Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts
Showing posts with label விஜய் சேதுபதி. Show all posts

ரம்மி (2014) - பாடல் விமர்சனம்

தொடர் வெற்றிப் படங்களின் கலக்கல் நாயகன் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மியமான படத்தின் பாடல்களுக்கு D.இமான் இசையமைத்திருந்தார். காயத்ரி, ஐசுவர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை க.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் 'பீட்சா' படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் ரம்மி படத்தின் இசைப் பற்றி, இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கும் யுகபாரதி பெருமிதத்துடன் கருத்து சொல்லியிருக்கிறார். "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் ரம்மி திரைப்படத்தின் பாடல்களும் மண்மணம் கமழும் விதத்தில் அமைந்திருப்பதற்கு இயக்குநர் பாலகிருஷ்ணனின் ரசனையே காரணம். அனைத்துப் பாடல்களும் அருமையாக அமைவது ஒருகாலத்தில் வரம்போல இருந்தது. இப்போது அதனை வெகு இயல்பாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வரிகள் புரிகின்றன. இசை தமிழ் அடையாளத்தோடு இருக்கிறது. அசல் தமிழ் இசையின் திசை நோக்கி நானும் இமானும் பயணிக்க நீங்கள் காட்டிவரும் ஆதரவும் அன்பும் நெகிழ்வடையச் செய்கிறது.ஏனைய படங்களிலும் இம்மாதிரியான இசை வரவை எதிர்பார்ப்போமாக." என்று உற்சாகப்படுகிறார் யுகபாரதி.
காதலும், சீட்டாட்டமும் ஒன்றுதான். மூன்று இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து ஒன்றாக பழகுகின்றனர். அவர்களின் காதல், நட்பு, குடும்ப செண்டிமென்ட், போராட்டங்களே படத்தின் கதை. இப்படம் தனியார் கல்லூரிகள் உருவாகாத 80-ம் ஆண்டு நடக்கிற கதை.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 4 பாடல்கள், 3 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக். எக்ஸ்குளூஸிவ் பாடல்கள் ரிவ்யூ இதோ…

1. அடியே என்ன ராகம் நீ பாடுற.. (அபே ஜோ பர்துகர், பூர்னிமா சதீஷ்)

யுக பாரதி எழுதிய இப்பாடல்.. காதல் கொண்ட ஒரு ஆணின் தவிப்பு பற்றி பேசுகிறது.. ‘இதுவரை இப்படி இல்ல.. கொடுக்கற தொல்ல.. எதுக்கு நீ பொறந்த தெரியல… எதுக்கு வளர்ந்த தெரியல… ‘என வரிகள் ஓகே ரகம். ஆனால் கவனயீர்ப்பு மிஸ்ஸிங்! இசையும் ஜஸ்ட் பாஸ்…

2. கூடமேல கூடவெச்சி.. கூடனூரு போறவளே..(வி.வி.பிரசன்னா, வந்தனா ஸ்ரீநிவாசன்)

டூயட் பாடல். ‘ஒரு பாதி கதவு நீயடி..’ பாடல் பாடிய வந்தனா ஸ்ரீநிவாசன் பாடியதாலோ என்னவோ..அந்த பாடலை கேக்கறது போலவே ஒரு ஃபீல்.. தேறாதா இசை.. சுமாரான வரிகள்.. ஹ்ம்ம்… ஜஸ்ட் ஓகே…

3. ஒரு நொடி பிரியவும்… (டி.இமான், திவ்யா ரமணி)

மற்றுமொரு டூயட். திவ்யா ரமணி.. வார்ம் வெல்கம். அழகான குரல்.(ஸ்ரேயா கோஷலை இமிட்டேட் பண்ணாமல் பாடுங்க.. சூப்பரா இருக்கும் திவ்யா.) இந்த பாடல் மெட்டில் ஒரு தொகை பாடல்கள் மனசுக்கு வந்து போகிறது. எங்கயோ கேட்டமாதிரி இருக்கே… எங்கற மாதிரி இல்லாம.. அட.. இந்த பாட்டுதான்யா அது.. என வகை தொகையாக பல பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

4. எதுக்காக என்னை நீயும் பாத்த.. ( பூஜா எ.வி, சந்தோஷ் ஹரிஹரன்)

டூயட் பாடல். கும்கி படத்தில் ’வயலின்’ பாடல் போல்.. இந்த பாடலிலும் வயலின் அட்டகாசப்படுத்துகிறது. வரிகளும், இசையும் சுமார் ரகம் தான்.

