Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

2013–ல் கலக்கிய ஹீரோக்கள்!

2013ல் ஹீரோக்களின் ரேஸ் பலமாகத்தான் இருந்தது. சிலர் ஓடி ஜெயித்தார்கள், சிலர் தடுக்கி விழுந்தார்கள். சிலர் விழுந்து எழுந்து ஓடினார்கள். இந்த சுவாரஸ்மான ரேஸ் பற்றி பார்ப்போம்.

ரஜினி:

இந்த ஆண்டும் ரஜினி படம் வெளிவரவில்லை. நவம்பர் 12ல் அவரது கோச்சடையான் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். கடைசியில் ஆடியோ கூட வெளிவராதது ரசிகனுக்கு பெருத்த ஏமாற்றம். கோச்சடையானை மெருகேற்றுகிறோம், மெருகேற்றுகிறோம் என்று சொல்லியே 2 வருடத்தை ஓட்டிவிட்டார்கள். 2014ம் ஆண்டிலாவது கோச்சடையான் வெளிவரும் என்று நம்புவோம்.

கமல்:

சில அமைப்புகளின் அச்சுறுத்தல்கள், அரசின் தடைகள், வெளிநாட்டுக்கு ஓடுவேன், டிடிஎச்சில் வெளியிடுவேன் என்ற கமலின் அறிவுப்பு என பல தடதடக்களை தாண்டி ரிலீசானது விஸ்வரூபம். இந்த பரபரப்புகள் தந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியே விஸ்வரூபத்தை வெற்றிப் படமாக்கிறது. அதே வேகத்தில் விஸ்வரூபத்தில் மீதமிருக்கம் காட்சிகளோடு இன்னும் சில காட்சிகளை சேர்த்து விஸ்வரூபம் 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.

விஜய்:

தலைவா என்ற தலைப்பே விஜய்யின் அரசியல் அச்சாரம் என்று பரபரப்பை கிளப்பியது. அதே பரபரப்பில் படம் வெளியாக இருந்த நேரத்தில் விஸ்வரூபம் சந்தித்த பிரச்சினைகளை தலைவாவும் சந்தித்தது. அரசு தடை, விஜய் உண்ணாவிரத அறிவிப்பு, தயாரிப்பாளரின் கண்ணீர் பேட்டி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் பத்து நாட்களுக்கு பிறகு தலைவா ரிலீஸ் ஆனது. விஸ்வரூபத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி உதவியதைப்போல தலைவாவுக்கு உதவவில்லை.

அஜீத்:

பெயர் குழப்பத்தில் ஆரம்பித்த ஆரம்பம். தடதடவென ரிலீசாகி. அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தலயின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், நயன்தாராவின் அக்மார்க் கிளாமர். ஆர்யா டாப்ஸியின் ரொமான்ஸ் என பக்குவம் சரியாக சேர ஆரம்பம் ரசிகனுக்கு நல்ல விருந்தாக அமைந்து விட்டது.


சூர்யா:

சிங்கிள் படம் தந்தாலும் சூர்யாவின் சிங்கம் 2 பாய்ச்சல் முதல் பாய்ச்சலைவிட அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் "ஓங்கி அடிச்சா ஒண்ணறை டன் வெயிட்" என்றவர் இரண்டாம் பாகத்தில் "பாய்ந்தடிச்சா பத்தரை டன் வெயிட்"னு புரூப் பண்ணினார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டிலும் தயாரிப்பாளரின் கேஸ் பாக்சை நிரப்பிய விதத்திலும் சிங்கத்தின் கர்ஜனை பலமாக இருந்தது.

விக்ரம்:

விக்ரம் நடிக்காமல் தவிர்த்திருக்க வேண்டிய படம் டேவிட். சதா தண்ணியடித்து அலையும் அந்த கோவா டேவிட் வேடம் விக்ரமின் இமேஜை கோவா கடலுக்குள் தூக்கி போட்டது. ஐ வந்து கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஆர்யா:

சேட்டையும், இரண்டாம் உலகமும் ஆர்யாவை அமுக்கியபோதும் ராஜாராணி கை தூக்கிவிட்டது. இரண்டாம் உலகத்தின் இரண்டு வருட உழைப்பு வீணாகி ஆர்யாவுக்கு அது இன்னொரு நான் கடவுள் ஆகிப்போனது. சேட்டையில் சந்தானத்துடன் நடித்த பாத்ரூம் காமெடிகள் கண்டு ரசிகர்கள் முகம் சுழித்தார்கள்.

