Showing posts with label சிறு கதை. Show all posts
Showing posts with label சிறு கதை. Show all posts

தெனாலிராமன் கதைகள் 2

கதை 1 : பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர், "ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!" என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

கதை 2 :கிடைத்ததில் சம பங்குபங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது.

தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Rammalar



ரஜினி சொன்ன குட்டி கதை - 05


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, “நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்” என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்திச்சாங்க. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று குரு கேட்டார். ஒருத்தன் சொன்னான், ‘எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும்’னு. ‘எடுத்துக்கொள்” என்று குரு சொன்னார்.

இன்னொருத்தன், ‘எனக்கு நிம்மதி மட்டும் போதும்’ என்றான். ‘எடுத்துக்கொள்’ என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனைச் சந்திச்சார். ‘எனக்கு பணம் வந்தது. ஆனால் நிம்மதி இல்லை’ன்னு சொன்னான்.

நிம்மதி வேணும்னு கேட்டவன்கிட்ட போனார் குரு. அவனோ, ‘எனக்கு நிம்மதி இருக்கு. சந்தோஷம் இல்லை’ன்னு சொன்னான்.

பணம் கேட்டவனைப் பார்த்து, ‘நீ சம்பாதிச்ச பணத்தை நீயே வச்சிக்கிட்டே. அதனால்தான் நிம்மதி இல்லை”ன்னு குரு சொன்னார்.

அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, “நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்களே”ன்னான்.

“ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு” ன்னு குரு சொன்னார்.

“பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதைச் செய்…”, என்று குரு அறிவுரை சொன்னார்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!

மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.., என்று.

அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.

இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, இலவச உதவிகளை ஏமாத்தி வாங்கினா… உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!



கண்ணதாசனின் குட்டிக்கதைகள்

கண்ணதாசனின் குட்டிக்கதை - குறக்குளி இழுத்தல்

சுடுகாட்டில் அந்த சடலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

சிதைக்குத் தீ மூட்டியதும், சடலம் சூடுபட்டு நரம்புகள் முறுக்கேறி, பிரேதம் எழுந்து உட்காரும். இதை, "குறக்குளி இழுத்தல்" என்பர். அப்படி பிரேதம் எழுந்ததும், வெட்டியான்கள், அந்த உடலைத் தடியால் அடித்து, மீண்டும் படுக்கையில் கிடத்துவர்.

ஒருமுறை, வட்டிக்காரனின் பிரேதம், தீ மூட்டப்பட்டது. பிரேதம் சூடு கண்டதும், குறக்குளி இழுத்து, எழுந்து உட்கார்ந்தது. உடனே வெட்டியான், "வட்டி எல்லாம் வசூலாகி விட்டது!" என்றான்.

மீண்டும் படுத்துக் கொண்டது பிரேதம், நிம்மதியுடன்!


கண்ணதாசனின் குட்டிக்கதை - மகா ஞானி

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை.

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக்காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் "எனக்கு மிக்க மகிழ்ச்சி! ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே !"

"நீயல்ல, குதிரைக் காரன்"

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்..! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !"


கண்ணதாசனின் குட்டிக்கதை - விதி வலியது

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது , "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று கேட்பது அவன் வழக்கம்.

இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் இறக்கமுற்றாள். சிவனிடம் பார்வதிதேவி பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.

சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் பிராப்தம் என்றும், அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை. தாய் அல்லவா ?

"முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள்" என்று சிவபிறான் கூறி விடுகிறர்.

"நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன்" என்று ஈசனிடம் சவால் விடுகிறாள் பார்வதி தேவி.

ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார்.

ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகள் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போடுகிறாள் பார்வதி.

அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென "ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ?" என்ற எண்ணம் வருகிறது.

கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு, இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு செல்கிறான் பிச்சை காரன். வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறுகிறது.

பிச்சைகாரனோ, கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூடைகளை கல் எண்று நினைத்து, கால்களால் உதைத்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.

அடுத்த வீட்டிற்க்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு, குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்துகொண்டு, அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல, "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று வழக்கம்போல் கூவுகிறான்.

விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது...! என்பது இக் கதையின் நோக்கம்.

கொசுறு செய்தி

திருவையாறு பெயர் காரணம் ..?
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு+ஐ(ஐந்து)+ஆறு என்றாகி, அது திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ரஜினி சொன்ன குட்டி கதை - 04

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

நான் தான் ராஜா


ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பபடுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.

1 வருஷம் இல்ல 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்.

எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து "நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு.." கேட்டாரு. அதற்கு ராஜா
"நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."

பயந்தா ஜெயிக்கிறது எப்படி…!


மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.

மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, "போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது" என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.

அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டே தான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது.

இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.

அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங்களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி.
"அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.

நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?," என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கவலை - ஒரு பக்கக் நீதிக்கதை

காட்டில் இருந்த அந்த சிங்கம் தன்னைத்தானே நொந்து கொண்டது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற உறுதியான நகங்களும், பற்களும் இருந்தும் என்ன பயன்? நிம்மதியாய் இருக்க முடியவில்லையே! கேவலம், இந்த சேவல் கூவும் சப்தம் என்னை நடுங்க வைக்கிறது. இம்மாதிரி பயந்துகொண்டே எத்தனை நாளைக்குத்தான் வாழ்வது?" என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டது.


அப்போது அங்கே வந்த யானை, ரொம்பக் கவலையோடு வேகமாய் காதுகளை முன்னும் பின்னும் அசைத்தது. அதைப் பார்த்த சிங்கம், "என்னப்பா, உனக்கு என்ன கவலை? உன்னை எதிர்க்கும் அளவுக்கு எந்த பிராணியாவது இருக்கிறதா? உன் உடலைப் பார்த்தாலே எல்லாம் பயந்து ஓடுமே, நீ எதற்காகக் கவலையோடு இருக்கிறாய்?" என்று கேட்டது.

"இதோ, என் காதுக்கு அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் போய் கொட்டினால், உயிர் போவது போல் வலிக்கும். அதற்காகத்தான் குளவி காதுக்குள் சென்றுவிடாமல் இருக்க, காதுகளை ஆட்டிக்கொண்டே வருகிறேன்" என்றது யானை.

யானை சொன்னதைக் கேட்டதும் சிங்கம் யோசித்தது.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற கவலைதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், நான் கவலையை மட்டுமே நினைத்து வாழ்க்கையில் உள்ள இன்பங்களை இழந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டது.

அன்றுமுதல் கவலையை விட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தது சிங்கம்.

கதையின் நீதி:-

கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், மற்ற இன்பங்கள் காணாமல் போய்விடும்.


ரஜினி சொன்ன குட்டி கதைகள் - 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

ஏன் இங்கே இருக்கோம் ...?!

ஒரு தாய் ஒட்டகத்தை பார்த்து குட்டி ஒட்டகம் "அம்மா எமக்கு அதற்காக நீண்ட கால்கள் உள்ளன" என்று கேட்டது. அதற்கு தாய் ஒட்டகம் "நாம் பாலைவனத்தில் மணல்களுக்குள் நடப்பதற்கு இலகுவாக கால்கள் நீளமாக படைக்கப்பட்டுள்ளது" என்று கூறியது.