மேலும், மேல இருக்கற 4 பாடல்களின் கரோக்கிகளும் சீ.டியில் அடக்கம்.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் ரம்மி ரசிக்கும்படி இருக்கு!


பொதுவாகவே விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்கள் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



2013–ல் கலக்கிய ஹீரோக்கள்!

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.

ரஜினி:

இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட வெளிவராதது ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றம். கோச்சடையானை மெருகேற்றுகிறோம், மெருகேற்றுகிறோம் என்று சொல்லியே 2 வருடத்தை ஓட்டிவிட்டார்கள். 2014ம் ஆண்டிலாவது கோச்சடையான் வெளிவரும் என்று நம்புவோம்.

கமல்:

சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசின் தடைகள், வெளிநாட்டுக்கு ஓடுவேன், டிடிஎச்சில் வெளியிடுவேன் என்ற கமலின் அறிவுப்பு என பல தடதடக்களை தாண்டி ரிலீசானது விஸ்வரூபம். இந்த பரபரப்புகள் தந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியே விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்கிறது. அதே வேகத்தில் விஸ்வரூபத்தில் மீதமிருக்கம் காட்சிகளோடு இன்னும் சில காட்சிகளை சேர்த்து விஸ்வரூபம் 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய்:

தலைவா என்ற தலைப்பே விஜய்யின் அரசியல் அச்சாரம் என்று பரபரப்பை கிளப்பியது. அதே பரபரப்பில் படம் வெளியாக இருந்த நேரத்தில் விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகளை தலைவாவும் சந்தித்தது. அரசு தடை, விஜய் உண்ணாவிரத அறிவிப்பு, தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பத்து நாட்களுக்கு பிறகு தலைவா ரிலீஸ் ஆனது. விஸ்வரூபத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி உதவியதைப்போல தலைவாவுக்கு உதவவில்லை.

அஜீத்:

பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த ஆரம்பம். தடதடவென ரிலீசாகி. அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தலயின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நயன்தாராவின் அக்மார்க் கிளாமர். ஆர்யா டாப்ஸியின் ரொமான்ஸ் என பக்குவம் சரியாக சேர ஆரம்பம் ரசிகனுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.


சூர்யா:

சிங்கிள் படம் தந்தாலும் சூர்யாவின் சிங்கம் 2 பாய்ச்சல் முதல் பாய்ச்சலைவிட அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் "ஓங்கி அடிச்சா ஒண்ணறை டன் வெயிட்" என்றவர் இரண்டாம் பாகத்தில் "பாய்ந்தடிச்சா பத்தரை டன் வெயிட்"னு புரூப் பண்ணினார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் தயாரிப்பாளரின் கேஸ் பாக்சை நிரப்பிய விதத்திலும் சிங்கத்தின் கர்ஜனை பலமாக இருந்தது.

விக்ரம்:

விக்ரம் நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் டேவிட். சதா தண்ணியடித்து அலையும் அந்த கோவா டேவிட் வேடம் விக்ரமின் இமேஜை கோவா கடலுக்குள் தூக்கி போட்டது. ஐ வந்து கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆர்யா:

சேட்டையும், இரண்டாம் உலகமும் ஆர்யாவை அமுக்கியபோதும் ராஜாராணி கை தூக்கிவிட்டது. இரண்டாம் உலகத்தின் இரண்டு வருட உழைப்பு வீணாகி ஆர்யாவுக்கு அது இன்னொரு நான் கடவுள் ஆகிப்போனது. சேட்டையில் சந்தானத்துடன் நடித்த பாத்ரூம் காமெடிகள் கண்டு ரசிகர்கள் முகம் சுழித்தார்கள்.

