Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

இது ஒரு மருத்துவ அதிசயம்!!!

சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 'ஷாங்டே' என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.

கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக
ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர். மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரித்து விட்டனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு மண்டல மருத்துவமனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர். வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடினமான சிகிச்சை.

எனவே நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறினர். அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டுசெடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்துகள் மூலம் பாதுகாத்தனர்.

சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர். தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran




'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?

கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது.

மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக இன்று நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?

மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.

அட இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : dinakaran news paper



தூங்கப் போறீங்களா ...? (Must read)

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதுபற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, 'சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது.

சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங்கே...

  • தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை.

  • தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல குறிப்பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

  • எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இருக்கிறது. "கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது" என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு.

    வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வடக்கே தலை வைக்கக்கூடாது என்பார்கள்.

  • தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ்சில் துயில்' என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்.

  • படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.


  • இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலதுபுற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்புக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குணமாவதாக கூறுவார்கள்.

  • கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது.

    குப்புறப் படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
நிம்மதியா உறங்குங்கள்!

Thanks : http://www.maalaimalar.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்! (must read)

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சில எளிய டிப்ஸ்!

சளிகட்டு நீங்க:

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

சளித்தொல்லை நீங்க:

1. ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.

2. மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும்.

3. தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.

4. அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.

சளிகபம் ஏற்படாமல் தடுக்க:

சுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.

சளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:

நத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.

மார்புசளி நீங்க:

ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

சளி மூக்கடைப்பு தீர:

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:

முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.

ஜலதோஷம்:

ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

தும்மல் நிற்க:

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

இருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.

ஜலதோஷம்:

மாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.

ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :

காய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.

ஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



என்றும் இளமையுடன் இருக்க - சலபாசனம்!

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை.

ஆசனங்கள் பலவகை:

  1. நின்று செய்யக்கூடியன.
  2. அமர்ந்து செய்யக்கூடியன.
  3. படுத்துச் செய்யக்கூடியன.
  4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.



சலபாசனம்:

‘சலபம்’ என்ற வடசொல்லுக்கு ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம் ‘சலபாசனம்’ என்று பெயர் பெற்றது. மேலும் இந்த ஆசனத் தோற்றம் வெட்டுக்கிளி வடிவில் இருப்பதாலும் இப்பெயர் கொள்ளலாம். இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.

செய்முறை:

  1. தரை விரிப்பின் மீது முதலில் குப்புறப்படுக்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக் கொள்ளவும்.

  2. முகவாய்க்கட்டை தரையில் படும்படி முகத்தை சற்று உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

  3. கை விரல்களை நன்கு மடக்கி தொடைகளுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.

  4. பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளைத் தரையில் அழுத்திக் கொண்டு தலை, நெஞ்சுப் பகுதி இரண்டு கால்களையும் சேர்ந்த மாதிரி ஒரே சமயத்தில் மேலே உயர்த்த வேண்டும்.

  5. கால்களை வளைக்காமல் 45 டிகிரி வரை உயர்த்த வேண்டும்.

  6. இதே நிலையில் பத்து முதல் இருபது வினாடிகள் வரை இருக்கலாம். இப்போது உடலின் எடை தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு, கைகள் இவற்றின் மீதுதான் விழும். தொடைப் பகுதிகள், கால்கள், முன் பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

  7. பின்பு மெதுவாக மூச்சை விட்டபடி கால்களை மெல்லக் கீழே இறக்க வேண்டுத். தரையில் படியும்படி கால்கள் வளையக்கூடாது. களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. முதலில் கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சியில் எளிதாகச் செய்ய முடியும். இப்படி மூன்று முதல் ஐந்து தடவைகள் செய்யலாம்.

  8. கால்களை மேலே தூக்கும் போது தொப்புளுக்குக் கீழேயுள்ள பாகம் மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். உடம்பின் அடிவயிற்றின் முன்பகுதி மட்டும் தரையில் படிந்தவாறு இருந்து உடல் எடையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

  9. உள்ளங்கால்கள் வளையாமல் ஆகாயத்தை நோக்கி இருத்தல் வேண்டும்.

  10. பிட்டத்தைச் சுருக்கி, இறுக்கமாக வைக்கவும். தொடை தசைகளை விரித்தவாறு வைக்கவும்.

