Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Brick Mansions 2014 - செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள் பட விமர்சனம்

பிரஞ்சு மொழியில் 2004-இல் வெளிவந்த திரில்லர் கம் அதிரடி ஆக்சன் திரைப்படம் 'District B13'. அதன் ஆங்கில மொழி ரீமேக்கில் வெர்சன் தான் 'Brick Mansions 2014'(பிரிக்ஸ் மேன்சன்ஸ்).

இந்த புதிய வெர்சனில் பால் வாக்கர், டேவிட் பெல்லி, ரஸா, கத்தாலினா டெனிஸ், ஆயிஷா இஸ்ஸா & கார்லோ ரோடா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் 'Camille Delamarre'. இந்த படம் தான் 'பால் வாக்கர்' நடித்த கடைசிப்படம். இந்த படத்திற்கு பிறகு தான் விபத்தில் பால் வாக்கர் பலியானார்.

'District B13' படத்தோடு ஒப்பிடும்போது 'Brick Mansions' ஒரு நல்ல படமே! இந்த படம் தமிழில் 'செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்' என டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

படத்தோட கதை என்னனா ...

'பிரிக் மேன்சஸ்' பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.

இந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.


அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பால்வாக்கர் & டேவிட் பெல்லி
படத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம்.

கத்தாலினா டெனிஸ்
டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ரஸா
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் 'Brick Mansions' - ஆக்ரோஷம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



உன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற பொதுக்கருத்துக்கு மீண்டும் வலு சேர்த்திருக்கிறது "உன் சமையல் அறையில்'.

லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் மலையாளத்தில் மெஹா ஹிட்டான "சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழுக்கு ஏற்ப மசாலா சேர்த்துள்ளதால் "தலப்பாகட்டு பிரியாணி' போல வாசம் கமகமக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வாழ்க்கை என்பதே சாப்பிடுவதற்காகத்தான் என நம்பும் பிரகாஷ் ராஜ். 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காமல், பிரம்மச்சாரியாக நண்பர் குமாரவேலுவைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

நண்பரின் பலவித வற்புறுத்தலுக்குப் பின்பு, பெண் பார்க்கப்போகும் இடத்தில் சாப்பிட்ட வடையில் மனதைப் பறிகொடுத்து, பெண்ணுக்குப் பதிலாக சமையல்காரரை (தம்பி ராமையா) கையோடு வீட்டுக்கு அழைத்து வருமளவுக்கு, சாப்பாடுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பிரகாஷ் ராஜுக்கு.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகா, தகுந்த வரன் கிடைக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாக இருக்கிறார். பிரகாஷ் ராஜ், சிநேகாவுக்கு இடையே, ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல் நட்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகிறது. இருவரும் சந்தித்துப் பேச நினைக்கும்போது, வயதானவன் என சிநேகா நினைத்து விடுவாரோ எனத் தயங்கி, தனக்குப் பதிலாக தனது மருமகனை (நவீன்) அனுப்புகிறார் பிரகாஷ் ராஜ்.

அதே போல சிநேகாவும் தனக்குப் பதிலாக தனது அறை நண்பியை (மேக்னா) அனுப்புகிறார். இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொள்ள, பிரகாஷ் ராஜ் - சிநேகா காதல் என்னவானது என்பதை காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து தாளித்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரகாஷ் ராஜ்
வடையை ரசித்து ஆழமாக ருசிக்கும் ஒரு காட்சிபோதும் பிரகாஷ் ராஜின் அபரிமிதமான நடிப்பை விவரிக்க. 45 வயதான ஒருவரின் உளவியலை அப்படியே மனக்கண் முன்பாக நிறுத்துகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் - சிநேகா இடையேயான காதல் காட்சிகளில் இருக்கும் உயிர்ப்பு, நவீன் - மேக்னா காதல் காட்சிகளில் இல்லை.

சிநேகா
படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைவது இவர்களின் காதல் காட்சிகளால்தான். பெண்களுக்குத் திருமணம் தாமதமானாலோ, தடைபட்டாலோ சமூகம் என்ன சொல்லும் என்பதை சிநேகாவின் விம்மி வெடிக்கும் அழுகை உணர்த்துகிறது. வெல்டன் சிநேகா!


இசை இளையராஜா
படத்தில் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில் ராஜாங்கமே நடத்தி இருக்கிறார். நான்கு பாடல்களும் காதுக்கு இனிமையாக அமைந்து "ராஜா ஆல்வேஸ் ராஜா' என்று நிரூபிக்கின்றன. "இந்தப் பொறப்பு தான்' பாடல், உணவு வகைகளின் ருசிகளைச் சொல்லி ரசிக்க வைக்கிறது. "ஈரமாய்' பாடலில் காதல் வழிந்தோடி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. "காற்று வெளியில்' பாடலில் இளையராஜாவின் குரல், கேட்பவர்களை உருக வைக்கிறது.

படத்திற்குப் பெரிய பலம் ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. நம் வீட்டு சமையல் அறைக்குள் வழிமாறி நுழைந்து விட்டோமோ என தடுமாற வைக்கிறது இவரது ஒளிப்பதிவு.

படத்தில் வரும் காட்டுவாசி பாத்திரம்தான் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்குமே...

எப்போதாவது ஒரு தடவைதான் இதுபோன்ற "ஃபீல் குட்' படங்கள் தமிழில் வரும். அந்த வகையில் ஆபாசம், வன்முறை இல்லாமல் வெளிவந்துள்ள "உன் சமையல் அறையில்' நாம் அனைவருமே ஒருமுறை வலம் வரலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'உன் சமையல் அறையில்' - ஃபீல் குட் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



சைவம் (2014) - விமர்சனம்

தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார்.

"சைவம்" முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வேலை நிமித்தமாக வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தங்கள், திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், சந்தோஷமும் கொண்டாட்டமுமாக கலகலப்பாக இருக்கிறது வீடு.

ஒருநாள் கோயிலுக்குச் சென்றிருக்கும் சமயத்தில், குழந்தை சாராவின் பாவாடையில் தீப்பற்றிக் கொள்ள, பதைபதைக்கும் தாத்தா நாசர் தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டைத் தவறவிடுகிறார். அதைப் பார்த்த அர்ச்சகர், "பாவாடையில் தீப்பற்றுவதும், அர்ச்சனைத் தட்டு தவறுவதும் நல்லதல்ல' என்று சொல்லி, "கடவுளுக்கு ஏதோ வேண்டுதல் மிச்சமிருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்றுங்கள்' என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். விபத்தில் இருந்து காத்ததற்காக எல்லைச்சாமிக்கு சேவலொன்றை நேர்ந்து விடுகிறார்கள். ஆனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்துவிடுகிறார்கள். அதை சாராவின் பாட்டி நினைவு படுத்த, அந்த வருட திருவிழாவில் சேவலைப் பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தால் சேவலைக் காணவில்லை. சேவலைத் தேடி வீடு வீடாக, தெருத் தெருவாக அனைவரும் சுற்றுகின்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க, திருவிழா நாளும் வருகிறது. சேவல் கிடைத்ததா? அதைப் பலிகொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்களா? என்பது சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதை

படத்துல எனக்கு பிடித்த சில ....

