Showing posts with label தனுஷ். Show all posts
Showing posts with label தனுஷ். Show all posts

மரியான் (2013) - பாடல் விமர்சனம்

மரியான் 2013 இல் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


படத்துல அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு...?

1. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.

2. A.R.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

3. பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

4. சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

5. தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் நடித்துள்ளனர்.

6. ஒரு பாடலுக்கு முதல் முறையாக ஏஆர் ரஹ்மானும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். திரை இசை ரசிகர்களைப் பொறுத்தவரை இது புதிய கூட்டணி மட்டுமல்ல, ஆச்சர்யமான கூட்டணியும்கூட. ஆனால் ரஹ்மானும் யுவனும் ஆரம்பத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர். யுவனின் சரோஜா பட இசையை வெளியிட்டவர் ரஹ்மான் தான்.

7. 'பூ' படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன்.


யார் இந்த பரத்பாலா ...?

காட்சி மொழியின் வழியாக கதை சொல்வதில் வல்லவரான பரத்பாலாவின் வருகை, தமிழ்சினிமாவுக்கு புதுரத்தம் பாய்ச்சும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரஹ்மானின் வந்தே மாதரம், ஜன கன மன, உள்ளிட்ட தனித்த இசை ஆல்பங்களுக்கு காட்சி வடிவம் கொடுத்தற்கு அப்பால் கடந்த 2004 ஆண்டு பரத்பாலா இயக்கிய ‘ஹரிஓம்’ அவரை தனித்த, தரமான சினிமாவின் காதலராக அடையாளம் காட்டியது! இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஒரு வெள்ளைக்கார தேவதைக்கும், அவளுக்கு உண்மையான இந்தியாவின் ஆன்மாவை காட்டும் ஒரு ஆட்டோ டிரைவருக்குமான காதல் உணர்வை சித்தரித்த விதம் தரமான ரசிகர்களை உருகவைத்த ஒன்று!

பரத்பாலா தனது இரண்டாவது முயற்சியாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ், ஆங்கிலம், ஜப்பானியம் ஆகிய மொழிகளில் இயக்க இருந்த ‘19த் ஸ்டெப்’ தற்காலிகாமாக நிறுத்தி வைக்க்பட்ட நிலையில்தான் தனுஷ் நடிக்கும் மரியானைத் தொடங்கினார்.

படத்தோட கதை என்னனா ...

மன உறுதி கொண்ட ஒர்எளிய தமிழ்மீனவன், தன் காதலியைப் பிரிந்து, வெளிநாட்டு மீன்பிடிக்கப்பல் ஒன்றில் வேலைக்குச் செல்கிறான். அவனும் அவனோடு வேலைசெய்யும் சில தமிழ் இளைஞர்களும், உள்நாட்டுபோரில் ஆள்கடத்தி பணம் பறிப்பதை ஒரு நிதிஆதாராமாக செய்துவரும் தென் ஆப்ரிக்க குட்டி நாடு ஒன்றின் போராளி(?) குழுவால் கடத்தப்பட்டு பிணையக் கைதிகளாக நிறுத்து வைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மரியான் வேலைசெய்யும் ஷிப்பிங் நிறுவனம் பிணையத் தொகை எதுவும் தராமல் காலம் தாழ்த்துவதால், பிணையக் கைதிகளில் ஒவ்வொருவராக சுட்டிக்கொள்கிறார்கள். மரியானையும் சாவு நெருக்கும் நேரத்தில் ஒரு நண்பனோடு தம்பிக்கிறான். ஆனால் பின் தொடர்ந்து வரும் போராளிக்குழு இளைஞன் மரியானின் நண்பனை சுட்டுக்கொள்ள மரியான் மட்டும் தப்பிச் செல்கிறான்.

மிகப்பரந்த பாலைவனம், திசைவழி தெரியாத சூன்யம். இவற்றுக்கு மத்தியில் தனது காதலி பனிமலரின் நினைவுகள் மட்டுமே மரியானை வழிநடத்த அவன் தம்பி வந்தானா இல்லையா என்ற ‘சர்வைவல்’ கதைதான் மரியான்.
ம‌ரியான் என்றால் மரணமே இல்லாதவன் என்று பொருளாம். சத்‌ரியனுக்கு சாவில்லை என்பது மாதி‌ரி ம‌ரியானுக்கு மரணமில்லை.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா


பாடியவர்கள் : ஜாவிட் அலி, ஹரிசரண் & நகாஷ் அசிஸ்
பாடலை எழுதியவர் : வாலி

ஜாலியான பாடல். கேட்பவரை துள்ளாட்டம் போட வைக்கிறது. 'சோனாபரியா' என்ற வார்த்தை இந்த பாடலில் எத்தனை முறை வருகிறது என்று ஒரு குவிஸ் போட்டியே வைக்கலாம். எனக்குப் படித்த பாடல்.


2. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே!


பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & ஸ்வேதா மோகன்
பாடலை எழுதியவர் : A.R .ரஹ்மான் & கபிலன்

இது ஒரு மென்மையான காதல் பாடல். பின்னணி இசை மனதை வருடுவது போல இருக்கு. அதுவும் அந்த கடம்....சூப்பர்! கடல் திரைப்படத்தில் வந்த "மூங்கில் தோட்டம்" பாடலை சற்றே நினைவுபடுத்துகிறது.


3. எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு...


பாடியவர்கள் : சக்திஸ்ரீ கோபாலன்
பாடலை எழுதியவர் : குட்டிரேவதி & A.R.ரஹ்மான்

சக்தி ஸ்ரீகோபாலன் என்றவுடன் கடல் திரைப்படத்தில் வந்த "நெஞ்சுக்குள்ள..." பாடல் தான் நினைவுக்கு வருது. இந்த பாடல் அதற்கும் சற்றே குறைவு என்று தான் சொல்லணும். பாடல் வரிகள் மிக அருமை. பெண் பாடலாசிரியர் குட்டிரேவதி-க்கு என் வாழ்த்துக்கள்!!!


4. கடல் ராசா நான் ...
கொம்பன் சுறா வேட்டையாடும் ...


பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடலை எழுதியவர் : தனுஷ்

பெப்பி சாங். யுவன் குரலில் பாடல் ரசிக்கும்படி இருக்கு. நார்மலா யுவன் பாடலில் இருக்கும் ஒரு சோகம் இதில் இல்லை. ரொம்ப ரசித்து பாடியிருக்கார்.


5. நெஞ்சே எழு
நெஞ்சே எழு...


பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : குட்டி ரேவதி

எழுச்சி பாடல். இந்த பாடலை முதலில் கேட்கும் போது செம்மொழிக்காக ரகுமான் இசை அமைத்த பாடலை நினைவுபடுத்துகிறது.


6. நேற்று அவள் இருந்தாள் ...

பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சின்மயி
பாடலை எழுதியவர் : வாலி

ஒரு மெலடி காதல் பாடல். குறைவான இசைக் கருவிகளுடன் ரொம்பவே மெதுவான ஒரு மெலடி. விஜய்பிரகாஷ் நல்லா பாடியிருக்கார். எனக்குப் படித்த பாடல்.


7. I Love my Africa ...

பாடியவர்கள் : A.R.ரஹ்மான்
பாடலை எழுதியவர் : Brian Kabwe & Blaaze

தமிழுக்கு இது போன்ற இசை புதிது. கண்ணை மூடிக் கேட்டால் நாமும் ஆப்பிரிக்காவில் இருப்பதை போன்ற உணர்வு. மேற்கு இந்திய தீவுகளில் கிரிகெட் போட்டி நடக்கும் போது இது போன்ற இசையை கேட்டதுண்டு. அந்த பிறகு பாடலில் அத்தகைய இசையை கேட்டது இந்த பாடலில் தான்.



கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் மரியான் ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சச்சினுக்கு பூஸ்ட் கொடுக்கிறார் தனுஷ்...!

இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெகுவாக தேடப்பட்ட பாடல் என்ற பெருமையை தனுஷ் சச்சினுக்கு பாடிய "பூஸ்ட்" பாடல் தான். கிட்டத்தட்ட அவர் இதற்கு முன்னர் பாடிய "கொலைவெறி" பாடல் போன்றே இந்த பாடலும் மிக இயல்பாக அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கு. அந்த பாடல் உருக்க இருந்த காரணம் இதோ....


சச்சினை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் 'கொலவெறி' புகழ் நடிகர் தனுஷ். சச்சின் 'பிராண்ட் அம்பாசடராக' உள்ள பூஸ்ட்(Boost) நிறுவனம் தான் இந்த ஆல்பத்தைத் தயாரிக்கிறது.

