Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

கமலின் நான்கு புதிய படங்கள் - குஷியில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய ரீமேக் படங்களில் நடிக்கிறார்.

1. விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம்.

உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2. உத்தம வில்லன்

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தில் முதன்முறையாக கமல் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வருகிறார். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

3. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் நடிகை மீனா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.

4. 'மனம்' தமிழ் ரீமேக்

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த அந்த படத்தை பார்த்து முடித்ததும், தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் கமல்.

நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் கமல் நடிக்க, நாகார்ஜூனா வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம் மற்றும் மன்மதன் அம்பு படங்களில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், நாகசைதன்யா வேடத்துக்கு அப்படம் தொடங்கும் நேரத்தில் இன்னொரு இளவட்ட நடிகரிடமும் கால்சீட் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இரண்டு மாத இடைவெளியில் அடுத்து அடுத்து கமல் படங்கள் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & EniyaTamil



2013–ல் கலக்கிய ஹீரோக்கள்!

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.

ரஜினி:

இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட வெளிவராதது ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றம். கோச்சடையானை மெருகேற்றுகிறோம், மெருகேற்றுகிறோம் என்று சொல்லியே 2 வருடத்தை ஓட்டிவிட்டார்கள். 2014ம் ஆண்டிலாவது கோச்சடையான் வெளிவரும் என்று நம்புவோம்.

கமல்:

சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசின் தடைகள், வெளிநாட்டுக்கு ஓடுவேன், டிடிஎச்சில் வெளியிடுவேன் என்ற கமலின் அறிவுப்பு என பல தடதடக்களை தாண்டி ரிலீசானது விஸ்வரூபம். இந்த பரபரப்புகள் தந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியே விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்கிறது. அதே வேகத்தில் விஸ்வரூபத்தில் மீதமிருக்கம் காட்சிகளோடு இன்னும் சில காட்சிகளை சேர்த்து விஸ்வரூபம் 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய்:

தலைவா என்ற தலைப்பே விஜய்யின் அரசியல் அச்சாரம் என்று பரபரப்பை கிளப்பியது. அதே பரபரப்பில் படம் வெளியாக இருந்த நேரத்தில் விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகளை தலைவாவும் சந்தித்தது. அரசு தடை, விஜய் உண்ணாவிரத அறிவிப்பு, தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பத்து நாட்களுக்கு பிறகு தலைவா ரிலீஸ் ஆனது. விஸ்வரூபத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி உதவியதைப்போல தலைவாவுக்கு உதவவில்லை.

அஜீத்:

பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த ஆரம்பம். தடதடவென ரிலீசாகி. அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தலயின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நயன்தாராவின் அக்மார்க் கிளாமர். ஆர்யா டாப்ஸியின் ரொமான்ஸ் என பக்குவம் சரியாக சேர ஆரம்பம் ரசிகனுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.


சூர்யா:

சிங்கிள் படம் தந்தாலும் சூர்யாவின் சிங்கம் 2 பாய்ச்சல் முதல் பாய்ச்சலைவிட அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் "ஓங்கி அடிச்சா ஒண்ணறை டன் வெயிட்" என்றவர் இரண்டாம் பாகத்தில் "பாய்ந்தடிச்சா பத்தரை டன் வெயிட்"னு புரூப் பண்ணினார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் தயாரிப்பாளரின் கேஸ் பாக்சை நிரப்பிய விதத்திலும் சிங்கத்தின் கர்ஜனை பலமாக இருந்தது.

விக்ரம்:

விக்ரம் நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் டேவிட். சதா தண்ணியடித்து அலையும் அந்த கோவா டேவிட் வேடம் விக்ரமின் இமேஜை கோவா கடலுக்குள் தூக்கி போட்டது. ஐ வந்து கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆர்யா:

சேட்டையும், இரண்டாம் உலகமும் ஆர்யாவை அமுக்கியபோதும் ராஜாராணி கை தூக்கிவிட்டது. இரண்டாம் உலகத்தின் இரண்டு வருட உழைப்பு வீணாகி ஆர்யாவுக்கு அது இன்னொரு நான் கடவுள் ஆகிப்போனது. சேட்டையில் சந்தானத்துடன் நடித்த பாத்ரூம் காமெடிகள் கண்டு ரசிகர்கள் முகம் சுழித்தார்கள்.

தனுஷ்:

மரியானும், நய்யாண்டியும் தமிழ் நாட்டில் மழையில் நனைந்பட்டாசாய் நமத்துப்போக இந்தி ராஞ்சனா ராக்கெட் வானத்தில் வண்ணம் கூட்டியது. பாலிவுட்டில் சுள்ளானின் கணக்கை 2013 துவக்கி வைத்தது.