"சரி எதற்காக நமது உதடுகள் இவ்வளவு சொரசொரப்பாக உள்ளன" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் வெப்பம் அதிகம் என்பதாலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவுகள் உலர்ந்ததாகவும் மெல்ல முடியாமலும் இருக்கும் என்பதாலும் அதற்கேற்றால் போல உதடுகள் படைக்கப்பட்டுள்ளது" என தாய் ஒட்டகம் கூறியது.

"அப்படியானால் எதற்கு எமக்கு பெரிய கழுத்துக்கள் உள்ளது" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் உணவு, நீர் என்பன கிடைப்பது அரிது என்பதால் கிடைக்கும் உணவு, நீர் என்பவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கவே பெரிய கழுத்துக்கள் படைக்கப்பட்டன" என தாய் ஒட்டகம் பதில் கூறியது.


"அதெல்லாம் சரி பின்னர் எதற்காக நாம் இருவரையும் இங்கு அடைத்து வைத்துள்ளனர்" என்று விலங்கு காட்சிசாலையில் இருந்த அந்த குட்டி ஒட்டகம் தன் தாயை பார்த்து கேட்டது.

இந்தக்கதையின் தாக்கம் என்மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது, உங்களுக்கும் இந்த கதை ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன் என்றார் ரஜினி. இவர் எதனை சொல்ல வருகிறார் என்பது உங்களுக்கும் புரிதிருக்கும் என்று நினைக்கிறன்.

நேரம் நல்லாயிருந்தா…!!!!

ஒரு ஊரில் ஒரு சம்சாரி. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. நூறாண்டு வாழ்ந்த ஒருவரைப் பார்த்தான். ‘இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீர்கலே எப்படி! எப்படி?’ என்று கேட்டான்.

அதற்க்கு அவர், “நான் மாமிசம் சாப்பிடமேட்டேன். தண்ணி அடிக்க மேட்டேன். அதனால் தான்!” என்று பதிலளித்தார்.

லேசான இருமல் சத்தம் கேட்டது. இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.

“எங்கள் அண்ணன்” என்றார் அந்த நூறாண்டு மனிதர். “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்கவேண்டுமே” என்றார் சம்சாரி.


அவரை பார்த்தார். “எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன், தண்ணி அடிப்பேன்” என்றார் நூறாண்டு மனிதரின் அண்ணன். நமக்கு நல்ல நேரம் என்றால் விஷம் சாப்பிட்டாலும் தப்பித்துவிடுவோம். கெட்ட நேரம் என்றால் பாலும் விஷமாகலாம்.”

குறிப்பு: ரஜினியே எதிர்த்திருந்தாலும், நேரம் நல்லாயிருந்துனால ஒருத்தரு போன லோக்சபா தேர்தல்ல அசால்ட்டா எல்லா சீட்டும் ஜெயிச்சாரு. அதே நேரம் இப்போ சரியில்லை எனும்போது – ஒரு பெரிய கூட்டணியில இருந்து கூட – அவரால ஒரு சீட் கூட ஜெயிக்க முடியலே…

ஸோ, எல்லாத்துக்கும் நேரம் ரொம்ப முக்கியம்…..!!

Thanks : Eegarai & Eppoodi
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆணிவேர் - ஒரு பக்கக் கதை!

மதன்-மைதிலி திருமணம் பேசிமுடித்த நாளில் இருந்தே பிரச்சினை தான். பெண் வீட்டிலோ பையன் வீட்டிலோ யாராவது ஒருவர் உப்பு பெறாத விஷயத்துக்குக் கூட முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

இதனால் எந்த நிமிடத்திலும் கல்யாண ஏற்பாடுகள் நின்று விடுமோ என்ற பயம்கூட இருவர் வீட்டிலும் நிலைகொண்டிருந்தது.

மைதிலியின் அப்பா திருமண பத்திரிகை அச்சடித்த கையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து மாப்பிள்ளையின் பெரியப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மாப்பிள்ளையின் பெரியப்பா என்று அவர் நெற்றியில் எழுதியா ஒட்டியிருந்தது? அதனால் யாரோ வயசான பெரியவர் என்ற பட்டியலில் அவரை சேர்த்து விட்ட பெண்ணின் அப்பா அவரை கண்டு கொள்ளாமலே போய் விட்டார்.


அவர் போனாரோ இல்லையோ மாப்பிள்ளையின் பெரியப்பா இதையே ஒரு கொடும் குற்றமாக எடுத்துக்கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.

"என்னை அவமானப்படுத்தியவன் வீட்டில் பொண்ணு எடுத்துத்தான் ஆகணுமா?" என்று அவர் போட்ட கூச்சலில் அந்தப்பக்கமாக போய்க்கொண்டிருந்த ஒரு தெருநாய் கூட வாலை சுருட்டியபடி ஓட்டம் பிடித்தது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாப்பிள்ளையின் அப்பா பராங்குசம், சீர்வரிசைப்பட்டியலில் கடைசியாக பைக்கையும் சேர்த்தார். பைக் கொடுக்கமுடியாவிட்டால் தன் அண்ணனின் ஆசையை நிறைவேற்றிய மாதிரிஆச்சு. பைக் கிடைத்துவிட்டால் அண்ணனின் காட்டுக்கத்தலுக்கு கிடைத்த போனசாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

கையில், பையில் இருந்ததெல்லாவற்றையும் பெண்ணின் கல்யாணத்துக்கு வாரிவிட்ட பெண்ணின் அப்பா செங்கோடன் புதிதாக வந்த 'பைக்' திணிப்பில் நொந்து போய்விட்டார். பைக் பற்றி சொல்லிவிட்டுப்போக வந்த மாப்பிள்ளையின் தூரத்து சொந்தக்காரரிடம் 'குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

அதைப்பார்த்து பயந்துபோன அந்த மனிதர், தோளில் போட்டிருந்த துண்டு பறந்து போவதுகூட தெரியாமல் அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஓட்டமாய் ஒடிப்போய் ஏறிக்கொண்டு விட்டார்.

அதிலிருந்து கடுகு வெடிக்க ஆரம்பித்தது.

எப்படியோ ஊர் பெரிசுகள் தலையிட்டதில் கல்யாணம் முடிந்து இதோ முதல் பந்தி ஆரம்பம்.

வீட்டு பெரிசுகள் இனி எப்படி முட்டிக்கொண்டாலும் மதனும் மைதிலியும் குடும்பத்தை ஓட்டியாகணுமே. ஆயிரம் காலத்துப் பயிராயிற்றே...

எல்லாம் முடிந்து மண்டபம் காலி செய்து மாப்பிள்ளை வீடு வந்தாயிற்று. பெண் வீட்டாரும் கொஞ்சப் பேர் உடன் வந்தார்கள். மாப்பிள்ளை தன் புது மனைவியிடம் "மைதிலி காபி கொண்டா" என்றான்.

மைதிலியும் காபி போட்டு எடுத்து வந்தாள். முதல் சேவகம் தானே... கணவனாகி விட்ட மதனிடம் காபியை நீட்ட, வாங்கிய மதன் கை நழுவ விட்டதில் காபி கொட்டி விட்டது. அதுவும் அவன் கல்யாண பேண்ட் மீது.