தனுஷ்:

மரியானும், நய்யாண்டியும் தமிழ் நாட்டில் மழையில் நனைந்பட்டாசாய் நமத்துப்போக இந்தி ராஞ்சனா ராக்கெட் வானத்தில் வண்ணம் கூட்டியது. பாலிவுட்டில் சுள்ளானின் கணக்கை 2013 துவக்கி வைத்தது.

கார்த்தி:

அலெக்ஸ் பாண்டியனும், அழகுராஜாவும் கார்த்தியை கைவிட பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் தெம்பானார். கதை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை 2013ல் கற்றுக் கொண்டார்.

ஜீவா:

டேவிட் அவுட் கொடுக்க என்றென்றும் புன்னகையில் மெல்ல சிரித்தார். தொடர் தோல்விகளுக்கு அரைப்புள்ளி வைத்தார்.

சசிகுமார்:

குட்டிப்புலி மீடியாக்களுக்கு பிடிக்கவில்லை. ஏ செண்டர் மக்களுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் பி அண்ட் சியில் அள்ளியது கலெக்ஷனை. சசிகுமார் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

சித்தார்த்:

தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் இவர் ஆந்திரத்து சிம்பு. இப்போதுதான் தமிழ்நாட்டு பக்கம் வெற்றிகளை பார்க்கிறார். உதயம் என்.எச் 4 ஆக்ஷன், தீயா வேலை செய்யணும் குமாரு காமெடியென சித்தார்த்துக்கு 2013 சிரிப்பு ஆண்டுதான்.

ஜெயம்ரவி:

இவருக்கு இது சோகமான ஆண்டு இரண்டு வருடங்கள் அமீருடன் இணைந்து, கடுமையா உழைத்த ஆதிபகவன் மட்டும் ரிலீசானது. அவர் மிகவும் எதிர்பார்த்த ஆதிபகவன் அவரை கைவிட்டது.

விஷால்:

சமர் தராத வெற்றியை பட்டத்து யானை தரும் என்று நம்பினார். அது கீழே தள்ளியது. விழந்தவரை காப்பாற்றியது பாண்டிய நாடு. சொந்தப் படம் என்பதால் பாண்டியநாட்டு கலெக்ஷனை வைத்து பட்ட கடன்களை அடைத்து விட்டு உற்சாகமாகிவிட்டார்.

சிவா:

தில்லுமுல்லு வெற்றியுடன் 2013 ருசிக்க ஆரம்பித்தவருக்கு அடுத்து வந்த சொன்னா புரியாது, வணக்கம் சென்னை இரண்டும் தில்லுமுல்லு செய்து திக்குமுக்காட வைத்து விட்டது.
(அடுத்து வருகிற மூன்று பேரும்தான் 2014 ரேஸில் முன்னால் ஓடக்கூடியவர்கள். போட்டியும் இவர்களுக்குள்தான்)

விஜய் சேதுபதி:

விஜய் சேதுபதியின் தொடர் விஜயத்தின் வரிசையில் இந்த ஆண்டு கணக்கில் சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும். இரண்டுமே துட்டு, ஹிட்டு இரண்டையும் சந்தித்து சாரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன்:

இந்த வருடம் ஹாட்ரிக் ஹிட் அடித்த ஒரே ஹீரோ. கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் தொட்டதெல்லாம் பொன்னானது சாரி... நடிச்சதெல்லாம் ஹிட்டானது. முதல் படத்துக்கு 5 லட்சமும், அடுத்து படத்துக்கு 50 லட்சமும் சம்பளம் வாங்கியவர் இப்போது வாங்குவது 5 கோடி.

விமல்:

நிகழ்கால ஜெமினி கணேசன் இவர். இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் இவர்தான். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, ஜன்னல் ஓரம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல் என மொத்தம் 5 படங்கள். கே.பி.கி.ர, தேசிங்கு ராஜா ஹிட் படங்கள். ஜன்னலோரம், மூன்று பேர் மூன்று காதல் ஆவரேஜ். ஜில்லுன்னு ஒரு சந்திப்பு பிளாப் என வெரைட்டி ரைஸ் பரிமாறினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google & Dinamalar



சூர்யாவின் ஏழாம் அறிவு - விமர்சனம்

'ஈ & தசாவதாரம்' போன்ற படங்களின் வாயிலாக நான் முதன்முதலாக 'பயோ வார்' பற்றிய விசயங்களை கொஞ்சம் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு இப்போ... ஏழாம்அறிவு படத்தில்...

A.R.முருகதாஸ் கடந்தகால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் பயோவாருடன் தொடர்பு படுத்திய விதம், அவரை ஒரு தேர்ந்த தேடல் கொண்ட திரைக்கதையாளராக அடையாளம் காட்டுகிறது.