பூஸ்ட் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பிராண்ட் அம்பாசடர் சச்சின். இதைக் கொண்டாடவும், சச்சினின் சாதனைகளைப் பாடவும் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்ட நிறுவனம், அந்த வேலையை தனுஷிடம் ஒப்படைத்துள்ளது.


கிட்டத்தட்ட கொலவெறி பாட்டு மாதிரியே இந்த பூஸ்ட் பாட்டும் அமைந்துள்ளது.

"One plus one two-u two-u, if not Sachin who-u who-u!!!" என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாட்டு. கொலவெறிப் பாட்டுக்கு இசையமைத்த அதே அனிருத்தான் இந்தப் பாடலுக்கும் இசை தந்துள்ளார். நடிகை அனுஷ்காவும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறுகைாயில், "இந்தப் பாட்டை சச்சினுக்கு ஒரு மரியாதையாக, ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் பாட்டு மாதிரி செய்துள்ளோம். ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது," என்றார்.
தனுசின் பேட்டியும் பாடல் ஒளிபதிவு வீடியோ காட்சியும் உங்களுக்காக...



அறிமுக பாடல் வரிகள் இதோ உங்களுக்காக...
Yo boys let’s sing song

Cricket song

Sachin song

One plus one two-u two-u

If not Sachin who-u who-u

28 States clue-u clue-u

Nothing else to prove-u prove-u

Hey you are our pride-u

Roller coaster ride-u

Every place

Hey hit-u maama..super maama

Hey come on maama

Hit-u maama

Super maama

One day test..t 20

Entertainment guarantee

89 your entry

Bringing honor to our country

Hey every bowler-u beer-u beer-u

Darling of the mass

Little master

Master blaster

You are our boost-u

தனுஷுக்கு ரொம்ப பிடித்த பாடல் வரி "டார்லிக் ஆப் தி மாஸ்".

அறிமுக பாடல் வெளிவந்த சில மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் அதனை கேட்டு, பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலும் நிச்சயம் தனுஷுக்கு ஒரு நல்ல பெயரை உலக அளவில் வாங்கி தரும் என்பதில் ஐயமில்லை.

Thanks : Dinamalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



'கொலைவெறி' பாடல் புதிய சாதனை!

எங்கு பார்த்தாலும் கொலைவெறியாகத்தான் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்காத காதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவிப் போய்க் கிடக்கிறது.

தங்கிலிஷ் என்று சொல்லப்படுகின்ற தமிழ் கலந்த ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

கூகுளே சர்ச்-இல் அதிகம் தேடப்பட்ட வீடியோ/பாடல் என்ற பெருமையை அனிருத் ரவிசந்தர் இசையில் தேசிய விருது பற்ற நடிகர் தனுஷ் பாடிய 'why this கொலைவெறி டி' பாடல் தட்டிசென்றுள்ளது. இது அவரது மனைவியும் சூப்பர் ஸ்டார்ட் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கிய '3' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹீரோயினாக நடித்திருப்பது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. தனுஷ் மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார்.


அந்த பாடலை கேட்டு மகிழ ....

Why This Kolaveri Di - Dhanush


குவியும் விருதுகளும் சிறப்புகளும்


YouTube-இல் அதிக பேர் தேடிய பாடலுக்கான முதல் பரிசான 'தங்க மெடலை' தட்டிசென்றுள்ளது இந்த 'கொலைவெறி' பாடல்.



இந்த பாடல் புகழ் பெற என்ன காரணம்...?


  • சோனி நிறுவனத்தில் அதிகபடியான தொழில்முறை மார்க்கெட்டிங் உத்தியுடன் வெளிவந்த படப்பாடல். உலகஅளவில் வாசகர்கள் அதிகம் வந்து செல்லும் குறிப்பாக Facebook, Twitter போன்ற வலைதலகளில் இந்த படப்பாடலை ஒளிபரப்பியது.

  • அதிகாரப் பூர்வ பாடல் அறிவிப்பு தினத்தில் அதிகபேர் தேடிய பாடல் இது.

  • ஒரே வாரத்தில், 6 கோடி பேர் YouTube-இல் தேடிய வீடியோ பாடல் இது.

  • ஒரே வாரத்தில், Facebook-இல் அதிக பேர் பங்கிட்டுக்கொண்ட (10 millian shared) தகவல் இது தான்.

  • நேசனல் மியூசிக் சேனல் MIV India-இல் முதல் முறையாக இடம்பெற்ற தமிழ் பாடல் இது தான். இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த அசுர வெற்றியைக் கண்டு எம்.டி.வி. இந்தப் பாடலை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது.