கார்த்தி:

அலெக்ஸ் பாண்டியனும், அழகுராஜாவும் கார்த்தியை கைவிட பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் தெம்பானார். கதை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை 2013ல் கற்றுக் கொண்டார்.

ஜீவா:

டேவிட் அவுட் கொடுக்க என்றென்றும் புன்னகையில் மெல்ல சிரித்தார். தொடர் தோல்விகளுக்கு அரைப்புள்ளி வைத்தார்.

சசிகுமார்:

குட்டிப்புலி மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை. ஏ செண்டர் மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பி அண்ட் சியில் அள்ளியது கலெக்ஷனை. சசிகுமார் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சித்தார்த்:

தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் இவர் ஆந்திரத்து சிம்பு. இப்போதுதான் தமிழ்நாட்டு பக்கம் வெற்றிகளை பார்க்கிறார். உதயம் என்.எச் 4 ஆக்ஷன், தீயா வேலை செய்யணும் குமாரு காமெடியென சித்தார்த்துக்கு 2013 சிரிப்பு ஆண்டுதான்.

ஜெயம்ரவி:

இவருக்கு இது சோகமான ஆண்டு இரண்டு வருடங்கள் அமீருடன் இணைந்து, கடுமையா உழைத்த ஆதிபகவன் மட்டும் ரிலீசானது. அவர் மிகவும் எதிர்பார்த்த ஆதிபகவன் அவரை கைவிட்டது.

விஷால்:

சமர் தராத வெற்றியை பட்டத்து யானை தரும் என்று நம்பினார். அது கீழே தள்ளியது. விழந்தவரை காப்பாற்றியது பாண்டிய நாடு. சொந்தப் படம் என்பதால் பாண்டியநாட்டு கலெக்ஷனை வைத்து பட்ட கடன்களை அடைத்து விட்டு உற்சாகமாகிவிட்டார்.

சிவா:

தில்லுமுல்லு வெற்றியுடன் 2013 ருசிக்க ஆரம்பித்தவருக்கு அடுத்து வந்த சொன்னா புரியாது, வணக்கம் சென்னை இரண்டும் தில்லுமுல்லு செய்து திக்குமுக்காட வைத்து விட்டது.
(அடுத்து வருகிற மூன்று பேரும்தான் 2014 ரேஸில் முன்னால் ஓடக்கூடியவர்கள். போட்டியும் இவர்களுக்குள்தான்)

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதியின் தொடர் விஜயத்தின் வரிசையில் இந்த ஆண்டு கணக்கில் சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும். இரண்டுமே துட்டு, ஹிட்டு இரண்டையும் சந்தித்து சாரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன்:

இந்த வருடம் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஒரே ஹீரோ. கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் தொட்டதெல்லாம் பொன்னானது சாரி... நடிச்சதெல்லாம் ஹிட்டானது. முதல் படத்துக்கு 5 லட்சமும், அடுத்து படத்துக்கு 50 லட்சமும் சம்பளம் வாங்கியவர் இப்போது வாங்குவது 5 கோடி.

விமல்:

நிகழ்கால ஜெமினி கணேசன் இவர். இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் இவர்தான். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, ஜன்னல் ஓரம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல் என மொத்தம் 5 படங்கள். கே.பி.கி.ர, தேசிங்கு ராஜா ஹிட் படங்கள். ஜன்னலோரம், மூன்று பேர் மூன்று காதல் ஆவரேஜ். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு பிளாப் என வெரைட்டி ரைஸ் பரிமாறினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & Dinamalar



கமல் இயக்கும் ஹாலிவூட் படம் - ஆல் ஆர் கின்

"லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தயாரிப்பாளர் பேரிஆஸ்பனுடன்கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு "ஆல் ஆர் கின்" (All are Kin) என்று பெயர் வைத்துள்ளனர்.


தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல்.

கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார்.


தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்- 2 வையும் இந்தாண்டுக்குள் வெளியிட கமல் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இப்படத்தை முடித்தபின்னர் பேரி ஆஸ்பன் படத்தை இயக்குவதாக சமீபத்தில் கமல் கூறியிருந்தார்.

இந்நிலையில் பேரி ஆஸ்பன் தயாரிப்பில் கமல் இயக்க இருக்கும் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். "ஆல் ஆர் கின்" என்றால் "யாவரும் கேளீர்" என்று அர்த்தமாம். இந்திய கலாச்சாரத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. விஸ்வரூபம்-2 முடிந்த பிறகு உடனே ஆர் ஆர் கின் படத்தை தொடங்க இருக்கிறார் கமல்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinamalar.com




IMDBயில் சாதனை படைத்தது விஸ்வரூபம் !!!

சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான IMDBயில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளது.


கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான் என்பது அனைவரும் அறிந்த விடயமாகிவிட்டது.
தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இணையத்திலும் விஸ்வரூபம் புதிய சாதனை செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


3-ஆம் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்
விஸ்வரூபம் 5-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.10 கோடிகள்
விஸ்வரூபம் 6-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.65 கோடிகள்
விஸ்வரூபம் 7-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.28 கோடிகள்
விஸ்வரூபம் 8-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.05 கோடிகள்
விஸ்வரூபம் 9-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.35 கோடிகள்
விஸ்வரூபம் 10-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.70 கோடிகள்
விஸ்வரூபம் 11-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.10 கோடிகள்
விஸ்வரூபம் 12-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.23 கோடிகள்
விஸ்வரூபம் 13-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 5.90 கோடிகள்
விஸ்வரூபம் 14-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.36 கோடிகள்
விஸ்வரூபம் 15-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.15 கோடிகள்
விஸ்வரூபம் 16-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.28 கோடிகள்
விஸ்வரூபம் 17-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.02 கோடிகள்

17-ஆம் நாள் வசூல் 134.58 கோடிகள்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படம் நல்ல வரவேற்ப்பும் வசூலும் ஆகிறது என்கிற தகவல் கமலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் திரையிடப்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் பல்வேறு தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளன. ரசிகர்களின் கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்

விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தயாராகிறது. இப்படத்துக்கு ‘மூ’ என தலைப்பு வைத்துள்ளனர். கமலஹாசனே இயக்கி நடிக்கிறார். இதில் கமல் மூன்று வேடங்களில் வருகிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & dinakaran news paper



விஸ்வரூபம் - வாசகர் கருத்து!

கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்தை, தியேட்டர்களில் திரையிட மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவிற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இந்த செய்தி தொடர்பாக வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஒரு சில உங்களுக்காக......


போச்சே 40ம் போச்சே. கனவெல்லாம் அம்போன்னு போச்சே. யாரோட கண்ணு பட்டுதோ தெரியல்லே, அத்தனையும் இப்படி ஒரே அடியில் அழிச்சிட்டாங்களே!
- Guru - Chennai, இந்தியா

அய்யா, நானும் கூட கமல் மீதுதான் தப்பு இருக்குமோ என்று நினைத்து இருந்தேன்.ஆனால்,ஜெயா டி வி யில் இந்த செய்தியை பற்றி ஒரு வரி சொல்லாததன் மூலம் ஜெயா அரசுதான் தடையில் தீவிரம் காட்டியுள்ளது என்பதை எங்கள் அப்பன் குதுறுக்கில் இல்ல என்பது போல காட்டி கொடுத்து விட்டது. அம்மாவின் ஆணவம் அவரையே அழித்துக்க்கொள்வார் என்பதை பத்திரிக்கைகள் உணர்த்தி கொண்டு இருப்பது உண்மையாகிவிடுமா என்பது கவலையாக உள்ளது. Best wishes kamal. முஸ்லிம் அன்பர்,எங்களைவிட அரசு தீவிரம் காட்டி வருகின்றது. அரசு வழி எங்கள் வ்ழி என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இதன் மூலம்,அவர்கள் சங்கம் எதுவும் தனியாக முடிவு எடுக்கவில்லை. ஜெயா உங்களுக்கு இது தேவைதானா? ஆனால், வடிவேலுப்ப்போல, முஸ்லிம தீவிரவாதியாகவும்,இந்து கடவுளையும்,அய்யர் பெண் சிக்கன் சாப்பிடுவதாகவும் காட்டுவது சீண்ண்டுவதாக இருப்பதால் கொஞ்சம் எதிர்ப்பை காட்டி, அடுத்த முறை இதுபோல பண்ணாதிங்கோ.
- Venkat Iyer - Nagai, India

எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம், யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன், ஞாபகம் வருகிறதா?
- Rakshith Kp - tiruvannamalai, இந்தியா

பச்சையம்மாவின் சாயம் வெளுத்துப்போச்சு
- IndianTamil - Stamford, யூ.எஸ்.ஏ

ஜெயா அரசாங்கம் இதுபோன்ற தேவையற்ற விசயங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு தலையாய பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்..சென்சார் போர்டு அனுமதி வழங்கியபின் மாநில அரசாங்கம் ஏன் தடை விதிக்கவேண்டும்...இது தனி நபரை பழிவாங்குதல் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது...மறவன்.
- Maravan - dublin, அயர்லாந்து