தமி‌ழனி‌ன்‌ வீ‌ரம்‌‌, மருத்‌துவ‌ம்‌, தற்‌கா‌ப்‌பு‌ கலை‌களை‌யு‌ம்‌ உலகம்‌ வி‌யக்‌கும்‌ வண்‌ணம்‌ நி‌னை‌வு‌ படுத்‌தி‌யதற்‌கா‌க இயக்‌குநரை‌ மனதார பாராட்டலாம்!

சரி சரி படத்தோட கதை என்ன ....

முதல் அரைமணி நேரத்தில் சொல்லப்படும் கதை - fentastic! அது தமிழர் போதிதருமர் பற்றியது...

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என அனைத்திலும் நிபுணத்துவம் மிக்கவனான பல்லவ மன்னர் குல இளவரசன் போதிதர்மனை அவனது ராஜமாதா சீனாவுக்குப் போகும்படி கட்டளையிடுகிறார். மூன்றாண்டு தரைவழிப் பயணமாக இமயத்தைக் கடந்து சீன கிராமம் ஒன்றில் கால் பதிக்கும் போதி தர்மனை, சீனர்கள் ஒரு ஆபத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஆபத்து 'கொள்ளை நோய்' உருவில் அந்த கிராமத்தைத் தாக்க, நோய் பாதிக்கப்பட்ட முதல் குழந்தையை உயிரோடு துணியில் சுருட்டி காட்டில் தூக்கிப் போட, அந்த குழந்தையை போதிதர்மன் தன் மருத்துவத் திறமையாமல் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறார். அப்போதுதான் போதி தர்மனின் மகத்துவம் அவர்களுக்குப் புரிகிறது. அந்தக் கிராமம் முழுவதுமே அப்போது நோயில் வீழ, போதிதர்மன் அந்த மக்களை நோயிலிருந்து மீட்கிறார். சீனாவின் பிற பகுதி மக்களுக்கும் அந்த நோய் சிகிச்சை முறைகளை கற்பிக்கிறார். கொள்ளை நோயே இல்லாமல் போகிறது.

அடுத்த சில நாட்களில் ஒரு கொள்ளைக் கூட்டம் அந்த கிராமத்தைத் தாக்க, அதிலிருந்து அந்த மக்களை தனது அரிய தற்காப்புக் கலை மூலம் காப்பாற்றுகிறார் போதிதர்மன். அந்த கலையை தங்களுக்கும் கற்பித்துத் தரச் சொல்லி சீனர்கள் கேட்க, அவர்கள் அனைவருக்கும் களறிப் பயட்டு, நோக்கு வர்மம் போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தருகிறார்.

சீனர்களுக்கு செய்த சேவையில் திருப்தியுற்ற போதிதர்மன் மீண்டும் காஞ்சிபுரம் திரும்ப முடிவு செய்கிறார். ஆனால் அந்த சீனர்களோ, போதி இறந்து அவரது உடல் சீனாவில் புதைக்கப்பட்டால் நாடு செழிப்பாகவும் அச்சமின்றியும் இருக்கும் என நம்புகிறார்கள். எனவே போதிக்கு விஷம் கலந்த உணவைக் கொடுக்க, அது விஷ உணவு எனத் தெரிந்தும், அவர்களுக்காக உண்டு இறந்து சீனாவுக்கு உரமாகிறார் போதிதர்மன்.


மீதி கதை என்னாபா... ?

நிகழ்காலத்தில் சென்னையில் ... என மீதி படம் தொடர்கிறது....

தமி‌ழ்‌ நா‌ட்‌டி‌ல்‌ ஆரா‌ய்‌ச்‌சியி‌ல்‌ ஈடுபடும்‌‌ மா‌ணவி‌ சுபா‌, போ‌தி‌தர்‌மனி‌ன்‌ வரலா‌ற்‌றை‌ ஆரா‌ய்‌ந்‌து வி‌யக்‌கி‌றா‌ர்‌. அவன்‌ வா‌ழ்‌ந்‌த பகுதி‌யி‌ல்‌ செ‌ன்‌று அவனது வம்‌சா‌வழி‌‌ ரத்தத்தை சோ‌தி‌த்‌து அதே‌ மரபனு உள்‌ள ஒரு இளை‌ஞனை‌ கண்‌டு பி‌டி‌க்‌கி‌றா‌ள்‌. அவர் தான் சர்க்கஸ் கலைஞர் சூர்யா. அவனை‌ கா‌தலி‌ப்‌பது போ‌ல நடி‌த்‌து, அவனது ஆரா‌ய்‌ச்‌சி‌க்‌கு பயன்‌ படுத்‌த முயற்‌சி‌க்‌கி‌றாள்‌‌.