இந்த காட்சியை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டாரும் 'ஆஹா கிடைத்து விட்டதடா பிரச்சினை' என்ற சந்தோஷத்தில் நெருங்கினார்கள்.

"கூறுகெட்ட பிள்ளை, முதல் முதலா காபி கொடுக்கிறா. ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா? எப்படித்தான் குப்ப கொட்டப் போறாளோ?"

"திமிர் பிடித்த பையன், எங்கேயோ பார்த்துக்கிட்டு காப்பிய வாங்கினா இப்படித்தான்"

வெறும் வாயை மென்று கொண்டிருந்த கூட்டம் பிரச்சினையைக் கிளப்ப...

மைதிலியும், மதனும் அதிர்ந்தார்கள். இதுவரை எப்படியோ... இப்போது தாலி கட்டியாயிற்று. இனி இவர்களின் கவுரவ பசிக்கு நாம் இரையாகி விடக்கூடாது.

முடிவுக்கு வந்த மாப்பிள்ளை கேட்டான். "மைதிலி, என்னம்மா ஆச்சு?"

"முதன் முதலாய் ஆசையா காபி போட்டுக் கொண்டு வந்தேன். என் கவனக் குறைவினாலே காப்பி கொட்டிப் போச்சு மாமா". பெண் சொன்னாள்.

"இல்லம்மா... ஆசைஆசையாய் நீ போட்டுக் கொண்டு வந்த காபியை அஜாக்கிரதையாய் நான் வாங்கியதால் வந்த வினை. தப்பு என் மேலே தான்".- இது மாப்பிள்ளை.

வார்த்தைகளில் தம்பதியர் விட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தது இரு வீட்டாருக்குள்ளும் அதிர்ச்சி கலந்த வெட்கத்தை ஏற்படுத்தி வைக்க,

புதமண தம்பதியரைப் பார்த்து வாயடைத்து நின்றன பெரிசுகள்.

மைதிலி அடுத்த காபி கொண்டுவரப் போனாள்.

-பி.எஸ்.ஜேம்ஸ்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சிரிக்க சிந்திக்க ஓஷோ கதை

நானும் ஒரு விபச்சாரி

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?“

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி “ உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்

மறுமணம்

ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

மனைவியை இழந்தவர் கேட்டார்.

தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார்?

பக்கத்தில் நின்ற ஒருவர் சொன்னார்:

தெரியாதா உங்களுக்கு?இறந்து போன உங்கள் மனைவியின் காதலன் அவன்.

மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார்.அவனது தோள்களை தட்டி கொடுத்தார்.பிறகு கூறினார்.

உற்சாகமாக இரு.ஒருவேளை நான் மறுமணம் செய்து கொள்ள கூடும்.

தழுவல் : ஓஷோ
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஓஷோவின் சிறு கதைகள்

ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றிவருகிறார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அதிலிருந்து ஒரு சில சிறு கதைகள் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஓஷோ சொன்ன கதைகள்

கதை : 1

சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார். வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், " ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.
கதை : 2

குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது 'நிறுத்து !' என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும்.

ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது.

குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர்.

கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டன். "இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? " என்றான்.

மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான்.

தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்.

மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான்.

அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார்.

கதை : 3

ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.

பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.

அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !"

நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.
தழுவல் : ஓஷோ
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ரஜினி சொன்ன சில குட்டி கதைகள்

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...


பக்காவா பிளான் பண்ணனும்... இல்லைனா ..?!

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பபடுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க. 1 வருஷம் இல்ல 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."

பயந்தா ஜெயிக்கிறது எப்படி…!

மூணு தவளைகள் இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம்.

மலைக்கு மேல இருக்கற கோயிலுக்குப் போக முடிவெடுத்ததாம். ஆனா, அது ரொம்ப ஆபத்தான மலை. பாம்பு, மிருகங்கள் என்று கொடூர ஜந்துக்கள் உலவும் இடம். போதாக்குறைக்கு, தவளைகள் மலைக்கு மேல் போய்விடக்கூடாது என்று வேறு சில சக்திகளும் முடிவு செய்தது.

முதலில் ஒரு தவளை மலை மேல் ஏற ஆரம்பித்த உடனேயே, ‘போகாதே போகாதே செத்துடுவே… பின்னால் பார்… பாம்பு படமெடுக்குது’ என்று குரல் கேட்டது. தவளை திரும்பி வந்துவிட்டது. அடுத்த தவளை ஏறியது.

அதே குரல், ஆனா தவளை கண்டுக்கவில்லை. தொடர்ந்து பயமுறுத்தல் குரல் கேட்டுக்கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் ரெண்டாம் தவளையும் கீழே வந்துவிட்டது. இப்போது மூன்றாம் தவளை ஏற ஆரம்பித்தது.

அதே மிரட்டல் குரல்கள்… இப்போது சில மிருகங் களின் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தது. ஆனால் தவளை எதற்குமே ரியாக்ட் பண்ணவில்லை. நேராக மலை உச்சியில் இருந்த கோயிலை அடைந்த பிறகுதான் நின்றது!

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய ரஜினி. ‘அந்த மூணாவது தவளை மட்டும் இதை சாதிக்க என்ன காரணம் தெரியுமா? அதுக்குக் காது கேட்காது. அதனால் எந்த பயமுறுத்தலும் காதில் விழாமல், தன் லட்சியம் மட்டுமே மனதில் இருக்க… அது சாதிக்க முடிந்தது.

நாமளும் அப்படித்தான்… பக்தியாகட்டும், எடுத்த காரியமாகட்டும்! மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதுல போட்டுக்கவே கூடாது. காது கேட்காத தவளைகளாகவே முன்னேறணும். பயந்தா ஜெயிக்கிறது எப்படி?,’ என்றார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் - ஒரு பக்கக் கதை

சிரிக்க... சிந்திக்க... ஒரு சிறு முல்லா கதை இதோ...


என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு(கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1) உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )

2) சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )

3) ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )

4) அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...
முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும், சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார்.

அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் "ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தது. முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது.

முழு திருப்தியுடன் அதற்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையை விட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவு தான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம், கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார். முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் 42-வது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது.

முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை. தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும். அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்.

அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது. முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! "நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்" என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

முல்லா 'னே' என விழித்தார். பின்னர் அந்த நிகழ்வை நினைத்து முல்லா சிரிக்க...

முற்றும்.

நன்றி: ஓஷோ


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



காஞ்சனா - (ஒரு பக்கக் கதை)

காஞ்சனாவிற்கு அழுது, அழுது அவளது சிவந்த முகம் வீங்கியிருந்தது. அத்தை ஏன்தான் இப்படி ஒரேயடியாக மாறிப்போனார்களோ? நினைக்க, நினைக்க அவளுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. இதில் இன்னொரு கொடுமை, கணவன் ரஞ்சித்தும் அவளை கண்டுகொள்ளவே இல்லை. அதுதான் அவளுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

காஞ்சனாவிற்கு திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது. ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறாள். ரஞ்சித்தோடு பிறந்தது ஒரு அக்கா ரஞ்சனி மட்டும்தான். மாமனார் இல்லை. நல்ல வசதியான குடும்பம் என்பதால் ரஞ்சனியை மும்பையில் தொழிலதிபர் யுகேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். அவளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரஞ்சித்தும் நன்கு படித்து சாப்டர்வேர் என்ஜினியராக திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறான்.

