Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

IMDBயில் சாதனை படைத்தது விஸ்வரூபம் !!!

சர்வதேச அளவில் சினிமா விவரங்கள் தரும் இணையதளமான IMDBயில் கமலின் விஸ்வரூபம் படம் அதிக புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளது.


கமல் படங்களில் அதிக பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான படம் விஸ்வரூபம்தான் என்பது அனைவரும் அறிந்த விடயமாகிவிட்டது.
தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இணையத்திலும் விஸ்வரூபம் புதிய சாதனை செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ்ப் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10க்கு 9.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்கு இதுவரை 12800க்கும் அதிகமான வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

ஒருவேளை இந்த எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டினால், உலக அளவில் புகழ்பெற்ற 250 படங்களின் பட்டியலில் கமல்ஹாஸனின் விஸ்வரூபமும் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


3-ஆம் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்
விஸ்வரூபம் 5-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.10 கோடிகள்
விஸ்வரூபம் 6-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.65 கோடிகள்
விஸ்வரூபம் 7-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.28 கோடிகள்
விஸ்வரூபம் 8-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.05 கோடிகள்
விஸ்வரூபம் 9-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.35 கோடிகள்
விஸ்வரூபம் 10-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.70 கோடிகள்
விஸ்வரூபம் 11-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.10 கோடிகள்
விஸ்வரூபம் 12-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.23 கோடிகள்
விஸ்வரூபம் 13-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 5.90 கோடிகள்
விஸ்வரூபம் 14-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.36 கோடிகள்
விஸ்வரூபம் 15-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.15 கோடிகள்
விஸ்வரூபம் 16-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.28 கோடிகள்
விஸ்வரூபம் 17-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9.02 கோடிகள்

17-ஆம் நாள் வசூல் 134.58 கோடிகள்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படம் நல்ல வரவேற்ப்பும் வசூலும் ஆகிறது என்கிற தகவல் கமலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் திரையிடப்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் பல்வேறு தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளன. ரசிகர்களின் கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்

விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தயாராகிறது. இப்படத்துக்கு ‘மூ’ என தலைப்பு வைத்துள்ளனர். கமலஹாசனே இயக்கி நடிக்கிறார். இதில் கமல் மூன்று வேடங்களில் வருகிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & dinakaran news paper



உலகின் சிறந்த கால்பந்து வீரர் - மெஸ்சி உலக சாதனை!

சாதனை நாயகன்

உலகின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சி தேர்வு தொடர்ந்து 4–வது முறையாக விருதை வென்று சாதனை படைத்தார்!

தொடரும் புதிய சாதனை

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, 'பிபா' சிறந்த வீரர் விருதை தொடர்ந்து நான்காவது முறையாக வென்று சாதனை படைத்தார்.

[படம் : இனியஸ்டா, மெஸ்சி, ரொனால்டோ]

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது. 2012ல் விருது பெறுபவர்களுக்கான இறுதிப்பட்டியலில்
  • பார்சிலோனா கிளப் அணியின் லயோனல் மெஸ்சி,
  • பார்சிலோனா கிளப் அணியின் இனியஸ்டா(ஸ்பெயின்),
  • ரியல் மாட்ரிட் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்ச்சுகல்)
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த விருதுக்கான வீரர்களை தேர்வு செய்ய, பயிற்சியாளர்கள், சர்வதேச கால்பந்து அணியின் கேப்டன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் ஓட்டளிப்பர். இதில்
  • மெஸ்சிக்கு - 41.60 %
  • ரொனால்டோ - 23.68 %
  • இனியஸ்டா - 10.91 %
சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதனடிப்படையில் உலகின் சிறந்த வீரருக்கான விருதை மெஸ்சி தொடர்ந்து நான்காவது முறையாக தட்டிச் சென்றார். ஏற்கனவே இவ்விருதினை, 2009, 10, 11ம் ஆண்டுகளில் பெற்றார்.

அதிக கோல் அடித்தவர்

சென்ற ஆண்டு மெஸ்சிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அதிக(91) கோல்கள் அடித்து, ஜெர்மனியின் (85)முல்லர் சாதனையை முறியடித்தார். "பிபா' விருது குறித்து மெஸ்சி கூறுகையில்,
"நான்காவது முறையாக விருது பெறுவது, வியப்பாக உள்ளது. இதனை, இனியஸ்டா உள்ளிட்ட பார்சிலோனா அணியின் சக வீரர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஓட்டளித்த பயிற்சியாளர்கள், கேப்டன்கள் ஆகியோருக்கு நன்றி," என்றார்.

