Showing posts with label சிவா. Show all posts
Showing posts with label சிவா. Show all posts

வணக்கம் சென்னை (2013) - பாடல் விமர்சனம்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.


'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.

அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் "எங்கடி பொறந்த..." என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.

1. ஹே... நேரம் மாறலாம் காலம் மாறலாம்
பாடியவர்கள் : பாபோன் & மரியா ரோ வின்சென்ட்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு ஸ்லொ மெலடி பாடல். கிடார், சாக்ஸ், வயலின் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாடல். பாடல் ஈசியா ஹம் பண்ணும்படி இருக்கு. பாடல் வரிகள் ஆங்காங்கே தூவி நிரப்பியிருக்கிறார் நா.முத்துக்குமார்.


2. ஒசாகா ஒசாகா
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், பிரகதி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு காதல் பீட் பாடல். பாடல் அமைப்பு A.R.ரகுமான் பாடலை நினைவுபடுத்துகிறது. தேங்கா நாராக நெஞ்ச உரிசாலே... உள்ளா என்னான்னு காட்டிப்புட்டா .. நல்ல கவிதை வரிகள். என் பேவரிட் பாடல்.


3. ஓ பெண்ணே பெண்ணே
பாடியவர்கள் – விஷால் தத்லானி, அனிருத் ரவிச்சந்தர்
பாடலை எழுதியவர் : நா.முத்துக்குமார்.

இது ஒரு மென்மையான மெலடி பாடல். பாடல் முழுக்க பியானோ இசை...


4. எங்கடி பொறந்த
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஆன்ட்ரியா ஜெர்மியா
பாடலை எழுதியவர் : விக்னேஷ் சிவன்.

இது ஒரு சிம்பிள் பீட் பாடல். ரஜினி பாஷா ஸ்பீச் மியூசிக், எங்கடி... எங்கடி.... எல்லாம் மிக மிக கலக்கல். மீண்டும் ஒரு பேவரிட் பாடல் இந்த ஆல்பத்தில்...


5. ஐலசா ஐலசா
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், சுசித்ரா
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி.

இது ஒரு பியுட்டிபுள் மெலடி பாடல். இந்த பாடலில் பியானோ, நாதஸ்வரம் கொண்டு அழகாக அமைக்கப்பட்ட பாடல். சுசித்ரா வாய்ஸ் மிக அழகாக பொருந்தி இருக்கு.


6. ஓ பெண்ணே… (International Version)
பாடியவர்கள் – அர்ஜுன் (UK), சார்லஸ் போஸ்கோ
பாடலை எழுதியவர் : அர்ஜுன்
இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். அனிருத்தின் டிரேட்மார்க் பாடல். ஓக்கே ரகம்.


7. சென்னை சிட்டி
பாடியவர்கள் – அனிருத் ரவிச்சந்தர், ஹர்த் கவுர், ஹிப் ஹாப் தமிழன் ஆதி, கன்ட்ரி சிக்கன்
பாடலை எழுதியவர் : ஹிப் ஹாப் தமிழன் ஆதி & ஹர்த் கவுர்

இது ஒரு ஹலிவூட் ஆல்பம் ஸ்டைல் பாடல். நான் ஒருதடவ .சொன்ன .... இந்த வரிகளை பயன்படுத்தியவிதம் மிக மிக அருமை. இது தாண்டா சென்னை கெத்து ... வரிகள் அருமை!! கோழி சவுண்ட் அங்காங்கே அருமை!!!

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் வணக்கம் சென்னை ரசிக்கும்படி இருக்கு!


படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சொன்னா புரியாது (2013) - விமர்சனம்

அறிமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கம் புதிய படம் "சொன்னா புரியாது". இவர் தமிழ் பட(ம்)த்தில் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படத்தில் 'தமிழ்ப்படம்' சிவா நாயகனாகவும், நாயகியாக வசுந்தரா காஷ்யப்-வும் நடிக்கின்றனர். மொழி மாற்றுப் படங்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞராக சிவா நடிக்கிறார்.