தம்பி திருமணத்தின்போது ரஞ்சனி வந்து போனாள். தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதால் சீர் செய்யவே இப்போது தனியாக வந்திருக்கிறாள். அவள் வருவதற்கு முன்பு வரை அத்தை பர்வதம் காஞ்சனாவை தாங்கு, தாங்கு என்றுதான் தாங்கினாள். அதுவும் மருமகள் மாதமாக இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளை எந்த வேலையும் செய்ய விட மாட்டாள். எல்லா வேலையையும் தானே இழுத்துப் போட்டு செய்வாள்.

திருமணமாகி இந்த எட்டு மாதத்தில் காஞ்சனா தன் தாய் வீட்டிற்கு ஒரு முறைதான் சென்று வந்தாள். காஞ்சனாவின் தாய் தான் அடிக்கடி வந்து மகளை பார்த்து விட்டு போவாள். அத்தை பர்வதம் கூட "ஏன் காஞ்சனா வேணும்னா அம்மாகூடப் போய் ஒரு பத்து நாள் தங்கிவிட்டு வாயேன்" என்பாள். "வேண்டாம் அத்தை. ஒரு வழியாக பிரசவத்திற்கே போய்க்கிறேன்" என்பாள்.

அப்படி இருந்த மாமியார், மகள் ரஞ்சினி வந்ததிலிருந்து காஞ்சனா மீது எரிந்து, எரிந்து விழுகிறாள். அவள் எது செய்தாலும் அதில் ஒரு குற்றம் கண்டுபிடிக்கிறாள். இதையெல்லாம் பார்த்த ரஞ்சித்தும் கண்டு கொள்ளாமல் காலையில் ஆபீஸ் கிளம்பினான்.

இன்று காலையில் கூட அவரசமாக காபியை ஆற்றி "அத்தை.. காபி" என்றாள் காஞ்சனா. அவள் கொடுக்கும் போது டம்ளர் தவறி கீழே சிந்தியது. உடனே பர்வதம் "ஏன் காஞ்சனா பொறுமையாக செய்யக்கூடாதா? குழந்தை மேலே ஊற்றியிருந்தால் என்னவாயிருக்கும்?" என்று சத்தம் போட்டாள். ரஞ்சனிதான் "விடும்மா. அவ என்ன வேனும்னா சிந்தினா? கை தவறிதானே கீழே கொட்டிச்சி" என்றாள்.


மதியமும் அப்படித்தான். சமையில்கட்டுப் பக்கமே அனுப்பாத அவளை காஞ்சனா இன்று மதிய சமையலை நீ செய் என்றாள். சிறிது பயத்தோடுதான் மட்டன் குழம்பும், வறுவலும் தயார் செய்தாள் காஞ்சனா, குழம்பில் சிறிது காரம் அதிகமானதால் ரஞ்சனி சரியாக சாப்பிடவில்லை. "ஏன் காஞ்சனா, காரத்தை கொஞ்சம் கம்மியாய் போடலாமில்ல. இப்பப்பார் ரஞ்சனி சரியா சாப்பிடவே இல்லை." என்றாள் மாமியார்.

"சும்மா இரும்மா, மட்டனுக்கு காரம் கொஞ்சம் சுள்ளுன்னு இருந்தால்தான் நல்லாயிருக்கும். எனக்குத்தான் அல்சர். சும்மா அவளை தொணதொணன்னு ஏதாவது சொல்லிகிட்டே இருக்காதே! அவளும் சின்னப்பொண்ணுதானே! போக, போக எல்லாம் சரியாயிடும்" ரஞ்சனி சொல்ல காஞ்சனாவிற்கு அழுகை பீறிட்டது. இதெல்லாம் சின்ன சின்ன விசயம்தான் ஆனால் இதுநாள் வரை பேசாத அத்தை இப்போது இப்படி எடுத்தெறிந்து பேசுவதுதான் புதிதாய் இருக்கிறது.

இரவு ஏழு மணி.

ரஞ்சித் அப்போதுதான் ஆபீஸிலிருந்து வந்திருந்தான். காஞ்சனாவின் அழுது வீங்கிய முகத்தை அவனும் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக அக்கா குழந்தை தேஜாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு என்ன நினைத்தானோ "காஞ்சனா காபி எடுத்துட்டு மாடிக்கு வா" என்றவன், சில நாளிதழோடு மாடிக்கு சென்றான். காஞ்சனா காபியோடு கிளம்ப தயார் ஆனாள். அதற்குள் அத்தை பர்வதம் "காபியை கொடு... நான் எடுத்துட்டுப் போறேன்..." என்று பிடுங்காத குறையாக வாங்கிச் சென்றாள். காஞ்சனாவும் பின்னாடியே சென்று கதவருகில் மறைந்து நின்று கொண்டாள்.

அம்மா ஏதோ சொல்ல வருகிறாள் என புரிந்து கொண்ட ரஞ்சித், "என்னம்மா?" என்று கேட்க...

"ரஞ்சித்! வந்த இரண்டு நாள்ல காஞ்சனா மீது நான் எரிந்து எரிந்து விழுகிறேன். நீ எதையும் சாதாரணமாக எடுத்துக்குவ. ஆனா ரஞ்சனி அப்படியில்ல. அவ ஏதாவது சின்ன விசயம்னாலும் உடனே கோபப்படுவா! அதே மாதிரி காஞ்சனா செய்யும் சின்ன தவறுகள் கூட ரஞ்சனியை பாதிக்கும். அதனால அவங்களுக்குள் ஒரு விரிசல் விழுந்திடக்கூடாதில்லையா..? இப்போ நான் இப்படி பேசினால் ரஞ்சனிக்கு காஞ்சனா மேல் உள்ள பாசம் அதிகரிக்கும். அவங்களுக்குள் ஒரு பாசக்கோடு விழுந்திடும். பிறகு அது எப்போதும் அழியாது.

இன்னும் இரண்டு நாள்ல ரஞ்சனி ஊருக்குப் போயிடுவா. பிறகு காஞ்சனாவிடம் சொல்லி சமாதானப்படுத்தலாம் என்றிருந்தேன். ஆனா அவ அழுறதை பார்க்க என்னால் சகிக்கலைடா. அதான் உன்கிட்ட சொல்லி அவளுக்கு புரிய வைக்கலாம்னு..."

மாமியார் சொல்லி முடிப்பதற்குள், "அத்தை என்னை மன்னிச்சிடுங்க. உங்களோட நல்ல மனசை புரிஞ்சிக்காம நான்தான் உங்களை தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்" மாமியார் பர்வதம் கைகளை பிடித்துக் கொண்டு கலங்கினாள் காஞ்சனா.

மாமியார், மருமகள் பாசக்கோட்டினை வியப்போடு பார்த்து நின்றான் ரஞ்சித்.


- ராஜேஸ்வரி பால்ராஜ்



தாய்மைக்கு தண்டனை - ஒரு பக்கக் கதை

உலகத்தின் எல்லா சந்தோஷத்தையும் தானே அனுபவிப்பதை போல உணர்ந்தாள் ஆனந்தி.

