Showing posts with label அழகு குறிப்பு. Show all posts
Showing posts with label அழகு குறிப்பு. Show all posts

'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?

கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது.

மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக இன்று நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.

அட இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran news paper



பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய...

  • பசு மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள்.

    15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.


  • வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள்.
    நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

    முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

  • நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.
ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran



என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்

எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை கறுப்பு மை பூசி மறைத்து வைப்பது ஆண்களின் வழக்கம்.
எப்போது வயதைக் கேட்டாலும் நான்கைந்து குறைத்தே சொல்வது பெண்களின் பழக்கம்.

இந்த வழக்கத்துக்கும் பழக்கத்துக்கும் ஒரே காரணம், 'இளமை' மனப்பான்மை. அது சரி... என்றும் இளமையாகவே இருக்க முடியுமா?

"யார் தடுத்தாலும் நில்லாமல் முன்னேறிச் செல்லும் ஜல்லிக்கட்டுக் காளைதான் வயசு. ஆனால், உணவுப் பழக்கம் என்கிற மூக்கணாங்கயிறு கொண்டு ஓரளவு உடலைக் கட்டுக்குலையாமல் வைக்கலாம்" என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.

"நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் நியூட்ரிஷன்" அளவீடுகளை மேற்கோள் காட்டி, இளமையை இழுத்துப் பிடிக்க 20 வழிகளைப் பட்டியலிடுகிறார், சென்னை பிங்க் ஃபிட்னஸ் ஸ்டூடியோ ஊட்டச்சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன்.

  1. மூன்று வேளை சாப்பாடு என்பதே பொதுவான நடைமுறை. இந்த 3 உணவுவேளைகளுக்கு இடையிலும் ஏதாவது சாப்பிட வேண்டும். சுண்டல், ஓட்ஸ், சாலட், ஜூஸ், மோர்... இப்படி! குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடுவதால் உடலின் வளர்சிதை மாற்றம் நல்லபடி நிகழும். ஆரோக்கியம் மேம்பட இது அவசியம்.

  2. காலை உணவை திருப்தியாகச் சாப்பிடலாம். மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால் தேவையற்ற தூக்கம் வரும். இரவில் அதிகம் சாப்பிட்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஆண்களுக்கு தினம் 2425 கலோரியும் பெண்களுக்கு 1875 கலோரியும் அனுமதிக்கப்பட்ட அளவு.

  3. கார்போஹைட்ரேட் (50%), புரதம் (30%), கொழுப்பு (15%), வைட்டமின்கள், தாது உப்புகள் (5%)  இவையெல்லாம் அடங்கிய உணவே சரிவிகித உணவு. நமது டயட்டில் இவை அனைத்தும் இருக்க வேண்டும்.

  4. ஒருமுறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும். நாம் பொதுவாக அதிகபட்சம் 7 முறையே மெல்லுகிறோம்.

  5. வாரம் ஒருமுறையாவது கீரை அவசியம். கீரையின் நார்ச்சத்துகள் கொழுப்பைக் கரைக்கின்றன.

  6. உடலின் இறந்த செல்களை நீக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த காய் கனிகளை நிறைய சாப்பிட வேண்டும்.

  7. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம். உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் ஊற வைத்த வெந்தயத்தை மென்று தண்ணீர் குடிக்கலாம்.

  8. தினமும் கைப்பிடியளவு பாதாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட வேண்டும். ‘பாதாம் நிறைய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடும்’ என்பது தவறான கருத்து. தினம் ஒரு பேரீச்சை சாப்பிடலாம்.

  9. மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதம் ஒன்றரை லிட்டர் சமையல் எண்ணெய் போதும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம்.

  10. பாமாயில், வனஸ்பதி, நெய் போன்றவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. கொழுப்பு கூடுகிறது இவற்றால்.

  11. தவிர்க்கமுடியாவிட்டால், வாரம் இரண்டு நாள்கள் சிக்கன் எடுக்கலாம். எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குழம்பில் சேர்த்துச் சாப்பிடுவதே பெஸ்ட். இரவில் அசைவம் வேண்டாம்.

  12. மட்டன், பீஃப் வேண்டுமென்றால் மாதத்தில் ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.

