Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts
Showing posts with label இனிப்பு வகைகள். Show all posts

உண்ணக்காய் செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது கேரளா மாநில இனிப்பு வகை. இனிப்பு பதார்த்தம் கேரளாவில் மிக பிரபலமானநேந்திர வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் உண்ணக்காய் தான்.

சரி.. சரி இனி உண்ணக்காய் செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

நடுத்தரமாக பழுத்த நேந்திரங்காய் - அரை கிலோ
தேங்காய்ப்பூ - 1 கப்
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவுக்கு.

செய்முறை:-

  • நேந்திரங்காயை இரண்டாக வெட்டி குக்கரில் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் அளவுக்கு வேகவைத்து மாவாக மசித்துக் கொள்ளுங்கள்.

  • வாணலியில் நெய் விட்டு தேங்காய்ப்பூ, முந்திரி, திராட்சை, சர்க்கரை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

  • உதிர்த்து வைத்துள்ள நேந்திரங்காயில் லேசாக நெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக்கட்டையில் தேய்த்து கொள்ளவும்.

  • இதன் நடுவில் வறுத்த கலவையை வைத்து கொழுக்கட்டையைப் போல பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

  • ருசியான உண்ணக்காய் ரெடி! ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?

இன்று நாம் பார்க்க இருப்பது சட்னி வகை. இது வரைக்கும் இதை நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க வித்தியாசமா இருக்கும். சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்.

இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க!

சரி.. சரி இனி கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :-

கத்தரிக்காய் - 4
க்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.

செய்முறை:-

  • கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

  • வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

  • கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).

  • கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும்.

  • வாரம் இருமுறை ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்கறீங்கன்னு சொல்லுங்க...!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கோதுமை பிரதமன்

இன்று நாம் பார்க்க இருக்கும் சமையல் குறிப்பு ஒரு இனிப்பு வகையை சார்ந்தது. அதன் பெயர் கோதுமை பிரதமன்.

இதனை செய்வது மிக ஈஸி. மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் கோதுமை பிரதமன் - ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.

தேவையானப் பொருட்கள்:-

கோதுமை ரவை - கால் கப்

பொடித்த வெல்லம் - முக்கால் கப்

கெட்டியான தேங்காய்ப் பால் - 2 கப்

ஏலப்பொடி - கால் டீஸ்பூன்

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி - 10.

செய்முறை:-

  • கோதுமை ரவையுடன், அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைக்கவும்.

  • ரவை வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கொதிக்கும் போது, தேங்காய்ப் பால், ஏலப்பொடி சேர்த்து, ஒரு கொதி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

  • முந்திரிப் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, மேலாகத் தூவவும்.

  • இறக்கும் போது தளர இருந்தாலும், ஆறியதும் கெட்டியாகி விடும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Maalaimalar & Dinakaran daily news paper.



கண்ணா தேங்காய் லட்டு தின்ன ஆசையா ?

இனிப்புகளில் லட்டு மிகவும் சுவையானது. அனைவராலும் விரும்பப்படுவது. வீடுகளில் சிறிய அளவில் சுவையான தேங்காய் லட்டு தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள்:-

  • தேங்காய் - ஒன்றரை மூடி
  • கடலைமாவு - அரை கிலோ
  • சர்க்கரை - 800 கிராம்
  • முந்திரி - 25 கிராம்
  • ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்
  • தே.எண்ணெய் / நெய் - தேவையான அளவு

செய்முறை:-

  • சர்க்கரையை கெட்டிப்பதத்தில் பாகு காய்ச்சுங்கள்.

  • இரண்டு மூடி தேங்காயை துருவி பால் எடுங்கள்.

  • அந்தப் பாலில் கடலைமாவை கரைத்து தேங்காய் எண்ணெயில் பூந்தியாக போட்டு, பாகின் சூடு ஆறுமுன்னே அதில் கொட்டுங்கள்.

  • அரைமூடித் தேங்காயை சிறுசிறு பற்களாக வெட்டி, அதையும் முந்திரியையும் தனித்தனியாக தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து பாகில் சேருங்கள்.

  • ஏலக்காயை உரித்து விதைகளையும் அதில் போட்டு அனைத்தையும் கெட்டியாக பிசைந்து உருண்டை பிடியுங்கள்.

  • தேவைப்பட்டால் வறுத்த லவங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம். சுடச்சுட சுவையான தேங்காய் லட்டு ரெடி!
Source : Dinakaran
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top