ளு

பழைய அமைதிப்படையை போன்றே அதே நூறு சதவீத லொள்லோடும், ஜொள்லோடும் இன்றைய இளைஞர்களைக் கவரும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மணிவண்ணன், ரகு மணிவண்ணன், கோமல் ஷர்மா, வர்ஷா, வையாபுரி,
எம் எஸ் பாஸ்கர், மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற மிகப்பெரிய நடிப்பு பட்டாளம் நடிக்கிறார்க்ள.



ஒளிப்பதிவை மணிவண்ணனுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றிய டி.சங்கர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஒரே ஷெட்யூலில் கோவை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்க உள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.ரவிச்சந்திரன், கே சுரேஷ் ஆகியேர் இணைந்து தயாரிக்கின்றனர்.

மணிவண்ணன் இயக்கத்தில் புரட்சித்தமிழன் சத்யராஜ் நடிக்கும் நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ படத்திற்கான டீசர் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Life of PI (2012) - விமர்சனம்

ப்ரோக் பேக் மவுன்டன், குரோச்சிங் டைகர் ஹிடென் டிராகன் உள்பட 5 பிரமாண்டமான ஹாலிவுட் படங்களை இயக்கி, ஆஸ்கார் விருது பெற்றவர், ஆங்லீ. இவர் இப்போது, லைப் ஆப் பை என்ற புதிய ஹாலிவுட் படத்தை டைரக்டு செய்திருக்கிறார்.


யான் மார்ட்டெல்லின் லைப் ஆப் பை என்கிற புலிட்சர் விருது பெற்ற நாவல் தான் ஆங் லீ(Ang Lee)யின் லைப் ஆப் பை திரைப்படமாக விரிந்திருக்கிறது.

குழந்தைகள் படம் போல தோற்றம் தரும் இந்தப் படம் உண்மையில் பெரியவர்களையும் உறைய வைக்கும் படமே.

படத்தோட கதை என்னனா ...

பை (pi) என்கிற பிஸ்ஸைன் படேல் என்கிற பாண்டிச்சேரியைச் சார்ந்த இளைஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே லைப் ஆப் பை. பையினுடைய அப்பா பாண்டிச்சேரியில் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் முதலாளி. பைக்கு விலங்குகளின் உளவியல் பற்றி அவர் கற்றுக் கொடுக்கிறார்.

அவன் வளர்ந்து பெரியவனாக மாறும் போது அவனது பெற்றோர்கள் சர்க்கஸ் கம்பெனியை விற்றுவிட்டு தங்களது சில மிருகங்களுடன் ஜப்பானைச் சேர்ந்த ஒரு சிறு கப்பலில் கனடாவை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

வழியில் கடலில் பெரும் புயலில் சிக்கி அந்தச் சிறு கப்பல் கவிழ்ந்து விட அதிலுள்ள எல்லோரும் மாண்டுவிடுகின்றனர்.

ஆனால் பை மட்டும் 227 (கணித எண் 'பை'யின் மதிப்பு 22/7) நாட்கள் கழித்து ஒரு சிறிய படகில் மெக்சிகோ நாட்டின் கடலோரம் கரையொதுங்குகிறான். அந்தக் கப்பல் ஏன் கவிழ்ந்தது என்பது பற்றி ஆராயும் இருவர் அதில் தப்பிப் பிழைத்த ஒரே நபரான பையிடம் வந்து அதுபற்றி விசாரணை செய்கின்றனர்.

அப்போது பை சொல்வது ஒரு கதை. அதில் பையும், ஒரு கொடிய சிறுத்தையும், ஒரு காயமடைந்த வரிக்குதிரையும் மற்றும் ஒரு குரங்கும் கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்து ஒரு படகில் ஏறிக் கொள்கின்றன. அவற்றிற்கிடையே யார் உயிர் வாழ்வது என்கிற போராட்டம் நடக்கிறது. சிறுத்தை குரங்கையும், வரிக்குதிரையையும் கொன்று தின்று விடுகிறது. அப்போது தான் அங்கே படகின் அடியில் ரிச்சர்ட் பார்க்கர் என்கிற பெயருடைய வங்காளப் புலி ஒன்று கவிழ்ந்த கப்பலில் இருந்து தப்பித்து பதுங்கி இருப்பது தெரியவருகிறது.


ரிச்சர்ட் பார்க்கர் சிறுத்தையைக் கொன்று தின்றுவிடுகிறது. இப்போது படகில் எஞ்சியிருப்பது பையும், ரிச்சர்ட் பார்க்கர் என்ற அந்தப் புலியும் மட்டுமே. இப்போது பையையும் கொன்று விட்டால் புலி தப்புவதும் கடினம். எனவே இந்த கரையே தெரியாத கடலில் உயிர் தப்பிக் கரையேறும் வரை ஒருவரையொருவர் கொல்லாமல் பையும், புலியும் படகிலேயே வாழப் பழகுகின்றனர்.
இறுதியில் 227 நாட்களுக்குப் பின் படகு மெக்சிகோவில் கரையொதுங்கியதும் புலி குதித்தோடிச் சென்று காட்டுக்குள் மறைந்து விடுகிறது.

பை சொல்லும் இந்தக் கதையை நம்ப அந்த அதிகாரிகள் மறுத்துவிடுகின்றனர். உடனே பை அதே நிகழ்வைக் கதையாக திரும்பவும் மனிதர்களை வைத்துச் சொல்கிறான். அதில் படகில் பை, அவனுடைய அம்மா, ஒரு கால் ஊனமுற்ற மாலுமி மற்றும் கப்பலின் சமையல்காரன் போன்றவர்கள் தப்பிப் பிழைக்க ஏறிக் கொள்கின்றனர்.

மிருகங்களின் கதையில் நடந்த நிகழ்வுகளை விட மிக மோசமான நிகழ்வுகள் மனிதர்கள் கதையில் நடக்கிறது. இறுதியில் பை தப்பிப் பிழைக்கிறான். இரண்டு வித கதைகளையும் சொன்னதும் பை அந்த அதிகாரிகளிடம் எந்தக் கதையை அவர்கள் நம்ப விரும்புகிறார்கள் என்று கேட்கிறான்.

அவர்கள் மிருகங்கள் கதையே இதில் உண்மையிலேயே நடந்தது என்று ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இப்படிப் பட்ட ஒரு மேஜிக்கலான குழந்தைகள் கதையை இயக்குனர் ஆங் லீ அற்புதமாக 3D அனிமேஷனில் எடுத்திருக்கிறார். இவர் தான் 'க்ரௌச்சிங் டைகர் அன்ட் ஹிட்டன் ட்ராகன்' படத்தையும் இயக்கியவர்.

ஜேம்ஸ் கேமரானின் அவதார் படத்துடன் ஒப்பிடத்தக்க அளவு சிறப்பானதாக இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் புகழ்கின்றனர்.

கடல் வழி பயணங்களில் தான் புத்திசாலித்தனம், முட்டாள்தனம், சுய ஒழுக்கம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, கடவுள் நம்பிக்கை, சிறு பொருட்களையும் எப்படி உபயோகப்படுத்துவது என வாழ்க்கையின் பல விசயங்களையும் கற்றுக் கொள்ளலாம் என்று எனக்கு தெரிந்து டைட்டானிக் படத்திற்க்கு பிறகு இந்தப் படம் தான்.

படத்தின் ஆன்மா என்றால் அது விஷுவல்தான். பரந்த கடலும், இரவு நேரத்தில் வழியும் வண்ணக் குழம்புகளும் அற்புதமான அனுபவத்தை தருகின்றன. குறிப்பாக திமிங்கலம் திடீரென்று குதிக்கும் காட்சி. அதேபோல் மாமிசம் உண்ணும் தாவரங்கள் நிறைந்த தனித்தீவு.

பையின் அப்பாவாக அதுல் ஹசன். அம்மா தபு. இருவரின் நடிப்பும் ஓகே தான். பாண்டிச்சேரியில் வளர்ந்த தமிழர் குடும்பமாய் காட்டப்பட்ட இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி தமிழாய் இருப்பது இடிக்கிறது.


மூன்றே மூன்று காட்சிகளில் வியர்வை வழியும் முகத்தோடு நடனம் ஆடிக் கொண்டு வெட்கப்பார்வை பார்க்குமிடத்தில் கவர்கிறார் ஷரவந்தி சாய்நாத். படத்தில் பத்து நிமிடம் மட்டுமே வந்திருந்தாலும் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார்.

இள வயது பையாக வரும் சூரஜ் சர்மாவின் நடிப்பு கச்சிதம். ஆனால் பெரிய வயது பையாக வரும் இர்பான் கான் நிறைவாக இருக்கிறார். கதை சொல்லும் போதாகட்டும், மாடுலேஷனாகட்டும், க்ளைமாக்சில் கண்களின் ஓரத்தில் லேசாய் துளிர்க்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கியபடி பேசும் போதாகட்டும் க்ளாஸ்.

படத்தின் பலம் இசை + ஒளிப்பதிவும் Graphics-ம். அப்படியே கடலுக்குள் இருக்கும் ஒரு மாய உலகத்துக்கு நம்மள கூட்டிட்டு போறாங்க.

கோல்டன் குளோம் விருது

புதுச்சேரியில் படமாக்கப்பட்ட ஆங்கிலப்படமான 'லைப் ஆப் பை' திரைப்படத்திற்கு 'கோல்டன் குளோம்' விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே சிறந்த இயக்குநர், திரைப்படம், இசையமைப்பாளர் உள்ளிட்ட 11 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

70வது கோல்டன் குளோப் விருது போட்டிக்கு சிறந்த திரைப்படம், இயக்குநர் உள்ளிட்ட பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

கோழி இடும் முட்டைகள் :
Life of PI - டோண்ட் மிஸ் திஸ் பை. பையின் வாழ்க்கையைப் பாருங்கள் ஒருமுறை.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். ஒரே ஒரு வோட்டு ப்ளீஸ். நன்றி!!!
Thanks : Cable Ji.



600 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பிரேம் நசீர்


பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிரேம் நசீர். மொத்தம் 600 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தார். இது அகில உலகிலும் யாரும் செய்யாத சாதனை என்று, "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அறிமுகம்

மலையாளப் பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் நடிகர் பிரேம் நசீர். பிரேம் நசீர் தனது உணர்ச்சி பூர்வ நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். தமிழ்ப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் 30 படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் பிரேம் நசீர் நடித்தார்.

கின்னஸ் சாதனை

600 படங்களில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் என்ற முறையில் பிரேம் நசீர் "கின்னஸ்" சாதனை படைத்தார்.

பிரேம்நசீர், A.K.வேலன் தயாரித்த "தைப்பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். S.S.ராஜேந்திரனுடன் பிரேம் நசீர், ராஜசுலோசனா, N.M.ராஜம் நடித்தார்கள். இது 100 நாள் வெற்றிப்படம்.

