Showing posts with label லிங்குசாமி. Show all posts
Showing posts with label லிங்குசாமி. Show all posts

வேட்டை - விமர்சனம்

தமிழ் சினிமாவின் எவர் கீரின் ஃபார்மூலாவான அண்ணன் - தம்பி ஆல்மாரட்ட ஃபார்மூலாதான் என்றாலும், அதை சொல்லியிருக்கும் விதம் சுவராஸ்யமாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் அமைந்திருக்கும் படமாக இருக்கிறது 'வேட்டை'.

'பையா’ படத்தின் வரவேற்பை தொடர்ந்து, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘வேட்டை’.

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். லிங்குசாமியின் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து இருக்கிறது.


சரி சரி படத்தோட கதை என்ன ....

பயந்தாங்கொள்ளி அண்ணன். ஆக்ரோஷமான தம்பிக்கு இடையிலான பாசமும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுமே கதை... மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பிகள். மாதவனுக்கு சிறுவயதில் இருந்தே பயந்த சுபாவம்.

ஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு ஏற்கிறார். அங்கு இரு தாதா கோஷ்டிகள் கொலை, கள்ளக்கடத்தல் என தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.

போலீசே அவர்களை கண்டு நடுங்குகிறது. ரவுடிகள் கடத்தும் குழந்தையை மீட்கும் பொறுப்பை மாதவனிடம் மேலதிகாரிகள் ஒப்படைக்கின்றனர். அவருக்கு பதில் ஆர்யா ரவுடிகளுடன் மோதி குழந்தையை மீட்டு கொடுக்கிறார்.

மாதவன்தான் மீட்டார் என நினைத்து சக போலீசார் அவரை கொண்டாடுகிறார்கள். கடத்தல் லாரிகளையும் ஆர்யா மடக்கி மாதவனுக்கு புகழ் சேர்க்கிறார். வெறியாகும் வில்லன்கள் மாதவனையும் ஆர்யாவையும் தீர்த்துக்கட்ட வியூகம் வகுக்கின்றனர். அவர்களுக்கு இருவரும் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...

எனக்கு பிடித்த சில....

லிங்குசாமி, மாதவன், ஆர்யா கூட்டணியில் வந்துள்ள வீரியமான கமர்ஷியல் மசாலா. ஆர்யா ஆக்ஷனில் வெளுத்து கட்டுகிறார். முகத்தை மறைத்த தொப்பியுடன் குழந்தை கடத்தல்காரர்கள் ஏரியாவுக்குள் நுழைந்து அடித்து துவம்சம் செய்வது அனல்... ரவுடிகளால் அடிபட்டு குற்றுயிராக கிடக்கும் மாதவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ரவுடி கும்பல் கூட்டத்தில் புகுந்து அவர்கள் அழிவுக்கு கெடு வைத்து திரும்புவது ஆரவாரம்.

மாதவன் `கோழை' போலீஸ் அதிகாரி கெட்டப்பில் கலகலப்பூட்டுகிறார். தம்பியின் சாகசங்களை தான் செய்ததாக நம்ப வைத்து பாராட்டுக்கள் பெற்று பூரிப்பாவது ரகளை. அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும்போது தம்பி ஆர்யாவை தாக்கும் ரவுடிகள் மேல் ஆவேசப்பட்டு விழுந்து தடுமாறி எழுந்து நடக்கையில் பாசத்தை கொட்டுகிறார்.


சமீராரெட்டி, அமலாபால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது உண்டு தவிப்பதும் ரசனையான பதிவுகள்.

அமலாபாலுக்கும் ஆர்யாவுக்குமான காதல் கவித்துவ தொகுப்பு. அமலாபாலை அமெரிக்க மாப்பிள்ளைக்கு சமீரா மணமுடிக்க முயற்சிப்பதும், அந்த மாப்பிள்ளையை ஆர்யா மடக்கி சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்து தானே மணமகனாவதும் குலுங்க வைக்கும் காமெடி. போலீஸ் அதிகாரி மனைவியாக சமீராரெட்டி மிடுக்கு காட்டுகிறார்.


வீட்டில் புகுந்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க போராடும் கிளைமாக்ஸ் பதட்டப்படுத்துகிறது. அமலாபால் கண்களால் வசிகரிக்கிறார். பாடலில் தாராள கவர்ச்சி. நாசர், தம்பிராமையா சிரிக்க வைக்கின்றனர். சகோதர பாசம், காதல், ஆக்ஷன் கலவையில் திரைக்கதையை விறு விறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

அமெரிக்க மாப்பிள்ளை சீன்கள் ஈர்க்க வில்லை. யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை பலமாக இருந்தாலும் பாடல்கள் கவர வில்லை. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

ஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விறுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் லிங்குசாமி. என்றாலும், அவரது பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தலை தூக்குகிறது. குறிப்பாக ரன் படத்தின் பாடல் காட்சிகள் இங்கேயும் எட்டிப்பார்ககின்றன.
வேட்டை - ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்!!!

‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் வைத்து வேட்டை படத்தை முடித்துள்ளார் லிங்குசாமி.


கோலிவூடில் இப்பொழுதெல்லாம் புதிய முறையில் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அதாவது முதலில் படத்தில் உள்ள ஒரு பாட்டை வெளியிட்டு புகழ் கொடி நாட்டப்படுகிறது. அதன்பின்னர் முழுப்பாடல்கள் வெளியீடும் இடம் பெறுகின்றன.

இந்த வரிசையில், கொல வெறி...." பாடல் வெளியிடப்பட்டு மிகப் பிரபலாமாகியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசைஅமைப்பில் இன்னுமொரு பாடல் வெளியிடப்படுகிறது.

நா.முத்துக்குமார் எழுதிய பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் ‘பப்பரப்பா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கமர்சியல் பாடலுக்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் ஒரு பாடல்..... பாடல் வரிகளை சிதைக்காத இசை கோர்வை மிக அருமை. பாடலின் இடை இடையே வரும் அந்த மிர்தங்கம் + கிளாசிக் டச் ..... அட அட.... மிக அருமை!!!

யுவன் ஷங்கர் ராஜா & சூப்பர் சிங்கர் 'ரேணு' இவர்களின் இனிமையான குரல்களில் பாடல் உருவான விதம் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் என்பனவும் பாடலின் வீடியோ இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.



பாடலின் வரிகள் உங்களுக்காக....
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி...
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா...

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்


ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..


ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா...

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போ போ போடா..
வெளிவந்த சில நிமிடங்களில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. நீங்களும் கேட்டு மகிழுங்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top