Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

அவகோடா சப்பாத்தி

அவகோடா பழம் சத்தானதும் சுவையானதுமாகும். இதில் நார்ச்சத்தும், இரத்தத்தில் LDL கொலஸ்ட்ரோல் அளவைக் குறைக்க உதவும். இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல காலை நேர உணவாக கூட இதனை எடுத்துக்கொள்ளலாம். எல்லா பழக்கடைகளிலும், சூப்பர் மார்கெட்களிலும் இது கிடைக்கிறது.


சரி.. சரி இதனை கொண்டு அவகோடா சப்பாத்தி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

அவகோடா பழம் - 6,

கோதுமை மாவு - 1 கப்,
சீரகத்தூள் - அரை ஸ்பூன்,

பச்சை மிளகாய் - சிறிதளவு,
கொத்துமல்லித்தழை - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:-

  • ஒரு பாத்திரத்தில் அவகோடா 2 ஆக கட் செய்து அதன் தோல்,கொட்டையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

  • பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  • ஒரு பாத்திரத்தில் அவகோடா பழத்தின் சதை, கோதுமை மாவு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  • பின்னர் இந்த மாவை சப்பாத்திகளா உருட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  • சுவையான, சத்தான அவகோடா சப்பாத்தி ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar



காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ?

காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்கு சான்விட் தான் மிகவும் சிறந்தது. அதனால் இன்று நாம் பார்க்க இருப்பது காளான் பிரட் சான்விட்ச்.

அதற்கு முன், பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.


சரி.. சரி இனி காளான் பிரட் சான்விட்ச் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

காளான் - 200 கிராம்,
கோதுமை பிரட் - 4,

வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
இஞ்சி - சிறிதளவு,

மசாலாத் தூள் - கால் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - சிறிதளவு,

கொத்துமல்லித்தழை - சிறிதளவு,
வெண்ணைய் - 100 கிராம்.

செய்முறை:-

  • காளான்களைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • காளான், வெங்காயம், மிளகாய், கொத்துமல்லித் தழைகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக்சியில் லேசாக அரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியில் வெண்ணைய் போட்டு, லேசாக அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு விழுதை வதக்கிக் கொண்டு, அதனுடன் காளான், பச்சை மிளகாய்,மசாலாத் தூள் போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

  • கிரேவியாக வந்ததும் கொத்துமல்லித் தழைகளை போட்டு இறக்கி விடவும்.


  • இந்த கிரேவியை இரண்டு கோதுமை பிரட் துண்டுகளுக்கு இடையில் வைத்து பரிமாறவும்.

  • சுவையான, சத்தான காளான் சான்விட்ச் ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்

இன்று நாம் பார்க்க இருப்பது சுவாரஸ்யமான 25 கிச்சன் /சமையல் டிப்ஸ்.


  1. கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.

  2. பக்கோடா செய்ய கடலை மாவுக்கு பதில் கடலைப்பருப்பைப் பயன்படுத்தலாம். கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து, பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

  3. பூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.

  4. சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

  5. துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். கேஸ் மிச்சமாகும்.

  6. பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

  7. சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.

  8. மளிகைக் கடையில் ‘தையல் இலை’ என்ற பெயரில் விற்கப்படும் மந்தார இலையை பானையில் போட்டு, அதன் மேல் புளியை வைத்தால் நெடுநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

  9. சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.

  10. உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.



  11. வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.

  12. சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது அரிசியில் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் சுவையும் மணமும் கூடும்.

  13. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

  14. ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள்... டேஸ்ட்டாக இருக்கும்.

  15. பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

  16. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.

  17. பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.

  18. தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

  19. நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.

  20. பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.

  21. கமலா ஆரஞ்சு பழத் தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.

  22. கேஸ் ஸ்டவ்வை சமையல் முடித்து, ஆறியபின், சுத்தமாகத் துடைத்து, நியூஸ் பேப்பரால் துடைக்க "பளிச் பளிச்"
    தான்!

  23. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.

  24. ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

  25. கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஆந்திர ஸ்பெஷல் செட்டிநாட்டுச் சமையல்.

பச்சைப் பயறு/பாசிப்பருப்பினால் தோசை செய்து அதன் மேல் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத் துண்டுகளைத் தூவி எடுப்பது பெசரட்டு ஆகும். தமிழ் நாட்டு தோசையைப் போன்றது. ஆந்திரர்களின் சிறப்பு உணவு.

சரி.. சரி இனி பெசரட்டு செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

பச்சைப் பயறு - 2 கப்
பச்சரிசி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:-

  • பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவையுங்கள்.