அந்த படத்தைத் தொடர்ந்து பிரேம்நசீர்- சவுகார் ஜானகி நடித்த "நல்ல இடத்து சம்பந்தம்" பிரேம்நசீர்- பண்டரிபாய் நடித்த "நான் வளர்த்த தங்கை" மற்றும் "பெரிய கோவில்" படங்கள் வெளிவந்தன.

1959, 1960-ம் ஆண்டுகளிலும் பிரேம் நசீர் நான்கு, ஐந்து தமிழ்ப் படங்களில் தோன்றினார். அதில் குறிப்பிடத்தக்கவைகளில் ஒன்று S.S.ராஜேந்திரனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த "கல்யாணிக்கு கல்யாணம்" என்ற படமாகும்.

மேலும் தேவிகா, பாலாஜியுடன் இணைந்து நடித்த "சகோதரி", நடிகை ராகினிக்கு ஜோடியாக நடித்த "இருமனம் கலந்தால் திருமணம்", நடிகவேள் M.R.ராதாவுடன் நடித்த "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" ஆகிய படங்களும் வெளிவந்தன.


பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மற்றொரு சிறந்த படம் "வண்ணக்கிளி" என்று சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் T.R.சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். T.R.ரகுநாத் டைரக்ட் செய்தார். பிரேம் நசீருடன் T.R.ராமச்சந்திரன், R.S.மனோகர் மற்றும் P.S.சரோஜா, மைனாவதி, முத்துலட்சுமி, M.சரோஜா, C.S.சரசுவதி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்...

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பிரேம் நசீர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார். "பாலும் பழமும்", "முரடன் முத்து" ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள்.

1964-க்குப் பிறகு மலையாள பட உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்ததால் பிரேம் நசீர் தமிழ்ப்பட நடிப்பை குறைத்துக் கொண்டார். சென்னை நகரில் அவர் அதிகம் தங்கி இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அரசியல் கட்சி தொடக்கினார்

M.G.R, N.T.ராமராவ் திரை உலகில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். அவர்களை பின்பற்றி மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக விளங்கிய பிரேம் நசீரும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் கேரளத்து மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரேம் நசீரின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறவில்லை.

உடல்நலக் குறைவு - மரணம்

பிரேம் நசீருக்கு 1988-ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சையால் அவரை காப்பாற்ற இயலாமல் போயிற்று. 16-1-1989 அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். பிரேம் நசீர் உடலுக்கு தமிழ்த்திரை உலக நடிகர்- நடிகைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

சகாப்தம் முடிவு

காங்கிரஸ் தலைவர் A.K.அந்தோணி, மந்திரிகள் பாலகிருஷ்ணன், நீலயோகிதாசன் நாடார், நடிகர் மம்முட்டி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பிரேம் நசீர் உடல் சொந்த ஊரான சிறையின் கீழு என்ற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மலையாள பட உலகின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல்

நடிகர் பிரேம் நசீர் மறைவுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்தியில், "பிரேம் நசீர் திரை உலகில் நீண்ட காலமாக புகழ் பெற்று விளங்கிய சிறந்த நடிகர். மனித உணர்ச்சிகளை நடிப்பின் மூலம் நயம்பட வெளிப்படுத்தியவர். அவர் மறைவினால் தேசம் ஒரு சிறந்த நடிகரை இழந்து விட்டது. நாட்டு மக்கள் தங்கள் இதயம் கவர்ந்த ஒருவரை இழந்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் அனுதாப செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

கேரளா திரையுலகினர் இன்றளவும் இவரது படங்களிலிருந்து எதாவது ஒரு தகவலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கோழி கூவுது - விமர்சனம்


கோழி கூவுது என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் திரைக்கு வந்தது. கங்கை அமரன் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் பிரபு, சுரேஷ், விஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் கோழி கூவுது என்ற பெயரில் மீண்டும் ஒரு படம்.

இந்த 'கோழி கூவுது' படத்தில், முருகா, பிடிச்சிருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அசோக் கதாநாயகனாக, புதுமுகம் ஸ்ரீஜா கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

முக்கிய வேடங்களில் ரோகிணி, ஜோதிலட்சுமி, போஸ் வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். I.ரஞ்சித் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார்.

படத்தோட கதை என்னனா ...

ஊர் ஊராக சுற்றி கோழிக் குஞ்சுகளை விற்பவனாக ஹீரோ அசோக். சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட இவருக்கு, தனது தாய் மற்றும் தங்கையை காப்பாற்றுவதற்காக இந்த தொழிலில் இறங்குகிறான். மயில்சாமியுடன் சேர்ந்து இந்த வேலையை செய்கிறார்.

இவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளை குறைந்த விலைக்கு வாங்கி அதற்கு சாயம் பூசி மக்களை ஏமாற்றி விற்று பணம் சேர்த்து வருகிறார்கள்.

அத்தை வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நாயகி ஒருநாள் நாயகனிடம் ஒரு கோழிக் குஞ்சை வாங்குகிறாள். அந்த கோழிக்குஞ்சு சில நாட்களிலேயே இறந்துவிடுகிறது. இதனால் நாயகனிடம் சண்டை போட்டு வேறொரு கோழிக்குஞ்சுகளை வாங்கிக் கொண்டு அதை பத்திரமாக பார்த்து வருகிறாள்.

இதற்கிடையில், ஒரு விபத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள, அந்த மோதலே இருவருக்குள்ளும் காதலாக மாறுகிறது. ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை சொல்லிக்கொள்ளாமலேயே இருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் இருவரும் தங்கள் காதலை சொல்ல வரும் வேளையில், நாயகியின் சித்தப்பா நாயகியை திருவிழாவிற்காக தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். தன்னுடைய ஊர் பெரியவரான போஸ்வெங்கட் நாயகியை அழைத்துச் செல்வதன் காரணம் என்னவென்று புரியாமல் நாயகன் திகைத்து நிற்கிறார்.

அதன்பின், நாயகி போஸ் வெங்கட்டின் அண்ணன் மகள் என்பதை அறிகிறான். இருப்பினும், தனது காதலை தெரிவிக்க தனது சொந்த ஊருக்கே திரும்புகிறான் ஹீரோ. ஊருக்கு திரும்பிய ஹீரோ, நாயகியை சந்தித்து காதலை தெரிவிக்கிறான்.

ஒருநாள் திருவிழாவின் போது நாயகியின் வீட்டார் அனைவரும் கோவிலுக்கு சென்றுவிடுகின்றனர். திருவிழா முடிந்ததும் நாயகி மட்டும் வீட்டுக்கு திரும்புகிறாள். அவளை தனியாக சந்திக்க நாயகன் அவள் வீட்டுக்கு வருகிறான். இருவரும் அங்கு தனியாக இருப்பதை போஸ் வெங்கட் பார்த்துவிடுகிறார்.

கோபமடைந்த அவர் நாயகனை அடித்து அங்கிருந்து விரட்டுகிறார். அதன்பிறகு அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனது அம்மாவையும், தங்கையையும் மிரட்டிவிட்டு வருகிறார். பயந்துபோன நாயகனின் அம்மா இனிமேல் நாயகியை நீ சந்திக்கவே கூடாது என கண்டிப்புடன் கூறிவிடுகிறார்.

இதனால், நாயகன் உடைந்து போய் நாயகி நினைவில் வாடுகிறார். நாயகியின் வீட்டிலோ அவளுக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஒருபக்கம் போஸ் வெங்கட் நாயகனை கொல்லவும் ஆள் அனுப்புகிறார்.

இவ்வளவு எதிர்ப்புக்கிடையில் ஹீரோ நாயகியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

எனக்கு பிடித்த சில...


ஹீரோ - அசோக்

கோழி வியாபாரியாக வரும் நாயகன் அசோக் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக நம்மை கவர்கிறார். இவர் கோழிகளை விற்பதற்காக கோழி கோழி என்று கூவுவது தனி ஸ்டைல். நாயகியை காதல் செய்வதாகட்டும், அவளிடம் சண்டை போடுவதாகட்டும் தனது பணியை சரியாக செய்திருக்கிறார்.

இன்னொரு ஹீரோ - நரேன்

நாயகியின் அப்பாவாக வரும் நரேன் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். சிறு வயதிலேயே தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்ட மகளிடம் இவர் ஒவ்வொரு முறை பேச முயற்சிப்பதும் மகள் மேல் தான் வைத்திருக்கும் பாசத்தை தன் மனதுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொள்வதுமான அப்பா கேரக்டர்.

எந்த கேரக்டராக இருந்தாலும் அப்படியே மாறிப் போய்விடும் திறமை கொண்ட நரேன் இந்தக் கேரக்டரை செய்திருக்கும் விதத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? நம்மை அறியாமலேயே இவரது கேரக்டர் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகிறது.


சிஜா ரோஸ்

நாயகி சிஜா ரோஸ், மீண்டும் ஒரு மலையாள வரவு. ரொம்ப அழகு. புதுமுகம் என தெரியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு, படத்தில் தாயை இழந்துவிட்டு தந்தையின் பாசத்துக்கு ஏங்கும் கதாபாத்திரம்.

கோழிக்குஞ்சை வாங்கி வீட்டில் இவர் பராமரிக்கும்போது தன் பாசத்தை அக்கோழிக்குஞ்சிடம் வெளிப்படுத்தும் காட்சிகளில் நெஞ்சை நெருட வைக்கிறார். காதலனை பிரியமுடியாமல் தவிக்கும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார்.

தன் காதல் தெரிந்து சித்தப்பாவும், அத்தையும் அடிக்கும்போது கலங்காமல் நிற்கும் உறுதி, காதலனை காணும் போது வரும் வெட்கம் என யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

போஸ் வெங்கட்

அண்ணன் மகளை பொத்தி பொத்தி வளர்க்கும் சித்தப்பாவாக வரும் போஸ் வெங்கட் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இறுதியில் தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும்போது பாசத்தில் நெகிழ வைத்துவிடுகிறார்.



ரோஹிணி

வறுமையிலும் மானத்தை இழந்துவிடாத நாயகனின் அம்மாவாக வரும் ரோஹிணி, மயில்சாமி, அருண் ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் கே.ஐ.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் புளித்துப்போன காதல் கதையை வித்தியாசமான கதைக்களத்தில் சொல்லவந்த புதிய இயக்குனர் கே.ஐ.ரஞ்சித்-க்கு பாராட்டுக்கள்.

காட்சி அமைப்பிலும், திரைக்கதையிலும் புகழ்பெற்ற படங்களின் சாயல் தெரிகிறது. லாஜிக் மிஸ்சிங் நிறைய இருக்கிறது.

காதல் ஜோடிகளை கொல்வதற்காக மலையை நோக்கி அவர்கள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் திக் திக் நிமிடங்கள் அமைந்திருக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ என்னும் திகிலை அந்த காட்சிகள் அதிகமாகவே ஏற்படுத்தியிருக்கிறது.