  11. கால்கள் விரைப்பாகவும், சேர்ந்தும், ஒன்றோடு ஒன்று தொடை, முட்டி மற்றும் கணுக்கால் பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.

  12. உடல் எடையைக் கைகளால் தாங்கக் கூடாது. கைகளை நன்கு பின்புறம் நீட்டிக் கொள்ள வேண்டும்.

  13. முடிந்த அளவுக்கு இயல்பாகச் சுவாசித்தவாறு இருக்கவும். ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியையும் தொடைகளையும் தரையிலிருந்து உயர்த்துவது சிரமமாகத்தான் இருக்கும். அடிவயிற்றுத் தசை நார்கள் உறுதி அடைந்து விட்டால் இரு கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் நன்கு உயர்த்த முடியும்.


பலன்கள்:

  1. சிறுநீரகம் நன்கு செயல்படுவதற்கும் சிறுநீரக நோய்கள் நீங்குவதற்கு துணை புரிகிறது.

  2. வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன. பெருவயிறு எனப்படும் தொந்தி கரைகிறது.

  3. வயிற்றுப் பகுதிக்கு அதிகமான இரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும். இல்லறத்தில் நீடித்த இன்பம் துய்க்க வழிவகுக்கும்.

  4. கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் கோளாறு நீங்கும்.

  5. மூலம் என்கிற கொடிய வியாதியை அறவே அழித்து ஒளிப்பதில் இந்த சலபாசனம் முன் நிற்கிறது.

  6. நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.

  7. முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது.

  8. குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு நீங்கும்.

  9. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுகிறது.
Special பலன்கள்...
  • தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பையைக் குறைக்கிறது.
  • ஆண்மை சக்திபெருகும்.
  • ஜீரண சக்தியை பெருக்கும்.
  • சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும்.
  • சோம்பல் இன்றி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.
  • இதய மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை : இந்த ஆசனத்தை சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுவோர், குடல்வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
குருவின் ஆலோசனைப்படி கேட்டு ஆசனம் செய்வது சாலச்சிறந்தது!!!

நன்றி :உங்களுக்காக
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஓவர் டென்சன் வேண்டாமே!!!!


எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.

டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல் நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன் தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

உலகளவில் மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கான காரணங்களில் 58 சதவீதம்... உடல் பருமனே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது.
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, "இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்" என்றார்.
மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்.

அதற்கு அந்த மாணவன், "இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன்" என்றான்.

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!


அதற்கு சில டிப்ஸ்
  • உடல் பருமனை குறைக்க வேளைக்கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். டென்ஷனுக்கு உடல் பருமனும் காரணம்.

  • ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம்.

  • மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும்.பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

  • வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும்.தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • ருத்ராட்சம், வல்லாரை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும்; கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதன் மூலம் மறதியால் உண்டாகும் டென்ஷனை தடுக்கலாம்.

  • முளைக் கீரை தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். முட்டைக்கோசுடன் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

  • முடக்கத்தான் கீரைச்சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் அள வுக்கு எடுத்து சின்ன வெங்கா யம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். இதனால், உடல் வலிமை பெறுவதோடு, டென்ஷனும் குறையும்.
டாக்டர்! என்னை ஒரு வாரம் நல்லா ரெஸ்ட்டுல இருக்கணும்னு சொல்லிட்டாரு!"
அதுக்கு என்னடா செய்யப்போறே?"

என் பொண்டாட்டியை ஒரு வாரத்துக்கு ஊருக்கு அனுப்பி வைக்கப் போறேன்."
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-
  1. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

  3. கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

  4. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

  5. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

  6. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

  7. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

  8. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

  9. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

  10. பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

  11. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

  12. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

  13. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

  14. "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

  15. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழம் 'ஏழைகளின் ஆப்பிள்' Mr.பப்பாளி. பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ.

பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது.

இதன் பயன்கள் மிக மிக அதிகம். மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அவற்றில் ஒரு சில ...


பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
பொதுவாக குழந்தைகளுக்கும் இந்த பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு என்பன வலுவடையவும் உதவும். குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்குமாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
பப்பாளி பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
நரம்புகள் பலப் படவும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
நரம்புகள் பலப் படவும் பித்தத்தைப் போக்கி இதயத்திற்கு வலுசேர்க்கிறது.