இந்‌தி‌ய நா‌ட்‌டி‌ல்‌ கொ‌டி‌ய வி‌யா‌தி‌யை‌ உருவா‌க்‌கி‌, அதற்‌கு மருந்‌து தே‌டி‌ தன்‌ நா‌ட்‌டி‌டம்‌ கை‌யே‌ந்‌த வை‌க்‌கவு‌ம்‌, அதன்‌ மூ‌லம்‌ இந்‌தி‌யா‌வை‌ அடி‌மை‌யா‌க்‌க நி‌னை‌க்‌கும்‌ சீ‌னா‌, போ‌தி‌தர்‌மன்‌ பற்‌றி‌ய DNA ஆரா‌ய்‌ச்‌சி‌ செ‌ய்‌யு‌ம்‌ மா‌ணவி‌யை‌(சுருதி) ஒழி‌த்‌து கட்‌டவு‌ம்‌‌, எல்‌லா‌ தி‌றமை‌யை‌யு‌ம்‌ கொ‌ண்‌ட ஒரு இளை‌ஞனை‌(Johnny Tri Nguyen) இந்‌தி‌யா‌வு‌க்‌கு அனுப்‌பு‌கி‌றது.

இதனிடையில் காதலில் விழும் ஹீரோவுக்கு அவனில் தேடல் பற்றிய விஷயம் தெரியவர... இவர்களை அழிக்க வில்லன் சென்னை வருகிறான். வில்லன், சுருதியை கொன்றானா? அவன் போட்ட திட்டம் நிறைவேறியதா? நம்ப ஹீரோ காதல் என்னவானது? என்பதை தியேடரில் மட்டும் சென்று பாருங்க.


எனக்கு பிடித்த சில....

போதிதர்மன் & சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார் சூ‌ர்‌யா‌. போ‌தி‌தர்‌மனா‌க அறி‌முகமா‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ வி‌யக்‌க வை‌க்‌கி‌றா‌ர் சூ‌ர்‌யா‌. முறுக்‌கே‌றி‌ய உடம்‌பு‌, மி‌ரள வை‌க்‌கும்‌ பா‌ர்‌வை‌, பதறவை‌க்‌கும்‌ சண்டை என அபா‌ரமா‌ன தி‌றமை‌களை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ அந்‌தப்‌‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு வலி‌மை‌ சே‌ர்‌க்‌கி‌றா‌ர்‌.

அதே‌ போ‌ல சர்‌கஸ்‌ கலை‌ஞனா‌க ஆடி‌ப்‌பா‌டி‌, கா‌தல்‌ கொ‌ண்‌டு... வி‌ளை‌யா‌ட்‌டு பி‌ள்‌ளை‌யா‌கவு‌ம்‌ கலக்‌குகி‌றா‌ர்‌. பி‌றகு வி‌ல்‌லனை‌ கண்‌டு அதி‌ர்‌ந்‌து, அவனை‌ கண்‌டு ஓடும்‌ போ‌து சரா‌சரி‌ இளை‌ஞனா‌க பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌. 'தி‌ருப்‌பி‌ அடி‌ப்‌பே‌ன்‌' என்‌று உரக்‌க பே‌சுகி‌ற போ‌து உரமே‌ற்‌றுகி‌றா‌ர்‌.‌ சண்‌டை‌க்‌ககாட்‌சி‌யி‌லும்‌, நடனத்‌தி‌லும்‌ அவரை‌ அடி‌ச்‌சுக்‌க முடி‌யா‌து என்‌கி‌ற அளவு‌க்‌கு அவரது தி‌றமை‌ பளி‌ச்‌சி‌டுகி‌றது. Well done & good Job Surya!!!

ஆரா‌ய்‌ச்‌சி‌ மா‌ணவி‌ சுபா‌வா‌க அறிமுக நாயகியாக ஸ்ருதி கமல்ஹாசன்... தமிழில்தான் இது இவருக்கு முதல் படம். எதிர்பார்க்கவே இல்லை இத்தனை அழகாக நடிப்பார் என்று..! அதனை உணர்த்துவது போல் அழகான அளவான நடிப்பு. கமல்ஹாசன் நிச்சயம் பெருமைபட்டு கொள்ளலாம். குளோஸப் காட்சிகளில் வாய்ஸ் மாடுலேஷன் சிறிதளவுகூட மாறாமல், சிந்தாமல், சிதறாமல் இருக்கிறது. Welcome Shuruthi!

வில்லன் நடிகரான அந்த டோங் லீ. நல்ல தேர்வுதான். அடே‌ங்‌கப்‌பா‌... அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌!
ஆனால், அவர் அளவுக்கு சூர்யாவுக்கு குங்பூ தெரியாத்தால் ஹீரோவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறார். Good opening as Villan!!!