இவர்களுடன் மனோபாலா, பிளேடு ஷங்கர், மீரா கிருஷ்ணனா, சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, அல்வா வாசு, ஆர்த்தி, ஆதிஷ், பிரதீப் (அறிமுகம்), "காதல்" சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.

நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

படத்தோட கதை என்னனா ...

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறுகையில், திருமணம் என்றால் தவிர்த்து வருபவர் சிவா. அவருக்கு திருமணம் என்கிற சடங்கு மீது பயம் அதிகம். திருமணம் தவறானது. அது ஆண்களின் சுதந்திரத்தையும் நிம்மதியையும் பறிப்பது என்று எண்ணுபவர். எனவே திருமணப் பேச்சு எடுத்தாலே விலகி ஓடுகிறார்.

ஒவ்வொரு முறையும் கால்கட்டு போடச் செய்யும் இக்கட்டில் அவர் சிக்கிக் கொள்வதும் அவர் தப்பிப்பதும் தொடர்கிறது. அவர் கடைசியில் திருமணம் செய்து கொண்டாரா இல்லையா என்பதை கதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும்படியாக இப்படம் இருக்கும் என்றும் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும் காட்சிகள் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

1. கேளு மகனே கேளு
ஒரு கொடும கதைய கேளு - தினம்


பாடியவர்கள் : ஜெகதீஷ்
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

மெலடிக்கு மேலே குத்து பாட்டுக்கு கீழ் வரும் பாடல்.

கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணின் நிலையை பாடலில் சொன்ன விதம் அற்புதம். பாடலின் இடை இடையே வரும் ரஜினியின் வரிகள் அருமை. பாடல் வரிகள் தெளிவாக கேட்பது கூடுதல் அழகு.
பாடல் ஹை லைட் வரிகள் :

அந்த தண்ணி அடிச்சவன் இந்த தண்ணி அடிச்சான்
அந்த மூனு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
அவன் : காதல் முதல் கண்ணீர் வரை - ஒரு சிறுகதை இந்த பாடல்!


2. காலியான சாலையில் நீயும் நானும்
போகிறோம் காதல் கார்காலம்!


பாடியவர்கள் : SP சரண் & சின்மயி
பாடலை எழுதியவர் : மதன் கார்க்கி

இது ஒரு மெலடி ரொமான்ஸ் பாடல். காதுக்கு இனிமையான கவிதை தொகுப்போடு வரும் ஒரு பாடல். காதலன் காதலியின் மனத்திரையை பிரதிபலிக்கும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

மனதின் வாசல்களை
அடைத்து நான் பூட்டுவேன்
திறக்க நீ வந்த பின்னாலே தீ மூட்டுவேன்!
இரண்டு பேர். இரண்டு காதல். ஒரே பயணம் இந்த பாடல்!


3. தேவதையோ ராட்சசியா
தேர்ந்தேத்த நிலவோ...


பாடியவர்கள் : ரஞ்சித்
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

பெப்பி சாங். கவுண்டமணியின் டியாலக்கோடு தொடக்கும் பாடல். இவரின் பிரபலமான டயலாக் ஆங்கங்கே பரப்பி, கேற்பது மிக அழகா இருக்கு. மேலும் பாரதிராஜா, கார்த்திக்கின் ஜித்தாத்தா ஜித்தா இசையும் அருமை. ஹீரோ பின்னணி பேசும் பல மொழி தெரிந்தவன் என்பதை சொல்லும் பாடல்.
பாடல் ஹை லைட் வரிகள் :

கடைசிப்பக்கம் கிழிந்தேடுத்த கிரைம் நாவல் இவளோ
ஒரு நொடியில் கண் பறிக்கும் மின்னல் அதன் துகளோ
ஆணின் முதல் பார்வை - காதல் மொழி - சொல்லும் பாடல்!


4. உன் தொழில் சாய்த்து
உன்னோடு பேச ஓடோடி வந்தேன்..


பாடியவர்கள் : MK பாலாஜி
பாடலை எழுதியவர் : நா.முத்துகுமார்

சோக பாடல். வயலின் & பியானோ கலந்த கலவை இனிமை.