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் பூரித்துப் போனாள்.

எத்தனை நாள் தவம்!
எத்தனை நாள் கண்ணீர்!
எத்தனை நாள் வேதனை!

இன்று முடிவுக்கு வந்தது. ஆனந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் ஆனந்திக்கும், ரவிக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை விட மலடி என்ற பட்டம் ஆனந்தியை வாட்டி வதைத்தது.

எத்தனை கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடிஎடுத்து வைத்தாளோ, அத்தனை கனவும் கண்ணீரில் கரைந்தன. கணவன் ரவி அன்பானவன் தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் தான். ஆனால், குழந்தை இல்லாத குறையை எத்தனை நாள்தான் அவனும் ஜீரணிப்பது! ரவியும் சில நேரங்களில் ஆனந்தியிடம் முகம் சுளிக்க ஆரம்பித்தான். பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. எல்லாமே வீண்!

ரவியின் அம்மா சாரதா புலம்பித் தள்ளுவாள்: "நேத்து வந்தவளெல்லாம் நெல்லிக்காயும், மாங்காயும் சாப்பிட்டு புள்ளைய பெத்து போடறா!... ம்... இந்த வீட்டுக்கு அந்த கொடுப்பனையே இல்லை..." என்று பெருமூச்சு விடுவாள்.

ஆயுசு முழுக்க ஆனந்தமாய் வாழ வேண்டுமென்றுதான் ஆனந்தி என்று பெயர் வைத் தார்கள். ஆனால், கழுத்தில் தாலியை சுமக்க ஆரம்பித்த நாள் முதல், மனம் வேதனையை சுமக்க ஆரம்பித்தது.

பெண்ணாய் பிறந்த யாரும் தாய்மையை வெறுப்பதில்லை. தாய்மை யாருக்கு வாய்க்குமோ? யாருக்கு வாய்க்காதோ? கடவுளுக்கே வெளிச்சம்! ஆனால் யாரும் கடவுளை குற்றம் சொல்வதில்லையே! ஆண்டுகள் கடந்தாலும் காலங்கள் மாறினாலும், என்ன தான் கம்ப்ïட்டர் யுகத்திலேயே வாழ்ந்தாலும் குழந்தை பேறு இல்லை என்றால் இந்த சமுதாயம் பெண்களைத்தான் குற்றவாளிகளாய் பார்க்கும். இது பெண் வர்க்கத்துக்கே உண்டான சாபக்கேடு.

எந்த பெண்ணும் அவ்வளவு சீக்கரம் முடி வெடுக்க முடியாத விஷயம். எந்த பெண்ணும் தன் கணவனைப் பார்த்து கேட்கக் கூடாத வார்த்தை. ஆனந்தி ஒருமுறை தன் கணவனை கேட்டே விட்டாள். "நீங்க வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?"

"பைத்தியமா உனக்கு... குழந்தை வேணுங் கிறது நம்முடைய ஆசை தான். அதுக்காக என்னுடைய மனிதாபிமானத்தை பலி கொடுக்க முடியாது" என்றான்.

பாலைவனத்தில் முளைத்தெழுந்த முல்லை கொடிக்கு அவ்வப்போது பாசமாய் பொழியும் வானமழைபோல், கணவனின் பாச வார்த் தைகளை உணர்ந்தாள். திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கணவன் நல்லவனா, கெட்டவனா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை ஆனந்திக்கு.

நல்லவன் என்று எப்போதெல்லாம் நினைக்கிறாளோ, அப்போதெல்லாம் அதற்கு எதிர்மறையாகத் தான் இருப்பான். அவன் கெட்டவன் என்று ஒதுங்கி நிற்கும் போது, அவனே நெருங்கி வந்து அவளை கெஞ்சலோடு கொஞ்சுவான்.

ஆனந்திக்கு வாழ்க்கையும் கேள்விக்குறி! கணவனும் கேள்விக்குறி!

நடந்ததெல்லாம் போகட்டும். இத்தனை நாள் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தது!

செவிலியர் கொடுத்த தன் குழந்தையை அன்போடு அள்ளி மார்போடு அணைத்தாள். கண்களில் நீர் சுரந்தது. மார்பில் பால் சுரந்தது. கண்ணீர் எப்போதுமே உப்பு கரிக்குமாம். ஆனால், ஆனந்திக்கு தேனாய் இனித்தது.

தன் மடியில் தவழும் இந்த மழலைக்காக ஏங்கிய நாட்கள் எத்தனை!

"என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்!" - எங்கோ தூரத்தில் ஒலித்த பாடல் வரிகள் எந்த அர்த்தத்துக்காக எழுதப்பட்டதோ தெரியவில்லை. ஆனால், ஆனந்திக்கு புரிந்தது ஒரே அர்த்தம்தான்.


உறவினர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். உறவினர்களையும், அக்கம் பக்க வீட்டுக்காரர்களையும் பார்த்ததும் ஆனந்திக்கு அழுகை தாங்க வில்லை. குரல் உடைந்து அழுதாள்.

"ஏண்டி அழறே! அசடு! எல்லாம் முடிஞ்சி போச்சிடி! உன் கவலைகள் எல்லாம் முடிஞ்சி போச்சு! இன்னிலேர்ந்து நீ ராசாத்தி மாதிரி இருக்கணும். சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் பிள்ளையை பெத்தவடி நீ! எதுக்கும் கவலைப்படாதே!" என்று ஆனந்தியின் மாமியார் பூரிப்பில் ஆறுதல் சொன்னாள்.

"அவர் வரலியா" என்றாள் ஆனந்தி.

"போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டோம். முதலாளிகிட்ட கணக்கு ஏதோ கொடுத் துட்டு வரணுமாம். வர்றேன்னு சொன்னான்" என்றார்கள்.

மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பி வழிய, கணவன் வருகைக்காக காத்திருந்தாள் ஆனந்தி! உறவினர்களின் பார்வை நேரம் முடியும் தருணத்தில் வந்தான் ரவி. அவனது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்ததை ஆனந்தி கவனித்தாள்.

"இது என்ன புதுப்பழக்கம்? முதல் முதல் நம்ம குழந்தையை பார்க்க இந்த கோலத்திலேயா வருவது ?" என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ஆனந்தி படுத்திருந்த கட்டிலருகே போடப்பட்டிருந்த தொட் டிலில் படுத்திருந்த குழந்தையை குனிந்து பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

"நல்லாருக்கானா நம்ம பையன்... ஏன் உங்க முகத்துல சந்தோஷத்தையே காணோம்...!" என்றாள்.

"நீயும் கறுப்பு, நானும் கறுப்பு. குழந்தை மட்டும் வெள்ளையா இருக்கு... நம்ம வீட்ல உள்ள வங்க யாருடைய முகச்சாயலும் குழந்தைக்கு இல்ல... இதை நான் மட்டும் சொல்லல... வெளியில் பேசிக்கிறாங்க... " அவன் குரலில் குடிகாரர்களுக்கே உரிய குழறல் இருந்தது. ஆனால், உளறல் இல்லை.

இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் அத்தனையையும் மறுபடியும் ஒரே நொடியில் அனுபவித்த மாதிரி இருந்தது ஆனந்திக்கு!