குழந்தை நட்சத்திரம் சாரா
படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சாராதான். சேவலிடம் அன்பு காட்டுவது, அதைப் பலிகொடுக்க விடாமல் காப்பாற்றப் போராடுவது, தன் அத்தை மகன் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிப்பது, நிதர்சனத்தைப் பெரியவர்களுக்கு உணர்த்துவது என "லவ் யூ சாரா!'

நாசர்
சாராவின் தாத்தாவாக நாசர் வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். சொந்தங்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் கிராமத்து தாத்தாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். நாசரின் மகன் லுத்புதீன் பாஷா இந்தப் படத்தில் நாசருக்குப் பேரனாக அறிமுகமாகியிருக்கிறார்.


சாராவின் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா, அத்தை, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோருமே தங்களுக்குத் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறுவன் ரே பாலின் அட்டகாசங்கள் அதிர வைக்கின்றன. வேலைக்காரராக வரும் ஜார்ஜ், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாலதி இருவரின் நடிப்பும் அட்டகாசம்.

சண்முகராஜனின் வெற்றிலைக் காமெடி, கோழியைத் தேடிச் செல்லும்போது நிகழும் கலாட்டாக்கள் என சிரிப்புச் சரவெடிக்குப் பஞ்சமே இல்லை.

இயக்குநர் விஜய்
அருமையான திரைக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். செண்டிமெண்டான கதையை கலகல காமெடி கலந்து படமாக்கியுள்ளார். ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள். ஆபாச வசனங்கள், குத்துப்பாட்டு, பஞ்ச், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார். சேவலைக் காக்க சாரா படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகாக இருக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில், உத்ரா உன்னிகிருஷ்ணனின் குரலில் "அழகே... அழகே...' பாடல் மனதுக்கு இதமாக அமைவதோடு, வாழ்வின் ரசனையையும் உணர்த்திச் செல்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்ட வீடும், கிராமமும் ஓவியங்களாகத் தெரிகின்றன.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'சைவம்' - குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



Metro (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

மெட்ரோ ரெயில் திட்டம் இன்னும் முழுசா முடியல; அதுக்குள்ள அதுல நடந்த ஊழல் பற்றிய சினிமாவான்னு அதிர்ச்சி அடைஞ்சிடாதீங்க. இது வெளிநாட்டு மெட்ரோ ரெயில் ப்ராஜக்டில் நடந்த ஊழலைப் பற்றி வந்திருக்கும் வெளிநாட்டுப் படம்.

ரஷ்யாவில் சுரங்கப்பாதைக்குள் விபத்தில் சிக்கும் மெட்ரோ ரெயில், அதில் பயணித்த பயணிகளின் நிலை, மீட்பு போராட்டம் என பரபரப்பான காட்சிகளை பதிவு செய்திருக்கும் ஆக்சன் படம் மெட்ரோ.

படத்தோட கதை என்னனா ...

நாயகன் செர்ஜி புஸ்கிபலிஸ் தன் மனைவி ஸ்வெட்லானா கோட்சென்கோவா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் மனைவி ஸ்வெட்லானா தன் காதலன் அனடோலியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஒருநாள் அதிகாலையில் மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு முன் அதன் வழித்தடத்தில் நீர் கசிவதை காண்கிறார் ஒரு பணியாளர். இதை மேலதிகாரிகளிடம் கூறுகிறார். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதை தடுக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று உணர்கிறார் பணியாளர். அதிகாரிகளோ, இவர் குடித்து விட்டு உளறுவதாக கூறுகிறார்கள். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பலதரப்பட்ட மக்கள் செல்லும் மெட்ரோ ரெயில் காலையில் புறப்படுகிறது. அதில் செர்ஜி தன் மகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் அதில் ஸ்வெட்லானாவின் காதலன் அனடோலியும் பயணம் செய்கிறார்.

மெட்ரோ ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் நீர் கசிவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஓட்டுனர். பயத்தில் திடீரென பிரேக் பிடிக்கிறார். இதனால் மெட்ரோ ரெயில் ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகிறது. இதில் பலருக்கு காயமும் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதில் செர்ஜி மற்றும் மகள், அனடோலி மற்றும் சிலர் சிறு காயங்களோடு உயிர் பிழைக்கிறார்கள்.


பிழைத்தவர்கள் சிலர் மெட்ரோ ரெயில் செல்லும் பாதையில் தப்பித்து செல்கிறார்கள். செல்லும் வழியில் நீர் கசிவதால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிர் இழக்கிறார்கள். ஆனால் செர்ஜி, அவருடைய மகள், அனடோலி, மற்றும் ஒரு காதல் ஜோடி மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு மெட்ரோ ரெயிலை விட்டு செல்கிறார்கள். ஒரு பக்கம் நீர் கசிந்து கொண்டே வருகிறது. இவர்கள் செல்லும் வழியில் மெட்ரோ ரெயிலின் ஒரு பாகம் அதிக நீர் வரத்தால் துண்டிக்கப்பட்டு இவர்கள் மேல் மோத வருகிறது. அதிலிருந்து தப்பித்து ஒரு குகைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.

உயிர் பிழைத்தவர்கள் சிலர் அடுத்த ஸ்டேசனுக்கு சென்று விடுகிறார்கள். மேலும் போலீசுக்கு தகவல் கொடுத்து மீட்பு பணிகளை தொடங்க வற்புறுத்துகிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், அதிகமாக நீர் கசிந்து வருவதாலும் மீட்பு பணிகள் செய்ய முடியாமல் போகிறது.

இறுதியில் குகைக்குள் மாட்டியிருக்கும் செர்ஜி, மகள், அனடோலி, மற்றும் அவர்களுடன் இருப்பவர்களை போலீசார் மீட்டார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

செர்ஜி புஸ்கிபலிஸ்
படத்தில் நாயகன் செர்ஜி அளவான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தன் மகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று துடிப்பது, அவள் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்று உருகுவது போன்ற காட்சிகளில் இவரின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. சிறுமியாக வருபவர் அழகாக நடித்திருக்கிறார்.


ஸ்வெட்லானா கோட்சென்கோவா
நாயகி ஸ்வெட்லானா தன் மகள் பற்றி பதறும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ஆண்டன் மெகர்டிச்வ்
பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. மெட்ரோ ரெயில் விபத்தை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள். மெட்ரோ ரெயிலை மட்டுமே வைத்து அதில் காதல், பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்த இயக்குனர் ஆண்டனை பாராட்டலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'மெட்ரோ' - ஆபத்து!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



பப்பாளி (2014) - விமர்சனம்

அரசூர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் + ஏ.ரஞ்ஜீவ்மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பப்பாளி. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன்.

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்திருக்கிறார்கள் .

விஜய் எபிநேசர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். 3

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.கோவிந்த மூர்த்தி. இவர் வெற்றி பெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

படத்தோட கதை என்னனா ...

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் மிர்ச்சி செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம் தன் காதலை சொல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இஷாரா தன் தாய் சரண்யாவிடம் செந்திலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். செந்திலை பார்த்தவுடன் சரண்யாவுக்கு பிடித்துவிட, காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அப்போது செந்தில் தனது லட்சியமான ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதைக்கேட்ட சரண்யா, தன் வாழ்வில் நடந்த கதையை கூறுகிறார்.