  • புகழ் பெற்ற கைபேசி நிறுவனம் 'டெக்சோன்(TechZone)' புள்ளிவிவரப்படி அதிகபேர் தரவிறக்கம் (download) செய்த பாடல் என்ற பெருமையும் சேருகிறது.

  • பிரபல இந்திய நடிகர் அமிர்த்தாபட்சன் தனது Twitter வலைதளத்தில் இந்த பாடல் பற்றி தனது கருத்தினை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
    “Just heard #Kolaveri after much talk on it ... it's so original and catchy...congrats Dhanush and Aishwarya (Rajni's daughter) .. love(sic)”

  • தங்கிலீஷ் வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட இந்த பாடலை பல மொழிகளில் பாடி அவரவர் விருப்பதிற்கேற்ப எழுதியும் பாடியும் இணையத்தில் உலாவிடிருப்பதும் இதற்கு கிடைத்த வெற்றியே!.

  • பிற நாட்டுவார்கள் இந்த பாடல் மூலம் தமிழ் பாடல்களை கேட்ட துவங்கியுள்ளதை மறுக்கமுடியாது. மேலும், 'கொலைவெறி' என்றால் என்ன என்று கூகுளே-இல் அதிகள் பேர் தேடியுள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.


"ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன" என்று தனது பிளாக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் அமிதாப்!.

டிஷும் டிஷும்..

நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு இன்னொரு பெருமையும் சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அது ரஜினிகாந்த் இந்தப் பாடலில் தோன்றலாம் என்ற செய்தி.

ஒரு தமிழனின் பாடலுக்கு இவளவு பெயர், புகழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே!. ஆனால் இது தமிழ் பாடலா என்ற கேள்வி தான் என்முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வெறியின் மூலம் இனி தமிழ் மெல்ல விரைவில் சாகும். வளர்க தமிழனின் புகழ் வான்வரை!!!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



தனுஷின் '3' பட பாடல் 'Why this kolaveri...'

நடிகர் தனுஷின் புதிய படத்தின் பெயர் மூணு '3'. அதில் அவர் எழுதி பாடிய ஒரு பாடல் வெளிவந்துள்ளது.


முதல் முறை கேட்டபோதே மனசுக்கு மிக அருகில் வந்து உக்கார்ந்துகொண்டது. தேவையான இசை.... பாடலின் நடு நடுவே பேசிய படி தனுஷின் குரலில் ஒலிக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.



பாடல் வரிகள் கீழே ஆங்கிலத்தில்....
Oh boys...I am singing song
Soup song...
Flop song...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri..... di

Distance la moon-u moon-u
Moon-u color-u white-u
White background night-u nigth-u
Night-u color-u black-u

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

White skin girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes eyes meet-u meet-u
My future dark

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Maama notes eduthuko
Apdiye kaila saxss eduthuko

Super maama ready
Ready 1 2 3 4

Wat a change over maama

Ok maama now tune change

Hmmmmmmmmm
Kaila glass
Only english..

Hand la glass
Glass la scotch
Eyes fulla tear-u

Empty life
Girl come
Life reverse gear-u

Lovu lovu
Oh my love
You show to me pov

Cow cow holy cow
I want u here now
God i m dying now
She is happy how

This song pass to boys
We dont have choice...

Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Flop song...

அந்த பாடலை mp3 வடிவில் தரவிறக்கம் (download) செய்ய இங்கே தொடுக.

பாடல் இடம் பெற்ற படம் : 3
பாடலை எழுதியவர் : நடிகர் தனுஷ்
இசை அமைத்தவர் : அனிருத்
பாடலை பாடியவர் : நடிகர் தனுஷ்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



வேங்கை - விமர்சனம்

"சிங்கம்" படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு இயக்குனர் ஹரியும், தேசிய விருது பெற்று தந்த ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ்சும் முதன் முதல் இணைந்து வெளிவரும் படம் வேங்கை. தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.


படத்தோட கதை என்னானா...

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பாமரக்குலம் என்னும் கிராமத்தில் கதை துவங்குகிறது. ராஜ் கிரண் அந்த பகுதியில் வாழும் பெரும் புள்ளி. அவரது மகனாக வருகிறார் தனுஷ்.