கமல் vs J- winner KAMAL
- MOHAN - Erode, இந்தியா


என்னுடைய இஸ்லாமிய நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட கருத்து. "இஸ்லாம் என்பது ஒரு உயர்ந்த மார்க்கம். ஒரு படத்தை எடுப்பதலோ அல்லது சிலர் அறியாமல் கூறும் கருத்துக்களாலோ இஸ்லாத்தை சிறுமை படுத்திவிடமுடியது". சிலர் அரசியல் காரணங்களுக்காக சிறு சிறு பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களை தூண்டிவிட்டு லாபம் அடைகின்றனர். அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களை ஒரு ஒட்டு வங்கியாக மட்டுமே பாவிகின்றனர். இது உண்மையாகவே தோன்றுகிறது. முஸ்லிம் சகோதரர்களே சிந்தியுங்கள். கண்டிப்பாக யாரோ சிலர் கூறும் கருத்துகளால் உங்களுடைய மதம் சிறுமை அடையாது. அதே சமயம் உங்களுடைய நடவடிக்கையால் மட்டுமே அது எவ்வளவு உயர்ந்த மார்க்கம் என்று நிருபிக்கமுடியும்.
- Ha Ha Ha Siripu Varuthu - Coimbatore, இந்தியா

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். எதை நீ எடுத்தாயோ அது தாத்தா பணத்திலே எடுக்கப்பட்டது ...எதை DTH க்கு கொடுத்தாயோ அதுவும் அவருக்கே கொடுக்கப்பட்டது. எதற்காக கமலஹாசா அழுகிறாய்.
- Panchu Mani - Chennai, இந்தியா

தர்மம் ஜெயிக்கும் .All the best Kamal sir
- Divya Prem - Cambridge, யுனைடெட் கிங்டம்

ஜெயாவின் சிறுபான்மையினரின்...காவலாளி....என்ற வேஷம் களைந்து.... சுயநல...பழிவாங்கும் போக்கு... வெளிபட்டிருக்கிறது.... அதற்க்கு.. அதை வெளிக்காட்ட உதவிய..திரு கமலுக்கு நன்றி.... இனி...திரை அரங்குகளில் திருவிழா கூட்டம்தான்... இதுதான்.. ஜெயா அரசின்... ஆரம்ப சங்கு......... விஸ்வரூபத்தின் எழுச்சி ஜெயாவின் அரசியல் வாழ்வின் வீழ்ச்சியாக இருக்கும்....
-முருகவேல் சண்முகம்.. - சென்னை, இந்தியா

படத்தை மக்கள் பார்க்கவிடாமல் தடுக்க நினைத்த சில தீய சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டி உள்ளது நீதிமன்றம். படத்தை விளம்பரம் செய்ததற்கு நன்றி, படம் கண்டிப்பாக வெற்றிபெரும்.
- RAJA - Chennai, இந்தியா

நேற்று இரவு விஸ்வரூபம் படம் பார்த்தேன். ப்ரில்லியன்ட். ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது. அப்பாவி டான்சர் கமல் கைகளை அவிழ்த்து விட்டவுடன் வில்லன்களை துவம்சம் செய்வார் பாருங்கள், என்னை அறியாமல் கை தட்டி விட்டேன். இந்த ஒரு சண்டை காட்சிக்க்காகவே படம் பார்க்கலாம். குறிப்பா ஆப்கானிஸ்தான் மலை குகைகளில் படம் காட்சி செய்யப்பட்ட விதம் ஹாலிவுட் படத்திற்கு நிகர். நீங்கள் கமலுக்கு உண்மையில் சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தியேட்டர் போய் இந்த பார்த்து, இந்த படத்தை 2013-ன் blockbuster படம் ஆக்குங்கள் - அதனால் படம் முடியும் போது டைட்டில் போடுவது போல் விஸ்வரூபம்-2 படம் விரைவில் கமல் எடுப்பார்.
- Amalraj Gnanasigamani - Sydney, ஆஸ்திரேலியா


ஜெயா மூக்கு அறுப்பு. lol . உண்மை என்றும் ஜெயிக்கும். ஒரு கலைஞனின் சாபம் உங்களை சும்மா விடாது. தியேட்டர் owner எல்லாம் எத்தனை கமல் படம் காட்டி பணம் சம்பாரிசிருபிங்க. ஒரு புது முறையை அவர் அறிமுக படுத்தினால் பொறுக்கவில்லை. முஸ்லிம்களை துண்டி விட்டு தடை செய்கிறீர்கள். பேசாமல் கமல் hollywood ல மட்டும் நடிச்சிட்டு இருக்கலாம். இவங்களுக்கு பவர் ஸ்டாரும், ஆர்யாவும் தான் சரி.
- Aravind Kumar - Chennai, இந்தியா

