Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறு

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம் : சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம் :
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம் : திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம் : இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம் : இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம் : இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.

கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : MoreTamil & Wikipedia



ஹாலிவுட் பட போஸ்டர் காபிகள்

ஹோலிவூடிக்கு சுயமாக சிந்திக்கும் தன்மை குறைந்துவிட்டதா ? Has Hollywood Lost Its Creativity?

சில போஸ்டர் டிசைன் ஒரே மாதிரி வடிவமைத்திருப்பது பார்பதற்கு வேடிக்கையாக இருக்கு.

நம்ப தமிழ் படத்துறையினர் தான் ஹாலிவுட் படங்களின் போஸ்டர், காட்சிகள், கதைகள், இசை, வசனம் & திரைகதை உத்திகள் போன்றவற்றை காப்பி(?) அடிகிறார்கள் அன்றால் அவர்களுக்குள்ளேயே நம்மை போற்று சுட்டு போடும் உத்திகள் இருக்கத்தான் செய்கிறது.

பட விளம்பரத்திற்கு அடிக்கப்படும் போஸ்டர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், போஸ்டரை பார்த்து படம் பார்க்கும் பலபேரு நம்மில் உண்டு. அவ்வாறு வித்தியாசமான பட போஸ்டரை கொண்ட ஒரு படம் ஹிட் என்றால் அதே போல நாமும் போஸ்டரின் டிசைன் செய்து வெளியிடுவது உண்டு.

அவ்வாறு ஹோலிவூடில் வெளிவந்த சில போஸ்டரை பாருங்கள். நீங்களே அதிலிருக்கும் பொதுவான அம்சங்கள் உங்களுக்கு தெரியவரும்.

1. கையில் துப்பாக்கி (அ ) கத்தி (அ ) கேடையம் எதாவது ஒரு பொருள் வைத்திருப்பது
2. அங்காங்கே தீப்பொறி துகள்கள் தெறித்து விழுகிறது போல
3. இடிந்த சிதறிய துகள்கள்
4. மேகமூட்டம்











அவர்களின் காப்பி எப்படி இருக்கு ?

என்னமோ போங்க இவங்கள் எடுக்கிற படம் நல்லா இருந்தா சரி.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் வேறு ஒரு வித்தியாசமான பதிவுடன். பாய்....ஈஈஈ...eee!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Houke de Kwant



கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ! (Must read)

"Body Art" என்பது மனித உடலை கொண்டு வரையப்படும் உருவம். நீங்கள் கீழே காணும் வடிவங்கள் மனித உடல்களை கொண்டு வரையபட்டது. உற்று காணும் பொது மனித உடல்கள் மிக தெளிவாக தெரியும்.

உடம்பை வில்லாக வளைத்து இந்த கலைநர்கள் எப்படி இந்த வடிவத்தை கொண்டுவந்துள்ளார்கள் என்று சற்று பொறுமையாக யோசித்துபாருங்கள். அவர்களின் உழைப்பு நன்றாக தெரியும்.

ஹுமன் மோட்டார் சைக்கிள் வடிவம்!

கொஞ்சம் ஹாட்!
கொஞ்சம் வியப்பு!
கொஞ்சம் தொழில்நுட்பம் !
எவ்வளவு அடித்தாலும்
அழுவதில்லை
கிரிக்கட் மட்டை!
நிற்க நேரமின்றி
சுத்தித் திரிகிறது
பந்து
பதினஞ்சு பேரைக்
பாதுகாக்கிறது
பவுன்றி லைன்

ஹுமன் பிளமிங்கோ பறவை வடிவம்

ஒன்றை காலில்
ஓர் உருவம் -
இந்த பிளமிங்கோ!
நேரத்தைவிட வேகமாய்
மாறுது
ஸ்கோர்

ஹுமன் கார் வடிவம்

இவற்றிற்கு நடுவில்
வேலையில்லாமல் இருவர்
கைகளை உயத்திக்கொண்டு...

கையிலேயே எத்தனை எத்தனை கலைவண்ணம் !

கையளவு தான்
இதயமாம் . .
அறிவியல் சொல்கிறது!

பின் எப்பபடி
சாத்தியம் ?
ஆறடி நீ
அதற்குள் !

- அன்புடன் நிலா
நீதான் அழகி
என்று கர்வம்
கொள்ளாதே!

உன்னை ஜெயிக்க
பிறப்பாள் நம் மகள்!

- கவிப்பித்தன்
பிரிவின்
சொந்தம்...
"கண்ணீர்த்துளிகள்" - மணிகண்டன் மகாலிங்கம்
காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...
கவிதை!