ஒபனிக் சாங் + யம்மா யம்மா பாடல் படு அபத்தம். பின்னணி இசை பரவாயில்லை. ஹாரிஸ் கைதட்டல் வாங்கும் இடம் முதல் அரை மணி நேரத்தில் தான். பிறகு கிளைமாக்ஸ் பாடலில்.
எனக்கு பிடித்த வசனம்...
ஏய் எதுக்கு குப்பைத்தொட்டியை தேடற ...?

ஒரு மனுசனைப் பற்றி நல்ல விஷயம் தெரியனுன அவன் படிக்கிற புக்கை பாரு.... கேட்ட விஷயம் தெரியனுனா அவன் வீட்டு குப்பைத் தொட்டியை பாரு.....

எனக்கு அவன் மேல லவ் எல்லாம் இல்ல.... ஆனா அவன் கூட இருந்தா ஒரு சந்தோசம்... தைரியம் எல்லாம் கிடைக்குது.

வீரம் வீரம்னு சொல்லி நாம் இலங்கை சண்டையில தோத்துத்தானே போனோம்.?

அது துரோகம்.... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாம வாழ்த்திட்டு இருக்கோம். ஈழத்துல நாம தோத்ததர்க்கு துரோகம் தான் காரணம்.
சபாஸ் டைரக்டர்

இப்படத்துகாக A.Rமுருகதாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்... பல்வேறு இடங்களில் ஏராளமான தகவல்களை திரட்டியிருக்கிறார்... அவை எல்லாவற்றையும் வீணாக்காமல் செய்திருக்கிறார். அதில் ஓன்று ...
1. யானை மீது ஏறி வரும் ஹீரோ நம்ப ஹீரோயினிக்கு லிப்ட் தருவது புதுமை.

2. நாயிடமிருந்து எவ்வாறு மனிதர்களுக்கு ​நோய் பரவுகிறது... ஒரு மனிதரிடமிருந்து இன்​னொரு மனிதருக்கு எவ்வாறு ​நோய் பரவுகிறது என ​நோய் பரவுவது குறித்த காட்சிப்படுத்தல்கள் குழந்​தைகளுக்கும் புரிய​வைக்கும் விதத்தில் நன்கு படமாக்கப்பட்டிருப்பது நல்ல முயற்சி.
சண்டைக்காட்சிகள்

பீட்டர் ஹெயினின் சண்டைக்காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.மிக விளக்கமாகவும் விவரணையோடும் பல விஷயங்களைச் சொல்லியிருந்தாலும் சில சில இடங்களிள் ஏன்... எதற்கு... எப்படி..? என்ற கேள்வி எழுகின்றது.

வில்லனாக வரும் டோங் லீ நடிகர் யப்பா....?! சண்டை காட்சிகளில் அப்படி ஒரு ஆக்ரோஷம். சண்டை கட்சிகள் உயிரோட்டமாக அமைந்ததற்கு இவருடைய பங்களிப்பு ஒரு முக்கியகாரணம். Congratz!!!

ரவி K.சந்திரனின் ஒளிப்பதிவைப் பற்றி நிறைய பேசலாம். பிரம்மாண்டம் என்பதை உணரவைக்கும் நேர்த்தி. சில இடங்களில் அது மிஸ்ஸிங் ...

படத்துல குறை இல்லையா...?

ஏன் இல்லை.... நிறைய இருக்கு. நீங்கள் சொல்லுங்க ...குறை இல்லாத மனுஷன் இந்த உலகத்துல இருக்கானா ..?!


மிக நல்ல தொடக்கத்திற்கு பாதை அமைத்து, தமிழரின் கலை, பண்பாடு குறித்த வாழ்வியலை வடித்திருக்கும் இயக்குனர் A.R.முருகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில்... அனைத்து தமிழ் மக்களும் பார்த்து பரவசம் அடைய வேண்டிய ஒரு அருமையான படம்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ரத்த சரித்திரம் - சினிமா விமர்சனம்

பழி தீர்த்தல் மனிதனின் உன்னத உணர்வு - இந்த ரத்த சரித்திரம் படத்தின் தாரக மந்திரம்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்க பட்ட படம் இது. ஹிந்தி, ஆந்திர மாநிலத்தில் இரண்டு பாகமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ஒரே பாகமாக வெளியானது. முதல் பாகத்தில் நடத்த காட்சிகளை முதல் அரை மணி நேரத்தில் காட்டிவிடுகிறார்கள்.