கோழி வியாபாரம் என்ற களத்தில் சொல்லப்படும் பழைய கதைதான் என்றாலும், திருப்பமும், திருந்துதலும் மிக்க கிளைமாக்ஸ் அருமை.

இசை ராம்ராஜ்

அறிமுக இசை அமைப்பாளர் ராம்ராஜ் நம்பிக்கை வரவு. பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. குத்துப்பாடலும், மெலடி பாடல்களும் கலந்து கொடுத்திருக்கிறார். ஆனால் பின்னணி இசை ரொம்ப இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.

கிராமத்தின் அழகையும், கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் பக்கத்தில் இருந்து பார்க்க வைக்கிறது ஜெயப்பிரகாசின் கேமரா. ஒளிப்பதிவு நிறைவைக் கொடுத்திருக்கிறது.

கோழி கூவுது - நிறைவு!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar & Dinakaran daily news paper.



Seethamma Vakitlo Sirimalle Chettu - விமர்சனம்

பொங்கலுக்கு வெளியான தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் ஒரு தெலுங்குப் படம் முத்திரை பதித்திருக்கிறது. அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், திருவிழா கோலமாகவும் இந்த தெலுங்குப் படம் ரிலீசான திரையரங்குகள் காட்சியளிக்கின்றன.

மொழி புரியாவிட்டாலும் இந்தப் படத்தை தமிழக மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்?

பெரிதாக ஒன்றுமில்லை. தெரிந்த கதைதான்.

குடும்ப உறவுகளின் மேன்மையை, அதன் அவசியத்தை வலியுறுத்தும் அதே 'ராஜஸ்ரீ புரொடக்ஷன்ஸ்' சூரஜ் பர்ஜாத்யா பிராண்ட் தான். ஆனால், இவற்றின் சாயல் இன்றி சுயமாக நிற்பதுதான் 'சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு’ (Seethamma Vaakitlo Sirimalle Chettu - சீதா வீட்டு வாசலில் சிறிய மல்லிகைக் கொடி) தெலுங்குப் படத்தை தனித்து காட்டுகிறது.


படத்தோட கதை என்னனா ...

சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த சீதா, தாய்மாமனின் பராமரிப்பில் வளர்கிறாள். தாய்மாமனின் குடும்பமே அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. அவளது பெரியப்பாவும், சித்தப்பாவும் செல்வத்தில் திளைப்பவர்கள். கொஞ்சம் பணத்திமிருடன் வளைய வருபவர்கள். இவர்களுக்கு சீதாவின் தாய்மாமனையும் அவர் குடும்பத்தையும் பிடிக்காது. எப்படி இந்த இரு குடும்பங்களும் சீதாவின் திருமணத்தில் ஒன்று சேர்கிறது என்பதுதான் படம். இதைதான் கண்ணீரில் கருவிழிகள் தத்தளிக்கும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு பிடித்த சில...


இயக்குனர்

படத்தின் மிகப்பெரிய பலம் கேரக்டர் ஸ்கெட்ச். ஒரேயொரு காட்சிக்கு வந்து போகும் நடிகருக்கு கூட ஒரு இயல்பை, குணத்தை கொடுத்திருக்கிறார்கள். அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பிரகாஷ் ராஜ், எதிர்படும் அனைவருக்கும் காலை வணக்கம் சொல்கிறார். மேடான பகுதியில் சைக்கிள் மிதிக்க சிரமப்படும் சிறுவர்களுக்கு உதவுகிறார். ரயில்வே லெவல் கிராசிங்கில் குனிந்து செல்ல விருப்பமின்றி, வளைந்து கொடுக்காமல் அது திறப்பதற்காக நெஞ்சை நிமிர்த்தி காத்திருக்கிறார் வெங்கடேஷ். அதே போன்றதொரு லெவல் கிராசிங்கை அசால்ட்டாக தாண்டி குதித்து செல்கிறார் மகேஷ் பாபு. இப்படி ஒவ்வொருவரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஒரே ஷாட்டில் இயக்குனர் புரிய வைத்து விடுகிறார்.


மகேஷ் பாபு - வெங்கடேஷும்

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஆக்டரான வெங்கடேஷும், சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவும் இப்படத்தில் அண்ணன் , தம்பியாக வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி, செல்போனும் சிம்கார்டுமாக பின்னிப் பிணைந்திருக்கிறது. 'டேய்... டேய்...' என பரஸ்பரம் கொஞ்சிக் கொள்வதும், 'சொல்லுடா...' என ஒருமையில் அழைத்தாலும் மரியாதையை விட்டுக்கொடுக்காமல் பழகுவதும் கொள்ளை அழகு. இருவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் கச்சிதம்.

குறிப்பாக இடைவேளையின் போது, 'உன் குணத்தை கொஞ்சம் நீ மாத்திக்கணும்...' என மகேஷ் பாபு சொல்வதும், 'எல்லாம் தெரியும். நீ போய் பணக்காரங்களோட நாடகத்துல நடி' என நக்கலாக வெங்கடேஷ் பதிலளிப்பதும், அதையடுத்து பூந்தொட்டியை மகேஷ் பாபு எட்டி உதைப்பதும்... மனநிலையின் பயணத்தை துல்லியமாகப் புரிய வைப்பவை.

அதுவும் கிளைமாக்சில் பத்ராச்சலம் கோயில் படிக்கெட்டில் அமர்ந்தபடி இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் கட்டம், கொள்ளை அழகு.

அஞ்சலி

சீதா என்னும் டைட்டில் ரோலில் அஞ்சலி. கதையின் நாயகியாகவும், திரைக்கதைக்கு அச்சாணியாகவும் இவரே விளங்குகிறார். மழலையாக இவர் பேசுவது மட்டுமே இடறுகிறது. மற்றபடி சவுந்தர்யா விட்டுவிட்டுப் போன இடத்தை இவரே நிரப்பப் போகிறார். வழக்கம் போல் சமந்தா, ஸ்வீட்.


ஜெயசுதா - ரோகிணி

ஜெயசுதாவின் அனுபவம் வாய்ந்த நடிப்பு அம்மா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறது என்றால், ரோகிணி அட்டாங்கடியின் பண்பட்ட ஆளுமை பாட்டி கேரக்டருக்கு வலு சேர்க்கிறது.

பிரகாஷ் ராஜ்

பார்த்துப் பார்த்து கண்கள் பூக்கும் அளவுக்கு மறைந்த எஸ்.வி.ரங்காராவின் இடத்தை அனாயாசமாக நிரப்பியிருக்கிறார், பிரகாஷ் ராஜ்.

கிளைமாக்சில் தன் இரு மகன்களுக்கும் நடுவில் அமர்ந்தபடி ‘மனுஷங்க எல்லாருமே நல்லவங்கதான்... அவ்வளவு ஏன், மனுஷனா பொறந்தாலே அவன் நல்லவன்தான்...’ என பிரகாஷ் ராஜ் கண்களால் சிரித்தபடி பேசும் கட்டம் ஒரு சோறு பதம்.

கே.வி.குகனின் ஒளிப்பதிவும், மார்தாண்ட் கே.வெங்கடேஷின் படத்தொகுப்பும், மணி சர்மாவின் பின்னணியும் படத்துடன் பயணித்திருக்கின்றன. மிக்கி ஜெ மேயரின் பாடல்கள் படத்துக்கு ப்ளஸ்.

ஸ்ரீகாந்த் அடாலா

ஆனால், இத்தனை கலைஞர்களை யும் தாண்டி கம்பீரமாக நிற்பவர், படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் அடாலாதான்.

ஹைக்கூ ஷாட்களும், கவிதை காட்சிகளுமாக அசர வைக்கிறார். கோதாவரி வட்டார மொழியில் இவர் எழுதியிருக்கும் வசனங்கள் ஜீவன். ‘ஐதராபாத்துல எங்க?’, ‘ஐதராபாத் எங்க இருக்கோ அங்க!’ மாதிரி அனைத்துமே ஒன் லைனர்.

காலம் மாறி விட்டது, நாகரீகம் வளர்ந்து விட்டது என்ற நினைப்புடன் எதையோ அடைவதற்காக கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். உறவுகளை உதாசீனப்படுத்துகிறோம். இதனால் எதை நாம் இழந்து வருகிறோம் என்பதை முகத்தில் அறைந்து உணர்த்தியிருக்கிறது, ‘சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு’.

உண்மைதான். இல்லங்களில் உறவு என்னும் மல்லிகைக் கொடி செழித்துப் படர, பணமல்ல பரஸ்பர அன்பே உரம் போடுபவை. இதைதான் இந்தப் படம் வலியுறுத்துகிறது. இதையேதான் காட்சி வடிவிலும் பதிய வைத்திருக்கிறது. அதனாலேயே மொழி புரியாவிட்டாலும் இப்படம் தமிழக மக்களை வசியம் செய்திருக்கிறது.

Seethamma Vaakitlo Sirimalle Chettu - உறவுகளால் படரும் கொடி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinamalar.com




‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்!!!

‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி.


கோலிவூடில் இப்பொழுதெல்லாம் புதிய முறையில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அதாவது முதலில் படத்தில் உள்ள ஒரு பாட்டை வெளியிட்டு புகழ் கொடி நாட்டப்படுகிறது. அதன்பின்னர் முழுப்பாடல்கள் வெளியீடும் இடம் பெறுகின்றன.

இந்த வரிசையில், கொல வெறி...." பாடல் வெளியிடப்பட்டு மிகப் பிரபலாமாகியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசைஅமைப்பில் இன்னுமொரு பாடல் வெளியிடப்படுகிறது.

நா.முத்துக்குமார் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கமர்சியல் பாடலுக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் ஒரு பாடல்..... பாடல் வரிகளை சிதைக்காத இசை கோர்வை மிக அருமை. பாடலின் இடை இடையே வரும் அந்த மிர்தங்கம் + கிளாசிக் டச் ..... அட அட.... மிக அருமை!!!

யுவன் ஷங்கர் ராஜா & சூப்பர் சிங்கர் 'ரேணு' இவர்களின் இனிமையான குரல்களில் பாடல் உருவான விதம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் என்பனவும் பாடலின் வீடியோ இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.



பாடலின் வரிகள் உங்களுக்காக....
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா...

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்


ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..


ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போ போ போடா..
வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பச்சை என்கிற காத்து - விமர்சனம்

புதுமுக இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி எழுதிய பாடல்களை அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.

கதை என்னானா ..