கமல் சமீபத்தில் ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற நிகழ்ச்சியில் ப.சி அவர்களை பிரதமராக பார்க்க ஆசைப்படுவதாக பேசி இருந்தார். இது நம்ம அம்மையாருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் இந்த பழிவாங்கல். அம்மையாரு வோட்டு வங்கி அல்லது சட்டம் ஒழுங்கு பற்றி பயபடுபவறல்ல.
- Easwara Dhooran - Erode, யூ.எஸ்.ஏ

இந்த விசயத்தில் கமலின் நிலைப்பாட்டைப் பாராட்டியே தீர வேண்டும். மனோதிடத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். கலை மகளின், கலைப் பொக்கிசம் என்று சொல்லி தலையில் தூக்கிக் கொண்டாடும் சினிமா உலகம் கூட இவர் காலைவாரிவிட்டது. ஆனால் அதற்கெல்லாம் சற்றும் கலங்காமல் தனித்து நின்று போராடும் உம்மை ரசித்ததற்கு இப்போது பெருமைப்படுகிறேன் - ரசிகன் என்ற முறையில். கவலைப் படாதீர்கள் கமல், எது நடந்தாலும் நாங்கள், உங்கள் ரசிகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.
- Vinoth Kumar - Chennai, இந்தியா

விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டும் என்றால் சமூக சீர்கேட்டை உருவாக்கும் பாடல்கள் , படங்களை அரசு தடை செய்ய வேண்டும் "கட்டிபிடி ..கட்டிபிடிடா ..கண்ணாளா ..கண்டபடி கட்டிபிடா " , கந்தா ..கார வடை ...இந்த பாடலில் பீர் சோறு மாதிரி எப்ப எப்ப அடிக்க வேண்டும் என்கிறார்கள் அதை தடை செய்யலை . பாலியல் கொடுமைகளை தூண்டும் படங்களை இன்னும் போஸ்டரில் திரை அரங்குகளில் ஓடிகொண்டிருகின்றது . உரிமைக்குரல் படத்தில் "பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட கழுத்தை நீட்டிகனும் ..இந்த பாடலில் காயா இல்லை பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா " என்ற வரிகள் வரும் இதெல்லாம் தாண்டி வந்தவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள் , அதில் இந்த படம் வந்தபோது ஸ்கூல் பசங்களை வம்பாக பார்கவைதது காசும் பார்த்த கதையும் உண்டு . தண்ணிக்கு வழியை காணோம் , இதில் மத்திய தணிக்கை குழு அளித்த சான்றிதழ் சரியில்லையாம் , இதில் எதுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் , படம் பார்த்தவன் பிடித்தால் பார்பான் இல்லாவிட்டால் எந்த ஸ்டார் நடித்தாலும் திரும்பி பார்க்கமாட்டான் , 144 தடை எதுக்கு , அப்ப தமிழன் யாருக்கும் கருத்து சுதந்திரம் இல்லை , பேச்சுரிமை இல்லை ...ஜனநாயக நாட்டில் இது வெட்க கேடு , ஆப்கானிஸ் தான் தீவிரவாதிக்கும் இங்குள்ள முஸ்லிம் நண்பர்களுக்கும் தொடர்பா இருக்கு ?, நம்ம ஊரில் இந்த அமைப்புகள் சிந்திக்க வேண்டும் , தீவிர வாதி வைத்தியலிங்க ஐயர் ன்னு ஆப்கானிஸ் தானில் வைக்க முடியுமா ? ..இந்தியர்கள் நாம் நம்மில் ஒருவன் படைப்பு அமெரிக்காவில் பேசபடுகின்றது, 100 கோடி நாங்களும் செலவு பண்ணுவோம் சினிமாவிற்கு தைரியம் வந்திருகின்றது ஒரு கலைகனுக்கு அதை பாராட்டாமல் நாம் எதிர்ப்பது மிக தப்பு
- Navasathishkumar - Madurai, இந்தியா

நீதிபதி அவர்கள் தீர்ப்பை 8 மணியிலிருந்து 10 மணிக்கு மாற்றி இருப்பதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது. தீர்ப்பு அரசுக்கு எதிராக வரும். பாதுகப்பு அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வரை தீர்ப்பை இழுத்தடிக்கிறார்கள். கமல் சார் கண்டிப்பாக உங்களுக்கு தான் வெற்றி. விஸ்வரூபம் சென்னையில் மிக விரைவில்.
- Veera - Paris, பிரான்ஸ்