இளகிய மனம் + குழந்தைகள் + ரத்தம் பார்த்தா அலர்ஜி போன்றவர்கள் இந்த படத்தை பார்க்காமல் தவிர்ப்பது மிக நன்று.
படத்தோட கதை என்னானா ...
அனந்தபுரத்து பிரதாப்ரவி (விவேக்ஓபராய்)யின் அப்பா ஒரு அரசியல்வாதி. அவரின் கட்சி தலைவர் கிட்டி தனக்கு எதிராக ஜாதி ஓட்டுக்களை சேர்க்கின்றார் என்ற காரணத்தினால் ரவியின் அப்பாவை பக்கத்தில் இருக்கும் நண்பர்களை வைத்தே கொலை செய்து விடுகின்றார்கள்.

தன் அப்பாவை கொலை செய்தவர்களை பழி வாங்கும் விதமாக எதிரிகளை கொல்கின்றான். அனந்தபுரத்தில் தேர்தலில் நின்று மந்திரி ஆகின்றான். ஒரு action team அமைத்து தனக்கு எதிரான அத்தனை பேரையும் கொல்ல சொல்கின்றான். இதில் பல அப்பாவிகளும் அடக்கம்.

அவனை எதிர்க்க யாருமே இல்லை என்ற நிலையில், அவன் மீது சூர்யா, ஒரு கொவை முயற்சி நடக்கின்றான். அவன் ஏன் பிரதாப்ரவியை கொலை செய்யதுடிக்கின்றான். அதன் பின்னணி என்ன? ரவியை கொன்றானா ? என்பது தான் கதை.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்:
1. ராதிகா ஆப்தே
என்ன அழகுடா !!!. எல்லோரையும் ரசிக்க வைக்கும் அழகு அப்படி ஒரு அழகி.!! அவளை மிக அழகாக காட்டியிருக்கிறான். ராம் கோபால் வர்மா ரொம்ப ரசனைக்காரர். வாழ்க! விவேக் ஓபராய் மனைவியாக வருகிறாள்.

ஒரு காட்சியில் விவேக் ஓபராய் அவளை கட்டிப்பிடிப்பது போன்று வரும்... என்னை என்னை சுற்றி ஒரே புகை. (ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ?!)

வன்முறையை காட்டிலும் அன்பு பெரியது என்று சொல்வதும், சூர்யாவை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க அவன் பொண்டாடியை ஒன்னும் செய்யாதீங்க என்பதும், அரசியம் வாதியின் மனைவி எப்படி மற்றவர்களை பற்றி நினைகிறார்கள், அவர்களின் மன போராட்டம் பற்றி மிக அழகாக சொல்லியிருகிறார் ராம்.

2. ராம்கோபால் வர்மா
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க முடிவு செய்து விட்டார். படம் முழுக்க சண்டை + ரத்தம் தான். பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் ஒரு உண்மை சம்பவம் கொண்டு சொல்ல வருகிறார் இயக்குனர். படத்துல வசனங்கள் சும்மா.. நறுக்.. நறுக்!
நான் ரசித்த 7 வசனங்கள் :

1. ரத்தம் சிந்த ஆரம்பிச்சாச்சு, அது நிக்காது.அது தான் ரத்தத்தோட குணம்.

2. நான் சாவைக்கண்டு பயப்படலை, அவனை சாவடிக்காமலேயே செத்துடுவேனோன்னு பயப்படறேன்.

3. உனக்கு பயமா இல்லையா?
இல்லை. சந்தோஷமா வாழறப்பதான் பயம் வரும். இப்போ என் கிட்டே மிச்சம் மீதி இருக்கறது பழி வாங்கனும்கற வெறி மட்டும்தான்.

4. என்னைக் கொல்ல சூர்யாவுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனா எந்தக்காரணத்தை முன்னிட்டும் நான் அவனை கொல்ல மாட்டேன். (தியேடரில் செம கை தட்டு )

5. இப்படியே நீ கனவு கண்டுட்டே இரு, என்னை உன்னால கொல்ல முடியாது.
அப்படியா? முடிஞ்சா நீ தூங்கு பார்ப்போம்!

6. வாழ்க்கைல யாராலயும், எதையும் நிச்சயமா சொல்ல முடியாது.

7. நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள்! ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்.
3. விவேக் ஓபராய்
பிரதாப் ரவி என்ற கதாபாத்திரமாக வாழ்த்திருகிறார். ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. நம் மனதில் பிரம்மாண்டமாய் நிற்கிறார்

வெளியே நடக்கும் அரசியல் போராட்டம், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருவது அவரது நடிப்புக்கு ஒரு சான்று.