ஒரு மரணத்தின் வாசலில் துவங்குகிறது பச்சையின் வாழ்க்கை . மரண வீட்டில் குழுமியிருக்கும் மனித்ர்களின் முகங்களில் வருத்தமோ, துயரமோ ஏதும் இல்லை. வாழ்க்கையை ஆரம்பிக்கிற 27ம் வயதில் பச்சை இறந்திருக்கிறான் என்கிற சிறு ஆதங்கம் கூட அவர்களிடம் இல்லை. மரண வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கட்டிய மனைவியே மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அப்படியென்ன கொடுமையானவனா பச்சை? அவனது முகம் தான் என்ன.? அவன் யார்..? யாருக்கும் பிடிபடாத ஒருவனின் அசாத்திய வாழ்க்கையை அவன் எரிகிற சிதையை பார்த்தபடியே அவன் உடன் சுற்றிய மனிதர்கள் விளக்குவதே "அ" திரை வழங்கும் "பச்சை என்கிற காத்து " படத்தி்ன் கரு, கதை, களம் எல்லாம்.
ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சு
நாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே
வேல்முருகன், ரோஷினி, இந்துமதி மூவரும் இணைந்து பாடியிருக்கும் ஒரு ஆட்டம் போட வைக்கும் கும்மக்குத்து பாடல். மெல்ல ஆரமித்து பின்னர் செம ஸ்பீடில் முடியும் பாடல் இது.

கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சு
ஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த முதல் பாடல். மகேஷ், மதுமிதா, அரவிந்த் பாடியிருக்கும் இந்த பாடலில் அருமையான இசை கோர்வையை நீங்கள் ரசிக்கலாம். அழகான போக் சாங் + குத்து பாடல்.

நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே
எனக்கு பிடித்த அடுத்த பாடல். மகேஷ், பானுமதி, ஹரிபாபு இணைந்து பாடிய இந்த பாடலின் மெட்டமைப்பு வேறு எங்கேயோ கேட்டது போல இருக்கு. ஆனா சட்டுன்னு ஞாபகம் வரல. உங்களுக்கு வந்தா சொல்லுங்கள்.

தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய்

என்ற மதுமிதா பாடிய இந்த பாடலை காதலில் விழுந்து அடிபட்ட கதாநாயகி பாடுவது போல இருக்கு. அருமையான சோக மெலடி பாடல்.

சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னை
கிறுக்கனாக்கி சிரிக்கிறாளே
என்ற காதல் தோல்வி பாடலை நிகில், மதுமிதா இருவரும் பாடியிருகிறார்கள். காதல் தோல்வி ஆனவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் இந்த பாடல்.

நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ......
எனத் தொடங்கும் பறவை சிலம்பாயி பாடும் ஒப்பாரி பாடலை இனி எங்கும் நாம் கேட்கலாம். (மரணம் நிகழ்ந்த இடங்களில் இந்த பாடல் இனிமேல் நிச்சயம் இடம்பெறும்).

பச்சை என்கிற காத்து - ரசிக்கலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே தொடுக Download Songs

இயக்குநர் கீரா பேசுகையில் 'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் வெற்றி பெறவில்லையென்றால் நான் சினிமாவை விட்டே போய்விடுவேன்' என்றார்.

இவளவு நம்பிக்கையுடன் சொல்லும் இந்த இயக்குனரின் படைப்பை ஆவலுடன் எதிர்பார்த்து .....

Thanks : cinema.dinamalar
என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



The Tournament - ஹாலிவுட் பட விமர்சனம்

கடந்த ஒரு வாரமா நான் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தை பற்றி எழுத நினைத்தேன். இன்று தன் அதற்கு நேரம் கிடைத்தது. இந்த படத்தோட பேரு "தி டோர்னமென்ட் (The Tournament - 2009)". உங்களை 90% இந்த படம் திருப்தி படுத்தும்.


படத்தோட கதை என்னனா ...

ஒரு நகரில், யாரும் அவளவு எளிதில் கண்டுபிடிக்கமுடியாத அந்த கிளப்பில் ஏழு வருடத்திற்கு ஒரு முறை, பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பணக்கார மனிதர்கள் கூடுவார்கள். அவர்கள் முன்பு மிக பெரிய திரை ஓன்று இருக்கும்.

பெரிய மேஜையின் ஓரத்தில் அந்த பணக்கார மனிதர்கள் அமர்ந்திருக்க, அவர்கள் முன்பு பணக் குவியல்கள். இவர்கள் இங்கே கூடி வந்தது ஒரு விளையாட்டை காண தான். அது தான் "சாவு அல்லது சாகடி".(kill-or-be-killed)

இதற்காக கடந்த ஏழு வருடத்தில் மிக திறமையாக, எதிரிகளை கொன்று வெற்றி பெற்றவர்கள் இந்த பந்தயத்தில் / விளையாட்டில் கலந்துகொள்லாம். இதற்காக 30 பேரை அந்த கிளப் தேர்வு செய்து திரையில் காட்டுவார்கள். அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சூது நடக்கும். இவர் தான் வெற்றிபெறுவார் என்று ஒவொரு பணக்காரனும் பணத்தை கட்டுவார்கள்.

இந்த விளையாட்டில் வெற்றி பெறுபவனுக்கு 30 மில்லியன் டாலர் பரிசு தொகை + "பெஸ்ட் Assassion" என்ற பட்டமும் கிடைக்கும்.

30 மணி நேரத்தில், 30 மனிதர்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு அந்த பரிசு தொகை. இவர்களை கண்காணிக்கும் பொறுப்பு இரண்டு பேரிடம் தரபடுகிறது. அவர்கள், ஒரு சிறு 'சிப்' (CHIP) ஒன்றை தயாரித்து அந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் நபரின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் பொருத்து விட்டு அவர்களின் செயல்களை கணிப்பொறி (Computer)மூலம் கண்காணித்து வருகிறார்கள்.


இந்த விளையாட்டில் எப்படியாது இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒரு சீனப்பெண் லை லை ஹென் (Kelly Hu). அவள் மீது நிறைய பேர் பணம் கட்டுகிறார்கள்.. இந்த விளையாட்டு தொடக்கும் சற்று நேரத்திற்கு முன்பு நம்ம ஹீரோ ஜோஷு ஹார்லோ(Ving Rhames) வந்து சேருகிறார். இவர் கடந்த முறை இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்.

இவர் இந்த வருடம் கலந்துகொள்ள வந்ததே தன் மனைவியை கொன்றவன் இந்த விளையாட்டில் இருக்கிறார் என்று தெரிந்துகொண்டு அவர்களை பழிவாங்கவும் + இந்த வருடம் வெற்றி பெறவும் வந்துள்ளார்.

இதில் கலந்து கொள்ளும் வீரரிடம் ஒரு செல் (Apple Cell Phone) போன்ற கருவி தருவார்கள். அதில் அந்த இடத்தில் இருக்கும் மற்ற வீரர்களை சிக்னல் மூலம் காட்டும். அதைக் கொண்டு வீர்கள் மற்றவர்கள் வீத்துவார்கள்.

விளையாட்டு ஆரம்பம் ஆகிறது.
....
....
இந்த விளையாட்டில் யார் வெற்றி பெற்றார்கள் ? ஹீரோ தன் மனைவியை கொன்றவனை கண்டுபிடித்தானா ? என்று ஒரு நல்ல DVD வாங்கி பாருங்கள்.


படத்துல என்னை கவர்த்தவைகள்...

  • இப்படத்தின் கேமிரா மேனுக்கும் + இசைக்கும் தான் என் முதல் பாராட்டுகள். Excellent Work!!

  • டைரக்டர் ஸ்காட் மான்(Scott Mann)-க்கு இது தான் முதல் படம். சும்மா பட்டைய கிளப்பியிருக்காரு. படம் ஆரம்பமே, கடந்த ஹீரோ முறை எப்படி வெற்றி பெற்றான் என்று தொடக்கும். அதிலிருந்து ஒவொரு நிமிடமும் நம்மை சீட் நுனிக்கே வந்து அவர செய்யும் சாகசம் + விறு விருப்பு. Superb!

  • இந்த விளையாட்டில் ஒரு 'பாதர்' தெரியாமல் வந்து மாற்றிக்கொள்ள, அவர் படும் பாடு நிச்சயம் ரசிக்க வைக்கும்.

  • அந்த சீனப்பெண் என்னமா சண்டை போடுது. சரியான நடிப்பு. ஹீரோவை விடவும் அதிகம் நம்மை கவர்வது இவள்தான்.

  • சண்டை காட்சிகளும் + கார் துரத்தல்கள் + துப்பாக்கி சத்தம் + ஓட்டம் என படத்தில் பயங்கர விறு விருப்பு. கிளைமேக்ஸ் யாரும் எதிர் பார்காதது. மிக அருமை.

இந்த படத்தோட டிரைலர்



The Tournament (2009)- Powerfull package - சண்டை + சஸ்பென்சு பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Minotaur - ஹாலிவுட் பட விமர்சனம்

கிரீஸ் நாட்டில் மினோடார் (Minotaur ) என்ற புராதன கதை உண்டு. அதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் படம் மினோடார் (Minotaur).


படத்தோட கதை என்னனா ...

முன்னொருகாலத்தில், காளை மாட்டு முகமும் மனித உடலும் கூடிய தெய்வத்துக்கு, மினோஸ் அரசன் (Deucalion) மூன்று வருடத்திருக்கு ஒருமுறை எட்டு இளம் கிராமத்து மனிதர்களை பலிகொடுத்து வருகிறான். அவர்களை எதிர்த்து இதுவரை யாரும் முன் வந்ததில்லை.

தேன்ஸ் நகரத்து தலைவன் Cyrnan. அவனது மகன் தியோ (theo) நகரில், செம்மரிஆடுகளை மேய்த்துக்கொண்டு நகரை பாதுகாத்து வருகிறான். அதே நகரில் வசிக்கும் டிரோவுக்கு நம்ப ஹீரோவை பிடிக்காது.

இந்தவருட இளம் பெண்கள் தேடுதல் ஆரம்பிக்க, தேன்ஸ் கிராமத்து மக்கள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ள, அவர்களில் சிலரை வலுகட்டாயமாக மினோஸ் அரசனின் அடியாட்கள் பிடித்துக்கொண்டு செல்ல அவர்களுடன் நம்ப ஹீரோ தியோ செல்கிறான்.

அவனின் காதலியை (பியன்) இதற்கு முன்னர்தான் அந்த அரசனின் ஆட்கள் பலிகொடுக்க கடந்த முறை இழுத்து சென்றுவிட்டனர். எப்படியும் அவனின் காதலி அங்கே தான் இருப்பாள். எப்படியாவது அவளை காப்பாற்றிவிட வேண்டும் என்ற தன்னலத்துடனே செல்கிறான்.

அவர்களில் ஒரு சிலரை அரசனின் சகோதரி (Raphaella) தேர்வு செய்து ஒரு கிணறு போல இருக்கும் 'அந்த'குகையில் விட்டுவிட்டால், மினோடார் தெய்வம் அவர்களை பதம் பார்த்துவிடும்.

அரசனின் சகோதரிக்கு நம்ப ஹீரோ மேல ஒரு காதல். அவனை அடைய தனியே சந்திக்கிறாள். இதனை அறிந்த அரசன் தியோவை மினொடர் கிணறு குகையில் அடைக்கபடுகிறான்.