'என் கணவர் நரேன் என்னைத் திருமணம் செய்வதற்கு முன் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரின் எதிர்ப்பால் அவரால் அவருடைய லட்சியத்தை அடைய முடியவில்லை.

இன்று வரை அதை நினைத்து அவர் வருத்தப்படுகிறார். என்னால் தான் அவரால் விஞ்ஞானியாக முடியவில்லை என்று நான் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையும் வீணாகிவிடக்கூடாது, உங்கள் லட்சியத்திற்கு என் மகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது’ என்று செந்திலிடம் கூறுகிறார்.

இதைக்கேட்ட செந்தில், உங்கள் பெற்றோர்கள் உங்களை வெறுத்து ஒதுக்கியதால்தான் உங்கள் கணவரால் லட்சியத்தை அடைய முடியவில்லை. உங்கள் பெற்றோர்கள் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் நிச்சயமாக தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன் என்று கூறுகிறார்.

செந்திலின் கருத்தை ஏற்றுக் கொண்ட சரண்யா தன் முடிவை மாற்றிக் கொண்டு, செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிப்பெற ஒத்துழைப்பு தர முடிவு செய்கிறார். அதே சமயம் செந்திலின் தந்தையான இளவரசு, ஓட்டலுக்கு ஆசைப்பட்டு செந்திலை வேறொரு ஓட்டல் முதலாளியின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

இத்திருமணத்தை நிறுத்த வேறு வழியில்லாமல் தன் மகள் இஷாராவுக்கும், செந்திலுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சரண்யா. பின்பு தன் மாப்பிள்ளையை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது கணவர் நரேன் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை இளவரசு தடுக்க முயற்சி செய்கிறார்.

இத்தனை தடைகளையும் கடந்து செந்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மிர்ச்சி செந்தில்
படத்தில் செந்தில் தன் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என நடிப்பை நன்றாக செய்திருக்கிறார். தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்.

இஷாரா
நாயகி இஷாரா, நடுத்தர குடும்பப் பெண்ணாக பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி பெரிய அளவில் நம்மை கவரவில்லை என்றாலும் உறுத்தவும் இல்லை.

சரண்யா பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் அன்னையாக பல படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார். தற்போது அன்னையாக மட்டுமல்லாமல் சிறந்த மாமியாராகவும் வலம் வருவார் என்பதற்கு இப்படம் உதாரணம். படத்தின் பெரும் பகுதியை இவருடைய கதாபாத்திரமே தாங்கிச் செல்கிறது. அதை உணர்ந்து நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். போனில் அவர் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!

சிங்கம்புலி
காமெடி கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் செய்யும் காட்சிகள், காதலையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் வசனங்கள் அருமை.


இளவரசு
நரேன், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். அதிலும் தன மகன் தன்னை எதிர்த்து திருமணம் செய்து, தன கனவை தரைமட்டமாக்கிவிட்டான் என்பது தெரிந்ததும் இளவரசுவின் அட்ராசிட்டி இருக்கிறதே.. சூப்பர்..

இசை - விஜய் எபிநேசர்
விஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். ‘மனைவி வீட்டில் வாழப்போகும் பையா…’ ரீமிக்ஸ் சூப்பர்!

இயக்குனர் கோவிந்த மூர்த்தி
குடும்பக்கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கோவிந்த மூர்த்தி, அதில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு இப்படம் நல்ல ஊக்கமாக இருக்கும்.

இதுவரை ஒருவனின் வெற்றிக்கு அவனது பெற்றோர்களோ, அண்ணனோ, நண்பர்களோ அல்லது மனைவியோ, காதலியோ உதவி செய்வதாக வந்த படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க ஒரு மருமகனின் வெற்றிக்காக ஒட்டுமொத்த மாமனார் குடும்பமும் துணை நிற்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'பப்பாளி' - கசப்பும் இனிப்பும் கலந்த சுவை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



Brick Mansions (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

பிரஞ்சு மொழியில் 2004-இல் வெளிவந்த திரில்லர் கம் அதிரடி ஆக்சன் திரைப்படம் 'District B13'. அதன் ஆங்கில மொழி ரீமேக்கில் வெர்சன் தான் 'Brick Mansions 2014'(பிரிக்ஸ் மேன்சன்ஸ்).

இந்த புதிய வெர்சனில் பால் வாக்கர், டேவிட் பெல்லி, ரஸா, கத்தாலினா டெனிஸ், ஆயிஷா இஸ்ஸா & கார்லோ ரோடா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் 'Camille Delamarre'. இந்த படம் தான் 'பால் வாக்கர்' நடித்த கடைசிப்படம். இந்த படத்திற்கு பிறகு தான் விபத்தில் பால் வாக்கர் பலியானார்.

'District B13' படத்தோடு ஒப்பிடும்போது 'Brick Mansions' ஒரு நல்ல படமே! இந்த படம் தமிழில் 'செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்' என டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

படத்தோட கதை என்னனா ...

'பிரிக் மேன்சஸ்' பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.

இந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.


அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பால்வாக்கர் & டேவிட் பெல்லி
படத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம்.

கத்தாலினா டெனிஸ்
டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ரஸா
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் 'Brick Mansions' - ஆக்ரோஷம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



Enders Game (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

'எண்டர்ஸ் கேம்' 2014-ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை கோவின்ஹூட் எழுதி இயக்கயுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆசா பட்டர்பீல்ட், ஹாரிசன் ஃபோர்டு, ஹைலீ ஸ்டெயின்ஃபீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற்றும் பென் கிங்க்ஸ்லி நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னனா ...

உலகத்தை அழிக்க வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் உலகத்தில் நிறைய உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுகிறது. ஆனாலும் வேற்று கிரகவாசிகளால் உலகத்தை கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் உலகத்தை கைப்பற்ற திரும்பி வருவார்கள் என மனிதர்கள் நம்புகிறார்கள்.

வேற்று கிரகவாசிகள் இங்கு வருவதற்கு முன்னால் நாம் அங்கு சென்று அவர்களை அழித்து விடலாம் என்று பூமியில் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் சிறுவர்களை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.

இதற்காக ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. தேர்வில் எல்லாத் திறமைகளும் கொண்ட எண்டரும் கலந்து கொள்கிறான். அவனை தேர்வு செய்த தேர்வுக்குழு, அவனை ஒரு அணிக்கு தலைவன் ஆக்குகிறது. இதுபோன்ற பல அணிகளை கொண்டு விண்வெளியில் ஒரு போட்டி நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் அணி வேற்று கிரக வாசிகளை அழிக்க தேர்வு செய்யப்படும் என்று தேர்வுக்குழு முடிவெடுக்கிறது.

இந்த போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் மற்றொரு அணியின் தலைவனை எண்டர் தெரியாமல் கொன்று விடுகிறான். இதனால் மன வேதனை அடைந்து இந்தப்போட்டிக்கு தான் தகுதி அற்றவன் என்று நினைத்த எண்டர், உலகத்திற்கு திரும்புகிறான். பயிற்சித் தலைவனான ஐரும், எண்டரை சமாதானம் செய்கிறார். அந்த சமாதானத்தை ஏற்க மறுக்கிறான் எண்டர்.