பலவிதமான நடிப்பில் நம்மை கவர்கிறார். முதல் பாதியில் ஒரு வெறிகொண்ட மனிதனாக இரண்டாம் பாதியில் ஒரு அரசியல் தலைவனாக, தன் மனசாட்சிக்கு பயப்படும் மனிதனாக, ஒரு ரௌடியாக, நல்ல கணவனாக, வாழ்க்கையில் ஒரு நல்லவன் காலத்தின் கோலத்தில், எப்படி கெட்டவனாக மாறுகிறான் என்பதை பல வித உணர்வுகளை வெளிகொண்டுவண்டு அவரது பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

4. சூர்யா
நந்தா பட பாதிப்பு தெரிகிறது. கட்டுமஸ்தான உடலுடன், சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். கோபப்படும் போது, வில்லனிடம் தோற்கும் போதும், அவனை வெற்றி கொண்ட பின் ஜெயித்துவிடேன் என்று நினைக்கும் போது அவரது முகத்தில் உணர்வுகளை கண்ணிமை, கன்னம், தாடை - எல்லாம் சும்மா துடிக்கிறது + நடிப்பில் மிரட்டியுள்ளார்.

கோர்ட் வளாகத்திலேயே சூர்யா வில்லனின் ஆளை போட்டுத்தள்ளும் இடம் செம திரில்லிங்க்.

5. போலீஸ் அதிகாரி
மிக ஸ்டைலா அடிகடி சிகரட் பிடிப்பதும் + சூர்யாவை கைது செய்ய போகும் இடத்தில் நடக்கும் சம்பவம் என பல இடங்களில் தன் முத்திரையை பதிக்கிறார்.
6. ஒளிபதிவாளர் அமோல் ராத்தோர்
காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். பல விதமான கேமரா கோணங்கள் + பல குளோசப் ஷாட்டுகளும் என மனுஷன் புகுந்து விளையாடியிருகார். தலைகீழ் காட்சிகள் + 360 டிகிரியில் சுற்றும் காட்சி - சில இடங்களை கடுப்பை கிளப்பின.

7. பிரியாமணி சாரியில் சூர்யாவின் மனைவியாக வந்து போகின்றார். சொல்லிகொள்ளும்படி நடிக்க இதில் ஒன்றும் இல்லை.

இன்னும் பல நச்சத்திர பட்டாளமே நடித்து இருக்கு இந்த படத்துல. இசை - படு மோசம். பின்னணியில் சும்மா கத்திகிட்டே இருக்கும்.

ரத்த சரித்திரம் - பார்க்கலாம் - ரத்தமும் கொலைகளும் பிடிக்குமானால்....



ஆதவன் - திரை விமர்சனம்

நேற்று தான் இந்த படத்த பார்த்தேன் காரபக்கம் அரவிந்த் தியேடரில். கூட்டம் நிறைத்து இருத்து. விசில் சப்தம் காதை கிழிக்கும் அளவு... ரசிகர்கள் உற்சாகத்தில்... அவர்களுடன் நானும் ஒருவனாய்.... அமர்திருந்தேன்.

படத்தோட கதை என்னனா ...

அப்பா சாயாஷி ஷிண்டே மற்றும் அண்ணன் ஆனந்த்பாபு உடன் கடத்தல், கொள்ளை, கொலை என்று தப்பான வளர்ப்பால் உருவாகிறார் ஹீரோ ஆதவன்(சூர்யா).

கொல்கத்தாவில் குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி (பரத்முரளி)யிடம் வருகிறது. நீதிபதியைக் கொலை செய்ய வில்லனால் விலை பேசப்படும் சூர்யா, பரத்முரளியின் மீது வைத்த குறி தப்ப, வில்லன் கூட்டம் சூர்யாவின் கூட்டத்தை மிரட்டுகிறது.

பொங்கி எழும் சூர்யா, அடுத்த 10 நாட்களில் அந்த நீதிபதியைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறார். பின்னர், பானர்ஜீ (வடிவேலு)வின் துணையோடு நீதிபதியின் குடும்பத்துக்குள் சென்று - வேலை செய்ய வந்தது போல நடித்து - அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

அங்கே இருக்கும் பெண்கள் (சரோஜா தேவி & co), குழந்தைகளிடம் நல்லவனாக நடிக்கிறான். எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது. அனைவரும் சூர்யாவிடம் அன்பு மழை பொழிய - நீதிபதி தங்கை மகள் தாரா (நயன்தாரா) அவன் மேல் காதல் வயப்படுகிறாள்.