தேள் கொட்டினால் அவ்விடத்தில் இதன் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிந்துவிடும்.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



உடல் எடையைக் கூட்டலாம் & குறைக்கலாம்!

உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்! எப்படி என்று நீங்களே கீழ் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ?

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில்
  • கறுப்புத் திராட்சை
  • பச்சைத் திராட்சை
  • பன்னீர்த் திராட்சை
  • காஷ்மீர்த் திராட்சை
  • ஆங்கூர் திராட்சை
  • காபூல் திராட்சை
  • விதையில்லா திராட்சை
என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.


உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெற என் வாழ்த்துக்கள்.



இலவச பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

உங்களுக்கு தெரிந்தவர்கள் பலருக்கும் பிறந்த போதே சில உடல் குறைபாடுகள் இருக்கலாம். அவர்களால் போதிய பண வசதியிமையால் மேல்கொண்டு சிகிச்சை செய்யமுடியாமல் இருக்கலாம்.

அதே போல 'தீ' விபத்தில் தங்கள் உடலில் ஏற்பட்ட காயங்களை குணபடுத்தவும் + 'பிளாஸ்டிக்' அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ள வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாத 4-ம் தேதி வரை அனைத்து வசதிகளும் கூடிய இலவச கிச்சை தர இருகிறார்கள். பயன்படித்தி கொள்ளுங்கள்.



இதற்காக நீங்கள் அணுகவேண்டிய முகவரி :
பாசம் ஹாஸ்பிடல்,
கொடைக்கானல்.
தொலைபேசி எண்கள்: 04542 – 240668, 245732
மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாத 4-ம் தேதி வரை

Pasam Hospital,
KODAIKANAL
Contact: 04542 – 240668, 245732

நீங்கள் மனது வைத்தால் இந்த தகவலை பலருக்கும் பயனுள்ளதாக தெரிவிக்க முடியும். நம்பால் பண வசதி செய்துகொடுக்க முடியவில்லை என்றாலும் இந்த தவகளை உங்களுக்கு தெரிந்த / நண்பர்களுடன் தெரிவிக்க இது பலருக்கும் பயன்படும்.

தொடர்க உங்கள் சேவை.

இந்த தகவலை என்னுடம் பகிர்ந்துகொண்ட கவிதா அவர்களுக்கு என் நன்றிகள்.



எங்கேடா அந்த 'துளசி'...?!

ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களுக்கு சென்றால் துளசித் தீர்த்தம் கொடுப்பார்கள். நம்பில் பலரும் அதனை ஏதோ ஒரு பக்தி பொருளாய் தான் பார்க்கிறோம். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.



எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

1. துளசிச் செடியை ஆராக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

2. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

3. நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

4. துளசி இலையை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

5. கோடை காலம் வரப்போகிறது. வியரவை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா...? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க.

6. தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரி இரண்டையும் துளசி இலையால் குணமைடயச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா ? துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

7. சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரைஅளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாதை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.

8. சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடேவ உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்னை சரியாகும்.


துளசியில் கிருஷ்ண துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, காட்டுத்துளசி, இராம துளசி எனப் பல வகைகள் இருக்கின்றன.

நம் நாட்டில் 22 வகை துளசி இருக்கிறது. துளசி 22 விதம் இருப்பினும் நாம் அதிகமாக பயன்படுத்துவது 'இராம துளசி என்ற வெண்துளசியும், 'கிருஷ்ணதுளசி' என்ற நீலத்துளசியுமாகும்.


நம்ப வேதிகாவும் கூட இந்த துளசியின் பயன் தெரிந்து என்னமா பூஜை பண்றங்கோ...

இனி துளசியை கண்டால், விடாதீங்க...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!



யோகா - கேள்வியும் பதிலும்

யோகா பற்றி பலருக்கும் சில பல சந்தேகங்கள் வருவது இயல்பு. உங்களுக்கும் தோன்றின கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே அணிவகுத்து வருகின்றன. மறக்காமல் கொசுறு செய்தியை வாசித்து செல்லுங்கள்.

1) எந்த வயது முதல் யோகா பழகலாம் ?

ஐந்து வயது முதல் எண்பது வயது வரை யோகா பழகலாம். எந்த வயதிலும் பழக ஆரம்பிக்கலாம். அவரவர் வயதிற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

2) உடற்பயிற்சி தேவையா?