- மு. மணிமேகலை
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

- வி.நடராஜன்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



600 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் பிரேம் நசீர்


பல தமிழ்ப் படங்களில் நடித்த மலையாள நடிகர் பிரேம் நசீர். மொத்தம் 600 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை படைத்தார். இது அகில உலகிலும் யாரும் செய்யாத சாதனை என்று, "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அறிமுகம்

மலையாளப் பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் நடிகர் பிரேம் நசீர். பிரேம் நசீர் தனது உணர்ச்சி பூர்வ நடிப்பால் ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தவர். தமிழ்ப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் 30 படங்களிலும், 600-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் பிரேம் நசீர் நடித்தார்.

கின்னஸ் சாதனை

600 படங்களில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் என்ற முறையில் பிரேம் நசீர் "கின்னஸ்" சாதனை படைத்தார்.

பிரேம்நசீர், A.K.வேலன் தயாரித்த "தைப்பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானார். S.S.ராஜேந்திரனுடன் பிரேம் நசீர், ராஜசுலோசனா, N.M.ராஜம் நடித்தார்கள். இது 100 நாள் வெற்றிப்படம்.

அந்த படத்தைத் தொடர்ந்து பிரேம்நசீர்- சவுகார் ஜானகி நடித்த "நல்ல இடத்து சம்பந்தம்" பிரேம்நசீர்- பண்டரிபாய் நடித்த "நான் வளர்த்த தங்கை" மற்றும் "பெரிய கோவில்" படங்கள் வெளிவந்தன.

1959, 1960-ம் ஆண்டுகளிலும் பிரேம் நசீர் நான்கு, ஐந்து தமிழ்ப் படங்களில் தோன்றினார். அதில் குறிப்பிடத்தக்கவைகளில் ஒன்று S.S.ராஜேந்திரனுடன் மீண்டும் சேர்ந்து நடித்த "கல்யாணிக்கு கல்யாணம்" என்ற படமாகும்.

மேலும் தேவிகா, பாலாஜியுடன் இணைந்து நடித்த "சகோதரி", நடிகை ராகினிக்கு ஜோடியாக நடித்த "இருமனம் கலந்தால் திருமணம்", நடிகவேள் M.R.ராதாவுடன் நடித்த "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" ஆகிய படங்களும் வெளிவந்தன.


பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மற்றொரு சிறந்த படம் "வண்ணக்கிளி" என்று சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் T.R.சுந்தரம் இந்தப் படத்தை தயாரித்தார். T.R.ரகுநாத் டைரக்ட் செய்தார். பிரேம் நசீருடன் T.R.ராமச்சந்திரன், R.S.மனோகர் மற்றும் P.S.சரோஜா, மைனாவதி, முத்துலட்சுமி, M.சரோஜா, C.S.சரசுவதி ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன்...

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பிரேம் நசீர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்தார். "பாலும் பழமும்", "முரடன் முத்து" ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள்.

1964-க்குப் பிறகு மலையாள பட உலகில் அதிக வாய்ப்புகள் குவிந்ததால் பிரேம் நசீர் தமிழ்ப்பட நடிப்பை குறைத்துக் கொண்டார். சென்னை நகரில் அவர் அதிகம் தங்கி இருப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அரசியல் கட்சி தொடக்கினார்

M.G.R, N.T.ராமராவ் திரை உலகில் இருந்து அரசியலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். அவர்களை பின்பற்றி மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக விளங்கிய பிரேம் நசீரும் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால் கேரளத்து மக்கள் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்த்தார்களே தவிர அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரேம் நசீரின் அரசியல் பிரவேசம் வெற்றி பெறவில்லை.

உடல்நலக் குறைவு - மரணம்

பிரேம் நசீருக்கு 1988-ம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சையால் அவரை காப்பாற்ற இயலாமல் போயிற்று. 16-1-1989 அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். பிரேம் நசீர் உடலுக்கு தமிழ்த்திரை உலக நடிகர்- நடிகைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

சகாப்தம் முடிவு

காங்கிரஸ் தலைவர் A.K.அந்தோணி, மந்திரிகள் பாலகிருஷ்ணன், நீலயோகிதாசன் நாடார், நடிகர் மம்முட்டி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பிரேம் நசீர் உடல் சொந்த ஊரான சிறையின் கீழு என்ற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மலையாள பட உலகின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல்

நடிகர் பிரேம் நசீர் மறைவுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்தியில், "பிரேம் நசீர் திரை உலகில் நீண்ட காலமாக புகழ் பெற்று விளங்கிய சிறந்த நடிகர். மனித உணர்ச்சிகளை நடிப்பின் மூலம் நயம்பட வெளிப்படுத்தியவர். அவர் மறைவினால் தேசம் ஒரு சிறந்த நடிகரை இழந்து விட்டது. நாட்டு மக்கள் தங்கள் இதயம் கவர்ந்த ஒருவரை இழந்துவிட்டார்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் அனுதாப செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

கேரளா திரையுலகினர் இன்றளவும் இவரது படங்களிலிருந்து எதாவது ஒரு தகவலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்

எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம்.
எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம்.

இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், 'இளமை' மனப்பான்மை. அது சரி... என்றும் இளமையாகவே இருக்க முடியுமா?

"யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்" என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

"நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்" அளவீடுகளை மேற்கோள் காட்டி, இளமையை இழுத்துப் பிடிக்க 20 வழிகளைப் பட்டியலிடுகிறார், சென்னை பிங்க் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஊட்டச்சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன்.

  1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவுவேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர்... இப்படி! குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதை மாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம் மேம்பட இது அவசியம்.

  2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.

  3. கார்போஹைட்ரேட் (50%), புரதம் (30%), கொழுப்பு (15%), வைட்டமின்கள், தாது உப்புகள் (5%)  இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

  4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.

  5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.

  6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.

  7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தண்ணீர் குடிக்கலாம்.

  8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். ‘பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும்’ என்பது தவறான கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.

  9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

  10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கொழுப்பு கூடுகிறது இவற்றால்.

  11. தவிர்க்கமுடியாவிட்டால், வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே பெஸ்ட். இரவில் அசைவம் வேண்டாம்.

  12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

  13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.

  14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல் 3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.

  15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.

  16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

  17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

  18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ‘ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்’ மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.

  19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

  20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



வலையில் விழுந்த கவிதைகள்!!!

21-ம் நூற்றாண்டிலும் கண்ணன்கள்
ராதைகளைத் தான் தேடுகின்றனர்
பிருந்தாவனத்தில் அல்ல
பேஸ்புக்கில்...........!!!


உனக்கு என்னை பிடிக்கும் என
உன்னை நான் உணர்ந்தபோது...
உண்மையில்,
என்னையே எனக்கு பிடித்தது!!!



பரமனுக்கு தெரியாதது
பாமரனுக்கு தெரிந்தது...
பசியின் வலி.



இருட்டின் கழுத்தில்
வைர நெக்லஸ்
மின் மினிப் பூச்சிகள்!!!



ஏதேதோ பேசிக்கொண்டு
கண்ணாடி முன் நின்று சரி செய்யும்
ஆடை எல்லாம்
வெட்கப் படுகிறது ...!



கண்கள் செய்த தவம்
விழிகள் பெற்ற வரம்
என் மீது விழுந்த
அவள் பார்வை!!!!



உயிர் பிரியும் கடைசி நேரத்தில்,
ஒவ்வொரு ஜீவனும் நினைக்கும்
நினைவுகள் யாவும், இரகசியமே...!!.



அழகாய் இருக்கிறாய்
தொட்டு பார்க்க தூண்டுவாய்
தொலை தூர வண்ணமே
நான் இங்கு இருக்கிறேன் தினமுமே......!



செடியில் வீற்றிருக்கும்
ரோஜா மலர் போல்
என்னவள்
என் இதயத்தில்
வீற்றிருக்கிறாள்
அதனால் தானோ என்
இதயத்தில்
இத்தனை வலிகள்!!!



உன்னோடு வாழும்
காலம் யாவும்
என்னோடு வாழும்
காதல்.........



இது ஒரு வித்தியாசமான முள்
பிரித்தால் வலிக்கும்
சேர்த்தால் இனிக்கும் .....
காதல்!



வெள்ளை வானத்தில்
கருப்பு நிலவின்
வெளிச்சம்
உன் பார்வை!!!!



காதலின் வெற்றி என்பது...
இருமனங்களின்
புரிதலில் உறுதிப்படுத்துவதே.........


Thanks : Facebook Friends
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



வைரமுத்து - கவிதை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கவிபேரரசு வைரமுத்து. சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றவர்.


நேற்று இரவு இவரது கவிதை தொகுப்பினை படிக்க நேரம் கிடைத்தது. அதில் எனக்கு பிடித்த ஒரு கவிதை உங்கள் பார்வைக்கு...

வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்!

உன் பார்வை
கொஞ்சம்
விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும்!

உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும்!

நீ செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும்!

உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால் என்
தட்டுச் சோறு கிடைக்கும்!

ஒட்டுப்பொட்டை
தவறவிட்டாய்
என் புத்தகம் தேடு
இருக்கும்!

நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்!

நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும்
தலைகள் முளைக்கும்!

நீ அழகிப் போட்டியில்
கலந்துகொண்டால்
அழகே தோற்றுப் போகும்!

நீ முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்!

நீ சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்!

நிலவை நீயும்
கேட்டுக்கொண்டால்
நிதமும் பிறையாய்ப்
போகும்!

உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி!