  • இரண்டையும் ஒன்றாக்கி 1 பச்சைமிளகாய், இஞ்சி, ஒரு வெங்காயம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

  • அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.

  • இன்னொரு வெங்காயத்தையும், மீதமுள்ள பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் மாவில் கலந்து கொள்ளுங்கள்.

  • தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி மெலிதாக பரப்பி வேகவையுங்கள்.

  • கமகமக்கும் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

  • வதக்கிய அயிட்டங்களை மாவில் சேர்க்காமல் தோசைமேல் தூவியும் வேகவைக்கலாம். அலங்காரத்துக்கு அலங்காரமும் ஆயிற்று... கூடுதல் ருசியும் ஆயிற்று!

  • பெசரட்டுடன் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி ஆகியவை தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு கார வகை. மாலை நேர டீ டைம் ஸ்நாக்காக கொரிக்க ஏற்றது. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி வேளைகளில் தயாரிப்பதற்கு ஏற்ற சுண்டல் இது.

சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் வேர்க்கடலை கார சுண்டல் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

வேர்க்கடலை – 3 கப்
வெங்காயம் – பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 தேவையான அளவு

கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:-

  • கடலையை நன்றாக அலசிக் கொள்ளவும். கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேக விடவும்.

  • மிருதுவாக வெந்த வேர்க்கடலையை தண்ணீர் இன்றி வடிகட்டவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியபின் அதனுடன் வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு,தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டவும். சுவையான வேர்க்கடலை கார சுண்டல் தயார்.

  • தேவைட்டால் மல்லித்தழை தூவி அலங்கரித்து கொள்ளலாம். பச்சை மிளகாய்க்கு பதிலாக காய்ந்த மிளகாயையும் பயன்படுத்தலாம்.

  • ருசியான வேர்க்கடலை கார சுண்டல் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



உண்ணக்காய் செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது கேரளா மாநில இனிப்பு வகை. இனிப்பு பதார்த்தம் கேரளாவில் மிக பிரபலமானநேந்திர வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் உண்ணக்காய் தான்.

சரி.. சரி இனி உண்ணக்காய் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

நடுத்தரமாக பழுத்த நேந்திரங்காய் - அரை கிலோ
தேங்காய்ப்பூ - 1 கப்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு.

செய்முறை:-

  • நேந்திரங்காயை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் அளவுக்கு வேகவைத்து மாவாக மசித்துக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் நெய் விட்டு தேங்காய்ப்பூ, முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

  • உதிர்த்து வைத்துள்ள நேந்திரங்காயில் லேசாக நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கட்டையில் தேய்த்து கொள்ளவும்.

  • இதன் நடுவில் வறுத்த கலவையை வைத்து கொழுக்கட்டையைப் போல பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

  • ருசியான உண்ணக்காய் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது சட்னி வகை. இது வரைக்கும் இதை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க வித்தியாசமா இருக்கும். சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்.

இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க!

சரி.. சரி இனி கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

கத்தரிக்காய் - 4
க்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.

செய்முறை:-

  • கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

  • வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

  • கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).

  • கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.

  • வாரம் இருமுறை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்கறீங்கன்னு சொல்லுங்க...!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



டாப் 20 சமையல் குறிப்புகள்

சி‌ன்ன ‌சி‌ன்ன சமைய‌ல் கு‌றி‌ப்புக‌ள் உங்களுக்காக இதோ..
  1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

  2. முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.

  3. அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.

  4. மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.

  5. இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.

  6. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

  7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

  8. பச்சை மிளகாய் வாடாமல் இருக்க அதன் காம்பை கிள்ளிவிட்டு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள் வரும்.

  9. ஃப்ரிட்ஜ் இல்லாதவங்க கீரைகளை ஈரத்துணியில் லேசாக சுற்றி வைக்கலாம்.பச்சை மிளகாயையும் ப்ரெஷ்-ஆ மாதிரி வைக்கலாம்.

  10. தேங்காய் துண்டுகளை ஒரு பிளஸ்டிக் டப்பாவில் தண்ணீர் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரும்.

  11. காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.

  12. உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

  13. பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.

  14. தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம் போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.

  15. தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

  16. சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய், கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.

  17. பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

  18. பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

  19. தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

  20. எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கோதுமை பிரதமன்

இன்று நாம் பார்க்க இருக்கும் சமையல் குறிப்பு ஒரு இனிப்பு வகையை சார்ந்தது. அதன் பெயர் கோதுமை பிரதமன்.