கமல் என்ற ஒரு தனி மனிதனை பழி வாங்க அரசாங்க இயந்திரத்தை உபயோகப்படுத்துவது நியாயமாகாது. சில்லறைத்தனமாக நடந்துகொள்ளும் இவரெல்லாம் பிரதமரானால் (பேச்சுக்குத்தான்) இந்தியாவின் கதி அதோ கதிதான்.
- Baskaran Kasimani - singapore, சிங்கப்பூர்

படத்தை ஓசியில் பார்த்த பின்னரும் இன்னும் வாதம் நடக்கிறது. உலக நாயகனுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் சாதாரன சாமான்ய மக்களின் நிலைமை என்ன? மேலிருந்து ஒரு நீதியரசர் பார்த்துகொண்டு இருக்கிறார். அவரது தீர்ப்புக்கு ஒருநாள் இந்த குள்ளநரிகள் பதில் கூறவேண்டும். உலகநாயகனின் பக்கம் கடவுள் உள்ளார்.
-sadaiappan - Abu dhabi, ஐக்கிய அரபு நாடுகள்

தமிழ்நாடு அரசு வக்கீல் சொல்வதை பார்த்தால் ஒரு தாயும் தந்தையும் தங்கள் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லுவதை போலுள்ளது . அரசு வக்கீல் படித்துதான் இந்த வேலைக்கு வந்தாரா என்பது சந்தேகமாக் உள்ளது . இப்படி அரசியல் முதலீடுக்காக ஒரு கலைஞனை குருதிபடுத்துவது சரியல்ல .அரசியல்வாதிகள் நம் நாட்டையே விற்று விட்டு மீண்டும் அதே நாட்டை ஆள இந்த சட்டம் இல்லையா.
- Mohan - Kochi, இந்தியா


பிரச்னை பெரியதாய் ஆனதற்கு ஜெயா tv தான் காரணமாமே ?? டிவி rights ஜெயா டிவி இருந்து ஸ்டார் விஜய்க்கு மாறியது, மற்றும் கமல் ஒரு விழாவில் சிதபரம் தான் பிரதமர் அக வேண்டும் என்று கூறியது தான் காரணமுன்னு சொல்றாங்க அப்படியா ? மெய்யாலுமா??
- Kathiravan.M - namakkal, இந்தியா

சென்ற தேர்தலுக்கு முந்தைய பொது தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய 100 கோடி தர முன்வந்தார்கள், அதனை அப்போது கமல் மறுத்தார் என்பதற்காகவே இப்போது அதே 100 கோடி இழப்பை அவருக்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வளவு வெளிப்படையாக ஒருவரை பழிவாங்க அம்மாவால் மட்டுமே முடியும். பேசாமல் ஜெயா டிவிக்கு தொலைக்காட்சி உரிமத்தை வழங்கி விட்டால் அடுத்த கணமே படத்தை சிக்கலில்லாமல் வெளியிட்டு விடலாம். பாவம் கமல், பிழைக்கத்தெரியாத மனிதர்.
- Ba Maha - Hougang new town, சிங்கப்பூர்

அட பன்னாடைகளா... மக்கள் வரிபணத்தை திருடுபவர்களை விட்டு விட்டு தன் தொழிலை, தனக்கு தெரிந்த தொழிலை செய்தவனுக்கு தடை. என்னடா நாடு இது. அப்போ அமெரிக்கனை பாத்தால் இந்த பூமிய விட்டே ஒதுகிடுவிரோ என்னடா முட்டாள் தனமா இருக்கு
- Wilsonsam Sp - Bobigny, பிரான்ஸ்

என்னாங்க நடக்குது...ஒண்ணுமே புரியலையே..மொதல்ல புண்படுத்துதுன்னாங்க. அப்புறம் சட்டம் ஒழுங்கு கெட்டுடும்னாங்க..அப்புறம் சென்சார் போர்டே சர்டிபிகாடே குடுக்கல அது டுபாக்கூர் சர்டிபிகேட் ன்னாங்க..இப்போ கமல் வித்துபுட்டார்,ஆகவே அவருக்கு வழக்கு போட உரிமையில்லை ங்கிறாங்க.. மத்திய அரசு 31 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா என்பதை உறுதி படுத்தி ஆவன செய்ய வேண்டும்..அப்படி கெட்டு இருந்தால் உடன் கவர்னரை அறிக்கை தர கேட்க வேண்டும்..அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- K.Sugavanam - Salem, Tamilnadu, இந்தியா

படத்தை விற்று விட்ட கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை.... வாஸ்தவமான வாதம் தான்... ஆனால் நாட்டையே விற்று விட்ட அரசியல்வாதிகளுக்கு ஒட்டு கேட்க மட்டும் உரிமை இருக்கிறதாக்கும் ? ??
-JAY JAY - Chennai, இந்தியா
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Dinamalar.com





விஸ்வரூபம் வசூல் மழை !