உன் முகத்தைக்
கூந்தல் மறைத்ததனால்
பகலில் நடுநிசி!

நன்றி : கவிபேரரசு வைரமுத்து

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



தாய்மைக்கு தண்டனை - ஒரு பக்கக் கதை

உலகத்தின் எல்லா சந்தோஷத்தையும் தானே அனுபவிப்பதை போல உணர்ந்தாள் ஆனந்தி.

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் பூரித்துப் போனாள்.

எத்தனை நாள் தவம்!
எத்தனை நாள் கண்ணீர்!
எத்தனை நாள் வேதனை!

இன்று முடிவுக்கு வந்தது. ஆனந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் ஆனந்திக்கும், ரவிக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை விட மலடி என்ற பட்டம் ஆனந்தியை வாட்டி வதைத்தது.

எத்தனை கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடிஎடுத்து வைத்தாளோ, அத்தனை கனவும் கண்ணீரில் கரைந்தன. கணவன் ரவி அன்பானவன் தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் தான். ஆனால், குழந்தை இல்லாத குறையை எத்தனை நாள்தான் அவனும் ஜீரணிப்பது! ரவியும் சில நேரங்களில் ஆனந்தியிடம் முகம் சுளிக்க ஆரம்பித்தான். பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. எல்லாமே வீண்!

ரவியின் அம்மா சாரதா புலம்பித் தள்ளுவாள்: "நேத்து வந்தவளெல்லாம் நெல்லிக்காயும், மாங்காயும் சாப்பிட்டு புள்ளைய பெத்து போடறா!... ம்... இந்த வீட்டுக்கு அந்த கொடுப்பனையே இல்லை..." என்று பெருமூச்சு விடுவாள்.

ஆயுசு முழுக்க ஆனந்தமாய் வாழ வேண்டுமென்றுதான் ஆனந்தி என்று பெயர் வைத் தார்கள். ஆனால், கழுத்தில் தாலியை சுமக்க ஆரம்பித்த நாள் முதல், மனம் வேதனையை சுமக்க ஆரம்பித்தது.

பெண்ணாய் பிறந்த யாரும் தாய்மையை வெறுப்பதில்லை. தாய்மை யாருக்கு வாய்க்குமோ? யாருக்கு வாய்க்காதோ? கடவுளுக்கே வெளிச்சம்! ஆனால் யாரும் கடவுளை குற்றம் சொல்வதில்லையே! ஆண்டுகள் கடந்தாலும் காலங்கள் மாறினாலும், என்ன தான் கம்ப்ïட்டர் யுகத்திலேயே வாழ்ந்தாலும் குழந்தை பேறு இல்லை என்றால் இந்த சமுதாயம் பெண்களைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கும். இது பெண் வர்க்கத்துக்கே உண்டான சாபக்கேடு.

எந்த பெண்ணும் அவ்வளவு சீக்கரம் முடி வெடுக்க முடியாத விஷயம். எந்த பெண்ணும் தன் கணவனைப் பார்த்து கேட்கக் கூடாத வார்த்தை. ஆனந்தி ஒருமுறை தன் கணவனை கேட்டே விட்டாள். "நீங்க வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?"

"பைத்தியமா உனக்கு... குழந்தை வேணுங் கிறது நம்முடைய ஆசை தான். அதுக்காக என்னுடைய மனிதாபிமானத்தை பலி கொடுக்க முடியாது" என்றான்.

பாலைவனத்தில் முளைத்தெழுந்த முல்லை கொடிக்கு அவ்வப்போது பாசமாய் பொழியும் வானமழைபோல், கணவனின் பாச வார்த் தைகளை உணர்ந்தாள். திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கணவன் நல்லவனா, கெட்டவனா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆனந்திக்கு.

நல்லவன் என்று எப்போதெல்லாம் நினைக்கிறாளோ, அப்போதெல்லாம் அதற்கு எதிர்மறையாகத் தான் இருப்பான். அவன் கெட்டவன் என்று ஒதுங்கி நிற்கும் போது, அவனே நெருங்கி வந்து அவளை கெஞ்சலோடு கொஞ்சுவான்.

ஆனந்திக்கு வாழ்க்கையும் கேள்விக்குறி! கணவனும் கேள்விக்குறி!

நடந்ததெல்லாம் போகட்டும். இத்தனை நாள் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தது!

செவிலியர் கொடுத்த தன் குழந்தையை அன்போடு அள்ளி மார்போடு அணைத்தாள். கண்களில் நீர் சுரந்தது. மார்பில் பால் சுரந்தது. கண்ணீர் எப்போதுமே உப்பு கரிக்குமாம். ஆனால், ஆனந்திக்கு தேனாய் இனித்தது.

தன் மடியில் தவழும் இந்த மழலைக்காக ஏங்கிய நாட்கள் எத்தனை!