ராஜ் கிரணுக்கும், ராஜ் கிரண் ஆதரவில் MLA ஆகும் பிரகாஷ்ராஜுக்கும் ஒரு புதிய இரயில் நிலையம் கட்ட வேண்டும் என்ற பிரச்சனையில் கருத்து வேறுபாடு துவங்குகிறது. ராஜ்கிரனின் ஆதரவால் MLA ஆனதால் தன்னால் எதையும் பேச முடியவில்லை என கோபமடையும் பிரகாஷ்ராஜ், ரயில் போகும் பாலத்தில் குண்டு வைக்கிறார்.

அந்த பழியை தூக்கி பக்கத்துக்கு கிராமத்தின் மீது போட்டு இரு கிராமத்திற்கும் கலவரம் உண்டாக்க முனைகிறார் , இந்த குண்டு வெடிப்பிலிருந்து இரயிலையும், அதிலுள்ள பயணிகளையும், பத்திரமாக காப்பாற்றுகிறார் தனுஷ். அது மட்டுமில்லாமல், அந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து ஒப்படைகிறார்.

இந்த பகைக்கு பழி வாங்கும் முயற்சியாக, தனுஷை போட்டுத் தள்ள முயல்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால், அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும் பிகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள்.

இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தன் பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார் ஹரி.


எனக்கு பிடித்த சில...

தனுஷ் - செல்வம் என்ற பாத்திரத்தில் முதல் பாதி வழக்கமான வேலை வெட்டியில்லாமல் சுற்றி வம்பை விலைக்கு வாங்கும் இளைஞன். இரண்டாவது பாதி சவால் + ஆக்ஷன் மசாலாவில் வேங்கையாக சீறுகிறார்.

தமன்னா - ஒன்றும் பெரிய ரோல் இல்லை. பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் சோகமாகவே இருக்கிறார்.

கஞ்சா கருப்பு - சைக்கிளுக்கு ஹான்டில்பார் பென்டு எடுக்கும் காட்சிகள் அருவருக்க வைக்கிறது.


ராஜ்கிரண் - நன்றாக நடித்திருக்கிறார். படத்துல சும்மா ஜம்முனு இருக்கார். ஒரே மாதிரி கதாபாத்திரத்தில் இன்னும் எத்தனை படம் நடிப்பர்னு தெரியல.

பிரகாஷ் ராஜ் - புதியதாக எதுவும் இல்லை. டம்மி வில்லன். செருப்பால் போட்டோவில் இருக்கும் அவரை அடிக்கும் காட்சி - மிக பெரிய கைதட்டல். பருப்புல ஒசந்தது முந்திரி, பதவில ஒசந்தது மந்திரி என்று பிரகாஷ் ராஜ் பேசும் சீரியஸ் வசனங்கள் காமெடியாக இருக்கிறது.

தேவி ஸ்ரீ தேவி - ரெடிமேட் பின்னணி இசை. புதுசா ஏதாவது யோசிக்க கூடாதா ? படத்தை போலவே இசையும் ஒரே மாதிரி. முடியல...

V.T.விஜயன் ஹரிக்கு இன்னொரு வலது கரம். காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடிவது இவரது வேகமான 'கட்'களால் தான்!

வெற்றியின் காமிரா கலக்கல். 'க்ளைமாக்ஸ் ஃபைட்' கண்டிப்பாக ஆக்சன் விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும்.

ஹரி - சில காட்சிகள் அவரது முந்தைய படங்களை நினைவூட்டுவதை அவர் கொஞ்சம் தவிர்க்கலாம். ஒரே மாதிரியான திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது.
படத்தின் பலம் படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதுதான். அதே அருவாள் + டாடா சுமோ + வெள்ளைவேட்டி + வெள்ளை சட்டை என்று நாம் ஏற்கவனே பார்த்த விசயங்களாக இருந்தாலும் அலுப்புதட்டவில்லை.

குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை இந்தப் படம் தருகிறது.


வேங்கை - வழக்கமான கமர்சியல் படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!




சீடன் - விமர்சனம்

திருடா திருடி கூட்டணியான சுப்பிரமணிய சிவா + தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் தினாவின் (50th) மற்றுமொரு படம் 'சீடன்'.


படத்தோட கதை என்னானா...