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் படத்தை வெளியிட தமிழக அரசு 2 வாரத் தடை விதித்துள்ளது. ஆனால் விஸ்வரூபம் கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.


முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்

முதல் நான்கு நாள் வசூல் 32.24 கோடிகள்.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.


இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது.

தடை நீங்குமா ?

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை 11.45க்கு விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் என மாலை 6 மணி வரை விசாரணை நீடித்தது.

பின்னர் நீதிபதி, இன்று இரவு 8.30க்கு தீர்ப்பு அளிப்பதாகக் கூறினார்.

நீதிமன்றம் வழங்கவிருக்கும் இந்தத் தீர்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது, நாடெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & www.muruganandam.in



எனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.

தமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் ?! அவ்வாறு சொந்த குரலில் பாடும் (இப்போதைய) பல தமிழ் நடிகர்களில் முதன்மையானவர் கமலஹாசன்.


நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது பரிசோதனை முயற்சிகளை அவர் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறவர். அந்த முயற்சியில் தான் சொந்த குரலில் பாடல்களை பாடுவது என்பது. அதில் மிகபெரிய வெற்றியையும் பெரியவர் இவர்.

பல பாடல்களை தனது சொந்த குரலில் பாடியிருந்தாலும் எனக்கு பிடித்து சிறந்த பத்து பாடல்கள் + காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியே.



1. சிகப்பு ரோஜாக்கள் (1978)
நெகடிவ் ரோல்
பெரிய மூக்கு கண்ணாடி
பெல்பாட்டம் பேன்ட்
பூனை
ரோஜா செடி
பிடித்த பாடல் : நினைவோ ஒரு பறவை


அழகான காதல் பாடலில் இவரது குரலும் மிக இனிமையாக இருக்கும். கோரஸில் வரும் அந்த குரலும் நம்மை வசிகரிக்கும்.



2. விக்ரம் (1986) -
எழுத்தாளர் சுஜாதா
எலிகுகை
அறிவியல் சார்ந்த கிரைம்
தகடு தகடு
டிம்பிள் கபாடிய

பிடித்த பாடல் : கண்ணே தொட்டுக்கவா


அந்த காலகட்டத்தில் SPB அளவுக்கு பாடிய பாடல் இது. ரொம்ப இளமை ததும்பும் குரலில் இந்த காதல் டுயட் பாடல் ரொம்ப பிடிக்கும்.



3. அபூர்வ சகோதரர்கள் (1989) -
இரட்டை வேடம்
அப்பு கமல்
சார் நீங்க எங்கோயோ போயிடீங்க
பாடலில் கிராபிக்ஸ் முகம்
நாகேஷ் வில்லனாக நடித்து
கெளதமி

பிடித்த பாடல் : ராஜா கைய வச்சா



பாஸ்ட் பீட் சாங். சும்மா பட்டையை கிளப்பும் பாடல் இது. காரையும் பெண்ணையும் ஒப்பிட்டு வரும் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வாலி சார்....நீங்க இன்றும் என்றும் வாலிப கவினனே.



4. மைக்கேல் மதன காமராஜன் (1990) -
நான்கு விதமான குரல் + நடிப்பு + உடல் மொழி
காமேஸ்வரா
பீம் பாய் பீம் பாய்
வரதகுட்டி நான் இந்த சமையல்கட்டு
திருபு திருபு

பிடித்த பாடல் : சுந்தரி நீயும்



மெலடி பாடல். கேட்க கேட்க என்ன சுகமா இருக்கும்!



5. தேவர் மகன் (1992) -
சிவாஜி சார்
'பங்க'+ அந்த மீசையும்.
குடும்ப பகை

பிடித்த பாடல் : இஞ்சி இடுப்பழகி



தாளம் போடா வைக்கும் ஜோடி பாடல். வார்த்தை உச்சரிப்புகள் அவ்வளவு தெளிவு.



6. சதிலீலாவதி (1995)
கோவை சரளா
சக்திவேல் கவுண்டர் கமலஹாசன் + காமெடி

பிடித்த பாடல் : மாறுகோ மாறுகோ



மூடு வரவைக்கும் பாடல். என்னமா தலைவரு பாடியிருபாரு! அட அட... கிக் ஏறுதே பாடலை கேட்கும் போதே....