  13. சராசரி மனிதன் ஒருநாளைக்குக் குடிக்க வேண்டிய தண்ணீர் இரண்டரை லிட்டர்.

  14. சிறிய பங்களிப்புதான் என்றாலும் உப்பும் சர்க்கரையும் தேடாத நாக்கே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் 2 முதல் 3 டீஸ்பூன் சர்க்கரை என்பது ஆரோக்கிய அளவு.

  15. பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கலாம். அவை கெட்டுப்போகாமலிருக்க எண்ணெயும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பார்கள்.

  16. தினமும் 2 கப் காபி பருகலாம். கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

  17. இரவில் படுக்கப்போகும் முன் சர்க்கரை சேர்க்காமல் ஒரு டம்ளர் பால் அருந்தலாம்.

  18. கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோயைத் தடுக்கும் ‘ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்’ மீன்களில் அதிகமுள்ளது. வாரம் இருமுறை சேர்க்கலாம்.

  19. குளிர்பானங்களை ஒதுக்குவது நல்லது. பழச்சாற்றில் அதிகம் தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம்.

  20. உணவுப் பழக்கங்களால் வாயைக் கட்டிப் போட்டு வைத்தாலும், உடற்பயிற்சி மிகமிக முக்கியம். தினமும் ஒருமணி நேரமாவது அவசியம்.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



அழகோ அழகு... Six Useful Tips!

மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான். உடலிலும், உள்ளத்திலும் குறை ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும். இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.


1. முகம் பொலிவு பெற...
தேன் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.


2. அழகான உதடுகளுக்கு...

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.

வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால் வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.


3. வறண்ட சருமத்திற்கு...

வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும். 15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.



4. உதடுகள் பொலிவு பெற...

உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும்.


5. கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய...

கண்ணுக்குக் கீழ் உள்ள வீக்கம் குறைய - ஒரு டீஸ்பூன் பச்சை உருளைக் கிழங்கு சாறை அந்த இடத்தில் தடவவும். பத்து நிமிடம் வைத்திருந்து பின் கழுவவும்.


6. முகப்பரு நீங்க...
கொத்தமல்லி – 5 கிராம்
புதினா – 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



சருமத்தை அழகாக்கும் உணவுகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைக் கொண்டுதான் சருமத்தை அழகாக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா ?

அதற்கு சில டிப்ஸ் :

கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கு அது மிகவும் முக்கியமாகிறது. அதனால் எல்லா வகை கீரைகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.

குறிப்பாக, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து இருக்கிறது.

இந்த கீரைகளுடன் விட்டமின் – சி சத்துள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

இதன் முலம் கண்களில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கலாம். முகத்தில் பருக்கள் வருவதும் குறையும். அதிகமாக வறண்ட சருமம் கொண்டவர்கள், உணவில் கொழுப்புச்சத்து நிறைந்த ஆலீவ் ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் உணவுகளை உடல் நலனுக்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியில் 'ஆண்டி ஆக்ஸிடெண்ட்'களான வைட்டமின் – ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் தக்காளியை அடிக்கடி சேர்த்து வந்தால் தோல் மினுமினுப்பாவதுடன், சருமம் கருப்பாவதையும் தடுக்கலாம்.

முதுமை தோற்றம் தவிர்க்க : -
சிலருக்கு இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது. இதை தவிர்க்க விரும்புபவர்கள், ஒரு கைபிடியளவு 'ஸ்ட்ராபெர்ரி' பழங்களையோ அல்லது 3 நெல்லிக்காயையோ தொடர்ந்து சாப்பிடவும். இதன் முலம் இளமை அழகுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இளமை அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
தோல் பளபளப்பாக :-
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
தோல் சுருக்கம் நீங்க :-
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தோல் சொர சொரப்பு நீங்க :-
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல்
முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
கூடுதல் செய்தி :

தாடி 'முடி' தான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை 'ஷேவிங்' செய்யாமல் விட்டு விட்டால் 30 அடி நீளம் வரை வளருமாம்.

தினமும் குளிக்கும்போதும், தலை சீவும்போதும் மனிதன் சராசரியாக 40 முடிகளை இழக்கிறான்.



Related Posts with Thumbnails
 
back to top