இறுதியில் எண்டரை பயிற்சி தலைவர் சமாதானம் செய்தாரா? வேற்று கிரக வாசிகளை அழித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

அசே பட்டபில்டு
எண்டராக நடித்திருக்கும் அசே பட்டபில்டு திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.

ஹாரிசன் போர்ட்டு
படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இயக்குனர் கோவின் ஹூட்
படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவின் ஹூட். டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது.

ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'எண்டர்ஸ் கேம்' - அசத்தல் கேம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



வடகறி (2014) விமர்சனம்

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் & சுவாதி நடித்த படம் "வடகறி".

ஒரு சாதாரணமானவனுக்கு ஒரு நாளில் ஒரு சோதனை ஏற்பட்டால் அதிலிருந்துவிடுபட அவன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் வழக்கம் போல எந்த சம்பந்தமும் கிடையாது.

படத்தோட கதை என்னனா ...

சென்னையின் குடிசைப் பகுதியில் தனது அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். இவருக்கு மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்கிறது. சாதாரண செல்போனை வைத்திருக்கும் ஜெய், தனக்கு வேலை கிடைத்துவிட்டதால், முதல் சம்பளத்தில் நல்ல செல்போனாக வாங்கவேண்டும் என்று திட்டம் போடுகிறார்.

முதல் மாத சம்பளத்தை வாங்கி, தனது அண்ணனிடம் கொடுக்கிறார். அவரோ, ஜெய்யிடம் வெறும் ரூ.2000 மட்டுமே கொடுக்கிறார். அதை வைத்து பெரிய போனை வாங்க முடியாது என்பதால் குறைந்த விலையில் ஒரு கொரியன் மொபைலை வாங்கிக் கொள்கிறார்.

அந்த மொபைலுக்கு அழைப்புகள் வரும்போதெல்லாம் அதிக சத்தத்துடன் வருவதால் இவரை சுற்றியுள்ளர்கள் இவர்மீது எரிச்சலடைகின்றனர். அதனால், அந்த போனை எப்படியாவது மாற்றவேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இதற்கிடையில், ஜெய்யின் நண்பன் பாலாஜி குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டுக்கு வரும் சுவாதியை அந்த ஏரியாவில் உள்ள அனைவருமே ஜொள் விடுகின்றனர். ஒருநாள் பாலாஜி வீட்டிற்கு செல்லும் ஜெய்யும், சுவாதியை பார்த்தவுடனேயே காதலில் விழுகிறான்.

ஆனால், அவளுக்கு வேறொரு காதலன் இருக்கிறான், அதனால் அவளது தோழியை காதலிக்குமாறு அறிவுரை கூறுகிறான் பாலாஜி. அதை ஏற்றுக்கொள்ளும் ஜெய், சுவாதியின் தோழியை ரூட் விடுகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கடைக்கு செல்லும் ஜெய், அங்கு விலையுயர்ந்த செல்போன் ஒன்று அனாதையாக இருப்பதை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெய்.


ஒருநாள், சுவாதியின் தோழியிடம் சென்று தனது காதலை சொல்லப்போகும் ஜெய், அவள் மூலமாக சுவாதிக்கு காதலன் இல்லை என்பதை அறிகிறான். உடனே, சுவாதியை காதலிப்பதாக அவளது தோழியிடமே சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். கோபமடைந்த தோழி, சுவாதியிடம் சென்று சண்டை போடுகிறாள். இந்த சண்டையால் வெறுப்படைந்த சுவாதி, தோழியை கடுப்பேத்துவதற்காக ஜெய்யிடம் நெருங்கி பழகுகிறார். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் வருகிறது.

இந்நிலையில் ஜெய் கண்டெடுத்த போனுக்கு ஒரு நபர் போன் செய்து, கொடுத்த சரக்கை எப்ப வந்து ஒப்படைப்பாய்? சீக்கிரம் வந்து கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு கட் செய்துவிடுகிறார். யார் அவர்? என்ன சரக்கு? என்று எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் ஜெய்.

இதற்கிடையில் அவரது அண்ணனின் நேர்மையை அறியும் ஜெய், தானும் அதேபோல் இருக்க நினைக்கிறார். அதனால், அந்த மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது, ஜெய்க்கு ஏற்கெனவே போன் செய்த நபர் மீண்டும் போன் செய்கிறார். அப்போது, அவரிடம் முகவரியைக் கேட்டு, அங்கு சென்று ஒப்படைக்கப்போகும் ஜெய்யை அந்த நபரின் கூட்டாளிகள் அடித்து துவம்சம் செய்கின்றனர்.

அவர்கள் யார்? ஜெய்யை அவர்கள் தாக்க என்ன காரணம்? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஜெய்
வழக்கம்போல் ஜெய் வழக்கம்போல் இப்படத்திலும் தனது அப்பாவி முகத்தை படம் முழுக்க பதிவு செய்திருக்கிறார். எல்லா காட்சிகளுக்கும் ஒரேமாதிரியான ரியாக்ஷனை காட்டி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பார்க்க சற்று குண்டாகி அழகாக இருந்தாலும், நடிப்பில் தேறவில்லை.

சுவாதி
நாயகி சுவாதி அழகாக இருந்தாலும், இவருக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு மிக குறைவாக வழங்கப்பட்டிருப்பது வருத்தமே. நடிக்க அதிக வாய்ப் பில்லாவிட்டாலும் நுட்பமான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கவர்கிறார்.


ஆர்.ஜே. பாலாஜி
படத்தின் தலைப்போடு வரும் ஆர்.ஜே. பாலாஜி எப்.எம்.இல் இருக்கும் ஞாபகத்தில் இப்படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், கேட்கத்தான் முடியவில்லை. எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில், பாலாஜி அடிக்கும் காமெடிக்கு ஜெய், ஜோக்கடிச்சியா? நாளைக்கு சிரிக்கிறேன் என்று சொல்லும் வசனம், இந்த படத்தில் பாலாஜிக்கு சரியாக பொருந்தும்.

இயக்குனர் சரவணராஜன்
டத்தில் நடித்திருக்கும் யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லை. எந்த கதாபாத்திரமும் ரசிகர்களை கவரவில்லை. மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட நினைத்த இயக்குனர் சரவணராஜனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், அதை கதையோட்டத்தில் அழுத்தமாக பதிவு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார். இடையில் வரும் தொய்வுகளை நீக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டிய படம், திரைக்கதையின் வேகத்தடைகளாலும் தர்க்க ரீதியான ஓட்டைகளாலும் தடுமாறுகிறது. உச்சக்காட்சியில் வரும் திருப்பம் செயற்கையாகவே இருக்கிறது.

விவேக் சிவா- மெர்வின் சாலமோன்
விவேக் சிவா- மெர்வின் சாலமோன் ஆகியோர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இதமாக இருக்கிறது.

