Showing posts with label பிரகாஷ் ராஜ். Show all posts
Showing posts with label பிரகாஷ் ராஜ். Show all posts

உன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற பொதுக்கருத்துக்கு மீண்டும் வலு சேர்த்திருக்கிறது "உன் சமையல் அறையில்'.

லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் மலையாளத்தில் மெஹா ஹிட்டான "சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழுக்கு ஏற்ப மசாலா சேர்த்துள்ளதால் "தலப்பாகட்டு பிரியாணி' போல வாசம் கமகமக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வாழ்க்கை என்பதே சாப்பிடுவதற்காகத்தான் என நம்பும் பிரகாஷ் ராஜ். 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காமல், பிரம்மச்சாரியாக நண்பர் குமாரவேலுவைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

நண்பரின் பலவித வற்புறுத்தலுக்குப் பின்பு, பெண் பார்க்கப்போகும் இடத்தில் சாப்பிட்ட வடையில் மனதைப் பறிகொடுத்து, பெண்ணுக்குப் பதிலாக சமையல்காரரை (தம்பி ராமையா) கையோடு வீட்டுக்கு அழைத்து வருமளவுக்கு, சாப்பாடுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பிரகாஷ் ராஜுக்கு.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகா, தகுந்த வரன் கிடைக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாக இருக்கிறார். பிரகாஷ் ராஜ், சிநேகாவுக்கு இடையே, ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல் நட்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகிறது. இருவரும் சந்தித்துப் பேச நினைக்கும்போது, வயதானவன் என சிநேகா நினைத்து விடுவாரோ எனத் தயங்கி, தனக்குப் பதிலாக தனது மருமகனை (நவீன்) அனுப்புகிறார் பிரகாஷ் ராஜ்.

அதே போல சிநேகாவும் தனக்குப் பதிலாக தனது அறை நண்பியை (மேக்னா) அனுப்புகிறார். இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொள்ள, பிரகாஷ் ராஜ் - சிநேகா காதல் என்னவானது என்பதை காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து தாளித்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரகாஷ் ராஜ்
வடையை ரசித்து ஆழமாக ருசிக்கும் ஒரு காட்சிபோதும் பிரகாஷ் ராஜின் அபரிமிதமான நடிப்பை விவரிக்க. 45 வயதான ஒருவரின் உளவியலை அப்படியே மனக்கண் முன்பாக நிறுத்துகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் - சிநேகா இடையேயான காதல் காட்சிகளில் இருக்கும் உயிர்ப்பு, நவீன் - மேக்னா காதல் காட்சிகளில் இல்லை.

சிநேகா
படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைவது இவர்களின் காதல் காட்சிகளால்தான். பெண்களுக்குத் திருமணம் தாமதமானாலோ, தடைபட்டாலோ சமூகம் என்ன சொல்லும் என்பதை சிநேகாவின் விம்மி வெடிக்கும் அழுகை உணர்த்துகிறது. வெல்டன் சிநேகா!


இசை இளையராஜா
படத்தில் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில் ராஜாங்கமே நடத்தி இருக்கிறார். நான்கு பாடல்களும் காதுக்கு இனிமையாக அமைந்து "ராஜா ஆல்வேஸ் ராஜா' என்று நிரூபிக்கின்றன. "இந்தப் பொறப்பு தான்' பாடல், உணவு வகைகளின் ருசிகளைச் சொல்லி ரசிக்க வைக்கிறது. "ஈரமாய்' பாடலில் காதல் வழிந்தோடி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. "காற்று வெளியில்' பாடலில் இளையராஜாவின் குரல், கேட்பவர்களை உருக வைக்கிறது.

படத்திற்குப் பெரிய பலம் ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. நம் வீட்டு சமையல் அறைக்குள் வழிமாறி நுழைந்து விட்டோமோ என தடுமாற வைக்கிறது இவரது ஒளிப்பதிவு.

படத்தில் வரும் காட்டுவாசி பாத்திரம்தான் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்குமே...

எப்போதாவது ஒரு தடவைதான் இதுபோன்ற "ஃபீல் குட்' படங்கள் தமிழில் வரும். அந்த வகையில் ஆபாசம், வன்முறை இல்லாமல் வெளிவந்துள்ள "உன் சமையல் அறையில்' நாம் அனைவருமே ஒருமுறை வலம் வரலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'உன் சமையல் அறையில்' - ஃபீல் குட் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



'கடவுள்... என் மதிப்புக்குரிய எதிரி!'

கே.எஸ்.நரசிங்க சாமின்னு ஒரு கன்னடக் கவினர் கடவுள்கிட்டே கவிதை மூலமா பேசுவார்.

"ஆகாயம் உன்னுடையது, பூமி உன்னுடையது என்கிறார்கள். நீ மிகப் பெரியவன் என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், நீ என்னுடைய மதிப்பிற்குரிய எதிரி. உன் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைக்காதே!. என் கிரீடம் எனக்கு வேண்டவே வேண்டாம்.

என் அப்பாவும் அம்மாவும் தோளோடு தோள் உரசிக்கொண்ட தருணத்தில் வெளியான காம வெப்பத்துக்குப் பிறந்த குழந்தை நான்.