உடற்பயிற்சி தேவைதான். மனிதனுக்கு உணவும் உறக்கமும் தினமும் தேவை. அதுபோல், ஆரோக்கியமாய் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.

3) உடற்பயிற்சிகளைவிட யோகா எந்தவிதத்தில் நல்லது?

யோகாவிற்கு நோய்களைக் கட்டுபடுத்தும், தீர்க்கும் சிறப்பு உண்டு. பிற உடற்பயிற்சிகளைத் செய்யப் பலவித உபகரணங்கள் தேவையாக உள்ளன. ஆனால், யோகா செய்வதற்கு, ஒரே ஒரு தரைவிரிப்பு இருந்தால் போதும்; வேறு எதுவும் தேவையில்லை. அதனால் யோகாவை எந்த இடத்திலும் செய்ய முடியும்.

4) யோகா மூலம் எந்தவித வியாதிகளைக் குணப்படுத்த முடியும்?

யோகாவினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும். முறைப்படி செய்யப்படும் யோகாவினால் டாக்டர்கள் கைவிட்ட ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம், யானைக்கால் வியாதி போன்ற பலவித வியாதிகளையும் நமது யோகா ஆசிரியர்கள் குணப்படுத்துவது உலகம் அறிந்த செய்தியாகும்.

5) நீரிழிவு உள்ளவர்கள் எந்தவிதமான பயிற்சியைச் செய்யலாம் ?

தனுராஸனம், யோகமுத்திரை, மத்யேந்த்ராஸனம், சப்த வஜ்ராஸனம், திரிகோணாசனம் செய்துவந்தால் நாளடைவில் வியாதி குணமாகும்.

6) யோகா பயிற்சி செய்யும்போது உணவுக் கட்டுப்பாடு அவசியமா?

உணவில் கட்டுப்பாடு இல்லையென்றால் நோய்கள் அதிகமாகும். உணவு, உயிர் வாழ்வதற்குத்தானே தவிர, உடலைப் பெருக்குவதற்கும், கெடுத்துக் கொள்வதற்கும் அல்ல. இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம், காபி, டீ, குடிப்பழக்கம், சிகரெட் பிடித்தல் முதலியவற்றை முதலில் குறைத்துப் பிறகு அறவே நிறுத்திவிடல் வேண்டும். உணவில் கீரைகள், காய் வகைகள், பழங்கள், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நம்முள் பலர் இப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் உடலைப் பெருக்கவிட்டுவிட்டுப் பிறகு செயல்பட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

7) யோகா செய்வதற்கு ஏற்ற உடை எது?

இறுக்கமான உடைகள் யோகாவிற்கு ஏற்றன அல்ல. யோகாவிற்குப் பெண்கள் சுடிதார், பைஜாமா போன்ற தளர்வான உடைகள் அணிவது நல்லது. காற்று உடலில் படுமாறு அணிய வேண்டும். ஆண்களானால் ‘ஷார்ட்ஸ்’ அணியலாம்.

8)பிரசவ காலத்திற்கு முன்பாக எந்த மாதம்வரை யோகாசனம் செய்யலாம்?

பிரசவம் ஆவதற்கு முன்பாக மூன்று மாதங்கள் இருக்கும்போது யோகாசனத்தை நிறுத்திவிட வேண்டும். பிரசவம் ஆன பிறகு மூன்று மாதம் கழித்து யோகாசனம் செய்யலாம். நேரிடையாகப் பயிற்சி பெறுவது நல்லது.

9) எந்த நேரம் வேண்டுமானலும் யோகா செய்யலாமா?

அதிகாலையில் வெறும் வயிற்றுடன் செய்வது நல்லது. மாலையிலும் செய்யலாம். நடுப்பகல் நேரத்தில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

10) யோகாவைத் தொடர முடியாமல் நடுவில் நிறுத்திவிட்டால் உடல் எடை கூடிவிடுமா?

இதற்கு வாய்ப்பு இருக்கிறது. கூடிய வரை நடுவில் நிறுத்தாமல் இருக்க வேண்டும். அதிக நேரம் செய்ய முடியாவிட்டாலும் பதினைந்து அல்லது இருபது நிமிடமாவது செய்வது நல்லது.

11) புத்தகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றைப் பார்த்து யோகா செய்யலாமா?

முதன் முதலில் நீங்கள் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுவிட்டுப் பிறகு படித்தோ, பார்த்தோ பழகலாம். பழகும்போது மனநிலை ஆசனத்திலேயே இருக்க வேண்டும்.