சன்னி லியோன்
சன்னி லியோன் ஆட்டம் போடும் பாடலும், அந்த பாடலை படமாக்கியவிதம் சரியில்லை. படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இதுவும் திரைக்கதையுடன் ஒட்டவில்லை. செல்போனை வைத்து எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ள விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'வடகறி' - சுவையில்லை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



The Raid 2 (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

தி ரெய்ட் - தமிழில் பல படங்களில் வந்த கதை தான். ஆனால் எடுத்திருக்கும் விதம் தாம் பிரமாண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


‘இதுவரை இப்படி ஒரு வன்முறை பொங்கும் படத்தை பார்த்ததே இல்லை’ என்று பிரபல ஹாலிவுட் விமர்சகர்ளே கதறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தோட கதை என்னனா ...

இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளும் உதவி செய்கின்றன.

தாதா கும்பலை பிடிப்பது சவாலான விஷயம் என கருதும் ராமா, அக்கும்பல் தலைவனின் மகன் உகாக்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான் என்பதறிந்து அவனைக் கொண்டே அக்கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். அதன்படி, உகாக்கின் நம்பிக்கையை பெற குற்றவாளியை போல் சிறைக்குள் நுழைகிறார் ராமா.

இரண்டு வருட சிறை வாசத்திற்கு பின் ராமா, உகாக்கின் நண்பனாக வெளிவந்து தாதா கும்பலில் இணைகிறார். அதில் இருந்தவாறு கொள்ளை கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும், காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளையும் கண்டுபிடித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

இகோ உவேய்ஸ்
சற்றே வளர்ந்த தலைமுடி, கடுகடு பார்வை என இகோவின் தோற்றம் எந்நேரமும் சீறிப்பாய காத்திருக்கும் ஏ.கே. 47 தோட்டா போல துரு துருவென இருக்கிறது. சிறை வளாகத்தில் நடக்கும் சேற்று சண்டை, கார் சேஸ், ரயில் ரணகளம், கிச்சன் கொடுவா கத்திக்குத்து என ஆக்சன் பிரியர்கள் போதும் என்று சொல்லுமளவிற்கு ரத்தக்குழம்பை பரிமாறி இருக்கிறார்கள்.

இகோவிடம் கும்பல் கும்பலாக மல்லுக்கு நிற்பவர்கள் மொத்தமாய் போய் 'காரியம்' செய்யாமல் தனித்தனியே சென்று உதை வாங்குவது ஹீரோயிசத்திற்கு பயன்பட்டாலும், இயல்பில் இருந்து விலகி நிற்கிறது.


அரிபின் புத்ரா
கொள்ளை கும்பல் தலைவனின் மகனாக வரும் உகாக்கும் (அரிபின் புத்ரா) தன் பங்குக்கு சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தன்னிடம் சிக்கும் ஐந்து நபர்களின் கழுத்தினை சிறு கத்தியால் சாவகாசமாக நடமாடிக்கொண்டே அரிபின் புத்ரா அறுத்து தள்ளும் காட்சி வன்முறையின் உச்சம் எனலாம்.

இயக்குனர் கேரேத் இவான்ஸ்
படம் முழுவதும் சண்டை காட்சிகள் தான் நிறைந்துள்ளது. இந்த வருடத்தின் வன்முறை நிறைந்த படமாக இப்படம் காட்சியளிக்கிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேரேத் இவான்ஸ் படத்தின் கதையை உருவாக்கியதுடன் தானே இயக்கம் செய்து முத்திரை பதித்திருக்கிறார். படம் முழுவதும் ஆக்சன் காட்சிகளை வைத்து சண்டை பிரியர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு என சகல துறைகளிலும் ரத்தத்தை சிந்தி உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக இறுதியில் ஜூலி, பேஸ்பால் கொலையாளிடமும், இன்னொரு நபருடன் போடும் கொடுவாக்கத்தி சண்டையும் உச்சக்கட்ட அதிரடி. வெவ்வேறு களத்தில் கடும் சவால்கள் நிறைந்த சண்டைக்காட்சிகளை இருக்கும் வெல்ஷ்மேனுக்கு பலத்த விசில் அடிக்கலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'The Raid 2' - சண்டை களம்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



நண்டு (1981) விமர்சனம்

'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது...!

சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொன்ன படம். எழுத்தாளர் சிவசங்கரியில் நாவலை படமாக எடுத்திருக்கிறார் நம் இயக்குனர் மகேந்திரன்.

வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று!

இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தோட கதை என்னனா ...

கதை லக்னோவில் தொடங்குகிறது. பெரிய இடத்து பையன் ராம். பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல், அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்.

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரிமுத்து சேர்த்து விடுகிறார். சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம்.

ராமை விரும்பும் வீட்டு ஓனர் மகள் மற்றும் சீதா இடையே சீதா ஜெயிகிறாள். கல்யாணம் செய்யபோகும் போது... சீதாவின் அக்கா வீட்டுகாரர் வில்லனாக வர, அதையும் மீறி திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, மாமனார்-மாமியாரை காணும் கனவுடன் ராமுடன் லக்னோ வருகிறாள் சீதா. வந்த இடத்தில் மாமனாரை தவிர மற்றவர் அன்பாக பழக... அங்கிருந்து புறப்பட்டு சென்னை வரும் வழியில் ஆஸ்துமா தொல்லையால் மிகவும் அவதிபடுகிறான் ராம்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன..? சீதா தனது கணவர் குடுப்பத்தோடு இணைந்தாளா என்பது தான் மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இயக்குனர் மகேந்திரன்

சிதாவின் அம்மா, சீதா அக்கா, அவள் கணவன், வீட்டு ஓனர், LIC ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி, வீட்டு ஓனர் மகள், அங்கு இருக்கும் மற்ற பெண்கள், சீதாவின் தோழி, அவள் தகப்பன், என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ), வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்... ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்... அந்த நேரத்தில் அது பேருதவி...

ஓர் ஆணுடன் பேசினால், புரணி பேசுபவர்கள் இருந்தால், ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்... திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்... அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்...

வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும், துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்... இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..


கதைக்கு உயிர்கொடுத்தவர்கள்

செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர், ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது... தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை

கதானாயகன் சுரேஷ்.... நாயகி அஸ்வினி... இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்.

இளையராஜா

ராஜா சார் சும்மா இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த படத்தில். பின்னணி இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். இளையராஜாவின் இசை பல இடங்களில் மனதை வருடுகிறது. எனக்கு பிடித்த பாடல்கள் இதோ ....

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா....

பிறகு,

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள். ஒரு புதிய முயற்சியை அப்போதே செய்து அசத்தியிருக்கார் இயக்குனர்.


பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை... ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்!

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மொத்தத்தில் 'நண்டு' - இனிய பாடல்கள் + நகைச்சுவை என அருமையான பொழுதுபோக்கு படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Pichaikaaran.



Elysium (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

'District 9' என்ற படத்தை இயக்கிய 'Neill Blomkamp' என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் படம் 'Elysium'. இதில் மேட் டேமனும், ஜுடி பாஸ்டரும் நடித்துள்ளார்கள். ஒரு வழிய நேற்று தான் இந்த படம் பார்க்க முடிந்தது.

படத்தோட கதை என்னனா ...

