Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts
Showing posts with label மருத்துவ குறிப்பு. Show all posts

ஓவர் டென்சன் வேண்டாமே!!!!


எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.

டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல் நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன் தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

உலகளவில் மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கான காரணங்களில் 58 சதவீதம்... உடல் பருமனே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது.
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, "இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்" என்றார்.
மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்.

அதற்கு அந்த மாணவன், "இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன்" என்றான்.

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!


அதற்கு சில டிப்ஸ்
  • உடல் பருமனை குறைக்க வேளைக்கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். டென்ஷனுக்கு உடல் பருமனும் காரணம்.

  • ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம்.

  • மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும்.பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

  • வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும்.தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • ருத்ராட்சம், வல்லாரை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும்; கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதன் மூலம் மறதியால் உண்டாகும் டென்ஷனை தடுக்கலாம்.

  • முளைக் கீரை தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். முட்டைக்கோசுடன் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

  • முடக்கத்தான் கீரைச்சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் அள வுக்கு எடுத்து சின்ன வெங்கா யம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். இதனால், உடல் வலிமை பெறுவதோடு, டென்ஷனும் குறையும்.
டாக்டர்! என்னை ஒரு வாரம் நல்லா ரெஸ்ட்டுல இருக்கணும்னு சொல்லிட்டாரு!"
அதுக்கு என்னடா செய்யப்போறே?"

என் பொண்டாட்டியை ஒரு வாரத்துக்கு ஊருக்கு அனுப்பி வைக்கப் போறேன்."
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



நம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்

கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும்.


உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும்.

2. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்

4. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

5. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

6. பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

9. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

13. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும்.

ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.



சருமத்தை அழகாக்கும் உணவுகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைக் கொண்டுதான் சருமத்தை அழகாக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம். எப்படி என்கிறீர்களா ?

அதற்கு சில டிப்ஸ் :

கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கு அது மிகவும் முக்கியமாகிறது. அதனால் எல்லா வகை கீரைகளையும் ஒரு பிடி பிடிக்கலாம்.

குறிப்பாக, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து இருக்கிறது.

இந்த கீரைகளுடன் விட்டமின் – சி சத்துள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும்.

இதன் முலம் கண்களில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கலாம். முகத்தில் பருக்கள் வருவதும் குறையும். அதிகமாக வறண்ட சருமம் கொண்டவர்கள், உணவில் கொழுப்புச்சத்து நிறைந்த ஆலீவ் ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் உணவுகளை உடல் நலனுக்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியில் 'ஆண்டி ஆக்ஸிடெண்ட்'களான வைட்டமின் – ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் தக்காளியை அடிக்கடி சேர்த்து வந்தால் தோல் மினுமினுப்பாவதுடன், சருமம் கருப்பாவதையும் தடுக்கலாம்.

முதுமை தோற்றம் தவிர்க்க : -
சிலருக்கு இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது. இதை தவிர்க்க விரும்புபவர்கள், ஒரு கைபிடியளவு 'ஸ்ட்ராபெர்ரி' பழங்களையோ அல்லது 3 நெல்லிக்காயையோ தொடர்ந்து சாப்பிடவும். இதன் முலம் இளமை அழகுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இளமை அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.
தோல் பளபளப்பாக :-
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
தோல் சுருக்கம் நீங்க :-
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தோல் சொர சொரப்பு நீங்க :-
சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல்
முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
கூடுதல் செய்தி :

தாடி 'முடி' தான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை 'ஷேவிங்' செய்யாமல் விட்டு விட்டால் 30 அடி நீளம் வரை வளருமாம்.

தினமும் குளிக்கும்போதும், தலை சீவும்போதும் மனிதன் சராசரியாக 40 முடிகளை இழக்கிறான்.



தோல் குறித்த அபூர்வ செய்திகள் - Must Read


மனித தோல் பற்றிய சில சுவையான 5 செய்திகள்...
  1. நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல் தான்.

  2. மனிதத் தோலின் ஒவொரு அங்குலத்திலும் 20 அடி நீள அளவில் ரத்த குழாய்கள் இருக்கும்.

  3. மனித தோலில் உள்ள நரம்புகளை ஒன்றாக சேர்த்தால் அவை சுமார் 45 மைல் தூரம் வரை இருக்குமாம். அதாவது 72 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாக இருக்குமாம்.

  4. நமது உடலில் உள்ள தோல் மொத்தம் 2 மீட்டர் அளவு கொண்டதாம்.