பழனியில் வசிக்கும் பெரிய பணக்கார வீட்டில் தங்கம் (சுஹாசினி) வேலைக்காரியாக இருக்கும் மஹாலக்ஷ்மி (அனன்யா) ஒரு முருக பக்தை. ஆனால், அவர் பழனி முருகனை ஒரு முறை கூட தரிசித்ததில்லை. கனவில் ஒருவனை மணப்பது போல கனவு காண, அந்த அவனே (கிருஷ்ணா) நேரில் வருகிறான். அவ்வீட்டின் எஜமானியின் பேரன் கிருஷ்ணாவை கண்டதும் காதல் தொற்றிக்கொள்ள உருவாகிறது பிரச்சினை.

அந்தப் பிரச்சினைகளில் இருந்து காக்கும் வேடத்தில் நம் தனுஷ் - சமையல்காரராக வருகிறார். உண்மையான காதலை புரிந்து கொண்ட அவர் எப்படி அவர்களது காதலை சேர்த்து வைக்க பாடு படுகிறார். இறுதியில் இவர்களை எப்படி ஒன்று சேர்க்கிறார் என்பது தான் மீதிக் கதை.


எனக்கு பிடித்த சில...

முதல் பாதியில் ஒரே பாடல் மாயம். 5 TV சீரியலை மொத்தமா பார்த்தா வரும் கண்ணீரை ஒரு மணி நேரத்தில் வரவைத்த புண்ணியம் இயக்குனரை சேரும்.

இரண்டாம் பாதியில் தனுஷ் வந்த பிறகாவது படம் சூடு பிடிக்கும்னு பார்த்த நமக்கு தான் கிறுக்கு பிடிக்குது. எப்படா படம் முடின்னு தோனுச்சு அடிகடி. என்னுடன் படம் பார்த்த 47 பேரில் 12 பேரு இடைவேளையில் கிளம்பிவிட்டர்கள். மீதி பெரும் பொறுமையா இருக்க காரணம் நம்ப தனுஷ் - வந்து படத்த ஓட்டுவாருனு பார்த்தா... ஊகும் நகரவே படம் இல்லை.

ரொம்ப ரசித்த காட்சிகள்

முன் பனிக்காலம் பாடல் + டைட்டில் போடறப்ப வரும் இனிய மெலோடி மியூசிக்கும் + ஓவியம் டிசைன் + தனுஷ் மயில் தோகை மூலம் செய்யும் அந்த டிசைன்

கௌரவ வேடம் ஏற்ற தனுஷை பாராட்ட வேண்டும். இடைவெளிக்கு முத்தின காட்சியில் வந்து இடைவேளை கார்டு போடுகிறார்கள். அவர் பேசும் வசனக்கள் சுருக். நறுக். ஆனால் அவரை பழனி மலை முருக கடவுளாகி பார்த்த அந்த இயக்குனரை என்ன சொல்ல? ! முடியல... வலிக்குது.

அனன்யா நன்றாகவே நடித்திருக்கிறார். படம் முழுவதும் வரும் வலுவான அழுத கேரக்டரை அனாயசமாகத் தாங்குகிறார். தோற்றத்திலும் இளைத்து இருப்பது ஆச்சரியமான மாறுதல்.


மயில்சாமியின் செல்ஃபோனை திருடி வாயில் வைத்துகொண்டு விவேக் பாடு படும் சீன் மட்டும் தான் படத்தில் உள்ள ஒரே ஒரு காமெடி. இன்னும் சில இருக்கு. ரசிக்க தான் முடியல. விவேக்கு காமெடி பஞ்சம் வந்துவிட்டதோ?

மனதில் நின்ற / பிடித்த சில வசனம்

இனி உன் சோகம் எல்லாம் என்னுடையது.. என் சந்தோஷம் எல்லாம் உன்னுடையது.

சமையல்ல இருக்கற மகத்துவத்தைக்கண்டு பிடிச்சுட்டா உணவே மருந்துதான்.

பெரிய வாழ்க்கையைக் கொடுக்கறதுக்கு முன்னே கடவுள் பெரிய கஷ்டத்தை கொடுப்பாரு.

வெந்த சோற்றைப்பதம் பார்க்கத்தெரியாத வயசுல எங்கம்மா அப்பாவுக்கு கொள்ளி வெச்சேன்

குறை இல்லாத மனுஷன் ஏது? ஓட்டை இல்லாத ஜட்டி ஏது?

சுஹாசினி மணிரத்னம், ஷீலா, இளவரசன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சொல்லி கொள்ளும்படி யாருடைய நடிப்பும் இல்ல. எல்லாமே நாடகம் பார்ப்பது போலதான் இருக்கு.

சீடன் - படு மொக்கை படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top