2154 ஆம் வருடம் உலகில் உள்ள வசதி படைத்த மக்கள் எல்லோரும் பூமியை விட்டு சற்று தள்ளி மனிதர்களால் உருவாக்கப்பட்ட "எலிசியம்" என்னும் விண்வெளி தளத்தில் குடியிருக்கிறார்கள். பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடும் இடமாக இருக்கிறது. ஆனால், எலிசியத்திலோ ஆடல், பாடல் கேளிக்கைகள், நீச்சல் குளம் வசதியான வாழ்க்கை, எல்லாவற்றையும் விட எல்லா வகையான நோய், உடல் குறைகள் நீக்கும் உபகரணங்கள் இருப்பதால் இங்குள்ள மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.

பூமியில் இருந்து "எலிசியம்" வரும் மனிதர்களை கொன்றும் சிறை பிடித்தும் அராஜக ஆட்சி செய்கின்றனர். அரசாங்கத்தின் அடிமையாக இருக்கும் நாயகன் மேக்ஸ் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் உயிரை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப் படுகிறான். அவர் உயிர் வாழ 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எலிசியத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திருட்டுத்தனமாக எலிசியதிற்கு விண்கலம் அனுப்பும் ஆட்களின் உதவியுடன் எலிசியம் செல்ல முயல்கிறான். அவனை தடுக்க எலிசியத்தின் செக்ரட்டரி அனுப்பிய அடியாள் ஒருவன் அவனைத் துரத்துகிறான். அவர்களிடம் தப்பித்து எலிசியம் சென்றானா, தன்னையும் பூமியையும் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மேட் டேமன்
ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங்

ஜூடி பாஸ்டர்
மேட் டேமன்-க்கு ஈடு கொடுக்கும் வண்ணம் செம்ம ஆக்டிங். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ்

வேக்னர்
வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம். அவன் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் வாவ்.


நீல் ப்ளோம்கம்
படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன.

இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள்.மேக்சுக்கும் ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் 'Elysium' - ஒரு நல்ல சயன்ஸ் பிச்சன் மூவி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Kovaiaavee.



The Conjuring (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் "தி கான்ஜுரிங்". நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம்.

இதில் பேட்ரிக் வில்சன்,விரபர்மிகா,லிலீ டெய்லர், ஜோய் கிங்,ரோன் லிவிங்ஸ்டன்,ஷேன்லி கேஷ்வெல் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் வான்.

உங்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட பேய் படம்.

படத்தோட கதை என்னனா ...

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக காட்டுக்குள் அமைந்து இருக்கிறது, ஒரு பழைய பங்களா. அதை விலைக்கு வாங்குபவர் தனது மனைவி, மகள்களுடன் அந்த வீட்டுக்கு குடி வருகிறார். அவருடைய நாய் மட்டும் அந்த பங்களாவுக்குள் வர மறுக்கிறது.

பங்களாவுக்குள் ஒரு பாதாள அறை இருக்கிறது. உள்ளே ஒரு பழைய பியானோ உள்பட பல பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மறுநாள் காலை பங்களாவை வாங்கியவரின் மனைவியின் கால்களில் கறுப்பாக ஒரு தழும்பு காணப்படுகிறது. சுவர் கடிகாரங்கள் மூன்று மணி எட்டு நிமிடங்களை காட்டியபடி நின்று இருக்கிறது. வெளியில், அவர்களின் நாய் இறந்து கிடக்கிறது.

அடுத்தநாள் நள்ளிரவில், குழந்தைகளின் படுக்கை அறை கதவை யாரோ பலமாக தட்டுகிறார்கள். ஒரு குழந்தையின் கால்களை யாரோ பிடித்து இழுக்கிறார்கள். இன்னொரு குழந்தை தூக்கத்தில் நடக்கிறது. பயன்படுத்தப்படாத அறை கதவு தானாக திறக்கிறது. வீட்டை வாங்கியவரும், அவருடைய மனைவி–மகள்களும் பீதியாக உணர்கிறார்கள்.

பேய்–பிசாசுகள் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு தம்பதியை அணுகி, உதவி கேட்கிறார்கள். அந்த தம்பதிகள் இருவரும் காட்டு பங்களாவுக்கு வருகிறார்கள். பங்களாவை சுற்றிப்பார்த்துவிட்டு, "இந்த வீட்டில் ஒரு தீய சக்தி இருக்கிறது..." என்று கூறுகிறார்கள். அதை விரட்டுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இருவரும் சேர்ந்து பேயை விரட்டினார்களா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பயமுறுத்தல்கள்
அந்த குடும்பம் காட்டு பங்களா முன்பு வந்து இறங்கியதுமே திகில் ஆரம்பத்து விடுகிறது. குழந்தையின் கையில் இருக்கும் பொம்மைக்குள் ஏதோ ஆபத்து இருப்பதை உணர முடிகிறது. குழந்தையின் கால்களை பிடித்து இழுப்பது, பயன்படுத்தப்படாத அறை கதவு மெதுவாக திறப்பது என இடைவேளை வரை, சின்ன சின்ன பயமுறுத்தல்கள்.

குடும்ப தலைவிக்குள் பேய்
இடைவேளைக்குப்பின், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் அந்த தம்பதிகள் காட்டு பங்களாவுக்குள் வந்ததும், எதிர்பார்ப்பு அதிகமாகி இன்னும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த வீட்டு குடும்ப தலைவிக்குள் பேய் புகுந்து செய்யும் ரகளைகள் இதய துடிப்பை எகிற வைக்கிறது. பெற்ற தாயே பிள்ளைகளை கொல்ல துடிக்கும் காட்சி, மிரட்டலின் உச்சம்.

ஜேம்ஸ் வான்
திரைக்கதையை ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’. இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம்..வேகம்..வேகம். இரண்டு மணி நேரம் எப்படி போனது? என்று தெரியாத அளவுக்கு விறுவிறுப்பு.

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் ‘தி கான்ஜுரிங்’ - வெகு நாளைக்குப் பிறகு ஒரு நல்ல பேய் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றது..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Dailythanthi.



ஜில்லா (2014) விமர்சனம்

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தில் மோகன்லால் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். துப்பாக்கியை அடுத்து விஜய், காஜல் அகர்வால் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

சுரேஷ் சவுத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா. மகத், சூரி, தம்பிராமய்யா, சம்பத், சரண், ரவிமரியா, பிரதீப்ராவத், ஜோமல்லூரி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையில் கவிஞர் வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.டி.நேசன் டைரக்டு செய்கிறார். ஒரு தாதாவின் மகன் எப்படி பொலிஸ் அதிகாரி ஆகிறார் என்பது தான் ஜில்லாவின் கதை.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது.

தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் மோகன்லால் கட்டளையிடும் வேலைகளை செய்து முடிப்பவராக விளங்குகிறார் விஜய். மோகன்லாலுக்கு மஹத், நிவேதா தாமஸ் என இரண்டு பிள்ளைகள்.

மதுரை வீதியில் ஒருநாள் காஜல் அகர்வாலை பார்க்கும் விஜய் அவள்மீது காதல் கொள்கிறார். மஹத், நிவேதா தாமஸிடம் சென்று காஜலின் அழகை வர்ணிக்கிறார். இதனால் அவர்களுக்கு காஜலைப் பார்க்கும் ஆசை துளிர்விடவே, காஜலின் வீட்டுக்கு விஜய்யை கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, அவளை போலீஸ் உடையில் பார்த்ததும், அவள் மீது வெறுப்பு கொள்கிறார் விஜய்.