  5. மனிதனுடைய தோல் செல்கள் ஒவொரு மாதமும் பழைய செல்களை இழந்து புதிதாக
    உருவாகிறது. ஒருமணி நேரத்தில் மனிதன் தினமும் 6,00,000 நுண் தோல் பொருட்களை இழக்கிறான். இவ்வாறு இழக்கும் ஒருவர் வாழ் நாளில் 102 பவுண்ட் எடையை இழந்து விடுகிறான்.
தோல் வங்கி :-
பணம் சேமிக்க மட்டும்தான் வங்கி என்று நினைக்கிறீர்களா?. இல்லை, அறிவியல் யுகத்தில் மனித உறுப்புகளும் வங்கிப்படுத்தப்பட்டு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ரத்தவங்கி அனேக இடங்களில் இயங்குகிறது.

ஆனால் தோல் வங்கி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?... இது விலங்குகளின் தோல் விற்பனை செ‌ய்யு‌ம் சந்தை அல்ல. மனித தோல் சேமிப்பு வங்கி.

தோல் உடலை பாதுகாக்கும் கவசம் போன்றது. அதன் முக்கியத்துவம் உணர்ந்துதான் தோல் சேமித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வங்கி இந்தியாவில் மும்பையில் மட்டுமே இயங்குகிறது.

நெருப்புக் காயம் பட்டவர்களும், விபரீத விபத்துகளால் தோல் சேதம் அடைபவர்களும் இங்கிருந்து தோலை பெற்று பயன் அடையலாம்.
உறு‌ப்பு தான‌ம் த‌ற்போது இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌திக ‌வி‌ழி‌ப்புண‌ர்வை அடை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், இனி வரும் காலங்களில் மனித உறுப்பு சேமிப்பு வங்கிகளும் பெருகி மனித சமுதாயத்தை கா‌க்க வ‌ழி வ‌கு‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பலா‌ம்.
Thanks : 1x.com



சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-
  1. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

  3. கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.

  4. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

  5. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

  6. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

  7. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

  8. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

  9. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

  10. பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.

  11. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

  12. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

  13. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

  14. "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"

  15. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழம் 'ஏழைகளின் ஆப்பிள்' Mr.பப்பாளி. பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ.

பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது.

இதன் பயன்கள் மிக மிக அதிகம். மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அவற்றில் ஒரு சில ...


பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
பொதுவாக குழந்தைகளுக்கும் இந்த பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு என்பன வலுவடையவும் உதவும். குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்குமாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
பப்பாளி பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது.
நரம்புகள் பலப் படவும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
நரம்புகள் பலப் படவும் பித்தத்தைப் போக்கி இதயத்திற்கு வலுசேர்க்கிறது.

தேள் கொட்டினால் அவ்விடத்தில் இதன் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிந்துவிடும்.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.
பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

என்ன இந்த தகவல் பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



உடல் எடையைக் கூட்டலாம் & குறைக்கலாம்!

உடல் எடையைக் கூட்டலாம், குறைக்கலாம்! எப்படி என்று நீங்களே கீழ் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ?

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில்
  • கறுப்புத் திராட்சை
  • பச்சைத் திராட்சை
  • பன்னீர்த் திராட்சை
  • காஷ்மீர்த் திராட்சை
  • ஆங்கூர் திராட்சை
  • காபூல் திராட்சை
  • விதையில்லா திராட்சை
என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.


உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெற என் வாழ்த்துக்கள்.



வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்கள்!

குறைந்த செலவில் ஒரு மருத்துவ குறிப்பு ஒன்றை இன்று பார்ப்போம்.

வெங்காயம் பற்றி நான் உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இது இருக்கும். இந்த வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்து பார்சிலோனா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில், பச்சையாக உட்கொள்ளும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்தப் படுத்துவதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது.

நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணம் செய்வதுடன் தேவையான சத்துப் பொருட்களை உடலுக்கு பிரிந்து கொடுகிறது.

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், நோய் கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகபடுத்திறது.

மாரடைப்பில் இருந்து மனிதர்களை காக்கும் மிகப்பெரிய மருத்துவ குணம் இதற்கு உண்டு என்பது கூடுதல் செய்தி.

இனிமேல் வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுங்கள். பயன் பெறுங்கள்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



மருதாணியின் மகிமை


பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்...

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணக்கள் நிறைத்துள்ளது. அதை பற்றி ஒரு பார்வை.


மருத்துவப் பயன்கள்:

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.


உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர : இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

புண்கள் : ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.


இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணக்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்.

Source : மூலிகைவளம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



Related Posts with Thumbnails
 
back to top