நேற்று வரை அவள் சுமந்த துன்பம் வேறு! இனி அவள் சுமக்கப் போகிற துன்பம் வேறு!


- மின்னூர் மகாதேவன்


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!




தாய் மனம் - ஒரு பக்கக் கதை

அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு.

`சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்'

உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி.

கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து மணமுடித்து விட்டிருந்தாள் அம்மா.

ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்பதால், இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள். மனைவிகளை அழைத்து வந்து ஒரு நாள் தங்கியிருந்து விருந்து சாப்பிட்டு விட்டு, மருமகன்கள் இருவரும் தங்களது வேலைகளை கவனிக்க கிளம்பி விட்டார்கள். மேலும் இரண்டு நாள் தங்கிவிட்டு வருவதாக இவர்கள் கூறிவிட்டனர். குழந்தைகளும் கூடவே இருந்து விட்டார்கள்.

வசந்தி குடும்பம் நடுத்தரமானது. அவள் கணவர் தனியார் மில்லில் வேலை பார்க்கிறார். சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டி வரும் நிலை. ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரண்டு வாரிசுகள்.

புவனாவின் குடும்பம் வசதிக்கு பஞ்சமில்லை. இவள் கணவருக்கு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. கை நிறைய சம்பளம். ஒரு பெண் குழந்தை மட்டும்.

திருவிழாவிற்கென முதலில் வருகை தந்தவள் வசந்தி தான். வந்ததுமே, `இன்னும் புவனா வரலையாம்மா?' எனக்கேட்டு அவள் வருகைக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவள் தான்..

புவனா குடும்பத்தோடு வந்ததும் நலம் விசாரிப்பதில் தொடங்கி, பழைய நினைவுகளைப்பேசி என பொழுது நன்றாகதான் கழிந்தது. ஆனால், அம்மாவின் பாசத்தில் ஓரவஞ்சனை இருப்பதாக நேற்றிலிருந்து தான் உணர்ந்தாள் வசந்தி.

`புவனா.. நல்லா சாப்பிடும்மா... ரொம்பவும் இளைச்சுப்போயிட்டே?'

`இல்லம்மா.. நார்மலா தான் இருக்கேன்.. ரொம்பநாள் பார்க்காமல் இருந்ததால் உனக்கு அப்படி தெரியுது'

தன்னைக் கேட்கவில்லையே என மனதுக்குள் சஞ்சலமானாள் வசந்தி. அவளைப்புரிந்து கொண்டது போல், `என்னம்மா வசந்தி.. நீயும் கூட இளைச்ச மாதிரி தான் தெரியறே..' எனக்கேட்டாள் அம்மா.

`எனக்கென்ன.. நல்லா தான் இருக்கேன்' என்றாள் வெடுக்கென. `அவள் வசதியாக இருக்கிறாள் என்பதற்காக முதலில் அவளைக் கேட்டு விட்டு, ஒப்புக்கு சப்பாணியாக என்னையும் கேட்கிறாள்' என நினைத்துக் கொண்டாள்..

`இந்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைக்க, கொஞ்சம் ஒத்தாசை பண்ணு வசந்தி.

`வேலை செய்ய மட்டும் நான்.. அவளும் வந்து பாத்திரம் கழுவினால் தேய்ஞ்சா போயிடுவாள்' அம்மாவிடம் சொல்ல வாய் எழவில்லை மனப்புழுக்கம் அதிகரித்தது.

இதுபோல சின்னச்சின்ன செய்கைகள் வசந்தி மனதில் புகைச்சலை அதிகப்படுத்தியது.

`வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்ளும் அம்மாவை புரிந்து கொண்டாயிற்று. இனி இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம்... கேட்டால், அவள் எப்போதாவது வருபவள்.. நீ அடிக்கடி வந்து போறவள்னு நியாயம் பேசுவாள்... ஏன் கேட்டு வருத்தப்பட செய்வானேன்...அவளையே கொஞ்சட்டும். நாம் கிளம்புவோம்' என்றெண்ணியவள் தாயிடம் கூறினாள்.

`அம்மா.. இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்பறேன்'

`என்ன அவசரம் வசந்தி.. மாப்பிள்ளையே இன்னும் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வாங்கன்னு சொல்லிட்டாரே.. அதுக்குள்ள கிளம்பாட்டி என்ன?'

`அவர் அப்படித்தாம்மா சொல்வாரு.. அங்கே தனியா இருந்து ரொம்பவும் சிரமப்படுவார்.. வீட்ல நான் இல்லைன்னா சரியா சாப்பிடவே மாட்டார்.. போதாதற்கு, தைக்கிறதுக்குனு வாங்கி வச்ச துணிகள் நிறைய சேர்ந்து கிடக்கு.. வர்றேம்மா... புவனா ஊருக்கு கிளம்பும் போது அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போ..'

`இருக்கா.. அம்மா நாளைக்கு கறி எடுக்கிறாங்களாம்.. சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்பலாம்..'

`இல்ல புவனா.. நீ சாப்பிடு.. நீ சாப்பிட்டா, நான் சாப்பிட்ட மாதிரி' என சிரித்துக்கொண்டே தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடைபெற்றாள் வசந்தி.

வெளித்தோற்றத்தில் தான் சிரித்தாளே தவிர, உள்ளுக்குள் பொருமல் இருந்தது.


``அக்காவை கண்டுக்காமல், அம்மா என்னை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கும்போதே நினைச்சேங்க.. அம்மா எதையோ எதிர்பார்க்கிறாள்னு...'' போனில் கணவனிடம் கூறினாள் புவனா..

`என்ன கேட்டாங்க?'

`முன்ன மாதிரி சமையல் வேலை இல்லையாம்.. கஷ்டமா இருக்குதுன்னு புலம்பினாங்க.. அதனால, வச்சுக்கம்மான்னு சொல்லி ஐயாயிரம் ரூபாயை கையில் குடுத்துட்டு வந்தேன்.. இதுக்கு தான் அக்கா நைசா முதல்நாளே கிளம்பிட்டா போலிருக்கு..'

`பரவாயில்லை விடு புவனா.. அம்மாவுக்கு கொடுக்கிறதுல தப்பில்லை.. உங்கக்கா வீட்டுக்கு போகலையா?'

`நீங்க இல்லாம நான் மட்டும் போனா மரியாதையா இருக்காதுங்க.. அதனால, இன்னொரு நாள் குடும்பத்தோட வர்றேன்னு போன் பண்ணி சொல்லிட்டேன்..'...

இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க' என வசந்தியிடம் கொடுத்தாள் அம்மா.

`ஏதும்மா?'

`நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனா கிட்டே வாங்கினேன் வசந்தி.. உன்னை சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே தானே.. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்மா.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னா தானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதால தான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவள் மனசுல தப்பான எண்ணம் வந்துடக்கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரி தான் அன்பு காட்டினேன்.. நீ தான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சு தான் எனக்காக பணம் கேட்டேன்.. தங்கச்சி கிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவக் குறைச்சல் ஆகும் வசந்தி.. ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது..'

தாயை புரிந்து கொண்டவளாக, `என்னை மன்னிச்சுடும்மா.. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்' என்றாள் வசந்தி.