ஹீரோவுடன் வந்த அனைவரையும் அந்த கிணற்றில் விட்டு விட, அந்த மினோடார் ஒரு காதல் ஜோடியை ஒரு .... பண்ணிவிடுகிறது.

ஹீரோவை காப்பாற்ற நினைக்கும் அரசியும் அந்த குகைக்கு வர, ஹீரோவை சந்தித்து அந்த குகையில் இருந்து வெளிவரும் வழி காட்டுவதாக கூறி அழைத்து செல்ல, அந்த வழியை அரசன் அடைத்துவிட பிரச்னை ஆரம்பிக்கிறது.

அதன் பிறகு, ஹீரோ தன் காதலியை கண்டானா ? எப்படி மினோடரை சந்திக்கிறான் ? எப்படி தப்பிக்கிறான் ? இவனுடன் இருத்த மற்றவர்கள் கதி என்ன ? என்று DVD வாங்கி பாருங்கள்.

படத்துல என்னை கவர்த்தவைகள்...
  • ராணியாக வருபவளின் கண்கள் காமத்தையும் ஏக்கத்தையும் பளிச்சுன்னு வெளிபடுத்தும் நடிப்பு மிக அருமை.

  • ஹீரோ ஓநாயை துரத்திக்கொண்டு செல்லும் காட்சி - சுப்பர்!!!

  • Jonathan English - இயக்கிய இந்த மினோடார் + அதன் திரை வடிவமைப்பும் மிக அருமை. மினோடார்க்காக கொடுக்கப்படும் இசை. மிரட்டல்!!

  • கேமிரா மிகவும் கடுமையாக உழைத்திருக்கு. மினோடார் வரும் இடங்களில் என்னமா ஒளிபதிவு செய்திருக்கிறார். அந்த மினொடர் துரத்தும் இடங்களில் + ஹீரோ தப்பும் காட்சிகளில் ஓடும் போது கேமிரா சும்மா மிரட்டுது.

  • இந்த படத்துல வரும் அனைத்து கதா பாத்திரங்களும் மிகவும் அழகாக + அருமையாக வடிவமைத்திருப்பார் இயக்குனர்.

இந்த படத்தோட டிரைலர்


இப்படத்தில் பணிபுரிந்தவர்கள்
Directed by ... Jonathan English
Starring * Tom Hardy ... Theo
* Tony Todd ... King Deucalion
* Michelle Van Der Water ... Queen Raphaella

Music by ... Martin Todsharow
Cinematography ... Nic Morris
Editing by ... Eddie Hamilton
Distributed by ... Lions Gate
Release date(s)... March 11, 2006

மினோடார் - சஸ்பென்ஸ் மூவி பிரியர்கள் இதனை ஒருமுறை பார்க்கலாம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சுறா படத்தின் ரிங் டோன் + பாடல் விமர்சனம்

இந்திய தொலைகாட்சிகளில் வலைபதிவில் முதல் முறையாக மணிசர்மா இசையில் விஜய் நடித்து வெளிவர இருக்கும் சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன் வடிவில் உங்களுக்காக இங்கே... இது விஜய்-ன் 50 ஆவது படம் என்பது கூடுதல் சிறப்பு .

சுறா படத்தின் பாடல்கள் கேட்டு கொண்டிருக்கும் நண்பர்களே... சுறா படத்தின் பாடல்கள் ரிங் டோன்


1. சிறகடிக்கும் நிலவு (பாடியவர் : கார்த்திக் & ரீட்டா, பாடல் வரிகள் : சிநேஹன் )

மணிஷர்மாவின் இந்த பாடல் மெலடி பாடல் கேட்க கேட்க பிடிக்கும்.
சில நேரம் யாரைகேட்டு
என் நெஞ்சில் நீ நுழைந்தாய்
Download : சிறகடிக்கும் நிலவு ரிங் டோன்

2. வெற்றி கொடி ஏத்து (பாடியவர் : ரஞ்சித் & முகேஷ், பாடல் வரிகள் : வாசில், S.F & ராஜ்குமார்)

ஓப்பனிங் பாட்டு போலதான் தெரிகிறது...
வெற்றி என்ற சொல்லை
இவன் விட்டு வைத்ததில்லை
ஏழை எங்கள் வாழ்வில்
இவனே எங்கள் உதயம்
Download : வெற்றி கொடி ஏத்து ரிங் டோன்

3. வங்க கடல் எல்லை (பாடியவர் : நவீன் & மாலதி, பாடல் வரிகள் : கபிலன்)

செம குத்து... குத்து... குத்து பாட்டு. மாலதியின் குரல் பளிச்
ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்
Download : வங்க கடல் எல்லை ரிங் டோன்

4. தஞ்சாவூர் ஜில்லாக்காரி (பாடியவர் : ஹேராசந்திரா & சைந்தவி, பாடல் வரிகள் : ந.முத்துக்குமார்)

சும்மா கலக்கலா இருக்கு பாடல். ரொம்ப குத்தும் இல்லை.... ரொம்ப மெலடியும் இல்லை.
சூ மந்திரகாளி...
பொம்மாயி பொம்மாயி

வார்த்தைகள் மனதில் ஈஸியா ஒட்டிக்கொள்ளும்படி இருக்கு.

Download : தஞ்சாவூர் ஜில்லாக்காரி ரிங் டோன்

5. தமிழன் வீரத் தமிழன் (பாடியவர் : ராகுல் நம்பியார், பாடல் வரிகள் : கபிலன்)

தீம் சாங். விஜயை கொஞ்சம் ஓவரா கட்டவேண்டி எழுதபட்டபாடல் போல இருக்கு.
தன் நிழலைகூட மிதித்தால்
நெற்றிக் கண் திறப்பான்
Download : தமிழன் வீரத் தமிழன் ரிங் டோன்

6. நான் நடந்தால் அதிரடி (பாடியவர் : நவீன் & ஷோபா, பாடல் வரிகள் : கபிலன்)

இது மணிஷர்மா ஸ்பெஷல் டூயட் பாடல். "வா செல்லம் வாவா செல்லம்" தோரணை பட பாடல் போல தோணியது முதலில் கேட்டும்போது ...
என் பேர கேட்ட வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டதே எனக்கு டாட்டா
Download : நான் நடந்தால் அதிரடி ரிங் டோன்



சுறா படத்தின் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக

சுறா மொத்தத்தில் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும் பாடல்கள் கொண்ட இசையாக இருக்கு.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Source : uyirvani & isai.in



திரை விமர்சனம் - Free Willy: Escape From Pirates Cove

நேற்று இரவு என் மனசு சரியில்லாமல்... எதாவது ஒரு வழியில் ரிலாக்ஸ் கிடைக்காதா என்ற மனநிலையில்... நேற்று வெளியான ஹாலிவுட் படம் "Free Willy: Escape From Pirates Cove" படத்தை பார்க்க ஆரமித்தேன். படம் முடிந்த போது மனசு மிகவும் அமைதியாக இருப்பதை உணர்ந்தேன்.


படத்தோட கதை என்னனா ...

படத்தின் கதை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. விடோவேத் ஜூ ஒரு கால்நடை மருத்துவர். அவரது 11 வயது மகள் கிர்ரா (Bindi Irwin). விலங்குகள் மீது மிகுந்த பாசம் உடையவள்.

ஒரு நாள், தன் தந்தை விபத்தில் சிக்க, மருத்துவர்கள் ஆறு வாரம் ஓய்வு எடுக்கும்படி சொல்கிறார்கள். அவருக்கு தன் மகளை எப்படி ஆறு வாரம் கவனித்துகொள்ளவது என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தன் தந்தை (Beau Bridges) கஸ்-யின் நினைவு வர, இவளை அங்கு கிர்ராவை அனுப்புகிறார். தன் தந்தையை பார்த்துக்கொள்ள முடியாமல் போனதை நினைத்து வருந்துகிறாள் கிர்ரா. அரை மனதுடன் இவளும் அங்கு செல்கிறாள்.

தாத்தா வந்து விமான நிலையத்தில் அழைத்துக்கொண்டு போக வரவில்லை என்ற வருத்தம் + நீண்ட வருடமாக இவளை வந்து பார்க்காத கோபம் இரண்டும் கலந்த நிலையில் தன் தாத்தா வீடு செல்கிறாள். அது... கடற்கரை ஓரம் அமைந்த குடியிருப்புகள். ஜன்னலை திறந்து பார்த்தால் கடல் தெரியும் வகையில் அமைந்த இடம்.

தன் தாத்தாவிடம் சரியாக பேசாமல் இருக்கிறாள் கிர்ரா. கஸ்-இன் உதவியாளர் ஒருவரின் மகனுடன் அந்த கடற்க்கரை அருகில் இருக்கும் வனவியல் பூங்கா சென்று வருகிறாள்.

அங்கே, பொழுதுபோக்கு நிறைத்த தீம் பார்க் ஒன்றையும் கஸ் நடத்தி வருகிறார். இவரது தீம் பார்க்குக்கு போட்டியாக ரோல்ப்-ன் தீம் பார்க் செயல்படுகிறது. கஸ் எவ்வளவோ முயசித்தும் தீம் பார்க்கை மேம்படுத்த முடியவில்லை.

ஒருநாள் பயங்கர மழை வந்து கஸ்-இன் தீம் பார்க்கை தும்சம் செய்துவிடுகிறது. மிகவும் சோர்ந்துபோகி விடுகிறார். அப்போது அவரது தீம் பார்க் ஏரியாவில் இருக்கும் நீர் நிலையில் ஒரு குட்டி டால்ப்பின் இருப்பதை கிர்ரா பார்த்துவிடுகிறாள். அதனை தன் தாத்தாவிடம் + நண்பனிடம் சொல்லி சந்தோசப்படுகிறாள். அதனிடம் மெல்ல மெல்ல பாசம் வைக்கிறாள்.

பார்வையாளர்கள் நிறையப்பேர் வர வர... அதனைக்கொண்டு அந்த தீம் பார்க்கை வில்லி(Willy) என்று பெயர் மாற்றி மேம்படுத்திகிறார் கஸ். இதனை காணும் ரோல்ப் அந்த டால்பின்னை விலைக்கு கேட்கிறார். கஸ் ஒருவழியாச சம்மதித்து பணத்தையும் பெற்றுவிடுகிறார். இதனை அறிந்த கிர்ரா + தன் நம்பனுடன் சேர்ந்து டால்பினை அதன் கூட்டத்துடன் சேர்த்துவிட முடிவு செய்கிறார். ரோல்ப் கோபமடைய... தாத்தாவும் செய்வது அறியாமல் திகைக்க... கிர்ரா டால்பின்னை எப்படி காப்பாற்றுகிறாள் எப்பது தான் மீதி கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

  • படம் மெல்ல மெல்ல கதைக்குள் நம்பி எழுத்துசெல்வது படத்தின் சிறப்பு. படம் முடியும் போது நாமும் ஒரு கிர்ராவாக மாறியிருப்பது அழகு. இதிலேயே டைரக்டர் வெற்றியும் பெறுகிறார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும்படி இருப்பது இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதிசெய்யும்.