தனுஷ்:

மரியானும், நய்யாண்டியும் தமிழ் நாட்டில் மழையில் நனைந்பட்டாசாய் நமத்துப்போக இந்தி ராஞ்சனா ராக்கெட் வானத்தில் வண்ணம் கூட்டியது. பாலிவுட்டில் சுள்ளானின் கணக்கை 2013 துவக்கி வைத்தது.

கார்த்தி:

அலெக்ஸ் பாண்டியனும், அழகுராஜாவும் கார்த்தியை கைவிட பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் தெம்பானார். கதை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை 2013ல் கற்றுக் கொண்டார்.

ஜீவா:

டேவிட் அவுட் கொடுக்க என்றென்றும் புன்னகையில் மெல்ல சிரித்தார். தொடர் தோல்விகளுக்கு அரைப்புள்ளி வைத்தார்.

சசிகுமார்:

குட்டிப்புலி மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை. ஏ செண்டர் மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பி அண்ட் சியில் அள்ளியது கலெக்ஷனை. சசிகுமார் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சித்தார்த்:

தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் இவர் ஆந்திரத்து சிம்பு. இப்போதுதான் தமிழ்நாட்டு பக்கம் வெற்றிகளை பார்க்கிறார். உதயம் என்.எச் 4 ஆக்ஷன், தீயா வேலை செய்யணும் குமாரு காமெடியென சித்தார்த்துக்கு 2013 சிரிப்பு ஆண்டுதான்.

ஜெயம்ரவி:

இவருக்கு இது சோகமான ஆண்டு இரண்டு வருடங்கள் அமீருடன் இணைந்து, கடுமையா உழைத்த ஆதிபகவன் மட்டும் ரிலீசானது. அவர் மிகவும் எதிர்பார்த்த ஆதிபகவன் அவரை கைவிட்டது.

விஷால்:

சமர் தராத வெற்றியை பட்டத்து யானை தரும் என்று நம்பினார். அது கீழே தள்ளியது. விழந்தவரை காப்பாற்றியது பாண்டிய நாடு. சொந்தப் படம் என்பதால் பாண்டியநாட்டு கலெக்ஷனை வைத்து பட்ட கடன்களை அடைத்து விட்டு உற்சாகமாகிவிட்டார்.

சிவா:

தில்லுமுல்லு வெற்றியுடன் 2013 ருசிக்க ஆரம்பித்தவருக்கு அடுத்து வந்த சொன்னா புரியாது, வணக்கம் சென்னை இரண்டும் தில்லுமுல்லு செய்து திக்குமுக்காட வைத்து விட்டது.
(அடுத்து வருகிற மூன்று பேரும்தான் 2014 ரேஸில் முன்னால் ஓடக்கூடியவர்கள். போட்டியும் இவர்களுக்குள்தான்)

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதியின் தொடர் விஜயத்தின் வரிசையில் இந்த ஆண்டு கணக்கில் சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும். இரண்டுமே துட்டு, ஹிட்டு இரண்டையும் சந்தித்து சாரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன்:

இந்த வருடம் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஒரே ஹீரோ. கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் தொட்டதெல்லாம் பொன்னானது சாரி... நடிச்சதெல்லாம் ஹிட்டானது. முதல் படத்துக்கு 5 லட்சமும், அடுத்து படத்துக்கு 50 லட்சமும் சம்பளம் வாங்கியவர் இப்போது வாங்குவது 5 கோடி.

விமல்:

நிகழ்கால ஜெமினி கணேசன் இவர். இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் இவர்தான். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, ஜன்னல் ஓரம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல் என மொத்தம் 5 படங்கள். கே.பி.கி.ர, தேசிங்கு ராஜா ஹிட் படங்கள். ஜன்னலோரம், மூன்று பேர் மூன்று காதல் ஆவரேஜ். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு பிளாப் என வெரைட்டி ரைஸ் பரிமாறினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & Dinamalar



இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

ஆக்ரோஷமான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே படத்தில் ஒரு கதாநாயகி என இருந்த தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக சற்று அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது.

வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது ரூட்டில் பயணிக்கும் இளைஞர்களை தமிழ் சினிமாவில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் மிக சொற்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் சூதுகவ்வும், யாருடா மகேஷ் படங்கள் தயாராகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாராகும் இன்னொரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். "சூது கவ்வும்" வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் 'ரௌத்திரம்' இயக்குனர் கோகுல் இயக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா".

நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இப்படம் என்றார் கோகுல்.

விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார்.

'சுமார் மூஞ்சி குமார்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கும் பசுபதியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைக்கிறார். நடனம் ராஜூசுந்தரம். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.



சென்னையின் இதயப்பகுதியான ஜெமினி பாலத்தின் கீழே, குதிரை பந்தயத்தை தமிழகத்தில் ஒழித்ததன் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் குதிரை சிலையில் நாயகன் ஹாயாக படுத்திருப்பது போன்ற படத்தின் பர்ஸ்ட் லுக்கே புன்னகையை வரவழைக்கிறது.

பாதி ஊரை கையாலே காலி செய்யும் சூப்பர் ஹீரோக்களுக்கு நடுவில் இப்படிப்பட்ட படங்கள் அமைந்தால் அது ஆரோக்கியமானதாக அமையும் என்பதே எனது(பலரின்) கருத்து.

இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி

இந்தப் படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களில் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது இந்த டிரைலர்.

இரண்டு நாட்களில் இத்தனை ஹிட்ஸ்களை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டிரைலர் அள்ளியிருபபது குறித்த செய்தியைக் கேட்ட விஜய் சேதுபதி இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். இவரது படங்களில் இரண்டே நாளில் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்ட டிரைலர் இதுதான் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணமாம்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

இப்படத்தின் First Look Poster-களே வித்தியாசமாக இருந்த நேரத்தில், படத்தின் Teaser மற்றும் Pray Song வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது.



Pray Song பாடல் வரிகள்:

ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டுப் போயிட்டா
அந்தப் பொண்ண வெறுப்பு ஏத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் PRAY பண்ணுங்கடா
அவ PARENTSக்காக PRAY பண்ணுங்க
ஏன், அவ புருஷன், புள்ளக்குட்டிங்களுக்கும் சேர்த்தே PRAY பண்ணுங்கடா… PRAY பண்ணுங்க…

ஏய் பொண்ணே உனக்காகத்தான்… தினம் PRAY பண்ணுவேன்…
ஓம் ஸ்வாகா, மாகா, உங்கக்கா மக்கா...
பொண்ணே உனக்காகத்தான் தினம் PRAY பண்ணுவேன்…

உன் செல்போனுல பேலன்ஸ் மறைஞ்சுடும்டி...
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நிறைஞ்சிடும்டி...
உன் ஏடிஎம் கார்ட் இரண்டும் தொலைஞ்சிடும்டி...
அது கிடைச்சாலும் PIN NUMBER மறந்திட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

காலேஜ் பசங்கல்லாம் AUNTYன்னு அழைக்க வேண்டி PRAY பண்ணுவேன்...
DRAINAGE குழில நீ விழுந்து குளிக்க தோண்டி PRAY பண்ணுவேன்...
தூங்கப் போனா தூங்க முடியாமத்தான் கொசு புடுங்கிட PRAY பண்ணுவேன்...
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா, பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

உன் பெஸ்ட் FRIENDக்கு அழகான புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
வழுக்கைத் தலயோட உனக்கொரு புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட நான் சத்தியமா PRAY பண்ணுவேன்...
அந்தப் பத்தும் லவ் பண்ணாமலே என்னைப் போல மாப்பிள்ளைய நீயும் தேட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… அங்கு PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

நீ BIKEல போனா போலீஸ் நிறுத்தணும்டி...
நீ ஜாகிங் போனா நாய் துரத்துணும்டி...
உன் GIRL FRIENDS எல்லாம் பேயா மாறணும்டி...
உன் BOY FRIENDS எல்லாம் GAY-ஆ மாறத்தான் PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்… நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : Yarlminnal



சூது கவ்வும் (2013) - விமர்சனம்

"பீட்ஸா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித் தேடித்தர வெளிவந்திருக்கும் ‌மற்றுமொரு படம்தான் "சூதுகவ்வும்".