இந்த சிறு கதை உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டுபோட்டு உங்கள் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி : S.சுமதி



இலவசம் - ஒரு பக்கக் கதை

கோபு அரசாங்க ஊழியன். அது தீபாவளி நேரம் என்பதால் தங்கள் வேலை விசயமாக அவனிடம் வந்தவர்கள் எல்லாம், அவன் கேட்காமலேயே தங்களால் முடிந்ததைக் கொடுத்து, அவன் மனதில் இடம் பிடிக்கப் பார்த்தனர்.

கோபு, லஞ்சம் வாங்குபவனல்ல. "இந்த வேலையை முடிக்க இவ்வளவு தா" என பேரம் பேசும் அடாவடிக்காரனும் இல்லை. அவனிடம் வருகிற வேலைகளை நேர்மையாகவே செய்து கொடுப்பான். ஆனால், யாராவது பிரியமாய் ஏதாவது கொடுத்தால், அதை வேண்டாம் என மறுக்கவும் மனம் வராது. சில சமயங்களில் "வேண்டாம்" என மறுத்துவிட நினைப்பான். ஆனால், பணத்தைக் கண்டதும் ஏனோ அவன் ஊமையாகி விடுவான்.


ஒருநாள் மாலை நேரம். அவன் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மூதாட்டி ஒருவர் பாலிதீன் குப்பைகளைக் கிளறி அட்டை, பேப்பர், இரும்பு, தகரம் எனத் தேடித் கொண்டிருப்பதைக் கண்டான். அவரது வயதான தோற்றமும், கசங்கி நைந்து போயிருந்த ஆடையும், சுருக்கம் விழுந்த தேகமும் கோபுவுக்குள் பரிதாபத்தை உண்டாக்கின.

பாவம், இந்த தள்ளாத வயதில் ஓய்வு எடுக்க வழியில்லாமல் இவரைப் போல் எத்தனையோ பெரியவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என நினைத்து மனம் வருந்தினான்.

இந்த அம்மாளுக்கு ஏதாவது உதவ வேண்டும் எண்ணியவன், "அம்மா இந்தாங்க..." என பத்து ரூபாய்த்தாள் ஒன்றை அவர் முன் நீட்டினான்.

அதைக்கண்ட மூதாட்டி,"எதுக்குப்பா?" என்றார்.

"சும்மா வைச்சுக்கோங்க" என்றான். காசு கொடுத்தால் சந்தோசமாய் வாங்கிக் கொள்வதை விட்டுவிட்டு, இந்த மூதாட்டி கேள்வி கேட்கிறாரே என நினைத்தபடியே ரூபாயை நீட்டிக் கொண்டிருந்தான்.

"இல்லைப்பா... நான் சாகிறவரை யார்கிட்டேயும் கையேந்த மாட்டேன்னு உறுதியா இருக்கேன்" என்றார்.

"இது பிச்சை இல்லம்மா, பிரியமா தர்றேன்" என்றான் வியப்புடன்.

"அப்படீன்னா, எனக்கு உன் பிரியமே போதும் தம்பி. காசு வேண்டாம். யார்கிட்டயும் எதற்காகவும் இனாம் வாங்க மாட்டேன். பிரியமா கொடுத்தாலும், இனாம் இனாம் தானேப்பா..." என உறுதியாய் மறுத்து விட்டு, குப்பைமேட்டை கிளறத் தொடங்கினார் மூதாட்டி.

கோபு அசந்து போனான். அந்த அம்மாள் சொன்ன வார்த்தைகள் சுருக்கென தைத்தன. இவனுக்குப் போதுமான சம்பளம் வந்த போதும், பிறர் பிரியமாய்த் தருவதை வேண்டாம் என மறுக்க மனம் வராமல் வாங்கிக் கொள்கிறான். ஆனால், இந்த மூதாட்டியோ...?!

அடுத்தநாள், தன்னைத்தேடி வந்த இனாம்களை புன்னகையுடன் வாங்க மறுத்து, "இது என் கடமை" என்றான் கோபு. அன்று பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென வந்துவிட, அவன் அதிர்ஷ்டவசமாய்த் தப்பித்தான். "பிரியமாய்க் கொடுத்தாலும் இனாம் இனாம்தானே" என்ற பாட்டியின் வார்த்தைகள் அவன் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தன.

- ரமணி

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஆஹா வட போச்சே ..!!

மரத்தில் வடையுடன் வந்து உட்கார்ந்தது காக்கை. சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டது. தூரத்தில் நரி வருவது தெரிந்தது.

"வா...வா... நரியாரே.. உன்னையும், உன் நரித்தனத்தையும் நான் அறிவேன். நான் புத்திசாலி. எங்களில் சிலபேர் உன்னிடம் ஏமாந்ததுபோல் நான் ஏமாற மாட்டேன்'' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.


நரி மரத்தின் கீழே வந்து நின்று...

"காக்கை நண்பரே, உங்கள் பாடலைக் கேட்டு ரொம்ப நாளாகிறது... பாடுகிறீர்களா'' என்றது. காக்கையும் மனதுக்குள் `இந்த முறை என்னை ஏமாற்ற முடியாது' என்று எண்ணிக் கொண்டு வடையை தன் காலின் கீழ் வைத்துப் பிடித்துக்கொண்டு `கா... கா...' என்று பாடியது.

நரியும், "ஆகா... நீயல்லவோ பாடகன்! இன்னும் கொஞ்சம் பாடு" என்று உசுப்பேற்றியது. காகமும் பாடியது. கொஞ்ச நேரமானதும் நரி, "உன் பக்கத்து மரத்துக்காகம்... அதான் உன்னுடன் அடிக்கடி சண்டை போடுவானே! அவன் பாடிக்கொண்டே டான்சும் ஆடுகிறான். உனக்கு டான்ஸ் தெரியுமோ? தெரியாதோ? இருந்தாலும் அவன் ஆடும் டான்ஸ் ரசிக்கும்படியாக இருக்கிறது" என்றது.

அதைக் கேட்டதும் இந்தக் காகத்துக்கு கோபம் தலைக்கேறியது. "அவனைப் பற்றி என்னிடம் பேசாதே! எனக்கு தெரியாத டான்சா? உனக்கு என் டான்சை பற்றித் தெரியாது. நான் நடனமாடுவதைப் பார்!" என்று நடனம் ஆடத் தன் காலைத் தூக்கியது.

அவ்வளவுதான்... காலின் கீழ் இருந்த வடை தவறி கீழே விழுந்தது. நரியும் பாய்ந்து வடையை கவ்வித் தின்றது. "ஆ... வடையும் பிரமாதம்! உன் டான்சும் பிரமாதம்!" என்று சொல்லிக் கொண்டே ஓடி மறைந்தது.

தன் நிலைக்கு வந்த காகத்துக்குத் தான் ஏமாந்தது தெரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. தான் என்ற கர்வமும், அடுத்தவரிடம் சண்டை போடும் குணமும் நம்மை மேலும் மேலும் அவதிக்கு உள்ளாக்கும், போலிப் பாராட்டுக்கு மதிப்புக் கொடுத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்று புரிந்து கொண்டது காகம்.