  • ஒளிபதிவும் குறிப்பிடப்படவேண்டிய ஓன்று. மிக தெளிவு. சபாஸ்!

  • கிர்ராவாக Bindi Irwin ( மறைந்த முதலை மனிதர் ஸ்டீவ் இர்வின்-இன் மகள் ). என்னமா நடித்திருக்கு. முதல் படம் என்பது போலவே இருக்காது. அதுவும் டால்பினுடன் பழகும் காட்சிகள் + பயம் அறியாமல் டால்பின் முதுகில் சவரிசெய்வது மிக அழகு + தாத்தாவுடன் கோபப்படும் காட்சிகள் + நண்பனுடன் ஆடிபாடி திரியும் காட்சிகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

  • தாத்தாவாக Beau Bridges. மனுசர் முகத்தில் அத்தனை நடிப்பை வெளிபடுத்துகிறார். சரியான பாத்திர தேர்வு. தன் மகளை பற்றி பேத்தியிடம் சொல்லும் போதும் + உணவு தயாரித்துவிட்டு பேத்தியை எழுப்பும் போதும் மனிதர் மனதில் நிற்கிறார்.

  • கோடை விடுமுறையை குடுப்பத்துடன் சென்று பார்க்கும்படி இருக்கிறது.

Free Willy: Escape From Pirates Cove - குடுப்பத்துடன் பார்க்க வேண்டிய படம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ரஜினியுடன் இணையும் நாகராஜன்

ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல், உடை, நடை... எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ரஜினி படத்தில் தவறாமல் இடம் பெறும் காட்சி - பாம்பு. பாம்புக்கும் ரஜினிக்கும் பல தொடர்பு உண்டு... சினிமாவுல!. அதில் சில ...


1. அவர் முழுக்கதாநாயகனாக நடித்த முதல் படம் "பைரவி". அந்த படத்துல படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போது ஒருவித ஈர்ப்பு அனைத்து ரசிகனுக்கும் வரத்தான் செய்யும். என்னா ஸ்டைலு ... என்னா ஸ்டைலு ... அட அட ரஜினி என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.
'நண்டூறுது, நரியுருது' என்ற பாடல். தங்கையை இழந்து தவிக்கும் ஒரு அண்ணனின் சோக கானமான இது கேட்போர் நெஞ்சை இப்பொழுது கூட உருக்கிவிடும். அந்தளவிற்கு ஒரு அருமையான பாடல். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார்.

"டி.எம்.எஸ். பாடி, அதை படத்தில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று ரஜினி அவர்கள் அந்த படத்தின் இயக்குனரிடம் சொன்னதை எப்போதோ படித்தது நினைவுக்கு வருது. GREAT!

2. அன்று ஏற்படுத்திக்கொண்ட பாம்பு நட்பு அதன் பிறகு "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படத்துல நம்ப தலைவரு ஒரு "கில்மா" புக்கை கட்டிலில் அமர்ந்த படி படிக்கும் போது ஒரு நல்லபாம்பு இவர் அருகே வந்து படமெடுத்தபடி வரும் நகைச்சுவைக் காட்சியை எவராலும் மறக்க முடியாது.
'தம்பிக்கு எந்த ஊரு' படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு கூடவே இலவச இணைப்பாக நினைவுக்கு வருவது கீழ்வரும் பாடலும் தான்.

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்
மயக்கமென்ன? காதல் வாழ்க...

3. தலைவரின் பாம்பு சென்டிமெண்ட் செமத்தியாக ஓர்க் அவுட் படங்களின் அண்ணாமலையும் ஒன்று.
சின்னஞ்சிறுசுகள் விழுந்து விழுந்து சிரித்த இடம் அது.

பாம்பு காமெடி சிறுசுகளுக்குன்னா... கடவுளே கடவுளே காமெடி இளசுகளுக்கு. அந்த அளவு தலைவரின் நகைசுவை மிளிரும் காட்சி பாம்புடன் இணைந்து சும்மபின்னியிருப்பார்.


4. படையப்பா படத்துல இவர் தோன்றும் காட்சியே மிக அற்புதமா அமைந்திருக்கும். பாம்பு புத்துல கையை விட்டு நல்லப்பாம்புவை எடுத்து ஒரு சின்ன முத்தம் கொடுத்து விட்டுவிடுவார். அந்த காட்சியில், தலைவரின் முகம் காட்டும்போது தியேடரில் விசில் பறக்கும் பாருங்க... அட அட .... தலைவரு தலைவரு தான். கூடவே நம்ப A.R.ரகுமான் சார் இசையில் சும்மா பின்னியிருப்பார்.
இந்த படம் நினைவில் வரும்போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இரண்டு நினைவுகள். ஓன்று சிவாஜி + சௌந்தர்யா இருவரும் சினிமா உலகைவிட்டு மறைந்தது. மற்றொண்டு, நீலாம்பரி கதா பாத்திரம்.

5. சந்திரமுகியில் வழக்கமா ரஜினி படங்களில் வரும் பாம்பு காட்சிகள் இதில் இல்லை. ஆனால், பாம்புகளுடன் இவர் நடித்திருப்பார். பாம்பும், சந்திரமுகியின் படமும், வேட்டைய ராஜாவின் படமும் காண்பிக்கும் பொழுது, 'அமானுஷ்ய' உணர்வு நம்முள் ஏற்படும்.
இந்த படம் நினைவில் வரும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ரஜினி + வடிவேலு காமெடி நம் வயிறை பதம் பார்த்ததுதான். அதுவும் வடிவேலு சொல்லும் வசனம் வெகு பிரபலம். "மாப்பு ... மாப்பு.... வட்சுடாண்டா பெரியா ஆப்பா.." ன்னு சொல்லிகேட்டே அந்த பெரிய பங்களாவில் இருந்து வெளியே வருவார். மறக்க முடியாத ஓன்று.

"என்ன கொடும சரவணன் இது... "-ன்னு நம்ப இளைய திலகம் பிரபு தலையில அடிச்சிகிற காட்சி + ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு.

அடுத்த படமான ரோபோவில் இதேபோல ஏதாவது பாம்பு காட்சியை எதிர்பாக்கலாமா...!? இதனை படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளலாமே...!

இவ்வளவு நேரம் படித்த நீங்கள் எனக்காக ஒரு ஓட்டு போடுங்களேன்... நன்றி மீண்டும் வருக.



குரு சிஷ்யன் - படப்பாடல் அறிமுகம்

1990 - ஆம் ஆண்டு இளையாராஜா இசையில் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி + இளைய திலகம் பிரபு இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த படம் "குரு சிஷ்யன்". அதே பெயரில் இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் இணைத்து நடித்துள்ள படம் "குரு சிஷ்யன்".



1. கிராமத்து பொண்ணு ஒன்னு நகரத்து பெண்ணின் நாகரீகத்திற்கு மாறும் போது நம்ப ஹீரோவும் ஹீரோயினும் பாடும் ஒரு கலாட்டா பாடல். பாடல் வரிகளில் கிராமத்து பெண்ணின் நாகரீகம் + நகரத்து பெண்ணின் நாகரீகம் இரண்டையும் சுட்டிக்காட்டி பாடும்ப்படி அமைத்திருப்பது அருமை.

இது ஒரு கலாட்டா பாடல். கேட்ட நல்லா இருக்கும். பழைய பாடல் மெட்டு. V.N.P.வெங்கட், ரீடா & தீனா குரல்களில் அந்த பாடல் ...
அடேக்கப்பா அடேக்கப்பா ஆளே மாறிடியே
தாவணிய கழட்டிப்போட்டு ஜீன்ச மாட்டிடயே
ஹேர் ஸ்டைல மாத்துறா லிப்டிக்க பூசுரா
லோஹிப்ப காட்டுரா ஹை ஹீல்ச மாட்டுரா
பட்டிக்காட்டு பொண்ணு ஒன்னு சிட்டி கேலா மாறிப்புட்டா
ஆட்டையா போடு நீ ஆட்டையா போடு...
2. மேலடிபாடல் இது. பாடல் வரிகள் மிக அருமை. காதல் ரசம் போங்க வரும் இந்த பாடம் நிச்சயம் சுந்தர் சி பாடுவது போலத்தான் இருக்கும். தீனாவின் பெயர் சொல்லும் பாடல் இது. ரீட்டாவின் பின்னணி ரீங்காரம் ரம்மியம். ரீட்டா , பல்லிராஜ் & தீனா குரல்களில் அந்த பாடல் ...
கதற கதற காதலிப்பேன்
சிறுக சிறுக சிறைப் பிடிப்பேன்
யானை காதில் எறுப்பைப் போல்
காதல் மெல்ல நுளைதிடுமே
3. "பத்திரகாளி" படத்தில் இடம் பெற்ற பாடல் இப்போது ரீமிக்ஸ் செய்து தந்திருக்கிறார் இசையமைப்பாளர் தீனா. பாடலில் அதிக இசை கருவிகள் பயன்படுத்தாமல் அமைத்த தீனாவுக்கு புண்ணியம் கிட்டட்டும். கதாநாயகி தனித்து பாடும் பாடல் இது. சுசித்ரா குரலில் இப்பாடல் கேட்டும்படி இருப்பது கூடுதல் சிறப்பு.
வாங்கோனா...
வாங்கோனா...
கேட்டேளே அங்கே அத பாத்தேலே இங்கே
4. ஓபனிங் பாடல் இல்லாமல் தமிழ் படம் இருக்க கூடாது என்ற நீதியை பின்பற்றி வரும் பாடல் இது. இது ஒருவகையில் தத்துவ பாடல் போலத்தான் இருக்கு. திப்புவின் குரலில் கேட்ட அருமையா இருக்கு.

"உயிரை கூட கொடுப்பேன்னு காதலிக்கிடே நடிக்கிறான்
சிலுமிசம் முடிந்தது சிம்கார்டை மாத்துறான் " - பாடல் வரிகள் என்னை கவர்ந்தவைகள்.
பழனி முருகனுக்கு மலை மேல வீடு
சபரிமல ஐயப்பனுக்கு காட்டுக்குள்ள வீடு
மதுர அழகருக்கு ஆத்துமேலவீடு
தம்முக்குள்ள கஞ்சாவ வஞ்சு இழுத்துபுட்டா உலகமே உன்வீடு

ஆண்டவா ஆண்டவா ஆறுபட ஆண்டவா
நாட்டுக்குள்ள எல்லோருமே நடிக்கிறாங்க ஆண்டவா
5. சத்யராஜ் + சுந்தர் சி இருவரும் சொந்த குரலில் பாடியிருக்கும் பாடல் இது. இருவரும் பாடி கலாய்ப்பது போல பாடல் வரிகள் இருக்கு. இடையில், "அடி ஆத்தாடி இவ மனசுல .." என்ற பாடலின் சில வரிகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. சத்யராஜ், சுந்தர் சி & சின்னபொண்ணு குரல்களில் அந்த பாடல் ...
குருவுக்கும் சிஷ்யனுக்கும் போட்டி ஒன்னு நடக்குதுங்க
கேடிக்கும் கில்லாடிக்கும் வேஷ்டி இப்போ கிளியுதுங்க
லொள்ளா தில்லா பறிச்ச ஒன்னு நடக்குதுங்க
ஜெயிக்க போவது யாருங்கா ?