இதனை செய்வது மிக ஈஸி. மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கோதுமை பிரதமன் - ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானப் பொருட்கள்:-

கோதுமை ரவை - கால் கப்

பொடித்த வெல்லம் - முக்கால் கப்

கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப்

ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி - 10.

செய்முறை:-

  • கோதுமை ரவையுடன், அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும்.

  • ரவை வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கொதிக்கும் போது, தேங்காய்ப் பால், ஏலப்பொடி சேர்த்து, ஒரு கொதி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

  • முந்திரிப் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, மேலாகத் தூவவும்.

  • இறக்கும் போது தளர இருந்தாலும், ஆறியதும் கெட்டியாகி விடும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar & Dinakaran daily news paper.



கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம்

மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம் ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

அரைப்பதற்கு தேவையானப் பொருட்கள்:-

புழுங்கல் அரிசி - 4 கப்
முழு உளுந்து - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
வெந்தயம் - 4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப

ஊத்தப்பத்துக்கு தேவையானப் பொருட்கள்:-

பொடியாக நறுக்கிய வெங்காயம் -3
பச்சை மிளகாய் -2
இஞ்சி - தேவைக்கேற்ப
பூண்டு - 5
கொத்தமல்லி - - தேவைக்கேற்ப
துருவிய கேரட் - 2
துருவிய சீஸ் - - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:-

  • அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து வைக்கவும்.

  • தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவி, 1 டீஸ்பூன் எண்ணெயைச் சுற்றிலும் விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.

  • ஜாக்கிரதையாக திருப்பிப் போட்டு, தேவையானால் இன்னொரு டடீஸ்பூன் எண்ணெய் விட்டு, பரிமாறுவதற்கு முன், சீஸ் துருவல் சேர்த்துக் கொடுக்கவும்.

  • கேரட் - சீஸ் - வெங்காய ஊத்தப்பம் ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ஆப்பிள் ஃபிர்ணி


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

இனிப்பு என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. வித விதமான இனிப்பு வகைகளை இங்கே உங்களுக்கு தொகுத்து வழக்குவதில் மிக்க மகிழ்ச்சியே !

இன்று பார்க்க இருக்கும் இனிப்பு - ஆப்பிளை கொண்டு செய்யப்படும் ஒரு வித்தியாசமான சமையல் ஆப்பிள் ஃபிர்ணி....

என்னென்ன தேவை?

  • பாசுமதி அரிசி - 3 டேபிள்ஸ்பூன்,
  • பால் - 3 கப்,
  • ஆப்பிள் - 1,
  • சர்க்கரை - 1 கப்.

எப்படிச் செய்வது?

  • பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பால் விட்டு மிக நைசாக அரைக்கவும்.
  • ஆப்பிளை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும். மேலே அலங்கரிக்க கொஞ்சம் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை அரைக்கவும். (நைசாக அரைக்க வேண்டாம்).
  • அடி கனமான பாத்திரத்தில் பாசுமதி அரிசி விழுது, பால், அரைத்த ஆப்பிள் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.
  • ஆப்பிள் துண்டுகளை மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Dinakaran news paper.



ஜில் ஜில் வெள்ளரி ஷேக்

எளிமையான முறையில் மிகவும் சுவையான வெள்ளரி ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

  • வெள்ளரிக்காய் (துருவியது) - 1 கப்
  • பால் – ஒரு கப்
  • தேன் – 2 டீஸ்பூன்
  • நறுக்கிய பாதாம் - 1 கப்
  • பாதாம் விழுது – ஒரு டீஸ்பூன்
  • குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.


செய்முறை:-

  • வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும்.
  • இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன் கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
  • நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.
  • மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
Source : Maalaimalar
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சுவையாக வெந்தயக்கீரை ரசம் வைப்பது எப்படி ?

வெந்தயக்கீரை ரசம் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில்... நீங்களும் செய்து பாருங்கள்.

வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது


தேவையானப் பொருட்கள்:-

  • வெந்தயக்கீரை - ஒரு சிறு கட்டு
  • தக்காளி - ஒன்று
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
  • பூண்டு - 4 பல்
  • காய்ந்த மிளகாய் - 3
  • மஞ்சள்தூள், பெருங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

  • ஒரு பாத்திரத்தில் தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, புளிக்கரைசல் சேர்த்துக் கரைத்து கொதிக்க விடவும்.
  • வேறொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வெந்தயக்கீரை போட்டு கீரை மூழ்கும் வரை நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொதிக்கும் ரசத்துடன் சேர்த்துக் கலக்கவும்.
  • மிளகு - சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
  • ரசத்தை கொதிக்க விடக் கூடாது. நுரைத்து வந்தவுடனேயே இறக்கி பரிமாறலாம்.
  • வெந்தயக் கீரை ரசம் பசியை தூண்டும், தொண்டை புண்ணை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.
ரசத்தின் பயன்கள் என்ன ? - வைரமுத்து

மிளகு - சுவை அரும்புகள் தூண்டுவது. புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம் - செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரிசெய்வது. மனிதத் தேவைக்கான மெக்னீஷியம் கொண்டது.