தமிழ் சினிமா பார்க்காத கதைகளாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதிக்கும், அவரிடம் சொன்ன கதையை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கும் புதிய இயக்குநர் நளன் குமாரசாமிக்கும் முதல் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்.


படத்தோட கதை என்னனா ...

காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள்.

மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது ஐடியா சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள்.

மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார். இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்துகொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் போலீஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர்.

அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதிக்கு போன் போட்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால், இதற்கு அடிபணியாத அரசியல்வாதி போலீஸ் உதவியை நாடுகிறார்.

இதனால் பயந்துபோன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின்படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க ஐடியா கூறுகிறான்.

அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகன் ஐடியாப்படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும்போது பிரச்சினை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன்.

இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ போலீஸ்காரரை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய்சேதுபதி
அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொண்டார் போலும்.

படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார்.

கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது.

யோக் ஜெப்பி
சைகோ போலீஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு போலீசாக மாற்றியதுதான் ஏமாற்றம்.

ராதா & ராதாரவி
முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி
அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம்வந்து நம்மையும் வசீகரிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்
நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கருணாகரன்
எம்.எஸ்.பாஸ்கர் மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன.



இயக்குனர் நலன் குமாராசாமிஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள்.

இந்த படத்தின் நிஜ ஹீரோவே திரைக்கதைதான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல், படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் அவர்களது பெயரையும் தேர்வு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பிறகு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை.

மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

இசை சந்தோஷ் நாராயணன்
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. ‘காசு துட்டு மணி மணி’ கவர்கிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
சூது கவ்வும் - நிச்சயம் வெல்லும். லாஜிக் பார்க்காமல் சிரித்து விட்டு வரலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சூது கவ்வும் (2013) - பாடல் விமர்சனம்

திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்ஸ்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சூது கவ்வும்'.

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் மூலம் வெற்றியை குவித்த விஜய் சேதுபதியின் அடுத்த படம் சூது கவ்வும். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிக்க படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தினை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை நலன் குமாரசுவாமி இயக்க, ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். வெளியாகியிருக்கும் டீசர், படத்தை பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. வித்தியாசமான நடிப்பு இல்லா விட்டாலும் தனக்கேற்ற திரைக்கதையை தேர்வு செய்து வெற்றி காண்பது விஜய் சேதுபதி தாரக மந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



படத்தில் நாற்பது வயது நாயகனாக விஜய் சேதுபதி, இளமை நாயகி சஞ்சிதா ஷெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். விறுவிறுப்பான கதையோட்டத்தில் சிம்ஹா, அசோக், ரமேஷ், நெல்லை சிவா, தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ராதாரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணின் ஆர்ப்பாட்டமான இசையில் "மாமா டவுசுறு...", "காசு பணம் துட்டு மணி..." போன்ற கருத்தாழமிக்க பாடல்களை கணேஷ், முத்தமிழ், கானா பாலா ஆகியோர் எழுதியுள்ளார்கள்.

ஒவ்வொரு பாடலும் பல காலங்களைக்கடந்து நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச்செல்கிறது. போலித்தனமான சமாளிப்புகள் ஏதுமின்றி அந்த அந்தக்காலங்களில் உபயோகித்த இசைக்கருவிகளை வைத்து செவிக்குணவு கொடுத்திருக்கிறார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம் வாருங்கள்...

01. கம் நா கம் கம்னாட்டி கோ...