மறுமுனையில் மதுரைக்கு போலீஸ் கமிஷனராக வரும் பிரதீப் ராவத், விஜய் வீட்டில் இல்லாத சமயத்தில் வந்து மோகன்லாலை கைது செய்து அழைத்துப் போகிறார். அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகாமல் போலீஸ் வண்டியிலேயே 5 மணி நேரம் மதுரையை வலம் வருகிறார். அப்போது மோகன்லாலிடம் ரவுடித்தனத்தை விட்டுவிடுமாறு பிரதீப் ராவத் கூறுகிறார். ஆனால், மோகன்லால் ரவுடிசத்தை விடமுடியாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். இறுதியில், மோகன்லாலை எச்சரித்துவிட்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விடுகிறார்.


இதை அறியும் விஜய், தன் அப்பாவை கைது செய்த பிரதீப் ராவத்தின் கையை வெட்டி விடுகிறார். இருந்தும், தான் கைதான அவமானம் தாங்கமுடியாத மோகன்லால் தன்னுடைய ஆள் ஒருவர் போலீஸ் பணியில் இருந்தால் இதுபோன்று நடக்காது என முடிவெடுத்து, விஜய்யை போலீஸ் பணியில் அமர்த்த முடிவெடுக்கிறார். ஆனால், போலீஸ் என்ற வார்த்தையே பிடிக்காத விஜய் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

மோகன்லாலின் விருப்பத்திற்காக வேண்டா வெறுப்பாக போலீஸ் செலக்ஷனில் கலந்து கொள்கிறார். இருந்தாலும் மோகன்லால், மந்திரியான சம்பத்தின் உதவியால் விஜய்யை கமிஷனராக ஆக்குகிறார். கமிஷனராகும் விஜய், போலீஸ் உடை உடுத்தாமல், சாதாரண உடையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவதாக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் மஹத் தனது அடியாட்களுடன் சென்று ஒரு இடத்தை வாங்குவதற்காக அடி-தடி நடத்தி அந்த இடத்தை துவம்சம் செய்துவிட்டு வருகிறார். இந்த கலவரத்தில் அந்த இடத்தில் இருக்கும் சிலிண்டர்களில் உள்ள வாயு கசிந்து சிலிண்டர்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம், பேருந்து, சாலையில் செல்பவர்கள் என்று அனைவரும் இந்த தீயிற்கு இரையாகின்றனர். அதில், பல குழந்தைகளும் பலியாகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் விஜய் இதற்கு மோகன்லால்தான் காரணம் என்று அவர்மீது கோபப்படுகிறார்.

எனவே, அதுவரை போலீஸ் உடையை போடாத விஜய், அந்த உடையை அணிந்துகொண்டு மோகன்லாலிடம் சென்று இனிமேல் இதுபோன்ற காரியங்களில் இறங்கவேண்டாம் என்று சொல்கிறார். தன்னால் வளர்ந்தவன் இன்று இப்படி தன்னை மிரட்டுகிறானே என்று விஜய் மீது கோபம் கொள்கிறார் மோகன்லால். இறுதியில், உன்னால் முடிந்ததை நீ செய்துகொள். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று சவால் விட்டு இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில், தன் அப்பாவை மாற்றினாரா? அல்லது போலீஸ் வேலையை விட்டுவிட்டு தன் அப்பாவுடன் சேர்ந்தாரா? என்ற மீதிக்கதையை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய் vs மோகன்லால்
விஜய் காமெடி, டான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கெட்டப்பில் இவரை ஏற்கெனவே ரசித்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து படைத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மோகன்லாலும் நடிப்பில் களைகட்டுகிறார். இருவரும் சவால் விடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். மோகன்லால் வில்லனாக மிரட்டுவதிலும், பாசம் காட்டுவதிலும் தனது அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். பாடல் காட்சிகளிலும், போலீஸ் உடையிலும் அழகோ அழகு.

இதர நட்சத்திரங்கள்
சூரி, வித்யூத் ஜம்வால் ஆகியோர் ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கிறார்கள். சம்பத் கதைக்கு ஒரு திருப்புமுனையாக வருகிறார். மந்திரி கெட்டப்பில் வில்லத்தனம் காட்டும் இவருடைய நடிப்பு அபாரம்.

பூர்ணிமா பாக்யராஜ் அம்மா கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். விஜய் தம்பி, தங்கையாக வரும் மஹத், நிவேதா தாமஸ் இருவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் நேசன்
புதுமுக இயக்குனரான நேசன் காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த மசாலாவாக படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.

இசை டி.இமான்
டி.இமான் இசையில் விஜய்-மோகன்லால் அறிமுகமாகும் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அந்த பாடல் படமாக்கிய விதம் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு ஆக்சன் காட்சிகளில் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ‘ஜில்லா’ களைகட்டுகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



கலவரம் (2014) விமர்சனம்

ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே “கலவரம்” ஒரு உண்மை கலவரத்தின் சம்பவத்தை மையமாக கொண்டும், அரசியல் நெரிகளின் உண்மை ரூபங்களையும் கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்று முயற்சியே 'கலவரம்' திரைப்படம்.

S.D.ரமேஷ்செல்வன் இயக்கிய இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோட்றத்தில் சத்யராஜ் ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். மற்றும் அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி, நந்தா, சரவணன், சுஜிபாலா,ராஜ்கபூர், மயில்சாமி, இன்பநிலா, லாவண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனிராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது.

தணிகாலபரணி, தன் ஆதரவு ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோரை அழைத்து, என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார்.

கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.


இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார். இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து அந்த அறிக்கையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.

இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவொருவரும் இவர்களுடன் சேர்கிறார். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார்.

இறுதியில் இவர்களை பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

சத்யராஜ்
போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார்.

இதர நட்சத்திரங்கள்
வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ரவுடிகளை பழிவாங்கும் நினைக்கும் அஜய்ராகவ், அஜய், யாசர், ராகவேந்தர் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை சுரேஷ், கட்டத்துரை எனும் கதாபாத்திரத்தில் மிரளவைக்கிறார்.

இசை பைசல்
படத்தை சந்திரன் ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. 2 பாடல்கள்தான் என்றாலும் பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் பைசல்.

இயக்குனர் ரமேஷ் செல்வன்
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களை திறம்பட வேலையை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் ‘கலவரம்’ கொலைக்களம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.



வீரம் (2014) - விமர்சனம்

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்படி ஒரு கதை பண்ணுங்க என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் சொன்னதையடுத்து, அவர் உருவாக்கிய கதைதான் வீரம்.

காதல், செண்டிமென்ட், காமெடி என ஒரு ஜனரஞ்சகமான கதையை தயார் செய்த டைரக்டர் சிவா, சிறுத்தையைத் தொடர்ந்து தமிழில் இரண்டாவது ஹிட் கொடுத்துள்ளார்.

படத்தோட கதை என்னனா ...

மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ராவத் மார்கெட்டில் இருக்கும் வியாபாரிகளை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறார். அவர்களுக்கு நன்மை செய்யும் விதமாக மார்க்கெட்டில் வரும் பெரும்பாலான டெண்டர்களை அஜீத்தே வளைத்துப் போகிறார். இதனால், அஜீத் மீது வில்லனுக்கு பகை உண்டாகிறது. அவரை பலி வாங்க வில்லன் தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

அஜீத்துக்கு காதல் என்றாலே பிடிக்காது. அவருடைய குடும்ப வக்கீலான சந்தானமும் இவருக்காக தன் காதலையும் துறக்கிறார். இந்நிலையில், அஜீத்தின் தம்பிகள் தன்னுடைய அண்ணனுக்கு தெரியாமலேயே காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் சந்தானத்துக்கு தெரிய வருகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சந்தானத்திடம் கூறும்போது, அவர்களுடைய காதலை சேர்த்து வைப்பதாக சந்தானம் உறுதி கூறுகிறார்.

தனது அண்ணன் அஜீத்தை காதலிக்க வைத்துவிட்டால் நம்முடைய காதலுக்கு அஜீத் பச்சைக்கொடி காட்டி விடுவார் என்ற எண்ணத்தில் அவரை எப்படி காதல் செய்ய வைக்கலாம் என யோசிக்கிறார்கள். அதற்கு அஜீத்தின் பால்ய நண்பரான ரமேஷ் கண்ணாவிடம் சென்று யோசனை கேட்கிறார்கள். ரமேஷ் கண்ணா அதே ஊரில் கலெக்டராக இருக்கிறார். அவர், அஜீத் சிறு வயதில் காதல் செய்ததாகவும், அஜீத் தன்னுடைய குடும்ப ஒற்றுமைக்காக அந்த காதலை உதறி தள்ளிவிட்டதாகவும் கூறுகிறார்.


அந்த பெண் இப்பொழுது வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார். என்றாலும், அஜீத்துக்கு அந்த பெண்ணின் பெயரான கோப்பெருந்தேவி ரொம்பவே பிடிக்கும். அந்த பெயருடைய பெண்ணை அஜீத்துக்கு அறிமுகம் செய்து வைத்தால் காதல் வர வாய்ப்புள்ளது என யோசனை கூறுகிறார். இதற்காக ஒரு தொல்பொருள் துறையில் வேலை செய்யும் தமன்னாவை ஒரு கோயிலில் சந்தானம் மற்றும் அவனது தம்பிகள் பார்க்கிறார்கள். அவளது பெயர் கோப்பெருந்தேவி என்பதை அறியும் அவர்கள், அவளை எப்படியாவது தங்களது வீட்டுக்கு அருகில் தங்க வைத்தால் அஜீத்தை காதல் செய்ய வைத்துவிட்டலாம் என எண்ணுகின்றனர்.

இதனால் ரமேஷ் கண்ணாவின் உதவியுடன் அவளை இவர்களுடைய ஊருக்கு மாற்றம் செய்கின்றனர். அவளும் அஜீத்தின் வீட்டுக்கு அருகிலேயே தங்குகிறார். அடிக்கடி சந்திக்கும் அஜீத்-தமன்னா இருவருக்குள்ளும் நாளடைவில் காதல் வர ஆரம்பிக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி அஜீத்தை திருமணம் செய்துகொள்வதற்காக தமன்னா, அஜீத் மற்றும் அவரது தம்பிகளை அழைத்துக் கொண்டு அவரது ஊருக்கு ரெயிலில் பயணமாகிறார். அப்போது, அங்கு வரும் ஒரு ரவுடிக்கும்பல் அஜீத்தை மற்றும் அவரது தம்பிகளை தாக்குகிறது. அந்த ரவுடிக்கும்பலை அஜீத் தனியொரு ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்கிறார். அதுவரை சாதுவாக இருந்த அஜீத், திடீரென விஸ்வரூபம் எடுத்தது அவரது தம்பிகள், தமன்னா உள்ளிட்ட எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

இறுதியில் அஜீத்தை தாக்க வரும் அடியாள் தவறுதலாக தமன்னாவை தாக்கிவிட, தமன்னா மயக்கமடைகிறார். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கிறார் அஜீத். ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பும் தமன்னா அஜீத்திடம் சொல்லிக்கொள்ளாமல் தனது ஊருக்கு பயணமாகிறாள். இறுதியில் அஜீத் தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பியவர் யார் என்பதை கண்டறிந்தாரா? பிரிந்து சென்ற தனது காதலி தமன்னாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

அஜீத்
அஜீத் நரைத்த தலைமுடி, சற்றே வளர்ந்த தாடி, வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒரு கிராமத்து ஆளாக அப்படியே இருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடிக்கும் அஜீத்தின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி நடிப்பில் மிளிர்கிறார் அஜீத். இவர் கெட்டப்புக்கு கிடைக்கும் வரவேற்பைவிட, இவருடைய வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறது.

குறிப்பாக 'என்ன நான் சொல்றது', 'சந்தோஷம்னா மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும், துக்கம்னா நம்மகிட்டவே வச்சிக்கணும்' என்று இவர் பேசும் வசனங்கள் நான் ஸ்டாப் கைதட்டல்களை வாங்கிச் செல்கிறது. படத்தில் அஜீத் நடந்து வரும் ஸ்டைல், டெண்டர் எடுக்க வரும்போது குடைக்குள் இருந்து வெளியே வரும்போது இவர் மேல் விழும் மழைத்துளி காட்சி என பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை துள்ளி குதித்து ஆட்டம் போட வைக்கிறது.

தமன்னா
சண்டைக் காட்சிகளிலும் சபாஷ் போட வைக்கிறார். தமன்னாவுக்கும் அஜீத்துக்கு நிகரான கதாபாத்திரம்தான். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறது என்பதால் வலுவான கதாபாத்திரம் இவருடையது. நடிப்பிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சந்தானம் vs தம்பி ராமையா
சந்தானம் முதல் பாதிவரை காமெடியுடன் கதையை நகர்த்திச் செல்ல துணை புரிந்திருக்கிறார். பிற்பாதியில், இவருடன் தம்பி ராமையா இணைந்துவிடுகிறார். இவர்கள் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்தை விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

இதர நட்சத்திரங்கள்
விதார்த், பாலா, சுகைல், முனீஷ் ஆகியோர் அஜீத்தின் தம்பிகளாக வருகிறார்கள். அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகளாக எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அப்பாவாக வரும் நாசரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வில்லனாக அவதாரம் எடுக்கும் அதுல் குல்கர்னியும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

இயக்குனர் சிவா
படம் முழுவதும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிவா. யாருக்கும் சாதாரண கதாபாத்திரம் என்று இல்லாமல், படத்தில் நடித்த அனைவருக்குமே வலுவான கதாபாத்திரம் அமைத்து கதையை நகர்த்திய இயக்குனருக்கு மீண்டும் ஒரு சபாஷ் போடலாம்.

இசை தேவி ஸ்ரீபிரசாத்
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. அஜீத்தின் அறிமுகப் பாடல் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் என்பது மட்டும் நிச்சயம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் ‘வீரம்’ - மாவீரம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



Related Posts with Thumbnails
 
back to top