காதல் - சோகம் - ஆணின் மனநிலை - சொல்லும் பாடல்!


5. ஐயையோ போச்சே...

பாடியவர்கள் : MK பாலாஜி & யதீஷ் மகேஷ்
பாடலை எழுதியவர் : யதீஷ் மகேஷ்

மக்களே காதலில் தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பணம். இந்த பாடலை பாடிகொண்டிருப்பவர் பா...ப்பா..... என தொடக்கும் பாடல்.

சிவாவின் டயலாக் அங்கங்கே இருப்பது ரசிக்ககூடியது. இசை + பாடல் இரண்டும் ஒரே இரைசல்.



கோழி இடும் முட்டைகள் :
மொத்தத்தில் சொன்னா புரியாது ரசிக்கும்படி இருக்கு!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!




கலகலப்பு @ மசாலா கபே விமர்சனம்

சுந்தர்.சி யின் 25வது படம் கலகலப்பு. இவருடைய படங்களில் கலகலப்புக்கும் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. படத்தில் கலகலப்பை வைக்கும் இவர் "கலகலப்பு" என்று படத்திற்கு டைட்டில் வைத்தால் படம் எப்படி இருக்கும்? படம் முழுக்க ஒரே காமெடி மயம்தான்.

இந்தப் படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் நடித்துள்ளனர்.

UTV Motions Pictures மற்றும் குஷ்புவும் சேர்ந்து தயாரித்து உள்ளார்கள். நிச்சயமாக இருவருக்குமே நல்ல வருமானத்தை கொடுக்கும்.

சந்தோஷமான விஷயம் படத்துக்கு வசனஉதவி சகபதிவரும், சிறந்த சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!


சரி சரி படத்தோட கதை என்ன ....

கும்பகோணத்தில் மசாலா கபே என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் விமல். பேரு தான் மசாலா கபேன்னு இருக்கே தவிர அது தலைமுறை தலைமுறையா நடத்தப்பட்டு வருகிற ஓட்டல். மூன்றாவது தலைமுறையான விமல் நடத்தும் போது மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடுகிறது. என்றாலும் பரம்பரை ஹோட்டலாச்சே என்ற எண்ணத்தில் நடத்தி வருகிறார்.

அங்கேயே சமையல்காரராக இருக்கிறார் தாத்தா ராகவன். அவருடைய பேத்தி ஓவியா. திடீரென ஜெயிலில் இருந்து பரேலில் வந்து சேருகிறார் சிவா. இவருக்கும் ஓவியாவுக்கும் காதல் பத்திக் கொள்கிறது.

அதே நேரத்தில் அந்த ஊருக்கு வந்து விமலின் ஓட்டலையே மூடச் சொல்லுகிற "ஹெல்த் இன்ஸ்பெக்டர்" அஞ்சலிக்கும் விமல் மீது காதல்.

விமல் மசாலா கபேயை நடத்தி வரும் இடத்தின் மீது தொழிலதிபர் ஒருவர் கண் வைத்துவிட, அந்த இடத்தை நைசாக சிவாவிடம் இருந்து எழுதி வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் மைக்கேல்.

ஏமாற்றி வாங்கிய மசாலா கபேவை திரும்ப வாங்கினார்களா…? அவர்கள் காதல் என்னவானது என்பது க்ளைமேக்ஸ்.



எனக்கு பிடித்த சில....


சிவா

சிவா வந்தவுடன் காமெடி வேகம் பிடிக்கிறது. அவர் கொடுக்கின்ற ஒவ்வொரு ஐடியாவும் எதிர்மறையாக வேலை செய்ய தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. சிவா சும்மா நின்று கொண்டு அடிக்கும் மொக்கை கமென்ட்டுகளுக்கு பதில்களுக்கு தியேட்டரில் செம அலப்பறை + க்ளாப்ஸ் கொடுக்கிறது. Good job n acting Shiva...!!

விமல்

மசாலா கபேயை நடத்தி வரும் வெள்ளந்தியான கேரக்டரில் விமல். உண்மையை மட்டுமே பேசுகிற இவர் லஞ்சம் கொடுப்பதற்கு போய் அடி வாங்கிவரும் காட்சி செம காமடி.