சுப்பையா சுப்பையா நீ செய்யறது தப்பையா
வட்டி மேல வட்டி வாங்கி வளந்துபோச்சு தொப்பையா
எப்பையா எப்பையா நீ திருந்தறது எப்பையா ?
இப்பயா இப்பயா ஒரு பதிலா சொல்லு இப்பயா..
மொத்தத்தில் 5 பாடல்கள் எல்லாமே மிக அருமையா இருக்கு + ஆட்டம் போட வைக்கிறது. இந்த படத்தின் பாடலை தரவிறக்கம் செய்ய இங்கே அணுகவும்
Download Here :

http://www.tamilentertainments.com/.../Guru-Sieshyan


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



ரஜினி - நடிக்க முடியாமல் போன படம்

ராகவேந்திரர் வாழ்க்கையில் சுல்த்தான்பாய் என்கிற பாத்திரம் வித்தியாசமானது. ராகவேந்திரரை ஏமாற்றுவதற்காக அவர் ஒருமுறை மாமிச துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டார். ராகவேந்திரர் அதனை தனது அசைக்கமுடியாத பக்தியால் புஷ்பமாக மாற்றி விடுவார்.


ராகவேந்திரரிடம் அப்போதே அவர் சிஷ்சியனாகிவிடுவார். கடைசியில் தான் மகா சமாதியாகும் இடத்தையும் சுல்தானே அமைத்துத் தரும்படி ராகவேந்திரர் கேட்டார். அதை அமைத்து முடித்து, சுவாமிகள் சமாதி ஆவதற்கு முன்பு சுல்தான், ராகவேந்திரர் காலில் விழுந்து கதறி அழுது,
"ஐயா, நீங்கள் போனபின்பு இது இந்துக்களின் புனித தளமாகிவிடுமே இஸ்லாமியரான என்னை அனுமதிக்காவிட்டால் நான் எப்படி இங்கே வந்து உங்களைத் தரிசிப்பேன்?"
என்று உருகி கேட்டார். உடனே ராகவேந்திரர்,
"என் சமாதிக்கு மேல் ஒரு மாடம் அமைத்துவிடு. நீ எங்கிருந்து எப்போது பார்த்தாலும் நான் உனக்கு காட்சி தருவேன்"
என்று சொல்லி மறைந்து விடுவார்.


இந்த நிகல்வைகொண்டு, ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தோணியது. விறுவிறுவென படமாக்கும் முயற்சிகள் ஆரமிக்கப்பட்டன.

அதில் ராகவேந்திரராக அவர் மனதில் வைத்திருந்தது சிவாஜி சாரை தான். சுல்த்தான் பாய் வேடத்தில் ரஜினி சார் நடிப்பதாக முடிவெடுத்துவிட்டார். இதனை அறிவிப்பாக வெளியிட இருந்த நேரத்தில், ரஜினியின் நண்பர் அதனை சில நாட்கள் கலைத்து வெளியிடலாம் என்றார்.

ஆனால், அது கடைசி வரை வெளியிடப்படவில்லை. சில நாட்களுக்கு பிறகு, புதிய காட்சிகளுடன் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தயாரிக்கப் பட்ட கதையில் ரஜினியே ராகவேந்திரர் வேடத்தில் நடித்தார் - என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை நம்முடன் பகிர்ந்துகொண்டவர் ரஜினியை வைத்து ஹீரோவாக பைரவி படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கலைஞானம் அவர்கள்.


டிஸ்கி:
இந்த சுத்தானை மனதில் கொண்டு தான் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்கிய அனிமேசன் படத்திற்கு "சுல்த்தான் தி வாரியார்" என்று பெயர் வைத்தாரோ?

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



ரஜினியை தேடிய லண்டன் போலீஸ்

விடுதலை படத்துக்காக சிவாஜிசார், ரஜினி, நான், விஷ்ணுவர்த்தன் எல்லோரும் லண்டன் போயிருந்தோம். சிவாஜிசாரை மட்டும் வேறொரு ஹோடலில் தங்க வச்சுட்டு, நாங்க மூணு பேரும் இன்னொரு ஹோட்டல தங்கியிருந்தோம். இருபது நாள் தொடர்ந்து லண்டன்ல ஷூட்டிங் நடந்துச்சு.

ஒவ்வொரு நாள் ராத்திரியும் நாங்க மூணுபேரும் ஹோடேலேயே இருக்கமாட்டோம். லண்டன்னோட இண்டு இடுக்கு சுத்தி பார்க்கிறது தான் எங்க வேலை ... இப்படியே இருபது நாளும் கழிந்தது.

கடைசியா ஷூட்டிங் முடிந்து ஊருக்கு கிளம்பு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். அப்பப் படத்தோட தயாரிப்பாளர் பாலாஜி சார் படபடப்போடு வந்து, "ஏம்பா ரஜினி... உன்னையும் விஜயகுமாரையும் விஷ்ணுவர்த்தனையும், லண்டன் போலீஸ் தேடுறதா பேப்பர்ல வந்திருக்கே... என்னப்பா தப்பு செய்தீங்க..?"னு கேட்டாரு. அதோடு பேப்பரையும் விரிச்சி காண்பித்தாறு.

முதல் பக்கத்துல, நாங்க மூணு பேரும் இருக்கிற மாதிரி, பெரிய போட்டோவும் போட்டு "இவர்களை லண்டன் போலீஸ் தேடி வருகிறார்கள்..." என்ற செய்தி வெளியிட்டு இருந்தாங்க. அதை பார்த்ததுமே ரஜினி திக்பிரமை பிடிச்ச மாதிரி ஆயிட்டாரு. எங்களுக்கும் அதே பிரமை தான்.

எங்களோட அதிர்ச்சியைப் பார்த்து கொஞ்ச நேரம் ரசித்த பாலாஜி சார், திடீர்ன்னு கட கடன்னு சிரிக்க ஆரம்மிசிடாறு. எங்க கையை பிடிச்சு ஏற்போர்டுல இருக்கிற பேப்பர் கடைக்கு அழைச்சிட்டு போனாரு. அங்கே உள்ள பேப்பர்ல
முதல் பக்கம் மட்டும் 'ப்ளாங்கா' இருக்க... மத்த பக்கத்துல நியூஸ் இருக்குமாம். பப்ளிக் யாரவது தங்களை பத்தி நியூஸ் வரணும்னு ஆசை பட்டு பணம் கொடுத்தா போதும் ... உடனே முதல் பக்கத்துல அவங்களை பற்றி நியூஸ் போட்டு, உடனே ப்ரிண்டும் பண்ணி தருவார்களாம்.

லண்டன்ல இருக்கிறவங்க தங்களை கிண்டல் பண்ணுவதற்காக ராணி எலிசபத் ராணியை சந்தித்த மாதிரி எல்லோரும் விளையாட்டா, படத்தோட நியூஸ் போட்டுக்குவாங்காலாம்.
அப்படிதான், எங்க போட்டோவை அந்த பேப்பர் கடையில கொடுத்து, பிரிண்ட் பண்ண வட்சிருக்கரு பாலாஜி சாரு.... அந்த திகில் காமெடியா இப்ப நினைத்தாலும் சிரிப்பாதான் இருக்கும்.." என்று நம்ப நாட்டாமை விஜயகுமார் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சொன்ன ஒரு தகவல் இது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



தீராத விளையாட்டு பிள்ளை - விமர்சனம்

தோரணைக்கு பிறகு விசாலின் புதிய படம் தீராத விளையாட்டு பிள்ளை. இவரது அண்ணன் தான் தயாரிப்பாளர். சன் பிச்சர் இந்த படத்தை வாங்கியதால் ஒரே விளம்பரம் தான். இதுவே இந்த படத்தின் மீதான நம்பிக்கையை தகர்கிறது.


படத்தோட கதை என்னனா ...

வங்கியில் வேலை செய்யும் பெற்றோர்களின் செல்ல மகன் விஷால். ஒரு பக்கம் அவரை திட்டிக் கொண்டே இருக்கும் அம்மா சந்தியா, இன்னொரு பக்கம் அதை சரிகட்டிக் கொண்டேயிருக்கும் அப்பா மௌலி.

'ப்ளே-பாய்'யான விஷாலுக்கு சின்ன வயசில் இருந்து எதுவாக இருந்தாலும் மூன்றை தேர்வுசெய்து அதில் இருந்து பெஸ்ட் ஒன்றை முடிவுசெய்யும் இவர் தன் கல்யாணத்துக்கு மூணு பெண்ணை (நீது சந்திரா, சாரா ஜேன், தனுஸ்ரீ தத்தா) செலக்ட் பண்றாரு. அவர்களில் யாரை கைப்பிடிக்கிறார் என்பது தான் கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

முதல் பாதியில் ஹீரோ, ஹீரோவின் நண்பர்கள் சந்தானம், மயில்சாமி, சத்யா மற்றும் முன்று கதாநாயகிகள் அறிமுகம் + காதலில் விழவைப்பது என்று நீள்கிறது. எப்படா இன்டர்வெல் வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.

முதல் பாதி ஹீரோ - சந்தானம். 'கவுன்டர்' கொடுத்தே தியேடரில் அலப்பறை செய்கிறார். துவும் கல்யாண மண்டபத்தில் அடிக்கும் லூட்டி செம... அவரே இல்லை என்றால்... முதல் பாதி ?

ரெண்டாவது பாதியில் தேவயில்லாமல் வரும் பாட்டுகள் வெறுப்பையே தருகிறது. காட்சிகள் + திருப்பங்கள் என் நகர்கிறது. கொஞ்சம் நமளாலும் உட்கார முடிகிறது.


பணக்காரப் பெண் நீத்து சந்திரா. பாவம் ரொம்ப குட்டி டிரஸ்-இல் தான் வராங்க. வயசு பசங்களுக்குள் ஒரே வித 'வைபரேசன்' வரத்தான் செய்கிறார். இரண்டாம் பாதியில், வில்லியாக மாறி நன்றாக நடித்து இருக்கிறார்.

ஆண்களை வெறுக்கும் பெண் + பிரகாஸ்ராஜின் தங்கை தனுஸ்ரீ தத்தா. முதல் பாதியில், இவரது அறிமுகம்... யப்பா... என்னமா ஓடி ... கண்ண கட்டுது.