12) மிகப் பருமனாய் இருப்பவர்கள் உடலை வளைத்துச் செய்ய முடியுமா?

மிகப் பருமனாய் இருப்பவர்களுக்கு எனச் சில குறிப்பிட்ட ஆசனங்கள் இருக்கின்றன. அவர்கள் அவற்றைத் தொடர்ந்து பழகினால் உடல் எடை குறைந்து எளிதாகச் செய்ய முடியும்.

கொசுறு செய்தி :-

நம்ப இலியானா சும்மா வளைந்து நெளிந்து யோகா பண்றத பார்க்கும் போது நானும் யோகா கத்துக்க ஆரமிச்சேன். தொடர்ந்து பல நாட்கள். எனக்கே ஆச்சரியம்..! எப்படி என்னால் இதெல்லாம் முடியுதுன்னு.!!!


இலியானா, இன்றும் என்னை செல்லமாக அடித்தாள். ரசித்தேன். ஒழுங்கா யோகாவை கத்துக்க சொன்னாள். ஏனோ அவள் அடித்த அடி இன்று எனக்கு ரொம்பவே வலித்தது. யோகா கத்துகிறவள் அடித்தாள் இப்படியும் வலிக்குமோனு நினைத்தேன்.

ஏதோ கராத்தே கத்துகிடவள் போல மீண்டும் ஒரு அடி விழுந்தது. என்மீது கோபம் ஏனோ ? என்று கேட்ட நினைத்து திருப்பிய போது விழுந்தேன், படுக்கையில் இருந்து... அருகில் வீடு கூட்டும் 'துடப்பை கட்டை'யுடன் நம்பன் என்னை முறைத்த படி நின்ருந்தான். விழுந்த அடிகள் எல்லாம் இலியானா தந்தது என்று இருந்தேன். But...!?

சிலருக்கு கனவுல தான் யோகா பண்ற மாதிரி இருக்கும் போல. சரிங்க நீங்களும் என்னை மாதிரி கனவுல யோகா செய்யாம நிஜத்துல யோகா பண்ணுங்க. வாழ்க்கைய செழுமையா வச்சுகுங்க.

நன்றி: திரு.இராமநாதன்



யோகா என்றால் என்ன?

இன்றைய நவீன கணினி (Computer) யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் 8-லிருந்து 10-மணி வரை ஆபீசில் பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக 10 - 14 மணிநேரம் செலவு செய்கிறோம். இந்த நேரத்தில் மூளைக்கு அதிக வேலை கொடுக்கவேண்டியுள்ளது.

ஒரு வழியாக ஆபீஸ் வேலைகளை முடித்து வீடு திருப்பும் போது வீட்டு பிரச்சனைகள் தொடர்கிறது. ஆபீஸ் + வீட்டு பிரச்சனைகள் எல்லாம் சேரும்போது மனது படும் பாடு இருக்கே அது சொல்லி தீராது.



இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு 10 - 15 நிமிடங்கள் ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது. எனக்கு அடிக்கடி முதுகு வலி வருவது உண்டு. மாத்திரை மருந்துகளுக்கு கட்டுபடாத இந்த வலி, சிறிய யோகா மூலம் நிவர்த்தியானது, உண்மை.

இதன் மீது ஈர்ப்பு வந்து தொடர்ந்து யோகா பற்றி - புத்தகம், செய்திதாள்களில் படித்தும், அறிந்து வருகிறேன். 'நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்ற கூற்றுப்படி யோகா பற்றி அதன் பயிற்சி பற்றி வார வாரம் இனி பார்ப்போம்.

யோகா எ‌ன்றா‌ல் ஏதோ நம‌க்கெ‌ல்லா‌ம் வராது, அத‌‌ற்கெ‌ல்லா‌ம் நேரம் என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும் தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் ஒரு செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.


யோகா என்றால் என்ன?

"யுஜ்" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் ஒன்றிப்பு என்று பொருள்.

யோகா (Yoga) என்பது உடலின் அனைத்து பாகங்களையும் ஓவர் ஆயிலிங் (over oil) செய்வதுதான். ஜீரணமண்டலம், ரத்த ஓட்ட மண்டலாம், சுவாச மண்டலம், தசை மண்டலம், கழிவு மண்டலம், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், இன்னும் பல.., மண்டலங்களையும் + சுரப்பிகளையும் + 72000 நாடி நரம்புகளையும் உடலின் அனைத்து உறுப்புகளையும் இயங்க செய்வது தான் யோகா.