பூண்டு - கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது. பக்கவாதம் தடுப்பது. ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம் கொண்டது.

கடுகு - எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது. நல்ல கொழுப்பு உடையது.

மிளகாய் - வைட்டமின் A & C இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது. ஆண் குறியில் புற்றுநோய் தடுப்பது.

புளி - வயிற்றுக் கோளாறு சரி செய்து, இருதயம் வலிமை செய்வது.

மல்லித் தழை - இரும்புச் சத்து மிக்கது. எலும்புத் தேய்மானம் தடுப்பது.

கறிவேப்பிலை - தோல் தொற்று தடுப்பது. சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது. தாதுக்களும் நார்ச்சத்துக்களும் மிக்கது.
Source : Maalaimalar News Paper & Tvrk site.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சுவையான தயிர் சாண்ட்விச்

தயிர் சாண்ட்விச் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் தயிர் சாண்ட்விச் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானப் பொருட்கள்:-

  • பிரெட் ஸ்லைஸ் – 10
  • புளிக்காத தயிர் – ஒரு கப்
  • வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1
  • புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன் சாட் மசாலா,
  • சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:-

  • வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.
  • பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை நறுக்கவும்.
  • ஒரு பிரெட் ஸ்லைஸின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும்.
  • பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு ஸ்லைஸால் மூடவும்.
  • இதேபோல் எல்லா பிரெட் ஸ்லைஸ்களையும் தயார் செய்து கொள்ளவும்.
  • தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்.
Source : Maalaimalar News Paper
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட்!

சூடான சுவையான இதயத்தை காக்கும் ஓட்ஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-
  • ஓட்ஸ் - அரை கப்
  • பொட்டுகடலை மாவு - 2 - 3 தேக்கரண்டி
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • பாலக்கீரை - சிறிது
  • இஞ்சி - சிறிது
  • வெங்காயம்- ஒன்று (சின்னது)
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:-

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும். ஓட்ஸை வெறும் கடாயில் வறுக்கவும். கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

  3. வெங்காயம் வதங்கியதும் கீரை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. கீரை வெந்ததும் தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்து மசித்த உருளைக்கிழங்கும் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.

  5. பின் வறுத்த ஓட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டவும்.

  6. கலவை கலந்து வந்ததும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும். லேசாக ஆறியதும் கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.

  7. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலவையை சிறு உருண்டைகளாக எடுத்து ஹார்ட் வடிவில் தட்டி போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

  8. விரும்பிய வடிவில் கட்லட்டாக தட்டி போட்டு பொரிக்கலாம். சத்தான எண்ணெய் குறைவான மாலை நேர உணவு.

  9. விரும்பினால் இதில் துருவிய கேரட் கூட சேர்க்கலாம். பொட்டுகடலை மாவு அளவு பார்த்து சேர்க்கவும், கலவை உதிரவும் கூடாது, ஒட்டவும் கூடாது.

இதயத்தின் நலனை காக்க இது போன்ற உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிடுங்க, ஆரோக்கியமான இதயத்தை பெற்று நலமோடு வாழுங்க.

Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கண்ணா தேங்காய் லட்டு தின்ன ஆசையா ?

இனிப்புகளில் லட்டு மிகவும் சுவையானது. அனைவராலும் விரும்பப்படுவது. வீடுகளில் சிறிய அளவில் சுவையான தேங்காய் லட்டு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-

  • தேங்காய் - ஒன்றரை மூடி
  • கடலைமாவு - அரை கிலோ
  • சர்க்கரை - 800 கிராம்
  • முந்திரி - 25 கிராம்
  • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
  • தே.எண்ணெய் / நெய் - தேவையான அளவு

செய்முறை:-

  • சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள்.

  • இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள்.

  • அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள்.

  • அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள்.

  • ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள்.

  • தேவைப்பட்டால் வறுத்த லவங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். சுடச்சுட சுவையான தேங்காய் லட்டு ரெடி!
Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்

பிரைடு ரைஸ் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் கீரை பிரைடு ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.