"என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" - எங்கோ தூரத்தில் ஒலித்த பாடல் வரிகள் எந்த அர்த்தத்துக்காக எழுதப்பட்டதோ தெரியவில்லை. ஆனால், ஆனந்திக்கு புரிந்தது ஒரே அர்த்தம்தான்.


உறவினர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். உறவினர்களையும், அக்கம் பக்க வீட்டுக்காரர்களையும் பார்த்ததும் ஆனந்திக்கு அழுகை தாங்க வில்லை. குரல் உடைந்து அழுதாள்.

"ஏண்டி அழறே! அசடு! எல்லாம் முடிஞ்சி போச்சிடி! உன் கவலைகள் எல்லாம் முடிஞ்சி போச்சு! இன்னிலேர்ந்து நீ ராசாத்தி மாதிரி இருக்கணும். சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் பிள்ளையை பெத்தவடி நீ! எதுக்கும் கவலைப்படாதே!" என்று ஆனந்தியின் மாமியார் பூரிப்பில் ஆறுதல் சொன்னாள்.

"அவர் வரலியா" என்றாள் ஆனந்தி.

"போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டோம். முதலாளிகிட்ட கணக்கு ஏதோ கொடுத் துட்டு வரணுமாம். வர்றேன்னு சொன்னான்" என்றார்கள்.

மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிய, கணவன் வருகைக்காக காத்திருந்தாள் ஆனந்தி! உறவினர்களின் பார்வை நேரம் முடியும் தருணத்தில் வந்தான் ரவி. அவனது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்ததை ஆனந்தி கவனித்தாள்.

"இது என்ன புதுப்பழக்கம்? முதல் முதல் நம்ம குழந்தையை பார்க்க இந்த கோலத்திலேயா வருவது ?" என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ஆனந்தி படுத்திருந்த கட்டிலருகே போடப்பட்டிருந்த தொட் டிலில் படுத்திருந்த குழந்தையை குனிந்து பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"நல்லாருக்கானா நம்ம பையன்... ஏன் உங்க முகத்துல சந்தோஷத்தையே காணோம்...!" என்றாள்.

"நீயும் கறுப்பு, நானும் கறுப்பு. குழந்தை மட்டும் வெள்ளையா இருக்கு... நம்ம வீட்ல உள்ள வங்க யாருடைய முகச்சாயலும் குழந்தைக்கு இல்ல... இதை நான் மட்டும் சொல்லல... வெளியில் பேசிக்கிறாங்க... " அவன் குரலில் குடிகாரர்களுக்கே உரிய குழறல் இருந்தது. ஆனால், உளறல் இல்லை.

இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் அத்தனையையும் மறுபடியும் ஒரே நொடியில் அனுபவித்த மாதிரி இருந்தது ஆனந்திக்கு!

நேற்று வரை அவள் சுமந்த துன்பம் வேறு! இனி அவள் சுமக்கப் போகிற துன்பம் வேறு!


- மின்னூர் மகாதேவன்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!




தாய் மனம் - ஒரு பக்கக் கதை

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு.

`சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்'

உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி.

கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து மணமுடித்து விட்டிருந்தாள் அம்மா.

ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்பதால், இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள். மனைவிகளை அழைத்து வந்து ஒரு நாள் தங்கியிருந்து விருந்து சாப்பிட்டு விட்டு, மருமகன்கள் இருவரும் தங்களது வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டார்கள். மேலும் இரண்டு நாள் தங்கிவிட்டு வருவதாக இவர்கள் கூறிவிட்டனர். குழந்தைகளும் கூடவே இருந்து விட்டார்கள்.

வசந்தி குடும்பம் நடுத்தரமானது. அவள் கணவர் தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டி வரும் நிலை. ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரண்டு வாரிசுகள்.

புவனாவின் குடும்பம் வசதிக்கு பஞ்சமில்லை. இவள் கணவருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம். ஒரு பெண் குழந்தை மட்டும்.

திருவிழாவிற்கென முதலில் வருகை தந்தவள் வசந்தி தான். வந்ததுமே, `இன்னும் புவனா வரலையாம்மா?' எனக்கேட்டு அவள் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவள் தான்..

புவனா குடும்பத்தோடு வந்ததும் நலம் விசாரிப்பதில் தொடங்கி, பழைய நினைவுகளைப்பேசி என பொழுது நன்றாகதான் கழிந்தது. ஆனால், அம்மாவின் பாசத்தில் ஓரவஞ்சனை இருப்பதாக நேற்றிலிருந்து தான் உணர்ந்தாள் வசந்தி.

`புவனா.. நல்லா சாப்பிடும்மா... ரொம்பவும் இளைச்சுப்போயிட்டே?'