ஒரு பெண் வயிற்றில் இருந்து இந்த உலகத்துக்குப் பிறந்து வந்தேன். இறக்கும் போது பூமி என்கிற இன்னொரு பெண்ணின் வயிறுக்குள் போகிறேன். இடையில் நீ, நட்சத்திரமாக இருக்கலாம். நட்சத்திரங்களால் ஆன மாலை என்றாலும், அந்தப் பாரத்தை என்னால் துக்கித் சுமக்க முடியாது.

கடவுளின் மகிமையைப் பற்றி என் பிள்ளைகளுக்குப் போதிப்பதை விட, சக மனிதனை எப்படி நேசிப்பதுனு அவங்களுக்கு கத்துக் கொடுத்தா போதுங்கிற கட்சி நான்".

நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்துல வேஷம் போடுறதைவிட, உண்மையா இருக்கிறதைத்தான் கடவுளும் விரும்புவார்.... ஒருவேளை அப்படின்னு ஒருவர் இருந்தா.!


இந்த தகவலை நம்ப 'செல்லம் புகழ்' பிரகாஷ்ராஜ் தனது "சொல்லாததும் உண்மை" என்ற தொடரில் எழுதியது.

என்ன நண்பரே உங்களுக்கு இந்த தகவல் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு என்னக்காக போடுங்கள். நன்றி மீண்டும் சிந்திப்போம்.



காதல் - பன்னிகுட்டி - பிரகாஷ் ராஜ்

நடந்த சம்பவம் - பன்னிகுட்டி சாட்சியாக..

என்னோட நெருங்கின நண்பர்கள் ரெண்டுபேரு காதலிச்சாங்க. பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணமும் பண்ணினாங்க.

அவ, அவனை 'டேய் பன்னி'நின்னு தான் செல்லமா கூப்பிடுவா. அவங்க கல்யாணத்துக்கு நண்பர்கள் நாங்க அழகான ஒரு பன்னிக் குட்டியைத்தான் 'கிப்டா' கொடுத்தோம். ஆசையா அவங்களும் வளர்த்தாங்க.

எங்க 'கேங்'ல ஒரு ரோல் மாடல் ஜோடி அவங்கதான்னு எல்லோரும் நினைச்சுகிட்டு இருந்தபோது, ஒரே வருசத்துல ரெண்டு பெரும் 'டைவர்ஸ் அப்பளை' பண்ணினாங்க.

ரெண்டு பேருகிட்டேயும் தனி தனியா பேசி பார்த்தோம். பேசின பிறகு, அவங்க சேர்ந்து வாழவே முடியாதுன்னு மட்டும் தோணலை. சேர்ந்து வாழவே கூடாதுன்னு தோணுச்சு.

என்னா, காதலிக்கும் வரை அவன் பார்த்த அவள் வேறு. அவள் பார்த்த அவன் வேற. ரெண்டு பெரும் தங்களோட மைனஸ் ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளவே இல்லை.

அவன் மாறிட்டான், அவன் காதலிக்கும்போது இருந்தவனே இல்லை. வாழ்நாளெல்லாம் காதலனாவே இருப்பான்னு நம்பி கல்யாணம் பண்ணினேன். கல்யாணத்திற்கு அப்புறம் 'புருசனாகிவிட்டான்'னு அவன் மேல இவ பெரிய புகார் பட்டியல வாசிக்கிறா.

அவ நான் நினைத்த பொண்ணே இல்லைடா. ஏமாந்துடேண்டா...னு உடைஞ்சு அழறான். அவளோட வியர்வை வாசனை இவனுக்கு பிடிக்கவில்லை.

இவனோட குறட்டை சத்தம் அவளை டிஸ்டர்ப் பண்ணியிருக்கு. காபி டம்ளரை உர்ர் உர்ர்-னு அவ உறிஞ்சி குடிக்கிறது இவனுக்கு பிடிக்கவே இல்லை.

இவன் அழுக்காவே திரியறது இவளுக்கு சுத்தமா பிடிக்கலை. இப்படி ஒவொரு விசயத்துக்கும் ஒருவரை ஒருவர் சகிச்சுக்கிட்டு இருக்க தயாராவே இல்லை.

"ஏய், என்னை 'பன்னி'-ன்னு இனிமே குப்பிடாதே"-ன்னு இவன் எரிச்சலா சொல்லிகிட் இருக்கிறான்.

'இவங்க காதலுக்கு சாட்சியாகிட்டோமே'ன்னு அந்தக் பன்னிக்குட்டி இன்னனும் 'திரு திரு'வென முழிச்சிக்கிட்டு இருந்தது.

இந்த உன்னை சம்பவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டது நம்ப 'செல்லம்' பிரகாஷ் ராஜ்.

காதல் திருமணம் வரை இருந்திட கூடாது. அது திருமணத்திருக்கு பிறகு இருக்க வேண்டும். அது தான் உண்மையான காதல்.
காதல்
நட்பு என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்வு பரிமாற்றம்.

காதல் என்பது
இரு இதயங்களுக்கு - இடையே ஏற்படும்
உணர்ச்சி பரிமாற்றம்

நன்றி : திவ்யகிஷோர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top