அழகான உடலும் அமைதியான உள்ளமும் அளித்திடும் யோகாசனம்

யோகாசனப் பயிற்சிகளும், 'மெடிட்டேஷன்' (Meditation) எனப்படும் ஆழ்நிலை தியானமும் மனத்தை மட்டும் அமைதிப்படுத்துவதோடல்லாமல் உடலழகையும் பாதுகாக்கின்றன. அவை உடலின் உள்ளுறுப்புகளையும் பலப்படுத்திச் சரிவர இயக்குகின்றன. உடலும் மனமும் என்றும் இளமையோடும் இருக்கவும் முடிகிறது.

கொசுறு செய்தி:
சில வருஷங்களுக்கு முன்னால், தெலுகு நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் வயதான, சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். அவரது அழகில் மயக்கிய நடிகர், அவர் நடித்த 'சூப்பர்'(Super) படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நம்ப அழகிய வேட்டைகாரி 'அனுஷ்கா'.


இனி அடுத்த வாரம்...

யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா ?

நல்ல பதிவு பலரை சென்றடைய ஒரு வோட்டு போட்டா போதும் எனக்கு. நன்றி. மீண்டும் வருக!!!



பத்தில் உனக்கு தெரிந்தது எத்தனை ...?

இது பெண்களுக்கான விஷயம் மட்டுமல்ல. ஆண்களும் சற்றே தெரிந்து கொள்ளவேண்டிய விசயமும் தான்.

ஒரு பெண் தான் கருவுற்ற நாளில் இருந்து குழந்தையை பிரசவிக்கும் நாள் வரை அந்த பெண்ணின் கருவறையில் நிகழும் கரு உருமாற்றம் பற்றி ஒரு சில குறிப்புகள்.

பெண்ணானவள் தனது கருவறையில் நிகழும் மாற்றங்களை நன்கு உணர முடியும். அதனை ஆண்கள் படித்து தெரிந்துகொள்ளவதில் தவறே இல்லை. அட...சும்மா வாங்க, அந்த பத்து மாதங்களில் அப்படி என்ன தான் நடக்குதுன்னு கேட்போம்.

ஒன்றாம் மாதம்
பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாக தெரியும்.

முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண், காது போன்றவகைளாக மாறியது.

இரண்டாம் பாகம் : சுவாச கட்டமைப்பு, வயிறு வளர்ச்சியடைய தொடங்கியது. மூன்றாம் பாகம் : இருதயம், ரத்தம், தசை, எலும்பாக மாறியது.

இரண்டாம் மாதம்
சிசுவின் முகம் உருவாகிறது. கண் பகுதியில் குழி தோன்றுகிறது. மூளை, இருதயம், சுவாச பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இருதயம் மெல்ல செயல்பட தொடங்கும்.

மூன்றாம் மாதம்
உடலைவிட இப்போது தலை பெரிதாக இருக்கும். நெஞ்சு பகுதி மெல்ல துடித்துகொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் கருவி கொண்டு சப்தத்தை கேட்கலாம்.

நான்காம் மாதம்
தலைமுடி, புருவம் போன்றவைகள் லேசாக வளர்த்திருக்கும். கண்கள் மூடியிருக்கும்.

ஐத்தாம் மாதம்
சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். 'லாலுனுகூ' என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் மூடியிருக்கும். பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைத்து போய்விடும்.

ஆறாம் மாதம்
சிசுவின் உடல் கிட்டதட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் 'வெர் நிக்கஸ்' குழந்தையை பாதுகாப்பாய் மூடியிருக்கும். 'ஆம்நீயாடிக்' திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களை பெரும். குழந்தையின் விக்களை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

ஏழாம் மாதம்
குழந்தை கண் திறக்கும். எடை கிட்டதட்ட ஒரு கிலோ இருக்கும்.

எட்டாம் மாதம்
நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயில் நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.

ஒன்பதாம் மாதம்
ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.

பத்தாம் மாதம்
பிரசவத்திக்கு தயாராகும் நிலை உருவாக்கும்.

நன்றி : டாக்டர். கே.எஸ். ஜெயராணி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



Related Posts with Thumbnails
 
back to top