வீட்டில் கல்யாண நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண் + விஷாலை நிஜமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் சாரா. நடிக்க பெருசா ஒன்னும் இல்லை.
சாராவின் முகத்தில் எப்போதும் ஒரே சோகம். ஏன்னு தெரியவில்லை.

முன்று கதாநாயகிகளும் தாங்கள் வாங்கிய காசுக்கு ஏற்ப உடலை காட்டி நடித்து இருகிறார்கள்.
கேமிராவின் உழைப்பு அருமை. சபாஸ் அரவிந்த்.

பிரகாஷ்ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவாக செய்து இருக்கிறார். இவர் தோன்றியவுடன் மனதிற்கு சற்றே ஆறுதல்கிடைக்கிறது.

யுவன் இசை இரண்டாம் பாதியில் அதிகம் தேவைபடுகிறது. அவரின் 'சோலோ' பாடல் இடம் + விசாலின் நடிப்பும் அழகு. மூன்று பெண்களிடம் 'கொக்கி' போட்டுவிட்டு திரும்பி வரும் விசாலுக்கு பழைய ரஜினி பட 'தீம்' மியூசிக். Superb!.

விஜய் போன்றே விஷாலும் நடிகரேன்னு நினைத்து கொல்லாமல் கொள்கிறார். சில இடங்களில் ஒரே எரிச்சலை ஏற்படுத்துகிறார். இனி விசாலை வைத்து படு சீரியஸ்சா படம் செய்தாலே அது பெரியா காமெடி படமா வரும் போல இருக்கு..

தீராத விளையாட்டு பிள்ளை - இவன் குறும்பை ரசிக்க ஒருமுறை பார்க்கலாம்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



தீராத விளையாட்டு பிள்ளை

'கத்தால கண்ணால குத்தாதே ...' பாடல் புகழ் 'திரு திரு' விழிகளுக்கு சொந்தகாரர் நம்ப பாண்டியராஜன் நடித்த "ஜாடிக்கேத்த மூடி" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் வி.கி.ரெட்டி. பிறகு, வளர்ந்து வாலிபத்தை தொட்டவர் visual communication என்ற படிப்பை படித்து, டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இவரின் செயலை பார்த்த டைரக்டர் இவரை திரைக்கு பின்னல் இருப்பதை விட திரைக்கு உன்னால் வந்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தவர் தனது புதிய படத்துக்கு ஹீரோவாக அறிமுகபடுத்த... ஒரு புது முகம் என்ற உணர்வே தோன்றாத மாதிரி இவரது நடிப்பு இருக்கும். ரீமாசென், பரத் + நல்ல திரைக்கதையும் சேர்ந்த அந்த படம் சூப்பர் ஹிட். அது தான் "செல்லமே". அந்த குழந்தை தான் நம்ப கருப்பு தங்கம் விஷால்.


படம் ஓடியதை பார்த்த தயாரிப்பாளர்கள் இவரையே மீண்டும் ஒரு படம் செய்ய தூண்ட, இவரது 2-வது "சண்டைகோழி" படம் வெளிவந்தது. வேறு ஒரு மாஸ் ஹீரோவுக்கு எழுதிய இந்த படத்தின் கதையில் இவர் மிக சிறப்பாகவே செய்திருப்பார். அதுவும் நண்பா சேச்சி "மீராஜாஸ்மின்" நடிப்பில் பின்னி பெடலேடுத்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட்.

அதன் பிறகு, இவரது டைரக்டர் கனவு மெல்ல வலுஇழந்து மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவாக வலம் வர, இவரது 3-வது படம் "திமிரு" கைகொடுத்தது. ஒரு சிறப்பான திரைகதையில் அலட்டிக்காமல் நடித்து நம்மை நெகிழ செய்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட். தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை தந்தவர் என்ற பெருமையுடன் வலம்வந்தார் விஷால்.

திமிரு பட தலைப்புக்கு ஏற்ப இவர்க்கு சற்றே மாஸ் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் உதிக்க இவரது அடுத்த 4-வது படமான "சிவப்பதிகாரம்"-தில் ஓவரா பேசி நடித்து முதல் பிளாப் படம் ஒன்றை தந்தார். படத்தின் பாடல்களை வீணடித்தார்கள் என்றே சொல்லவேண்டும்.


இவரது அடுத்த 5-வது படத்தை பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் "தாமிரபரணி" வெளிவந்தது. நீண்ட நாளைக்கு பிறகு "நதியா" நடித்தார். உறவுகளை மையபடுத்தி வெளிவந்த இந்த படம் ஹிட். இதில் சற்றே அடக்கியே வாசித்திருப்பார்.

அடுத்த 6-வது படமாக வெளிவந்தது "மலைகோட்டை". பிரியாமணியுடன் ஜோடிசேர்ந்த இவருக்கு இந்த படம் எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியை தரவில்லை. ஊர்வசி + ஆசிஸ் வித்யாதியின் காமெடி பேசப்பட்ட ஓன்று.

மீண்டும் ஒரு மாஸ் ஹீரோ எண்ணம் தோன்ற ஒரு போலீஸ் அதிகாரியாக 6 பேக் உடலமைப்புடன் வெளிவந்த இவரது 7-வது படம் "சத்யம்". நயன்தாரவுடன் ஜோடி சேர்ந்தவர் மீண்டும் ஒரு பிளாப் தந்தார்.

அதன் பிறகு, மீண்டும் தன்னை ஒரு வெற்றி நாயகனாக வெளிகாட்டவேண்டி அடுத்த படம் செய்ய சிறிது காலம் எடுத்துகொண்டார். அப்போது அவர் கையில் எடுத்த 8-வது படம் "தோரணை". சிரேயாவுடன் நடித்தார். சராசரியாக ஓடினாலும் படம் பிளாப் லிஸ்டில் சேர்ந்தது. காமெடி செய்வதா நினைத்து இவர்கள் இருவரும் ரசிகர்களை பதம் பார்த்திருப்பார்கள்.


இன்று வெளிவந்த 9-வது படம் "தீராத விளையாட்டு பிள்ளை". இதுவரை ஒரு கதாநாயகியுடன் மட்டுமே நடத்தவர் இந்த படத்தில் மூன்று நாயகிகள். நடிகர் ஜீவனை போல இவருக்கும் எங்கோ "அந்த மச்சம்" இருக்கு.

இதை படத்தை பற்றி நான் நாளை சொல்கிறேன். 9-இல் 6 படம் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் இந்த படமும் அமைய என வாழ்த்துக்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



CASH - ஹாலிவுட் பட விமர்சனம்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருள் "பணம்". நம்மில் பலரும் பணம் அதிக பணம் சேர்க்க/சம்பாதிக்க வேண்டும் அன்ற ஆசை உண்டு. நமக்கு கொஞ்சம் பணம் வழியில் கிடைத்தால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பையில் போட்டுகொண்டு சென்று விடுவோம் அல்லது அதனை உரியவரிடம் தர முயற்சி செய்வோம். அதுவே கொஞ்சம் அதிகமான பணம் என்றால்... நம் மனது உடனே அதனை உரியவரிடம் தர ஒரு நிமிடம் யோசிக்கும். இதே போன்ற மைய கருத்தை சொல்லும் ஒரு ஹாலிவுட் படம் 'CASH'.


படத்தோட கதை என்னனா ...

அதே போலதான் இங்கே ஒரு நடுத்தர குடும்ப ஹீரோ காரில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு கார் அவனை முந்தி செல்கிறது. ஒரு பாலத்தின் மீது ஏறும்போது ஒரு பொருள் இவனது காரின் முன்பகுதியில் வந்து விழுகிறது.

காரை நிறுத்தி பார்த்தால் அது ஒரு 'சூட்கேஷ்'. போட்டவனை திட்டிவிடு, அதனை தூக்கி எறிதவனுக்கு - ஒரு சின்ன எதிர்பார்ப்பு. அதனை திறந்து பார்த்தால்... ஒரே பணமயம். இடைவெளி இல்லாத அளவு பணம் நிரம்பிவழிந்து இருக்கிறது. அதனை எடுத்துக்கொண்டு தன் இல்லம் வருகிறான்.

தன் மனைவியிடம் காட்ட, இருவரும் சேர்ந்து வீட்டுக்கு தேவையான பொருள்கள், டிவி, சோபா, கார், சேவிங் என்று தங்கள் விரும்பிய வழியில் அந்த பணத்தை செலவு செய்ய ஆரம்பிகிறார்கள்.

இந்நிலையில், பணத்தை தொலைத்த வில்லன் (Sean Bean) அந்த பணத்தை எடுத்த ஹீரோவை கண்டுபிடித்து வந்துவிட பிரச்னை ஆரமிகிறது. ஹீரோவை தொலைத்த பணத்தை முழுமையாக வேண்டும் என்று கேட்டு மிரட்டி ஹீரோவிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பெறுகிறான்.

மீதி பணத்திற்கு ஹீரோகாரை விற்று- பாங்கில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து - மீதி பணத்திற்கு ஹீரோ + அவன் மனைவி + வில்லன் சேர்த்து சிறு சிறு இடங்களில் கொள்ளை அடித்து - கடைசியில் ஒரு வங்கியில் முடிகிறது.



இவர்களை சிகாகோ போலீஸ் தேடும் நிலையில் அவர்கள் அங்கிருந்து வேறு நகருக்கு காரில் பயணிக்கும் போது நம்ப ஹீரோ வில்லனுக்கு தரவண்டிய பணம் போக மீதி இருக்கும் பணத்தை ஹீரோ நாடு ரோட்டில் வீசி எறிகிறான்.

இந்நிலையில் ஹீரோ வில்லன் இடையே சிறு மோதல் காரிலேயே. துப்பாக்கியை எடுக்கும் வில்லன் ஹீரோவால் சுட்டு இறக்க - வில்லனின் சகோதரன் ஜெயிலில் இருந்து வெளிவர படம் முடிகிறது.

இந்த படத்தின் ட்ரைலர்



'Black Death, Lord of the Rings' போன்ற படங்களில் நடித்தவர் Sean Bean. கடந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான் 'அவர்ட்' பெற்றவர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டியிருப்பார். நம்ம ரகுவரன் போல சும்மா மனசர் அலட்டிக்காமல் நடித்திருப்பார் .

Chris Hemsworth - வில்லனிடம் மாட்டிகொண்டு படும் அவஸ்தை + திருடும் போது கிடைக்கும் சுகம் + வெற்றி என் பன்முக நடிப்பு. சபாஸ்.

Stephen Millburn Anderson- திரைக்கதையும் வசனமும் அழகு. கதாநாயகி ஒரு 'ரெஸ்டாரென்ட்'-ல் திருடிவிட்டு ஹீரோவிடம் "உன்னைவிட நான் அதிகம் திருடிவிட்டு வந்திருக்கேன் பாருன்னு" பெருமையா சொல்லும் இடம் அழகு .

பின்னணி இசையும் கேமிராவும் குறிப்பிடும் படி இதில் விளையாடி இருக்கும்.

CASH - டைம் பாஸ் மூவி

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top