7. ஹேராம் (2000)
முத்த காட்சி
சாருக்கான்
காந்தி தத்தா
சரித்திர கால பின்னணி
நீண்ட தலைமுடியுடன் கூடிய கமலின் போடோ

பிடித்த பாடல் : நீ பார்த்த



பியானோவின் இசையோடு கமலின் இனிய குரல் கரையும் இடமெல்லாம் மிக இனிமை.



8. அன்பே சிவம் (2003) - இது வரை நான் பார்த்த படங்களில் என் மனதிலிருந்து நீங்காத இடம் பிடித்த திரைப்படம் "அன்பே சிவம்". தமிழ் திரையுலகில் இந்த படம் தவிர்க்க முடியாதவை. இந்த படத்தை பிடிக்காதவர் யார் இருக்க முடியும்?
யாரும் தொட தயங்கக் கூடிய ஒரு கதை
வித்தியாசமான தையல் முகம்
மாதவனின் காமெடி

பிடித்த பாடல் : யார் யார் சிவம்



இதுவும் ஒரு வகை மெலடி பாடல். பாடலை கேட்ட கேட்ட நம்மையறியாமல் ஒருவித அமைதியான நிலைக்கு வரவைக்கும். இந்த பாடலை பற்றி இன்னும் இறைய சொல்லலாம். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.



9. விருமாண்டி (2004)
தூக்குத் தண்டனை
சட்ட மீறல்கள்
திரைகதையை இரண்டு விதமாக சொல்ல்வது
சண்டியர்
ஜல்லிக்கட்டு

பிடித்த பாடல் : உன்னை விட



ஸ்ரேயா கோசலுடன் பாடியிரும் ஒரு காதல் மெலடி பாடல். கவிதையாய் படம் பிடித்திருப்பார்கள்.



10. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (2004) - ஆம் ஆண்டு வெளிவந்த சரண் இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பான காமெடி படம். ஒரு ரவுடி டாக்டரானா என்னவாகும்? படத்த பாருங்க வாய்விட்டு சிரியுங்கள்.
கிரேசி மோகன்
கட்டிபுடி வைத்தியம்
பாப்பு
ரவுடி vs டாக்டர்

பிடித்த பாடல் : கலக்கப் போவது யாரு



குஷியான பாடல். நாம்மையும் ஆடவைபார் இந்த பாடலில். அவ்வளவு புத்துணர்ச்சி இருக்கும் இவரது குரலில்.



இவர் பாடிய பெரும்பாலும் படக்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான்.
எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



வாழ்த்துக்கள் கமல் சார்!!!

இதே நாள் ஆகத்து 12, 1959, AVM என்னும் மிக பெரிய தமிழ் திரைப்பட தயாரிப்பு ஸ்தாபனத்தில் இருந்து ஐந்து வயது குழந்தை ontru தமிழ் திரையுலகில் தடம்பதித்த நாள். காதல் மன்னன் ஜெமினியும் சாவித்திரியும் இணைத்து நடித்த படத்தை பிரபல டைரக்டர் பீம்சிங் இயக்கி கொண்டிருக்க, அந்த படத்தில், ஐந்து வயது பிஞ்சு குழந்தை சும்மா நடிப்பில் மிரட்ட, அன்றைய பல பிரபலக்கள் சற்றே பிரண்டு தான் போயிருந்தார்கள். இவர் நடிப்புக்கு கிடைத்த முதல் பரிசு அந்த வருட "நேஷனல் அவார்ட்." இன்றும் நீங்கள் அந்த பாடத்தை பார்த்தால் அந்த குழந்தையின் நடிப்பில் கரைந்தே போவீர்கள். அட படத்தோட பெற சொல்ல மறந்துடேன், "களத்தூர் கண்ணம்மா". அந்த குழந்தை வேற யார் நம்ப உலக நாயகன் "கமலஹாசன்" தான்.

"ருசி கண்ட பூனை சும்மா இருகிறது" என்பார்கள். அதுபோல, 5 வயதில் வாங்கிய பரிசை மீண்டும் இவர், மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987), இந்தியன் (1996) படத்தில் மிக சிறப்பாக நடித்ததற்கு வாங்கினார். இந்த பட்டியல் இன்னும் நீளும்

இன்றோடு, கமல் தமிழ் திரை உலகிற்கு வந்து 50 வருடங்கள் ஓடிவிடாது. அவரது ரசிகர்கள் அவர் நடித்த "என்னை போல் ஒருவன்" படத்தினை வெளியிடவேண்டி கேட்டுகொண்டார்கள். சில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அவரது ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் நானும் அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியே. நீங்களும் என்னுடம் சேர்ந்து உங்கள் வாழ்த்துக்களை சொல்லாமே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



Related Posts with Thumbnails
 
back to top