சின்னா கணேஷ் குமார் குரல்களில் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு ராப் இசை. விஜயகாந்தின் 'ம்ம்ம்... ஆத்த வரட்டா..' டயலாக் சொருகிய இடம் அருமை. அதிரவைக்கும் இசையில்லாது மைல்டாக அடுக்கடுக்காக ராப் பாடலுக்கேயுரித்தான அளவில் வார்த்தைகளை இடையிடையே அடுக்கி வைத்து ரஹ்மானின் பழைய "பேட்டை ராப்" பை ஞாபகப்படுத்துகிறது.

02. மாமா டவுஸர் கழண்டுச்சு...

ஆண்ட்ரியா பின்னி பெடலேடுத்த பாடல். "மன்மதன் அம்பு"வில் அமைந்த ஒரு பாடல் 'Whos the Hero?' பாடல் வகையை சேர்ந்தது. பாட்ட கேட்கும்போதே ஆடனும் போல இருக்கு.

03. எல்லாம் கடந்து போகுமடா...

கோவை ஜலீல்-ன் குரல் Period Film Music ன் Feel கொண்டு வருவதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. எம்ஜியார் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா..." என்று குதிரையில் சென்றுகொண்டே பாடிக்கொண்டு செல்வது போல அமைந்திருக்கிறது. தனியாக ஒரு தபேலாவும் , கொஞ்சம் வயலினுமாக நம்மை அந்த 50-60 காலங்களுக்கு வெகு எளிதாகக் கூட்டிச்செல்கிறது.

04. தீம் மியூசிக்(Sudden Delight)...

இந்த தீம் மியூசிக், ஜேம்ஸ் பாண்ட்-ன் வழக்கமான நம் காதுகளுக்கு புளித்துப்போன பின்னணி இசையின் பாங்கில் அமைத்திருப்பது ரசிக்கும்படியில்லை. புதிதாக ஏதாவது செய்திருக்கலாம்.

05. நான் இமை ஆகிறேன்...

அருமையான வயலின் இழைத்து இழைத்து ஆரம்பிக்கிறது. தாளமேயில்லாது வெறும் வயலினும் பின்னால் கூடவே வந்து கட்டிப்போடுகிறது கேட்பவரை. ஒரு Christmas Carol கேட்ட பீலிங் வருவது இயற்கை. பல இழைகளாக வெவ்வேறு தளங்களில் ஒலிக்கும் வயலின் இழைகள் மனதை உறிஞ்சிக்கொண்டு செல்கிறது. "திவ்யா ரமணி" உணர்ந்து பாடியிருக்கிறார்.

06. காசு பணம் துட்டு Money Money...

கானா பாலா & அந்தோனி தாசன் குரல்களில் Mild Rap ஆக ஒலிக்கிறது இந்த காசு பணம் துட்டு Money Money. நன்கு வெறும் கையால் தாளம் போட்டுக் கொண்டே ரசிக்கலாம் இந்தப்பாடலை. பின்னால் ஒலிக்கும் போலீஸ் சைரன் அவ்வப்போது வந்து போய் அல்ர்ட் செய்துவிட்டுப்போகிறது. மிகவும் எளிமையாக Bathroom Singers-க்காகவே இசைத்திருக்கிறார் சந்தோஷ்.


சூது கவ்வும் பாடல்கள் ரொம்ப ஃப்ரெஸ்ஸாகவும் உற்சாகம் கொடுப்பதாகவும் இருக்கிறது. நேத்து நைட் தான் டவுன்லோட் செஞ்சிக்கேட்டேன் "கம் நா கம் கம்னாட்டி கோ" தான் ரொம்ப பிடிச்சிருக்கு "காசு பணம் ..." பாட்டும் காலையிலிருந்து ரிப்பிட்டில் ஓடிக்கிட்டு இருக்கு. "ஓ மாமா டவுசர் கழண்டுச்சு..." நல்லாயிருக்கு. ஏற்கனவே ட்ரைலர் பார்த்ததும் படம் பார்க்கனும் என்று முடிவு செஞ்சாச்சு...இந்த பாடல்கள் வேற இன்னும் எதிர்பார்ப்பை ஏத்தி விடுது...