`இல்லம்மா.. நார்மலா தான் இருக்கேன்.. ரொம்பநாள் பார்க்காமல் இருந்ததால் உனக்கு அப்படி தெரியுது'

தன்னைக் கேட்கவில்லையே என மனதுக்குள் சஞ்சலமானாள் வசந்தி. அவளைப்புரிந்து கொண்டது போல், `என்னம்மா வசந்தி.. நீயும் கூட இளைச்ச மாதிரி தான் தெரியறே..' எனக்கேட்டாள் அம்மா.

`எனக்கென்ன.. நல்லா தான் இருக்கேன்' என்றாள் வெடுக்கென. `அவள் வசதியாக இருக்கிறாள் என்பதற்காக முதலில் அவளைக் கேட்டு விட்டு, ஒப்புக்கு சப்பாணியாக என்னையும் கேட்கிறாள்' என நினைத்துக் கொண்டாள்..

`இந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க, கொஞ்சம் ஒத்தாசை பண்ணு வசந்தி.

`வேலை செய்ய மட்டும் நான்.. அவளும் வந்து பாத்திரம் கழுவினால் தேய்ஞ்சா போயிடுவாள்' அம்மாவிடம் சொல்ல வாய் எழவில்லை மனப்புழுக்கம் அதிகரித்தது.

இதுபோல சின்னச்சின்ன செய்கைகள் வசந்தி மனதில் புகைச்சலை அதிகப்படுத்தியது.

`வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்ளும் அம்மாவை புரிந்து கொண்டாயிற்று. இனி இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம்... கேட்டால், அவள் எப்போதாவது வருபவள்.. நீ அடிக்கடி வந்து போறவள்னு நியாயம் பேசுவாள்... ஏன் கேட்டு வருத்தப்பட செய்வானேன்...அவளையே கொஞ்சட்டும். நாம் கிளம்புவோம்' என்றெண்ணியவள் தாயிடம் கூறினாள்.

`அம்மா.. இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பறேன்'

`என்ன அவசரம் வசந்தி.. மாப்பிள்ளையே இன்னும் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வாங்கன்னு சொல்லிட்டாரே.. அதுக்குள்ள கிளம்பாட்டி என்ன?'

`அவர் அப்படித்தாம்மா சொல்வாரு.. அங்கே தனியா இருந்து ரொம்பவும் சிரமப்படுவார்.. வீட்ல நான் இல்லைன்னா சரியா சாப்பிடவே மாட்டார்.. போதாதற்கு, தைக்கிறதுக்குனு வாங்கி வச்ச துணிகள் நிறைய சேர்ந்து கிடக்கு.. வர்றேம்மா... புவனா ஊருக்கு கிளம்பும் போது அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போ..'

`இருக்கா.. அம்மா நாளைக்கு கறி எடுக்கிறாங்களாம்.. சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்..'

`இல்ல புவனா.. நீ சாப்பிடு.. நீ சாப்பிட்டா, நான் சாப்பிட்ட மாதிரி' என சிரித்துக்கொண்டே தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடைபெற்றாள் வசந்தி.

வெளித்தோற்றத்தில் தான் சிரித்தாளே தவிர, உள்ளுக்குள் பொருமல் இருந்தது.


``அக்காவை கண்டுக்காமல், அம்மா என்னை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கும்போதே நினைச்சேங்க.. அம்மா எதையோ எதிர்பார்க்கிறாள்னு...'' போனில் கணவனிடம் கூறினாள் புவனா..

`என்ன கேட்டாங்க?'

`முன்ன மாதிரி சமையல் வேலை இல்லையாம்.. கஷ்டமா இருக்குதுன்னு புலம்பினாங்க.. அதனால, வச்சுக்கம்மான்னு சொல்லி ஐயாயிரம் ரூபாயை கையில் குடுத்துட்டு வந்தேன்.. இதுக்கு தான் அக்கா நைசா முதல்நாளே கிளம்பிட்டா போலிருக்கு..'

`பரவாயில்லை விடு புவனா.. அம்மாவுக்கு கொடுக்கிறதுல தப்பில்லை.. உங்கக்கா வீட்டுக்கு போகலையா?'

`நீங்க இல்லாம நான் மட்டும் போனா மரியாதையா இருக்காதுங்க.. அதனால, இன்னொரு நாள் குடும்பத்தோட வர்றேன்னு போன் பண்ணி சொல்லிட்டேன்..'...

இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க' என வசந்தியிடம் கொடுத்தாள் அம்மா.

`ஏதும்மா?'

`நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனா கிட்டே வாங்கினேன் வசந்தி.. உன்னை சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே தானே.. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்மா.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னா தானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதால தான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவள் மனசுல தப்பான எண்ணம் வந்துடக்கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டினேன்.. நீ தான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சு தான் எனக்காக பணம் கேட்டேன்.. தங்கச்சி கிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவக் குறைச்சல் ஆகும் வசந்தி.. ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது..'