வஞ்சனையே உருவான நரி போன்றவர்கள் நம்மை ஏமாற்ற எத்தனையோ வழிகளை உருவாக்கிக் கொள்வார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

நன்றி: :மாலை மலர்



பாடம் - ஒரு பக்கக் கதை

வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன.

அவதைப் பார்த்த பாலனின் அம்மா,"ஏதுடா இதெல்லாம்" என்று கேட்டார்.


"இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது" என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான்.

தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார்.

"இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? நம்ம மானத்தை வாங்கணுமின்னே பிறந்திருக்கான். வாங்குற சம்பளத்துல பாதிய இவனுக்குத்தானே செலவழிக்குறோம். இவனால ஸ்கூல்ல எனக்குத் தான் கெட்டப்பெயர் வரப் போகுது" என்று கோபப்பட்டார் ஆசிரியரான பாலனின் தந்தை.


மறுநாள் பாலனும், அவன் தந்தையும் அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

"என்னங்க, நம்ம தெருவில நடக்குற கோலப் போட்டியில சேர்ந்திருக்கேன். ஸ்கூல் விட்டு வரும்போது ஸ்கூல்ல இருந்து கலர் சாக்பீஸ் டப்பாவ எடுத்துக்கிட்ட வாங்க" என்றார் பாலனின் தாய்.

பாலன் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தான். அவர் தலைகுனிந்து கொண்டார்.

நன்றி :ஜேம்ஸ்



வாழ நினைக்கிறன் - ஒருபக்க கதை

சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க" என்றார் வக்கீல்
செந்தில்நாயகம்.

"எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்"

"என்ன?"


"நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்கதான். ஆனா நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்.

நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது."

- சூர்யகுமாரன்



ஒரு பக்க கதை - பிரசாதம் !

"ஏன் இப்படி இடிச்சிட்டு வரீங்க. அமைதியாய் நின்னு தரிசனம் பண்ணுங்களேன்." அவரின் குரல், மந்திர ஓலி, மணி ஓலியையும் மீறிக் கொண்டு கணீரென்று ஓலித்தது.
-
"வந்துட்டான்யா வலுத்த கிழவன்! இவன் மட்டும்தான் சாமியாக் கும்புடணுமோ? எங்கயும் இவனாலே இடைஞ்சல்தான்" என்றார் முதிய பெண்மணி ஒருவர்.
-
அனைவரின் கவனமும் அந்தக் கிழவரின் பக்கம் திரும்பியது. ரிஷிப வாகனம் வலம் முடிந்து இறங்கியது. தீபாராதனை ஆனதும் வாகனத்தை அலங்கரித்த மலர் பிரசாதம் பெற தள்ளுமுள்ளு! கிழவரும் பூ வாங்குவதற்கு முண்டியடித்தார்.

"கெழவனுக்கு ஏன்யா பூவு? பொம்பளைகளை வாங்கவிடாம குறுக்கே வர்றானே!" என்றார் அந்தப்பெண்மணி.
இதைச் சட்டையே பண்ணாமல் அவர் பூவை வாங்கிய பிறகே போனார். பெண்கள் பழிப்புக் காட்டினர். பூவுடன் வெளியே வந்த அவர், பிராகாரத் தூண்களில் சாய்ந்தபடி, நடக்க இயலாதவர்களாய் இருந்த வயோதிகப்பெண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பூவைக் கொடுத்தார்.
-
பிரதோஷப் பிரசாதம் பெற்ற பூரிப்பு அவர்களின் முகத்தில், உதவிய சந்தோஷம் கிழவரிடத்தில்.

நன்றி: குமுதம்



உங்கள் சிந்தனைக்கு இந்த படம். இது யார் செய்த குற்றம் ?


இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாமே !



காதல் - பன்னிகுட்டி - பிரகாஷ் ராஜ்

நடந்த சம்பவம் - பன்னிகுட்டி சாட்சியாக..

என்னோட நெருங்கின நண்பர்கள் ரெண்டுபேரு காதலிச்சாங்க. பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணினாங்க.

அவ, அவனை 'டேய் பன்னி'நின்னு தான் செல்லமா கூப்பிடுவா. அவங்க கல்யாணத்துக்கு நண்பர்கள் நாங்க அழகான ஒரு பன்னிக் குட்டியைத்தான் 'கிப்டா' கொடுத்தோம். ஆசையா அவங்களும் வளர்த்தாங்க.

எங்க 'கேங்'ல ஒரு ரோல் மாடல் ஜோடி அவங்கதான்னு எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தபோது, ஒரே வருசத்துல ரெண்டு பெரும் 'டைவர்ஸ் அப்பளை' பண்ணினாங்க.

ரெண்டு பேருகிட்டேயும் தனி தனியா பேசி பார்த்தோம். பேசின பிறகு, அவங்க சேர்ந்து வாழவே முடியாதுன்னு மட்டும் தோணலை. சேர்ந்து வாழவே கூடாதுன்னு தோணுச்சு.

என்னா, காதலிக்கும் வரை அவன் பார்த்த அவள் வேறு. அவள் பார்த்த அவன் வேற. ரெண்டு பெரும் தங்களோட மைனஸ் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளவே இல்லை.

அவன் மாறிட்டான், அவன் காதலிக்கும்போது இருந்தவனே இல்லை. வாழ்நாளெல்லாம் காதலனாவே இருப்பான்னு நம்பி கல்யாணம் பண்ணினேன். கல்யாணத்திற்கு அப்புறம் 'புருசனாகிவிட்டான்'னு அவன் மேல இவ பெரிய புகார் பட்டியல வாசிக்கிறா.

அவ நான் நினைத்த பொண்ணே இல்லைடா. ஏமாந்துடேண்டா...னு உடைஞ்சு அழறான். அவளோட வியர்வை வாசனை இவனுக்கு பிடிக்கவில்லை.

இவனோட குறட்டை சத்தம் அவளை டிஸ்டர்ப் பண்ணியிருக்கு. காபி டம்ளரை உர்ர் உர்ர்-னு அவ உறிஞ்சி குடிக்கிறது இவனுக்கு பிடிக்கவே இல்லை.

இவன் அழுக்காவே திரியறது இவளுக்கு சுத்தமா பிடிக்கலை. இப்படி ஒவொரு விசயத்துக்கும் ஒருவரை ஒருவர் சகிச்சுக்கிட்டு இருக்க தயாராவே இல்லை.

"ஏய், என்னை 'பன்னி'-ன்னு இனிமே குப்பிடாதே"-ன்னு இவன் எரிச்சலா சொல்லிகிட் இருக்கிறான்.

'இவங்க காதலுக்கு சாட்சியாகிட்டோமே'ன்னு அந்தக் பன்னிக்குட்டி இன்னனும் 'திரு திரு'வென முழிச்சிக்கிட்டு இருந்தது.

இந்த உன்னை சம்பவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டது நம்ப 'செல்லம்' பிரகாஷ் ராஜ்.

காதல் திருமணம் வரை இருந்திட கூடாது. அது திருமணத்திருக்கு பிறகு இருக்க வேண்டும். அது தான் உண்மையான காதல்.
காதல்
நட்பு என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்வு பரிமாற்றம்.

காதல் என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்ச்சி பரிமாற்றம்

நன்றி : திவ்யகிஷோர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top