அதிக முறை பிபா வென்று சாதனை

'பிபா' சார்பில் வழங்கப்படும், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அதிக முறை பெற்ற வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி, முன்னிலை வகிக்கிறார். இவர், தொடர்ந்து நான்கு முறை (2009, 10, 11, 12) இவ்விருதை வென்றார்.

இவரை அடுத்து, பிரான்சின் ஜிடேன் (1998, 2000, 2003), பிரேசிலின் ரொனால்டோ (1996, 97, 2002) தலா 3 முறை கைப்பற்றினர்.

அதிக கோல் அடித்த வீரர்கள்

'பிபா' கிளப் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை தொடரில், அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில், மெஸ்சி முதலிடத்தை, பிரேசிலின் டேனில்சன், எகிப்தின் முகமது அபோட்ரிகாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் தலா 4 கோல் அடித்துள்ளனர்.

அதிக முறை "ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்

ஸ்பெயினில் நடக்கும் "லா லிகா' கால்பந்து தொடரின், ஒரு சீசனில் அதிக முறை "ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முன்னிலை வகிக்கிறார். இவர், 2011-12 சீசனில், 8 முறை இச்சாதனை படைத்தார்.


இவர், "லா-லிகா' தொடரில் இதுவரை 15 முறை "ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

கிளப் போட்டிகளில் அதிக முறை "ஹாட்ரிக்' கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முதலிடத்தில் உள்ளார். இவர், 21 முறை இச்சாதனை படைத்துள்ளார்.

அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்கள்

கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக 9 போட்டியில் விளையாடிய மெஸ்சி, 12 கோல் அடித்தார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக கோல் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கேப்ரியல் பாடிஸ்டுடாவுடன் (12 கோல்) பகிர்ந்து கொண்டார்.

ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்

ஒரு சீசனில் நடந்த ஒட்டுமொத்த தொடர்களில், அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முன்னிலை வகிக்கிறார். இவர், 2011-12ல் விளையாடிய போட்டிகளில் 73 கோல் அடித்துள்ளார்.

ஒரு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்

ஒரு ஆண்டில்(2012) அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முதலிடம் வகிக்கிறார். இவர், கடந்த ஆண்டு 91 கோல் அடித்தார். இதன்மூலம் ஜெர்மனியின் முன்னாள் வீரர் ஜெர்டு முல்லரின் சாதனையை முறியடித்தார். இவர், 1972ல் அதிகபட்சமாக 85 கோல் அடித்தார்.

பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்

"லா லிகா', சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட கிளப் அணிகள் பங்கேற்கும் போட்டிகளில், பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முன்னிலை வகிக்கிறார். இவர், 289 கோல் அடித்துள்ளார். இவரை அடுத்து, ஸ்பெயினின் சீசர் (232 கோல்), ஹங்கேரியின் குபாலா (194 கோல்) உள்ளனர்.

அறிமுகமான போட்டி

முதன் முதலில் 2003ல் சீனியர் பிரிவில் கிளப் போட்டிகளில் பங்கேற்ற மெஸ்சி, பார்சிலோனா "சி' மற்றும் "பி' அணிகளுக்காக (2003-05) மொத்தம் 32 போட்டியில் 11 கோல் அடித்தார்.

பார்சிலோனா அணிக்காக (2004-) 356 போட்டியில் 289 கோல் அடித்தார். சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக 76 போட்டியில் 31 கோல் அடித்துள்ளார்.

அர்ஜென்டினா 20 மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில், 13 கோல் அடித்துள்ளார்.

மொத்தம் அடித்த கோல்கள்

ஒட்டுமொத்தத்தில் இவர், 344 கோல் அடித்துள்ளார்.

இத்தனை சாதனை புரிந்த இந்த கால்பந்து வீரரை பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சியே! வாங்க நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை இங்கே சொல்லுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : bbc.co.uk & dinamalar.com



Related Posts with Thumbnails
 
back to top