தாயை புரிந்து கொண்டவளாக, `என்னை மன்னிச்சுடும்மா.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்' என்றாள் வசந்தி.


இந்த சிறு கதை உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டுபோட்டு உங்கள் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி : S.சுமதி



ஆஹா வட போச்சே ..!!

மரத்தில் வடையுடன் வந்து உட்கார்ந்தது காக்கை. சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டது. தூரத்தில் நரி வருவது தெரிந்தது.

"வா...வா... நரியாரே.. உன்னையும், உன் நரித்தனத்தையும் நான் அறிவேன். நான் புத்திசாலி. எங்களில் சிலபேர் உன்னிடம் ஏமாந்ததுபோல் நான் ஏமாற மாட்டேன்'' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.


நரி மரத்தின் கீழே வந்து நின்று...

"காக்கை நண்பரே, உங்கள் பாடலைக் கேட்டு ரொம்ப நாளாகிறது... பாடுகிறீர்களா'' என்றது. காக்கையும் மனதுக்குள் `இந்த முறை என்னை ஏமாற்ற முடியாது' என்று எண்ணிக் கொண்டு வடையை தன் காலின் கீழ் வைத்துப் பிடித்துக்கொண்டு `கா... கா...' என்று பாடியது.

நரியும், "ஆகா... நீயல்லவோ பாடகன்! இன்னும் கொஞ்சம் பாடு" என்று உசுப்பேற்றியது. காகமும் பாடியது. கொஞ்ச நேரமானதும் நரி, "உன் பக்கத்து மரத்துக்காகம்... அதான் உன்னுடன் அடிக்கடி சண்டை போடுவானே! அவன் பாடிக்கொண்டே டான்சும் ஆடுகிறான். உனக்கு டான்ஸ் தெரியுமோ? தெரியாதோ? இருந்தாலும் அவன் ஆடும் டான்ஸ் ரசிக்கும்படியாக இருக்கிறது" என்றது.

அதைக் கேட்டதும் இந்தக் காகத்துக்கு கோபம் தலைக்கேறியது. "அவனைப் பற்றி என்னிடம் பேசாதே! எனக்கு தெரியாத டான்சா? உனக்கு என் டான்சை பற்றித் தெரியாது. நான் நடனமாடுவதைப் பார்!" என்று நடனம் ஆடத் தன் காலைத் தூக்கியது.

அவ்வளவுதான்... காலின் கீழ் இருந்த வடை தவறி கீழே விழுந்தது. நரியும் பாய்ந்து வடையை கவ்வித் தின்றது. "ஆ... வடையும் பிரமாதம்! உன் டான்சும் பிரமாதம்!" என்று சொல்லிக் கொண்டே ஓடி மறைந்தது.

தன் நிலைக்கு வந்த காகத்துக்குத் தான் ஏமாந்தது தெரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. தான் என்ற கர்வமும், அடுத்தவரிடம் சண்டை போடும் குணமும் நம்மை மேலும் மேலும் அவதிக்கு உள்ளாக்கும், போலிப் பாராட்டுக்கு மதிப்புக் கொடுத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று புரிந்து கொண்டது காகம்.

வஞ்சனையே உருவான நரி போன்றவர்கள் நம்மை ஏமாற்ற எத்தனையோ வழிகளை உருவாக்கிக் கொள்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி: :மாலை மலர்



பாடம் - ஒரு பக்கக் கதை

வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன.

அவதைப் பார்த்த பாலனின் அம்மா,"ஏதுடா இதெல்லாம்" என்று கேட்டார்.


"இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது" என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான்.

தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்.

"இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? நம்ம மானத்தை வாங்கணுமின்னே பிறந்திருக்கான். வாங்குற சம்பளத்துல பாதிய இவனுக்குத்தானே செலவழிக்குறோம். இவனால ஸ்கூல்ல எனக்குத் தான் கெட்டப்பெயர் வரப் போகுது" என்று கோபப்பட்டார் ஆசிரியரான பாலனின் தந்தை.


மறுநாள் பாலனும், அவன் தந்தையும் அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

"என்னங்க, நம்ம தெருவில நடக்குற கோலப் போட்டியில சேர்ந்திருக்கேன். ஸ்கூல் விட்டு வரும்போது ஸ்கூல்ல இருந்து கலர் சாக்பீஸ் டப்பாவ எடுத்துக்கிட்ட வாங்க" என்றார் பாலனின் தாய்.

பாலன் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். அவர் தலைகுனிந்து கொண்டார்.