தேவையானப் பொருட்கள்:-

  • பாஸ்மதி அரிசி - 250 கிராம்
  • முளைக்கீரை - 1 கட்டு

  • பட்டை - ஒரு டீஸ்பூன்
  • கிராம்பு - ஒரு டீஸ்பூன்
  • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்

  • கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

  • நெய் - 50 கிராம்
  • கடுகு & உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
  • பச்சை மிளகாய் - 2
  • வரமிளகாய் - 2

  • பூண்டு - 5
  • துவரம்பருப்பு - ஒரு கப்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

  • முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

  • பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

  • குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

  • பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும்.

  • வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
Source : http://www.dinakaran.com
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சுடச்சுட இட்லி மஞ்சூரியன் !

தமிழர்களின் அற்புதமான உணவு இட்லி. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும்.

இட்லி மீந்தால் உப்புமா கிண்டவோ, வேறு என்ன செய்யலாம் என்றோ யோசிக்க வேண்டாம். இட்லியை கொண்டு செய்யப்படும் ஒரு உணவு தான் இட்லி மஞ்சூரியன். வாங்க சுடச்சுட இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்:-

  • இட்லி - 6
  • மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
  • கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்

  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய் - 5
  • பூண்டு - 5 பல்
  • முந்திரி - 10

  • டொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:-

  • இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.

  • ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.

  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.

  • டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

  • சுடச்சுட இட்லி மஞ்சூரியன் தயார்.

  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம். இட்லியை பொரிக்காது வதக்கியும் போடலாம்.
இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.
Thanks : Image from en-iniyaillam.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



காளான் பனீர் கறி

பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான்கள் உள்ளது. காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

இவளவு பயன்கள் கொண்ட அந்த காளான்கள் கொண்டு அப்படி சுவையான காளான் பனீர் கறி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.


தேவையானப் பொருட்கள்:
  • மொட்டுக் காளான் – 3 பாக்கெட்
  • கட்டித்தயிர் – 1 1/2 கப்
  • முந்திரிப்பருப்பு – 10
  • எண்ணெய்
  • பொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்
  • அரிந்த தக்காளி – 1 1/2 கப்
  • முந்திரிப் பருப்பு – 10
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 3
  • பனீர் – 2 லிட்டர் பாலில் தயார் செய்தது
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  • கரம்மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி
செய்முறை:
  • வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.
  • காளான்களை நன்கு கழுவி ஈரம்போக துடைத்து அரியவும்.
  • பனீரை சதுரத் துண்டுகளாக்கவும்.
  • ஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  • பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.
  • இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
  • இக்கலவையுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  • கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.
  • கடைசியாக பனீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
  • கொத்தமல்லித்தழையை மேலே தூவி சூடாகப் பூரி, நான் அல்லது குல்ச்சாவுடன் பரிமாறவும்.
Tips :-

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



மொரு மொரு மீல் மேக்கர் பக்கோடா

மீல் மேக்கர் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். மீல் மேக்கர் புரதச்சத்து மிகுந்தது என்பதால் அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கொண்டு ருசியான மீல் மேக்கர் பக்கோடா தயார் செய்யலாம்.
Tips :-

மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் சோயா மொச்சை முதலிடத்தில் இருக்கிறது. இத்துடன் மூன்று மடங்கு வேகத்தில் இதய நோய்களைத் தடுக்கிறது சோயா. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்டுகள் மிகவும் சக்திவாய்ந்தவை.

தினமும் மூன்று மீல் மேக்கர் உருண்டைகள் உணவில் இடம் பெறுவது நல்லது.

தேவையான பொருட்கள் :-

  • மீல் மேக்கர் - 20 உருண்டைகள்,

  • கடலைப் பருப்பு - ஒரு கப்,

  • சின்ன வெங்காயம் - 10,

  • பச்சை மிளகாய் - 2,

  • தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி,

  • மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி,

  • பிரெட் ஸ்லைஸ் - 3,

  • எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக்கரண்டி,

  • இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி,

  • பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,

  • கொத்துமல்லித் தழை - சிறிதளவு,

  • எண்ணெய் - தேவையான அளவு,

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை :-

  • மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.

  • கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.

  • பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த கலவையை கிள்ளிப் போட சூடான, சுவையான மீல் மேக்கர் பக்கோடா ரெடி.
Note : பொரிக்கும்போது அதிக தீயில் பொரிக்க வேண்டாம். மேல்பாகம் சிவந்து விடும். ஆனால் உள்வரை வேகாது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top