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் சூது கவ்வும் பாடல்கள் மிக அருமை. புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Chinnappayal blog.



வெற்றிப்பட நாயகன் - விஜய் சேதுபதி

வெற்றிப்பட நாயகன்

2012-ல் சத்தமில்லாமல் நுழைந்து வெற்றிப்படங்களில் நடித்து தனது பெயரை ஆணித்தரமாக பதிய வைத்த நாயகன் விஜய் சேதுபதி. அது என்னவோ விஜய் என்று பெயர் வைத்தாலே ஜெயம் தான் போல.

விஜய் சேதுபதி, பல நல்ல நல்ல கதையம்சம் கொண்ட குறும்படங்களில் நடித்தவர். இவர் நடித்த குறும்படங்களில் சில துரு, பெட்டி கேஸ் ஆகியவை. இந்த நடிப்பும் இவருக்கு நல்ல அடித்தளத்தை உருவாகியது.

அறிமுகம்

தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.



கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். முதல் படத்தில் நாயகன், பின்பு ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் நடித்தார், அடுத்த படத்தில் வில்லன் மீண்டும் இரண்டு படங்களில் நாயகன் என்று வித்தியாசத்தை காட்டும் நடிகன்.


2012ல் வெளிவந்த சுந்தரபாண்டியன், பிட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்து படமும் வெற்றி பெற்றதால் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்துள்ளார் விஜய் சேதுபதியின். மேலும் இந்த வெற்றிகள் புதுமுக இயக்குனர்களையும் ஊக்கப்படுதியிருக்கிறது. அதன் பலனாக கை மேல் படங்கள்.



இதையடுத்து 2013ல் கைவசம் உள்ள படங்கள் புதுமுக இயக்குனர் நளன் இயக்கத்தில் "சூது கவ்வும்", புதுமுக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் "பண்ணையாரும் பத்மினியும்" மற்றும் புதுமுக இயக்குனர் கே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் "ரம்மி".

பண்ணையாரும் பத்மினியும்

மேஜிக்பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிக்கும் படம் பண்ணை யாரும் பத்மினியும். இதில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர்.

நாயகி தேர்வு நடக்கிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.டி. அருண்குமார் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். யதார்த்தமான கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

பண்ணையார் ஒருவர் கார் வாங்குகிறார். ஆனால் அவருக்கு அதை ஓட்ட தெரியாது. எனவே டிராக்டர் ஓட்டும் முருகேசனை அழைத்து டிரைவராக வைத்துக் கொள்கிறார். அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. காமெடி, படமாக தயாராகிறது.

சென்டிமென்ட் இருக்கும். இந்த படத்தில் பத்மினி கார் ஒன்று முக்கிய கேரக்டரில் வருகிறது. இவ்வகை கார்களை வைத்து ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த படம் வந்த பிறகு பத்மினி கார் வைத்திருப்பவர்கள் பேசப்படுவர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: கோகுல் பெனாஸ். எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.


ரம்மி

ரம்மி தமிழ்தானா? இந்தப் படத்தை முந்தையப் படங்களைப் போலவே அறிமுக இயக்குனர் ஒருவர்தான் இயக்குகிறார். பெயர் பாலகிருஷ்ணன் கே. முந்தையப் படங்களுக்கு மாறாக இதுவொரு கிராமத்து சப்ஜெக்ட். பிரேம்குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விமல் களவாணி என்ற ஒரே படத்தில் உச்சாணிக்கு சென்றது போல் சேதுபதியின் கேரியர் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. அவரது பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் ஸ்கிரிப்ட் ஓரியண்ட் என்பதால் இருக்கலாம்.

ரம்மியும் ஸ்கிரிப்டுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

வெற்றி மீது வெற்றி குவிந்து வரும் விஜய் சேதுபதிக்கு 2013ம் வருடம் ஒரு வெற்றி வருடமாக அமைய வாழ்த்துக்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top