இதனிடையே நம்ப ஹீரோ வந்த வேலையை ஜோரா செய்ய - காருக்கு அடியில் வெடிகுண்டு பொருத்துகிறான். அதில் நீதிபதி தப்புகிறார். பிறகு கிட்டாருக்குள் டைம்பாம் வைத்து கார் டிக்கியில் பொருத்தி வெடிக்க வைக்கிறான். அதிலும் நீதிபதி சாகவில்லை. வில்லன் கூட்டம் நீதிபதியை கொல்ல நேரடியாய் களம் இறங்குகிறது.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஓர் உண்மை தெரிகிறது. அது என்ன உண்மை ...? பரத்முரளியைச் சூர்யா கொன்றாரா ? வில்லன் கூட்டம் நீதிபதியை என்ன செய்தார்கள் என்று மீதி கதையை திரையில் காண்க.

படத்துல எனக்கு பிடித்த/பிடிக்காத சில ..

  • வடிவேல் தான் படத்தின் நிஜமான நாயகன். படத்திற்குப் பலமே நகைச்சுவைக் காட்சிகள் தான். இவரு ரொம்ப நாள் கழிச்சு இந்த படத்துல தான் அடி வாங்காத மாதிரி நடிசிருக்காரு. பானர்ஜீயோட பெயர்க்காரணம்,பொறம்போக்கு - புது விளக்கம், ஜிகர்தண்டா தூத் குடிச்சுட்டு உளறும் காட்சி, பாம் வெச்ச பஸ்ல ஏறிட்டு படாத பாடுபடுறது... இப்படி படம் பூரா மின்னிருக்காரு. மேலும் இவரு, சரோஜாதேவியின் மேக்கப்பை கிண்டல் செய்யும் போதெல்லாம் சி‌ரிப்பில் திரையரங்கு கதிகலங்குது. 'கைப்புள்ளை', 'நாய் சேகர்' வரிசையில் கண்டிப்பா இந்த 'பானர்ஜீ'க்கும் இடம் உண்டு.

  • "சுட்ட பிறகு தலை எனக்குதான்" என்ற ஒரு டயலாக்கை சொல்லி சொல்லியே தியேட்டரை உலுக்கி எடுக்கிறார் மனேபாலா.

  • பத்து வயது கெட்டப்பில் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார் சூர்யா. மற்றபடி அயனில் பார்த்த அதே சூர்யவை தான் இந்த படதில்லும் பார்க்கமுடிகிறது. பெருசா நடிக்க சொல்ல ஒன்னும் இல்ல.

  • மறைந்த மலையாள நடிகர் பரத்முரளியின் நடிப்பு நிறைவு. வழக்கமான சினிமா அப்பாவாக அவரை வீணடித்திருக்கிறார்கள்.

  • நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் சரோஜா தேவியும், ஆனந்த் பாபுவும். சரோஜாதேவி - 'அன்று வந்ததும் அதே நிலா' பாட்டுக்கு அவர் காட்டும் அபிநயம் ... அழகு! 'ஓல்ட் இஸ் கோல்ட்'. ஆனந்த் பாபு - ரொம்ப தான் ஆள் நோடிஞ்சு போய் இருக்கார். அப்பா நாகேஷ் மறைந்த துக்கம் இன்னும் விலகலபோல தெரியுது.

  • நயன்தாரா - அவருக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று புரியவில்லை. பாட‌ல்க‌ளில் க‌ல‌ர்கல‌ராக‌ வ‌ரும் ந‌ய‌ன்தாராவுக்கு வேலையே இல்லை. மேக்க‌ப்பும் அவ‌ரும்... ச‌கிக்கலை. இவரை போலவே, ரமேஷ் கண்ணா. எதற்காக வருகிறார்..?

  • இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ். பாட‌ல்க‌ள் அதே மெட்டு தான் என்றாலும், கேட்ப‌த‌ற்கு ஓகே. ஆனால், பின்னணி இசை கொடுமை. ஒரே இரைச்சல் தான். அரைச்ச மாவையே சும்மா அரைத்துகிட்டு இருந்தா எப்படி சார்...?

  • ஒளிப்பதிவாளர் கணேஷ்-ன் ஒளிப்ப‌திவு சூப்ப‌ர்! சண்டைப் பயிற்சியாளர் பிரான்ஸ் ஆகியோர் தங்களது பணியைத் திறம்பட செய்திருக்கிறார்கள்.

  • கமலை 10 அவதாரம் எடுத்த டைரக்டர் கே எஸ் ர‌விக்குமார் - மீண்டும் ஒரு 'மின்சார கண்ணா' மாதிரி படத்த எடுத்து செய்த தவறையே மீண்டும் செய்துள்ளார்.


ஆதவன் - மசாலா படம்!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை அழகாய் சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய மறக்காமல் ஒரு வோட்டு போடுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top