Showing posts with label அனிருத். Show all posts
Showing posts with label அனிருத். Show all posts

வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



டேவிட் (2013) - விமர்சனம்

விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் "டேவிட்". பட‌த்தை ‌பிஜா‌ய் ந‌ம்‌பியா‌ர் இய‌க்‌கியு‌ள்ளா‌ர்.

விக்ரம், ஜீவா இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். தமிழ் படங்களில் பல கதாநாயகர்கள் இணைந்து நடித்து வருவது வரவேற்கத்தக்கது. படத்தோட எதிர்பார்ப்பு மிக அதிகமா இருந்தது. படத்த பார்த்த பின்னாடி .... வெயிட் ... வெயிட்!


படத்தோட கதை என்னனா ...

ஒரே பெயர் கொண்ட இரண்டு பேருடைய வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் டேவிட் படத்தின் கதை.

1999-ம் ஆண்டு மும்பையில் கித்தாரிஸ்டாக இருக்கும் ஜீவா, தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது வெளிநாடு டூர் சென்று தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றி வருகிறார். அவருடைய அன்பான அப்பாவாக நாசர். இவர் எப்போதும் ஏசுவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்.

இவர் எல்லோரையும் மதம் மாற்றுகிறார் என்று உள்ளூர் எம்.எல்.ஏ., தனது சுயவிளம்பரத்துக்காக, தன்னுடைய ஆட்களுடன் வந்து நாசரை அடித்து துவம்சம் செய்கிறார். தனது, தந்தையை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க துடிக்கும் ஜீவா, தனது லட்சியத்தில் வெற்றியடைந்தாரா? அல்லது அவர்களை பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை


இன்னொரு பக்கம், 2010-ம் ஆண்டு கோவாவில் மீனவனாக வருகிறார் விக்ரம். தன்னுடைய மனைவி வேறொருவனிடம் ஓடிவிட்டாள் என்ற ஏக்கத்தில் முழுநேர குடிகாரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, புத்திமதி சொல்லும் பெண் தோழியாக தபு.

அந்த ஊரில் பெரிய செல்வந்தரின் மகளான இஷா ஷெர்வானியை பார்த்தவுடனேயே இவருக்குள் ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அவளை தன்னுடைய நண்பன் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் சேதி பின்னர் தெரிய வருகிறது. இருந்தும், அவளை திருமணம் முடிக்கவேண்டும் என்று முழு முயற்சியில் இறங்குகிறார். இறுதியில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

பாத்திரப்படைப்புகள்

1. ஜீவா
மும்பையில் கித்தாரிஸ்டாக வரும் ஜீவா படு ஸ்மார்ட். சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆனால், எந்நேரமும் வில்லன்களிடம் சென்று சண்டை போட்டு, இவர் அடிவாங்கி வருவது சலிப்பையே ஏற்படுத்துகிறது.

ஜீவாவுக்கு எப்படியாச்சும் ஒரு ஹிட் கொடுத்திட முடியாதாங்கிற ஏக்கத்துல கண்ட கண்ட கதைங்கள நடிச்சு இன்னும் பாதாளத்துக்கு போறாரு. ரொம்ப மோசம்.

2. விக்ரம்
கோவாவில் மீனவனாக வரும் விக்ரம், சதா எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்கிறார். டாஸ்மாக் கடைக்கு விளம்பர தூதரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், முந்தைய படங்களைவிட இப்படத்தில் கொஞ்சம் இளமையாக இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் வேறு. அடுத்தவன் காதலிக்கு ரூட் விடும் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? என்று தெரியவில்லை. விக்ரம்க்கு வயசு ஆகிடிச்சு. கதை தேர்வுல ரொம்பவே கோட்டை விடுறாரு.

3. லாராதத்தா
கணவனை இழந்து, குழந்தையுடன் வசிக்கும் பெண்ணாக லாராதத்தா. அழகு பதுமையாய் காட்சியளிக்கும் இவர், தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

4. இஷா ஷெர்வானி
அழகாய் ஜொலிக்கிறார். இவரது கண்களே நிறைய வார்த்தைகள் பேசுகிறது. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு. ஆனால், இவரது கதாபாத்திரத்தை படத்தில் ஊமையாக்கிவிட்டதுதான் வருத்தத்தை அளிக்கிறது.


5. இயக்குனர் பிஜாய் நம்பியார்
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்ற சற்று தடுமாறியிருக்கிறார். இரண்டு வெவ்வேறான காலகட்டங்களில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் கிளைமாக்ஸில் இணைத்து கதைக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் மட்டும் இயக்குனர் பளிச்சிடுகிறார். மற்றபடி, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். ஜீவாவின் கதாபாத்திரம் மும்பையில் வாழ்வதாக இருந்தாலும், அக்காவம், தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.

ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாது. அதுக்காக ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது, பரவாஇல்லை படத்தின் மேகிங் நல்ல இருக்கு. விக்ரம், ஜீவா என இரண்டு பெரும் ஹீரோக்கள் கிடைத்தும், இயக்குநர் பிஜாய் நம்பியார் தரமான தமிழ்படம் எடுக்க முன்வராதது வருத்தம்! காட்சிகளில் வலிமை இல்லை, வசனங்களில் வலிமை இல்லை.


6. இசையமைப்பாளர்கள்
அனிருத், பிரசாந்த் பிள்ளை, மார்டன் மாபியா, மாட்டி பென்னி, ரெமோ என அரை டஜன் இசையமைப்பாளர்கள் தனித்தனி ட்யூனில் இசையமைத்திருப்பது டேவிட் படத்தை ஏதோ துண்டு துண்டு விளம்பர படங்களை சேர்த்து பார்த்த திருப்தியையே தருகிறது.

7. ஒளிப்பதிவு
படத்தோட பெரிய பலம் ரத்னவேலு, வினோத் ஆகியோரின் ஒளிப்பதிவுதான். இருவரும் இப்படத்திற்காக ரொம்பவும் உழைத்திருக்கிறார்கள். கண்ணில் ஒற்றிக் கொள்கிற ஒளிப்பதிவை தவிர படத்தில் வேறு எதையும் உருப்படியாக சொல்லவே முடியவில்லை.

8. நாசர்
நாசருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லையென்றாலும், அவருடைய பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 1.5 / 5
டேவிட் - எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் விரும்பினால் ஒருமுறை பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். ஒரே ஒரு வோட்டு ப்ளீஸ். நன்றி!!!
Thanks : Maalaimalar news paper




சச்சினுக்கு பூஸ்ட் கொடுக்கிறார் தனுஷ்...!

இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெகுவாக தேடப்பட்ட பாடல் என்ற பெருமையை தனுஷ் சச்சினுக்கு பாடிய "பூஸ்ட்" பாடல் தான். கிட்டத்தட்ட அவர் இதற்கு முன்னர் பாடிய "கொலைவெறி" பாடல் போன்றே இந்த பாடலும் மிக இயல்பாக அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கு. அந்த பாடல் உருக்க இருந்த காரணம் இதோ....


சச்சினை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் 'கொலவெறி' புகழ் நடிகர் தனுஷ். சச்சின் 'பிராண்ட் அம்பாசடராக' உள்ள பூஸ்ட்(Boost) நிறுவனம் தான் இந்த ஆல்பத்தைத் தயாரிக்கிறது.

பூஸ்ட் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பிராண்ட் அம்பாசடர் சச்சின். இதைக் கொண்டாடவும், சச்சினின் சாதனைகளைப் பாடவும் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்ட நிறுவனம், அந்த வேலையை தனுஷிடம் ஒப்படைத்துள்ளது.


கிட்டத்தட்ட கொலவெறி பாட்டு மாதிரியே இந்த பூஸ்ட் பாட்டும் அமைந்துள்ளது.

"One plus one two-u two-u, if not Sachin who-u who-u!!!" என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாட்டு. கொலவெறிப் பாட்டுக்கு இசையமைத்த அதே அனிருத்தான் இந்தப் பாடலுக்கும் இசை தந்துள்ளார். நடிகை அனுஷ்காவும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறுகைாயில், "இந்தப் பாட்டை சச்சினுக்கு ஒரு மரியாதையாக, ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் பாட்டு மாதிரி செய்துள்ளோம். ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது," என்றார்.
தனுசின் பேட்டியும் பாடல் ஒளிபதிவு வீடியோ காட்சியும் உங்களுக்காக...



அறிமுக பாடல் வரிகள் இதோ உங்களுக்காக...
Yo boys let’s sing song

Cricket song

Sachin song

One plus one two-u two-u

If not Sachin who-u who-u

28 States clue-u clue-u

Nothing else to prove-u prove-u

Hey you are our pride-u

Roller coaster ride-u

Every place

Hey hit-u maama..super maama

Hey come on maama

Hit-u maama

Super maama

One day test..t 20

Entertainment guarantee

89 your entry

Bringing honor to our country

Hey every bowler-u beer-u beer-u

Darling of the mass

Little master

Master blaster

You are our boost-u

தனுஷுக்கு ரொம்ப பிடித்த பாடல் வரி "டார்லிக் ஆப் தி மாஸ்".

அறிமுக பாடல் வெளிவந்த சில மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் அதனை கேட்டு, பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலும் நிச்சயம் தனுஷுக்கு ஒரு நல்ல பெயரை உலக அளவில் வாங்கி தரும் என்பதில் ஐயமில்லை.

Thanks : Dinamalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top