சந்தானம்

சந்தானத்திற்கு மற்றுமொரு படம் அவ்வளவு தான். அவரின் உதவியாளர்கள் அவரை விட பயந்தாங்கொள்ளியாக இருப்பதும் சரியான காமெடி. ஒரு சண்டைக்கு கிளம்பும் போது பாதியில் சுகர் மாத்திரை போட வேண்டுமென்பதற்காக எஸ்கேப்பாக முயற்சிக்கும் தினேஷின் காமெடியும், கடைசியில் எல்லோரும் படுங்கடா என்றதும் மூவரும் சேர்ந்து சந்தானத்தின் மீது படுத்து நசுக்குவதும், கடைசியில் கோழியிடம் மிதிபட்ட ..ஞ்சாக நசுங்கிப் போவதும் காமெடியும் சூப்பர் தான்.

இடைவேளிக்குபின் சந்தானம் வந்தவுடன், கதை ஜெட் வேகத்தில் பறக்கின்றது. மனிதர் சும்மா சொல்லக்கூடாது, உண்மையிலேயே கலகலப்புதான். இன்னும் சொல்லப் போனால், சந்தானம்தான் இந்த படத்தின் நிஜ ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் முழுக்க சிரிக்க வைக்கின்றார். அஞ்சலியை திருமணம் செய்ய அவர் செய்யும் கூத்துக்களை சொல்லி மாளாது.

மனோபாலா & Co

தனது மகளை சந்தானத்துடன் சேர்க்க வேண்டுமென்பதற்காக அஞ்சலியை கடத்தும் மனோபாலா, அது தெரியாமல் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக தாத்தாவுடன் தப்பிக்கும் விமல் அவரை துரத்தும் சந்தானம் என அந்த ஒரு காமெடி கலாட்டா தான்.

இளவரசு

கடன் கொடுத்த இளவரசுவை சிவா ஒரு தவறான தகவலுடன் இன்ஸ்பெக்டர் ஜானுடன் கோர்த்து விட ஜானுக்கு பயந்து மாறுவேடத்தில் சுற்றும் இளவரசுவை வேணுமென்றே தவறாக அடையாளம் காணும் சிவாவும் அதனை அவரிடமே கேட்கும் இளவரசுவின் நகைச்சுவை பயங்கர கலாட்டா.

விமல் வீட்டில் வைரத்திற்காக வந்து மிரட்டும் சுப்பு பஞ்சு மற்றும் அவரது அடியாட்கள், மாட்டிக் கொண்ட விமல், சிவா மற்றும் இளவரசு, திடீர் பைத்தியமாகும் கான்ஸ்டபிள், வைரத்திற்காக சுப்புவின் பின்பக்கத்தை கொத்தாக கவ்வும் நாய் என் அதுவும் ஒரு காமெடி கலாட்டா தான்.

ஹோட்டலில் வைரத்திற்காக நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை அதன் முடிவு கூட காமெடி கலாட்டா தான்.

அஞ்சலி & ஓவியா

அஞ்சலிக்கும், ஓவியாவிற்கும் பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் காமெடியில் அவர்களுக்கும் பங்கு உண்டு. கவர்ச்சி மழையில் இருவரையும் நன்றாக நினைய வைத்திருக்கின்றார் சுந்தர் சி.

அஞ்சலியின் மேனரிஸம் எல்லாமே எங்கேயும் எப்போதும் பட மணிமேகலையை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதே பாடி லாங்க்வேஜ்.

கவர்ச்சியை எதிர்பர்த்து செல்லும் ரசிகர்கள் ஏமாறமாட்டார்கள். வசனக்கள் தான் படத்தில் ஜீவன். பாடல்கள் படு வேஸ்டு. பின்னணி இசை பரவாயில்லை.



கலகலப்பு - ஒரு நல்ல காமெடி படம் பார்த்த திருப்தி!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : iamvenkatesh2011.com & Google.com



Related Posts with Thumbnails
 
back to top