நன்றி :ஜேம்ஸ்



அன்பே சிவம் - ஒரு பக்கக் கதை

"ரித்தீஷ்... இன்னிக்கு பிரதோஷ நாள். இந்த பாலைக் கொண்டு போய் ஈஸ்வரன் கோயிலில் சுப்ரமணிய அய்யரிடம் கொடு. அவரு நந்திக்கு பாலாபிஷேகம் செய்வார்", என்று அம்மா என்னிடம் பால் தூக்குப் பாத்திரத்தைக் கொடுத்தாள்.


நான் அதை வாங்கிக் கொண்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பஸ் நிலையம். அங்கே பயணிகள் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கையின் கீழே நான்கு நாய்க் குட்டிகள். அதன் தாய் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. குட்டிகள் "க்யோம்..க்யோம்' என்று கத்தியவாறே அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தன. பாவம் பசி போல. எனக்கு பரிதாபமாக இருந்தது.

பால் தூக்கின் மேல் மூடியைத் திறந்தேன். அதை குட்டிகளின் அருகே வைத்தேன். மூடியில் பாலை ஊற்றினேன். முதலில் தயங்கிய குட்டிகள் சற்று தைரியம் வந்து மூடியைச் சுற்றிலும் நின்றுகொண்டு பாலைக் குடிக்க ஆரம்பித்தன.

இதற்குள் குட்டிகளின் தாயும் வந்தது. அது முதலில் என்னை முறைத்துப் பார்த்தது. பின்னர் அதுவும் பாலைக் குடிக்க ஆரம்பித்தது. நான் மிகவும் ஆர்வத்துடன் மொத்தப் பாலையும் நாய்களுக்கு ஊற்றினேன்.

எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்குத் திரும்பினேன். "பாலைக் கொடுத்துட்டியாடா?" என்றாள் அம்மா.

"ஆமாம்மா..." என்று சொல்லிவிட்டு டியூஷன் போவதற்காக பாடப் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.

"சரி... சரி... இந்த நூடுல்ûஸ சாப்பிட்டு டியூஷன் போ" என்றாள் அம்மா.



டியூஷன் முடித்துவிட்டு 8 மணிக்கு வீடு திரும்பினேன். அம்மா கையில் நீண்ட பிரம்பு.

"என்னம்மா..குரங்கு கூட்டம் வந்ததா?" என்றேன்.

ஏனென்றால் எங்கள் திண்டிவனத்தில் குரங்குகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து தொல்லைக் கொடுத்துவிட்டு போகும். அதனால் நீண்ட கழிகளை எப்போதும் வைத்திருப்பார்கள்.

நான் வீட்டுக்குள்ளே நுழைந்து புத்தகப் பையை வைப்பதற்குள்... எதிர்பாராத வகையில் "சுளீர்... சுளீர்..." என்று பிரம்பால் அம்மா என்னை விளாசு விளாசு என விளாசினாள்.

"அஞ்சாவது தான் படிக்கற... 10 வயசு கூட ஆகல்ல. அதுக்குள்ள பொய்யா சொல்றே. நீ பிரதோஷத்துக்கான அபிஷேக பாலைக் கொண்டு போய் கொடுக்கவே இல்லைன்னு சுப்ரமணிய அய்யர் சொன்னாரே... பாலை என்னடா செஞ்சே... வித்துட்டு ஏதாவது வாங்கித் தின்னியா..?"

"இல்லம்மா... பஸ் ஸ்டாண்டில் நாய்க்குட்டிகளுக்கு..."

"என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே... சாமிக்கு வச்சிருந்த பாலை... நாய்க்கு... ஊத்தினியா...? " - மேலும் "சுளீர்... சுளீர்..." என்று விளாசினாள்.

அதற்குள் அப்பா வந்தார். அம்மாவைத் தடுத்தார்.

அம்மா புகார் காண்டம் படித்தாள்.

நான் விசும்பலுடன் உள் அறையில் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருந்தேன். அப்பா சட்டையைக் கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டியவாறே என்னை வாஞ்சையுடன் பார்த்தார்.
"அப்பா நான் செஞ்சது தப்பா...?"

"தப்புதான்.."

"நல்லதுதானேப்பா செஞ்சேன்...!"

"நல்லது தான் செஞ்சே..."

"பின்னே என்னப்பா?"

"பொய் சொன்ன பாரு..அதுதான் தப்பு..." என்றவாறே என்னருகே வந்து காயம்பட்ட என் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

எனக்கு அம்மா அடித்த வலியே தெரியவில்லை.




தலை முடிஉதிர்வை & வழுக்கையை தவிர்க்கும் முறைகள்

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு.

வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:
  • இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உப யோகித்து வந்தால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

  • வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

  • அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

  • சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும்.

  • அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

  • பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும்.
கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.

தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.
நன்றி :தினகரன்



Related Posts with Thumbnails
 
back to top